ஷாபிஃ மத்ஹப் ஓர் ஆய்வு.
தூய நபி வழி இருக்க! தீய நரக வழி எதற்கு?
ஜவாஹிர் ஜமாலி - வவுனியா. தொடர் - 01.
இன்று நம்மில் சிலர் ஸஹாபாக்களைப் பின்பற்றுகிறோம், இமாம்களைப் பின்பற்றுகிறோம். என்று சொல்லிக் கொன்டு விதன்டா வாதம் பேசிக் கொன்டு அலைவதைப் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக இலங்கையில் அதிகமாக இருக்கின்ற மத்ரஸாக்களைக் குறிப்பிடலாம். அதில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களில் மத்ஹபு பாடங்கள். அப்பாடங்கள் இல்லாத மத்ரஸாக்களே கிடையாது. இம்மத்ரஸாக்களில் 'ஸூன்னத் வல் ஜமாஅத், தப்லீஃ, தரீக்கா, ஸலபிய்யா” போன்ற மத்ரஸாக்ளும் தவ்ஹீத் போர்வையில் இயங்கும் மத்ரஸாக்களும் அடங்கும்.
இவை அனைத்திலும் இமாம் ஷாபிஃ அவர்களின் பெயரைப் பயன் படுத்தி அவருக்கு சம்மந்தம் இல்லாத மத்ஹபு சட்டத்தையெல்லாம் புனைந்து இந்த நூலை எழுதியவர் இமாம் ஷாபிஃ என்று அவரின் பெயரைப் பயன்படுத்தி பிளைப்பு நடாத்தும் சமுதாயத்தைப் பார்க்கலாம்.
குறிப்பாக : மத்ரஸாப் பாடத்திட்டங்கள் 08 வருடம் (தவ்ரதுல் ஹதீஸுடன்) அல்லது 07,06,05 - போன்ற வருடங்களைக் கொண்டதாகவும் அமைந்திருக்கின்றது. இன்னும் ஆலிம் பட்டம் சூட்டப்பட்ட பிறகு 'இப்தா” பத்வாக் கலை கற்பிக்கப்படுகின்றது. சிலர் பாகிஸ்தான், இந்தியா தேவ்பன்த். போன்ற நாடுகளுக்குச் சென்று இக்கலையைக் கற்று வருகின்றனர். இன்னும் இலங்கையிலும் 'பானந்துரை” தீனிய்யா மத்ரஸாவிலும். இக்கலை 03 வருடங்கள் வரையருக்கப்பட்டதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கலையைக் கற்றவர்கள் 'முப்திகள்” இவர்கள்தான் (பத்வா) மார்க்க விளக்கம் சொல்ல வேண்டும். இக்கலையைக் கற்றுக்கொள்ளாதவர்கள் 'முப்திகள்” அல்ல 'முப்ஸிதுகள்” குழப்பவாதிகள். என்று மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுவதையும், பரத்தப் படுவதையும் கானலாம்.
இன்னும் இலங்கையில் இற்றைவரைக்கும் கிட்டத்தட்ட 80 முப்திகளுக்கு மேலாக இக்கலையைக் கற்றவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் ஒரு முப்தி ஸாஹிப் கூட குர்ஆனையும், ஆதாரபுர்வமான ஹதீஸையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லுகின்றாரா என்று பார்த்தால் கிடையாது. ஆனால் அனைவரும் சுய கௌரவத்தையும் மக்கள் புகழ்ச்சியையும் மக்கள் ஆதரவையும் பார்க்கின்றார்களே தவிர அல்லாஹ், ரஸூல் சொன்னதைப் பார்ப்பதோ, மார்க்கத்தை தெளிவாகச் சொல்வதோ கிடையாது.
ஆனால் இக்கலையில் உள்ள விபரீதங்கள், அசிங்கியங்கள், ஆபாசங்கள். நபி வழியையும் இறைவழியையும் மட்டம் தட்டும் மத்ஹபு குப்பைச் சட்டங்கள் போன்றவற்றை இன்ஷா அல்லாஹ் இக்கட்டுரையின் முடிவில் தெளிவாகவும், விரிவாகவும் விளக்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் ஸூன்னத் வல் ஜமாஅத் போர்வையில் நடாத்தப்படும். மத்ஹப் சட்டங்களை பாடமாகக் கற்பிக்கப்படும் மத்ரஸாக்களில் முதலாம் வகுப்பு முதல் இறுதியாக ஆலிம் பட்டம் கொடுக்கப்படும் வரை நடாத்தப்படும் ஷாபிஃ மத்ஹப் சட்டங்களை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால். ஷாபிஃ மத்ஹபு சட்டத்திற்கும் இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களுக்கும் மார்க்க ரீதியான தொடர்புகள் இருந்ததா இல்லையா? என்ற செய்திகளைப் பார்ப்போம். இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்கள் தனது கைப்பட பல நூற்களை எழுதினாலும் அதில் முக்கியமான நூல் என்று சொன்னால் 'கிதாபுல் உம்மு” என்ற நூலைக் குறிப்பிடலாம்.
அந்த நூற்களில் பல விடயங்களும், சட்டதிட்டங்களும் குர்ஆன் ஸுன்னாவுக்கு உடன் பட்டு இருந்தாலும் சில சட்டதிட்டங்கள் குர்ஆன் ஸூன்னாவுடன் முறன்பட்டு இருப்பதனையும் நாம் கானலாம் இதனுடைய விளக்கத்தையும் பின்னர் தெளிவாக விபரிப்போம்.
ஸூன்னத் வல் ஜமாஅத் மத்ரஸாக்களில் கற்பிக்கப்படும் ஷாபிஃ மத்ஹபு நூற்கள்.
(متن سفينة النجا) 1. ஸபீனதுன் நஜா.
(رياض البدية) 2. றியாளுல் பதிய்யா.
(فتح القريب) 3. பத்ஹூல் கரீப்.
(عمدة السالك وعدة النسك) 4. உம்ததுஸ் ஸாலிகி வ உத்ததுன் நாஸிகி.
(اعانة الطالبين) 5. இஆனதுத் தாலிபீன். (பத்ஹூல் முயீன்)
(حاشيتا قليوبي وعميرة) 6. கிதாபுல் மஹல்லி (ஹாஷியதா கல்யு+பி வ உமைரா)
இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்கள் எழுதிய நூற்களை ஆய்வுக்கு கொன்டுவருவதற்கு முன்னால் அவரின் பிறப்பு, வழர்ப்பு, வாழ்க்கைச் சரித்திரங்கள், போன்றவற்றை வரலாற்று ரீதியாகப் பார்ப்போம். இந்த வரலாற்றை இங்கு குறிப்பிடுவதால் நாங்கள் ஷாபிஃ மத்ஹபைச் சார்ந்தவர்களோ அல்லது அம்மத்ஹபைப் பின்பற்றுபவர்களோ என்று தப்பாக கருதி விடவேண்டாம். ஏனெனில் பல வருடங்கள் இக்கலையைக் கற்று இதனுடைய தவருகளை வாழ்வின் பல படித்தரத்திலும் வைத்து ஆய்வு செய்த பிறகே எழுத்து வடிவில் கொன்டு வந்துள்ளோம்.
இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்.
இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அல் இமாமுல் முத்தலிபி முஹம்மத் இப்னு இத்ரீஸுஷ் ஷாபிஈ (ரஹ்). இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி - 150 - மீலாதி - 766. ஆம் வருடத்தில் 'உஷ்ஷா” என்கிற ஊரில் பிறந்தார்கள். உஷ்ஷா என்பது மிஸ்ருக்கும் ஷாம் தேசத்திற்குமிடையில் உள்ள பாலஸ்தீன் என்னும் பெருநகரைச் சார்ந்த பகுதியாகும்.
அவரின் சிறு பிராயத்தின் சுருக்கமான செய்தி. அவர்உஷ்ஷாவில் பிறந்து பாலப் பருவத்தில் அவரின் தகப்பனார் இறந்து விட்டார்கள். இரண்டு வயதான போது தனது தாயார் அவரைப் பார்த்து மகனேஉனது குடும்பத்தார் வசிக்கும் மக்கா நகருக்கு போய்ச் சேர்ந்து அறிவைப் படித்துக் கொள்ளுங்கள் எனக்கூறி மக்காவிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அவர் அங்கு ஓதுவதற்காக மத்ரஸாவில் சேர்ந்து மார்க்கக் கல்வியைப் படித்தார்கள்.
மேலும் அவர் மிகவும் ஏழ்மையில் வறுமையில் இருந்தார்கள். கற்கும் பொழுதிலிருந்தே பிக்ஹ் களையில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவராக இருந்தார்கள். இன்னும் மதீனா, யெமன், பஃதாத், மிஸ்ர். போன்ற நாடுகளுக்கு சென்றும் தனது மார்க்க கல்வியை கற்றுள்ளார்கள். அவரிடம் இருந்து மார்க்கக் கல்வியைக்கற்றவர்கள் பலரும் இருக்கின்றனர். இதனை விரிவு படுத்தப் போனால் இவ் ஆய்வு இடம் கொடுக்காமல் போய்விடலாம். அதனால் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன்.
இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களின் மரணம்.
ஹிஜ்ரி - 204. மீலாதி - 820. ஆம் ஆண்டு மிஸ்ரில் காஹிரா என்ற பகுதியில் இறையடிசேர்ந்தார்கள் (இன்னா லிள்ளாஹ்) கிட்டத்தட்ட 54 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்துள்ளார்கள். இவறின் கொள்கைக் கோட்பாடுகள் கல்வி கற்ற துறைகள் அனைத்தையும் கீழே இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களின் வாழ்க்கை சரித்திரத்திர தொகுப்பின் அருபு மூலப் பிரதியையும் இனைத்துள்ளோம்.
محمد بن إدريس الشافعي
الاسم بالكامل - محمد بن إدريس الشافعيّ القرشي
الحقبة - 150 هـ
80, - 204 هـ
المولد - 150 هـ
இமாம் ஷாபிஃ அவர்கள் எழுதியவைகள்.
'கிதாபுல் உம்மு, அர்ரிஸாலா, இஹ்திலாபுல் ஹதீஸ், முஸ்னதுஷ் ஷாபியிஃ, கிதாபு அஹ்காமில் குர்ஆன், கிதாபு அன்நாசிஹ் வல் மன்ஸூஹ், கிதாபுல் கிஸாமா, கிதாபுல் ஜிஸிய்யா, கிதாபு கிதாலி அஹ்லில் பகிய்யி, கிதாபு ஸபீலுன் நஜாத், தீவானுஷ் ஷாபியிஃ.
.
நபிவழிக்கு மாற்றமாக என்னையோ என் நூலையோ பின்பற்றாதீh;கள்!
عَنْ الشَّافِعِيِّ رَحِمَهُ اللَّهُ أَنَّهُ قَالَ إذَا وَجَدْتُمْ فِي كِتَابِي خِلَافَ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُولُوا بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَدَعُوا قَوْلِي: وَرُوِيَ عَنْهُ إذَا صَحَّ الْحَدِيثُ خِلَافَ قَوْلِي فَاعْمَلُوا بِالْحَدِيثِ وَاتْرُكُوا قَوْلِي - المجموع شرح المهذب 63 - 01
நூல்: அல் மஜ்மூஃ ஷெரஹ் அல் முஹத்தப், பாகம்: 01. பக்கம்: 63, மனாகிபுஷ் ஷாபீஃ - இமாம் பைஹகீ, பாகம்: 1, பக்கம்: 472, தாரிக் இப்னு அஸாகீர், பாகம்: 51, பக்கம்: 389, தாரிக் ஸியரு அஃலாமுந் நுபலா, பாகம்: 10, பக்கம்: 77.
“எனது புத்தகத்தில் நபி வழிக்கு மாற்றமானதை நீங்கள் பெற்றுக் கொண்டால் நபிவழியையே பின்பற்றுங்கள்! எனது சொல்லை விட்டு விடுங்கள்” என்று இமாம் ஷாபீஃ அவா்கள் கூறினார்கள்.
நூல்: முக்தஸா; அல் முஅம்மல், பக்கம்: 128, அல் மத்கல் - இமாம் பைஹகீ, பாகம்: 1, பக்கம்: 224, தாரிக் இப்னு அஸாகீர், பாகம்: 51, பக்கம்: 386.
இந்த மத்ஹபின் தலைவராகப் போற்றப்படுபவா்கள் இவா்கள் கூறுவதைப் போல் மத்ஹபில் உள்ள சட்டத்தின் படிதான் நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்களா? அல்லது திருக்குர்ஆன் மற்றும் நபிவழியின் படி நடக்க கட்டளையிட்டுள்ளார்களா? என்பதை இந்தக் கட்டுரையில் மிகத்தெளிவாக எடுத்துரைப்போம். இதில் இமாம் ஷாபீஃ அவா்களின் கூற்றை ஆதாரத்துடன் கூறியுள்ளோம். ஷாபீஃ மத்ஹபைப் பின்பற்றி நடப்பவா்கள் உண்மையாளர்களாக இருந்தால் இமாம் ஷாபீஃ அவா்களின் கூற்றை மதித்து நடப்பார்களா?
உலமாக்கலே, பொது மக்களே. ஷாபிஃ இமாம் சொன்னதைப் பாருங்கள். மத்ஹப் நூல்களில் தவறுகள் இருப்பது உறுதி.
فإنه حينئذٍ يكون مذهباً للشافعي؛ عملاً بقوله : إذا صح الحديث، فهو مذهبي - نهاية المطلب في دراية المذهب - 165
'எனது கருத்து (ஸஹீஹானதாக) ஹதீஸாக இருந்தால் அதுதான் எனது வழிமுறை. நூல்: நிஹாயதுல் மத்லபி பீ திராயதில் மத்ஹபி. பாகம் - 165.
وَقَدْ قَالَ الشَّافِعِيُّ إذَا صَحَّ الْحَدِيثُ فَاضْرِبُوا بِمَذْهَبِي عَرْضَ الْحَائِط - اسنى المطالب في شرح روض الطالب - 363 - 02
'எனது கருத்துக்கள் ஸஹீகான (ஆதாரபு+ர;வமானதாக) இருப்பவைகளே. அதற்கு மாற்றமான மத்ஹபு சட்டங்களை. சுவரிற்குப் பின்னால் தூக்கி எரிந்து விடுங்கள். நூல்: அஸ்னல் மதாலிபி பீ ஷெரஹி ரவ்ழித் தாலிபி. பாகம்: 02. பக்கம்: 363.ஸூன்னத் வல் ஜமாஅத் மத்ரஸாவின் முதலாம் வகுப்பு. பிக்ஹ் நூல்.
'ஸபீனதுன் நஜா” 'ஸபீனதுஸ் ஸலாஹ்”
பொருள்: வெற்றியின் கப்பல். அஷ் ஷைக் ஸாலிம் ஹழ்ரமி (ரஹ்) அவர்களால் அறபு மொழியில் கோர்வை செய்யப்பட்ட 'ஸபீனதுன் நஜா” என்ற சிறு நூலை 'சன்மார்க்கச் சட்டங்கள்” என்று மௌலவி. இஹ்ஸான் (ரஷாதி) அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால் இந்த நூலிற்கும் இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரின் பெயரைப் பயன் படுத்தி முன்னேற்றம் அடையப் பார்க்கின்றார்களே தவிர வேரெதுவும் கிடையாது.
முதலாவதாக. ஸபீனதுன் நஜாவில். இஸ்லாத்தின் கடமைகள், ஈமானின் கடமைகள், என்று தொடராக வருகின்றது. அதற்கு அடுத்த படியாக. வுழுவின் கட்டாயக் கடமைகள் என்ற பாடத்தை ஆரம்பம் செய்கின்றார். அதில் நிய்யத் வைத்தல், முகம் கழுவுதல், முழங்கை உற்பட இரு கைகளையும் கழுவுதல், தலையின் ஒரு பகுதியை நீர் கொண்டு தடவுதல். என்று எதுகிறார். இங்குதான் குழப்பம் ஏற்படுகின்றது.
தலையின் ஒரு பகுதியை மஸ்ஹூ செய்ய வேண்டும் என்று ஷாபிஃ இமாம் சொன்னார்களா என்று பார்த்தால் சில இடங்களில் கூறியிருந்தாலும்கூட மிகச் சிறந்த முறை என்று அவர் எழுதுவது இதுதான்.
وَالِاخْتِيَارُ لَهُ أَنْ يَأْخُذَ الْمَاءَ بِيَدَيْهِ فَيَمْسَحَ بِهِمَا رَأْسَهُ مَعًا يُقْبِلُ بِهِمَا وَيُدْبِرُ يَبْدَأُ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ يَذْهَبَ بِهِمَا إلَى قَفَاهُ ثُمَّ يَرُدَّهُمَا حَتَّى يَرْجِعَ إلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ وَهَكَذَا رُوِيَ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم - الام للشا فعي -01 -41-
قَالَ الشَّافِعِيُّ : فَيَمْسَحُ جَمِيعَ رَأْسِهِ وَصُدْغَيْهِ - الحاوي الكبير - 117-01
'இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர;கள் கூறுகின்றார;கள். பு+ர்த்தியாக தலையையும், காதுச் சோனைகளையும் மஸ்ஹூ செய்ய வேண்டும். ஆதாரம்: அல்ஹாவியல் கபீர். பாகம் - 01. பக்கம் - 117.
192 - شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ، سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ لَهُمْ، فَكَفَأَ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، بِثَلاَثِ غَرَفَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ يَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ،
فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ بِهِمَا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَغَسَلَ رِجْلَيْهِ» وحَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: مَسَحَ رَأْسَهُ مَرَّة - بخاري
(ஆரம்பமாக குவளையிலிருந்த தண்ணீரைத்) தம்மிரு கையில் ஊற்றி முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது கையைக் குவளைக்குள் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி மூன்று முறை வாய் கொப்பளித்து (மூக்கிற்குள் நீர் செலுத்தி சுத்தப்படுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைக் குவளையில் நுழைத்து (தண்ணீர் அள்ளி) இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பிறகு அக்குவளைக்குள் தமது கையை நுழைத்து (ஈரக்கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள். அதாவது தமது இரு கைகளையும் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டு வந்தார்கள். பிறகு அந்தக் குவளைக்குள் தமது கையை நுழைத்து (தண்ணீர் அள்ளி) தமது இரு கால்களையும் கழுவினார்கள்.
உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ”அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது தலையை (ஒரே) ஒரு தடவை மட்டுமே (ஈரக்கையால்) தடவினார்கள்' என்று இடம்பெற்றுள்ளது. ஆதாரம்: புஹாரி - 192.
எனவே நபி (ஸல்) அவர்களின் வுழுச் செய்த முறையும் இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்கள் சொன்ன முறைப்படியே இருக்கின்றது. ஷாபிஃ மத்ஹபை பின்பற்றுபவர்கள் கவனத்திற்கு! நீங்கள் உண்மையில் ஷாபிஃ மத்ஹபைத்தான் பின்பற்றுபவர்களாக இருந்தால் இம்முறைப்படியே இனி வருங்காலங்களில் வுழுச் செய்து நபி வழியையும் சுன்னாவையும் நிலைநாட்டுவீர்கள் என்று நினைக்கின்றோம். எனவே ஷாபிஃ இமாம் இக்கருத்தைச் சொல்லாமல் சுன்னாவிற்கு மாற்றமாகச் சொல்லி இருந்தால் அக்கருத்தையும் தூக்கி வீசிடுவோம்.
இருதியாக. தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் வுழு சரியாக இருக்க வேண்டும் வுழு இல்லையென்றால் தொழுகை கிடையாது என்பது நபி மொழி எனவே நாம் செய்கின்ற வுழுவை நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறைப்படியே செய்ய வேண்டும். அதற்கு மாற்றமான முறையில் வுழுச் செய்தால் அவ்வுழு ஏற்புடையதாக இருக்காது. வுழு சரியின்றி இருந்தால் தொழுகை ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது. எனவே மத்ஹபு வளியில் வுழுச் செய்து நன்மையையும் இலந்து நரகம் சென்று விடாமல்! நபி வழியில் வுழுவையும் தழுயையையும் நிழைநாட்டி சுவனம் செல்ல முயற்சிப்போமாக.
நிய்யத்து மையத்தா? என்ற தலைப்பின் ஆய்வுடன் மறு இதழில் வளரும். (இன்ஷா அல்லாஹ்)
Read More Add your Comment 0 comments