காபீர்களாய்ப்போன காதியானிகள்.




காதியானி.
தொடர்.01
வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
ஜவாஹிர் (ஜமாலி)


மனித சமுதாயம் நேர் வழியில் நடப்பதற்காக ஒவ்வொரு காலக் கட்டத் திலும் எல்லாம் வல்ல இறைவன் தனது திருத்தூதர்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் வழங்கினான்.
இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு விளக்கினார் கள். வேதங்களின் கட்டளைகளையும் விளக்கிக் கூறினார்கள், வாழ்ந்தும் காட்டினார்கள்.

ஆனால் வேதம் கொடுக்கப் பட்ட எல்லா சமுதாயமும் இறைத் தூதர்களின் காலத்துக்குப் பின் வேதத்தின் போதனைகளையும் தூதர்களின் விளக்கத்தையும் புறக்கணிக்காமல் இருக்கவில்லை.
வேதமெல்லாம் நமக்கு விளங் காது எனக் கூறி வேதங்களை இழிவு செய்தனர் சிலர்.

வேறு சிலர் வேதங்களுக்கு தங்கள் மனோ இச்சைப்படி விளக்கம் கொடுத்து உலக ஆதாயத்தைத் தேடிக் கொண்டனர்.
மற்றும் சிலர் வேதத்தில் தங்க ளுக்கு சாதகமானதை எடுத்துக் கொண்டு மற்றவற்றை வேதத்திலி ருந்து நீக்கினார்கள்.

இன்னும் சிலர் தாங்கள் சுய மாகக் கற்பனை செய்து கொண்டவை களை வேதத்தில் சேர்த்து இறைவ னின் வழிகாட்டுதலையே குழப்பி னார்கள்.
எந்தச் சமுதாயத்திலும் இறைவன் வழங்கிய வேதம் இறைவன் வழங்கிய வடிவில் இருக்கவில்லை.
இறைவேதம் எது? மனிதக் கற்பனையில் உதித்தது எது? என்றெல்லாம் கண்டு பிடிக்க முடியாமல் செய்து விட்டனர்.

முஸ்லிம்கள் மட்டும் தான் இறைவன் வழங்கிய வேதத்தை அப்படியே பாதுகாத்து வருகின்றனர்.
அவர்கள் வேதத்தின் போதனை யைக் கடைப்பிடிக்காவிட்டால் கூட, வேதத்தில் கைச்சரக்கு எதையும் சேர்க்கவில்லை.

தத்தமது மனோ இச்சைப்படி விளக்கம் கூறி வருபவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளனர். ஆனாலும், அவர்களும் வேதத்தில் கை வைக்கவில்லை.
பதினான்கு நூற்றாண்டுகளாக எந்த மாற்றமும் இன்றி இறைவனால் வழங்கப்பட்ட வடிவிலேயே திருக்குர்ஆன் இன்றளவும் பாதுகாக் கப்பட்டு வருகிறது.

திருக்குர்ஆனுக்கு மட்டுமே இந்தச் சிறப்புள்ளது.
மனித குலத்திற்கு வழிகாட்டியாக இறைவனால் அருளப்பட்ட இவ்வே தத்தில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாதவர்கள் தவறான வியாக்கியானங்கள் மூலம் இஸ்லாத்தை அழித்து விட அன்று முதல் இன்று வரை முயன்று வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள், யூதர்கள் போன்றவர்களும் முஸ்லிம்களாகப் பிறந்து வேறு மதத்தைத் தோற்றுவித்த காதியாணி, பஹாயி, சப்மிட்டர், சன்னபஸ்வேஸ்வர் போன்ற முஸ்லிமல்லாதவர்களும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் தேவை யில்லை எனக் கூறும் அறிவீனர் களும் எந்தெந்த வசனங்களுக்கு எப்படியெல்லாம் தவறான விளக்கம் அளித்துள்ளனர்;
அவை எப்படி யெல்லாம் தவறாகவுள்ளன என்பதைத் தக்க சான்றுகளுடன் விளக்கும் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடமையை நிறைவேற்று வதற்காகவே "ஒற்றுமை'யில் திருக்குர்ஆன் விளக்கம் அடுத்த இதழ் முதல் ஆரம்பமாகிறது.
அத்தியாயம்வசனம் ஆகிய வற்றின் வரிசைப்படி இந்த விளக்கம் அமையாது. எந்தெந்த வசனங்கள் தப்பும் தவறாக வியாக்கியானம் செய்யப்பட் டுள்ளது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த விளக்கவுரை வெளிவரும்.

மேற்கூறப்பட்ட பிரிவினர் உங்களைக் குழப்பும் வகையில் எடுத்துக்காட்டும் வசனங்களையும் அவர்கள் எப்படிக் குழப்புகி றார்கள் என்பதையும் ஒற்றுமைக்கு எழுதி அனுப்பினால் அவற்றையும் இத்தொடரில் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்வோம். உரையின் மீது "திருக்குர்ஆன் விளக்கம்'' என்று குறிப்பிட்டு எழுதவும்.

ஒரு வசனத்தின் விளக்கம்
இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் உங்களின் பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத் (வேதத்)தை மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின் வரவிருக்கின்ற அஹ்மத் என்னும் பெயருடைய ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவனாகவும் (வந்துள்ளேன்) என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைத்துப் பாருங்கள்! அவர் (அஹ்மத்) தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்தபோது இது பகிரங்கமான சூனியம் எனக் கூறி விட்டனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில், அல்லாஹ்வின் மேல் பொய்யை இட்டுக் கட்டுபவனை விட மிகவும் அநியாயக்காரன் யாரிருக்க முடியும். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தினருக்கு நேர் வழி காட்டமாட்டான்.
(திருக்குர்ஆன் 61-வது அத்தியாயம், ஆறு மற்றும் ஏழாவது வசனங்கள்)

விளக்கவுரையும்
தேவைப்படாத....

அளவுக்கு மிகத் தெளிவாக அமைந்த வசனமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர் களுக்கு முன்னால் இறைவனின் தூதராக அனுப்பப்பட்ட ஈஸா நபியவர்கள், தமது சமுதாயமான இஸ்ரவேல் மக்களிடம் ஒரு முன்னறிவிப்புச் செய்கின்றனர். எனக்குப் பின்னால் அஹ்மத் என்ற பெயருடைய ஒரு தூதர் வரவிருக் கிறார் என்று அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்ததைத் தான் இவ்வசனம் கூறுகிறது.
ஈஸா நபி மட்டுமின்றி இன்னும் பல நபிமார்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்திருக்கின்றனர்.

இவ்வளவு தெளிவான வசனத் திற்கு எதற்காக விளக்கவுரை என்று கேட்கிறீர்களா? விளக்கவுரை தேவைப்படாத வசனம். என்றாலும் இவ்வசனத்திற்கு சென்ற நூற்றாண் டைச் சேர்ந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் அறிவுக்குப் பொருந்தாத விளக்கம் கொடுத்தான். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறிக்கவில்லை, என்னைத் தான் குறிக்கிறது என்று வாதிட்டான்.

நபிகள் நாயகத்தின் பெயர் "முஹம்மத்' தானே தவிர அஹ்மத் அல்ல. என் பெயர் தான் அஹ்மதாக உள்ளது. எனவே, இவ்வசனத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டவன் நான் தான் என்று வாதிட்டான்.
தானும் ஒரு நபி தான் என்று கூறினான். இவ்வசனத்தில் இவனது வாதத்திற்கு ஏதாவது இடமிருக்கிறதா என்று பார்க்காத ஒரு கூட்டம், அவனையும் நபியென்று நம்பியது. இவர்கள் காதியாணிகள் என்று கூறப்படுகின்றனர். முஸ்லிம் சமுதா யத்தின் அனைத்து தரப்பினராலும், இவர்கள் "முஸ்லிமல்லாத புது மதத்தவர்கள்'' என்று தீர்ப்பளிக்கப் பட்டனர்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனைப் பற்றியும் அவன் உருவாக்கிய காதியாணி மதம் பற்றியும் இந்தச் சிறிய அறிமுகம் போதுமானதாகும்.

இனி இவ்வசனத்திற்கு இவன் கொடுத்த விளக்கம் சரிதானா? என்று ஆராய்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மத் மட்டுமல்ல. அஹ்மத் என்பதும் அவர்களின் பெயர் தான்.

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் தான் முஹம்மத். நான் தான் அஹ்மத். நான் தான் ஹாஷிர். நான் தான் ஆகிப். நான் தான் மாஹீ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தமது பெயர்களில் அஹ்மதும் ஒன்று எனக் கூறுகிறார்கள். நபிகள் நாயகத்திற்கு அஹ்மத் என்ற பெயர் கிடையாது என்று கூறிய மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் மார்க்க அறிவற்றவன் என்பது இதிலிருந்து தெரியவரும்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்ற இவனது பெயரில் அஹ்மத் என்ற வார்த்தை உள்ளதல்லவா? அதனால் இது தன்னைப் பற்றிய முன் அறிவிப்பு என்றான்.
ஒருவனது பெயர் அப்துல் லாஹ் என்று இருந்தால் அதில் அப்து என்றும் அல்லாஹ் என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. (இதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை) அப்துல்லாஹ் என்ற பெயரில் அல்லாஹ் என்பது உள்ளதால் நான் தான் அல்லாஹ் என்று யாரேனும் கூறினால் நாம் ஏற்றுக் கொள்வோமா?

பெரியார் தாசன் என்று ஒருவருக்குப் பெயர். ஈ.வெ.ரா. பெரியாரைப் பற்றிக் கூறும் வாசகம் தன்னைத் தான் குறிப்பதாக அவர் வாதிட்டால் அவரை நாம் என்னவென்போம்! மிர்ஸா குலாம் அஹ்மதின் வாதமும், இவரது வாதமும் சமமானவை தான்.

குலாம் என்றால் ஊழியன், பணியாளன், தாசன் என்று பொருள். குலாம் அஹ்மத் என்றால் அஹ்மத் என்பவரின் தாசன் என்பது பொருள்.
"அஹ்மதின் தாசன்' என்ற பெயருடையவன் "அஹ்மத்' என்பது தன்னையே குறிக்கும் என்று கூற முடியாது.

இன்னும் சொல்வதாக இருந்தால், இவனது பெயரே நபிகள் நாயகத்தின் பெயர் அஹ்மத் என்பதற்கு சான்றாக உள்ளது எனலாம்.
"அஹ்மதின் தாசன்' என்று இவனது தந்தை இவனுக்குப் பெயர் சூட்டியபோது, அவர் அஹ்மத் என்று யாரை நினைத்திருப்பார்? இவன் கூட இவ்வாறு வாதம் செய்த பின் தன் பெயரை அஹ்மத் என்று மாற்றிக் கொள்ளவில்லை. காலமெல்லாம் "அஹ்மத் தாசன்' (குலாம் அஹ்மத்) என்ற பெயரைத் தான் பயன்படுத்தி வந்தான்.

அஹ்மத் தாசன் என்ற பெயரை இவன் கடைசி காலம் வரை பயன்படுத்தியதிலிருந்து இவன் அஹ்மத் அல்ல என்பதும், அஹ்மத் என்பவரின் தாசனே என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அஹ்மத் தாசன் என்று, பெயர் வைத்திருந்த அவன் அந்த அஹ்மத் யார்? என்ற கேள்விக்கு விடையளிக்க முடியாமலே போய்ச் சேர்ந்து விட்டான்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்ப வனும் ஒரு நபி என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஈஸா நபி அவர்கள் நிச்சயமாக இவனைக் குறிப்பிட்டிருக்கமாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பின் வரக்கூடிய நபிகள் நாயகத்தைத் தான் முன்னறிவிப்புச் செய்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) தான் முக்கிய நபி; தான் அவர்களின் நிழல் நபி என்று தான் மிர்ஸா குலாம் வாதிட்டான். ஒரிஜினலும், நிழலும் வரவிருக்கும் போது, ஒரிஜினலை விட்டு விட்டு நிழலைப் பற்றி யாரேனும் முன்னறிவிப்பு செய்வார்களா?

ஒரு கலெக்டர் பின்னால் வருவதை முன் கூட்டியே ஒருவன் அறிவித்துச் செல்கிறான். கலெக் டருடன் அவரது டிரைவரும் வருவார். அறிவிப்புச் செய்பவன் கலெக்டர் வருகிறார் என்று கூறுவானா? கலெக்டரின் டிரைவர் வருகிறார் என்று கூறுவானா?

முதல்வரும் 18-வது வார்டு உறுப்பினரும் வந்து கொண்டிருக் கும் போது முதல்வர் வருகை யைக் கூறாமல் 18-வது வார்டு மெம்பர் வருகிறார் என்று யாரேனும் அறிவிப்பு செய்வார் களா? என்பதைக் கூட இவனும்- இவனது மதத்தவர் களும் சிந்திக்கவில்லை.
இது நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எவரையும் குறிக்கவே முடியாது என்பதற்கு இந்த வசனத்திலேயே வலுவான ஆதாரம் உள்ளது. "அவர் (அஹ்மத்) அவர்களிடம் வந்த போது, அவர்கள் சூனியம் என்று கூறிவிட்டனர்'' என்று இவ்வசனத் தில் கூறப்பட்டுள்ளது.

இந்த வசனம் அருளப்பட்ட காலத்திற்குப் பிறகு தான் அஹ்மத் வருவார் என்பது இதன் கருத்தாக இருந்தால் இவ்வாறு கூற முடியாது. "அவர் இனிமேல் வரும்போது சூனியம் எனக் கூறுவார்கள்'' என்று வருங்கால வினையாகச் சொல்லப்பட்டிருக்கும். "அவர் வந்த போது'' என்று சென்ற கால வினைச் சொல் (ஃபலம்மா ஜாஅ) பயன்படுத்தப்பட்டுள்ளது. "அவர் வந்த போது'' "கூறினார்கள்'' என்று குர்ஆன் கூறுவதால், இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் அந்த அஹ்மத் வந்திருக்க வேண்டும். அவர் வந்த பின் அவர்கள் அவரை நிராகரித்திருக்கவும் வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் தான் "அவர் வந்த போது'' எனக் கூறியிருக்க முடியும்.

இவ்வசனம் அருளப்பட்ட போது மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் வந்திருக்கவில்லை. இவனைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால் "அவர் வரும் போது'' "சூன்யம் எனக் கூறுவார்கள்'' என்று வசனம் அமைந்திருக்கும்.

"அவர் வந்த போது சூனியம் என்று கூறினார்கள்'' என்று கூறப்படுவதால், இவ்வசனம் அருளப்படும்போதே அஹ்மத் வந்துவிட்டார் என்பது தெளிவு.
இவ்வசனம் அருளப்பட்ட போதே வந்திருந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தானே தவிர, இவ்வசனம் அருளப்பட்ட போது எந்தப் பொருளாகவும் இருந்திராத அஹ்மத் தாசன் (குலாம் அஹ்மத்)அல்ல.

இவ்வசனம் தன்னைத்தான் குறிக்கிறது என்பதற்கு இவன் எடுத்துக்காட்டும் முக்கியமான ஆதாரம் என்ன தெரியுமா? "இஸ்லாத்தின் பால் அழைக் கப்படும் போது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்?'' என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வசனத்தில் "இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில்" என்ற வாசகத்தை எடுத்துக் கொண்டான். எல்லோரும் என்னைக் காபிர்கள் என்று கூறி இஸ்லாத்தின் பால் அழைக்கின்றனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்டவன் நான் மட்டுமே. எனவே இது என்னைத் தான் குறிக்கிறது என்பது தான் இவனது ஆதாரம்.

முந்தைய வசனம் இவனைக் குறிக்காது என்பதற்கு போதுமான காரணங்களைக் கூறியுள்ளோம்.
இவன் சுட்டிக்காட்டிய இரண்டாவது வசனம் இவனைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை. அது இவனைத் தான் (இவனையும் தான்) குறிக்கிறது.

"இஸ்லாத்தின் பால் அழைப்பு விடப்படும் நிலையில் அல்லாஹ் வின் பெயரால் பொய் கூறி நானும் நபி என்று வாதிட்டவனைத் தவிர மிகவும் அநியாயக்காரன் யார்?'' என்பது நிச்சயமாக இவனைக் குறிக்கும். அஹ்மத் என்பது ஒருக்காலும் இவனைக் குறிக்காது.
இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

மிர்ஸா குலாம் அஹ்மத், நபி வேறு - ரசூல் வேறு என்று வித்தியாசப்படுத்தி, தான் ரசூல் அல்ல நபி தான் என்று கூறினான். "ஒரு ரசூலின் வழியில் பல நபிமார்கள் வருவார்கள். அந்த வகையில் முஹம்மது ரசூல் அவர்கள் வழியில் வந்த நபிதான் நான்'' என்றான்.

இப்படி வாதிட்டவன், இந்த வசனத்தில் ரசூலைப் பற்றித் தான் முன்னறிவிப்புச் செய்யப் பட்டுள்ளதை வசதியாக மறைத் துவிட்டான். இந்த வசனத்தில் எனக்குப் பின் வரக்கூடிய ரசூலைப் பற்றி முன்னறிவிப்புச் செய்கிறேன் என்று ஈஸா நபி கூறியதாகக் குறிப்பிடுகிறது.

இவனது வாதத்தின்படி இவன் ரசூல் இல்லை.


பெயரிலும் பொய் சொல்லியதாலும், இவனது வாதப்படியே ரசூலாக இல்லாதிருந்தும் ரசூல் என்று வாதிட்டு பொய்யுரைத்ததாலும், இவன் நபியா கவும் இருக்க முடியாது. பொய்யனும்- மூடனும்- மனநோயாளிகளும்- நபியாக அனுப்பப்பட மாட்டார்கள்.
வழிகேடர்கள், தெளிவான வசனங்களையும் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு ஒரு சோற்றுப் பதமே இது.

குறைந்த வட்டி கூடுமா
???
(இம்மார்க்கத்தை) நம்பியவர்களே! பன்மடங்குகளாகப் பெருக்கப்பட்ட நிலையில் நீங்கள் வட்டியை உண்ணாதீர்கள். மேலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் வெற்றியடையக் கூடும்!
- அல்குர்ஆன்: 3:130.

இஸ்லாமியமார்க்கம்எல்லாக்காலத்துக்கும்பொருந்தக்கூடியநடைமுறைப்படுத்தக் கூடிய வாழ்க்கை நெறியாகும். மார்க்கத்தைப் பற்றிய சரியான அறிவும் ஆய்வும் இல்லாத சிலர் நவீன காலத்துக்கு ஏற்றவாறு இஸ்லாத்தை வளைக்க முயன்று வருகின்றனர். இஸ்லாம் தடை செய்த பல விஷயங்களில் ஈடுபாடு கொண்ட இவர்கள் அதற்கு இஸ்லாமியச் சாயம் பூசி அல்லாஹ் வை ஏமாற்ற நினைக்கின்றனர்.

மதுபானத்தை அல்லாஹ் ஹராமாக - விலக்கப்பட்டதாக - ஆக்கியுள்ளான். ஆனாலும், மதுவுக்கு புதுப்புது வியாக்கியானம் கொடுத்து பீர் குடிக்கலாம், பிராந்தி குடிக்கலாம், கள் சாராயம் தான் குடிக்கக்கூடாது என்று கூறி மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கு இஸ்லாமிய வர்ணம் பூசுவோர் உள்ளனர்.

இது போன்ற பிரச்சினைகளில் வட்டியும் ஒன்றாகும். வட்டியை அல்லாஹ் தடை செய்து விட்டான். மிகப் பெரிய குற்றம் எனவும் பிரகடனம் செய்து விட்டான்.
வட்டி உண்பவர்கள் ஷைத் தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போலல் லாது எழமாட்டார்கள். அவர் களுக்கு இந்நிலை ஏற்பட்டதற்குக் காரணம் வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான் என்று அவர்கள் கூறியதேயாகும்.

உண்மையில் அல்லாஹ் வியாபாரத்தை (ஹலால்) அனுமதிக்கப்பட்டதாகவும், வட்டியைத் தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். ஆகவே, எவர் தம் இறைவனிடமிருந்து இந்த அறிவுரை வந்த பிறகு (இனி வட்டி வாங்குவதை விட்டு) விலகிக் கொள்கின்றாரோ - அவர் முன்னர் வாங்கியது அவருக்குரியதுதான் - என்றாலும் அவருடைய விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.

ஆனால் (இந்த கட்டளை வந்த பிறகும்) யாரேனும் (இந்தக் குற்றத்தை) மீண்டும் செய்தால், அவர்கள் நரகவாசிகளேயாவர்; அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். அல்லாஹ் வட்டியை அழித்து விடுகின்றான்; இன்னும் தானதர்மங்களை வளரச் செய்கின்றான். மேலும், நன்றி கொன்று, தீய செயல் புரிவோர் எவரையும் அல்லாஹ் நேசிப்ப தில்லை. எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி, தொழுகையையும் நிலைநாட்டி, ஜகாத்தும் கொடுத்து வருகின்றார் களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு. அவர்க ளுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார் கள்.

இறைநம்பிக்கை கொண் டோரே! நீங்கள் உண்மையில் - நம்பிக்கையாளராக இருப்பின் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (உங்களுக்கு வரவேண்டிய) வட்டிப் பாக்கிகளை விட்டு விடுங்கள். ஆனால், அவ்வாறு நீங்கள் செய்யாவிடின், அல்லாஹ் விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டு விட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள். (இப்பொழுதும் கூட) நீங்கள் பாவமன்னிப்புக்கோரி (வட்டியைக் கைவிட்டு) விட்டால் உங்களுடைய மூலதனம் உங்க ளுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கக்கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்படக்கூடாது.
- அல்குர்ஆன்: 2:275-2:279

வட்டி வாங்குவோர் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்பதும் அல்லாஹ்வுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்கிறார்கள் என்பதும் சாதாரணமான எச்சரிக்கை அல்ல. இறைவனை அஞ்சுகிற எந்த முஸ்லிமும் நிரந்தர நரகத்தில் தள்ளுகின்ற காரியத்தை ஒருக்காலும் செய்யமாட்டான்.
ஆனால், இன்றைய நவீன உலகில் வட்டியை அறவே தவிர்க்க முடியவில்லை. உலக நாடுகளில் பல வட்டியைச் சட்டப் பூர்வமாக அங்கீகரித்து விட்டன. வட்டியில்லாத எந்தக் கொடுக்கல் வாங்கலையும் காண முடியவில்லை. அரசாங்கம் கூட வட்டியின் அடிப்படையில் தான் நாட்டு மக்களுக்கு உதவுவதைப் பார்க்கிறோம்.

இதையெல்லாம் பார்க்கும் சிலர் இஸ்லாம் வட்டியைத் தடை செய்துள்ளதே! ஆனால், அது தவிர்க்க முடியாததாக இருக்கிறதே! வட்டியைத் தடை செய்யாமல் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்றெல்லாம் எண்ணத் தலைப் படுகின்றனர். வட்டியை அனுமதிக் கின்ற வகையில் அல்லது ஓரளவுக் காவது வட்டியை அனுமதிக்கின்ற வகையில் ஒரு ஆதாரம் இருக்கக் கூடாதா?

என்று கருதுவோரின் கண்ணில்பட்ட ஆதாரம் தான் நாம் ஆரம்பமாக எடுத்துக்காட்டியுள்ள வசனம்.
"பன்மடங்காக பெருக்கப்பட்ட நிலையில் வட்டியை உண்ணா தீர்கள்'' என்ற வாசகத்துக்கு புதுமையான விளக்கம் கூறிக் கொண்டு இஸ்லாமும் ஓரளவு வட்டியை ஆதரிக்கவே செய்கிறது என்று கூறினார்கள். (திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி போன்றவர்களும் இதிலிருந்து தப்பவில்லை. பின்னர் அது திருத்தப்பட்டது)

வட்டிக்கு வட்டி; அந்த வட்டிக்கும் வட்டி என்ற அடிப்படையில் தான் வட்டி வாங்கக் கூடாது. பன்மடங்காகப் பெருக்கப்பட்ட நிலையில் என்று கூறப்படுவதன் விளக்கம் இதுதான். எனவே, சாதாரண வட்டி கூடும், கொடும் வட்டி, வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி போன்றவைதான் கூடாது என மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் தருகின்றனர்.

அறிவு ஜீவிகள் எனப் படுவோரும் குர்ஆன் மட் டுமே போதும் நபி வழி தேவையில் லை என்று கூறும் குர்ஆனைப் பற்றிய அறிவில்லாதவர்களும் இவ்வாறு கூறுபவர் களில் முக்கியமான வர்களாவர்.

இவர்கள் கூறும் விளக்கம் தவறா னது என்பது திருக் குர்ஆனைச் சிந்தித்தாலே விளங்கும். 2:279 வசனத்தைப் பாருங்கள்!
"நீங்கள் வட்டியிலிருந்து விலகிக் கொண் டால் உங்கள் மூலதனம் உங்க ளுக்கு உரியது. நீங்களும் அநியா யம் செய்யவேண் டாம். அநியாயம் செய்யப்படவும் வேண்டாம் என்று அவ்வசனம் கூறுகிறது.

வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் திருந் துவதாக இருந்தால் கொடுத்த கடனை - அசலை - மூலதனத்தை - மட்டும் தான் திருப்பி வாங்க வேண்டும் என்று கூறப் படுவது கவனமாக சிந்திக்கப்பட வேண்டும். "கொடுத்த கடனும் சாதாரண வட்டியும் உங்களுக்கு உரியது'' என்று கூறவில்லை. அசல் மட்டுமே சொந்தம் என்று கூறுகிறான். இதிலிருந்து வட்டி சிறிதளவும் அனுமதிக்கப்படவில்லை என்பதை அறியலாம்.

"பன்மடங்காகப் பெருக்கப்பட்ட நிலையில்'' என்ற வார்த்தையின் பொருள் என்ன என்பதை இப்போது ஆராய்வோம்.
பொதுவாக வட்டி என்பதே சாதாரணமாகப் பன்மடங்காகவே பெருகிக்கொண்டு தான் இருக்கும். சாதாரண வட்டியிலும் கூட அந்த நிலை இருக்கத்தான் செய்யும். "நூறு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் வட்டி'' என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு காலம் கடந்தாலும் இரண்டு ரூபாயை மட்டும் வட்டியாக வாங்கிக் கொள்ளமாட்டார்கள். அந்த மாதம் இரண்டு ரூபாய் அடுத்த மாதம் இரண்டு ரூபாய் அசலைத் திருப்பித் தர எவ்வளவு மாதம் ஆகுமோ அவ்வளவு இரண்டு ரூபாய் என்று பெருகிக் கொண்டே செல்லும்.

பத்து ரூபாய் பொருளை 20 ரூபாய்க்கு விற்றாலும் அத்துடன் உறவு முடித்து விடும். மாதா மாதம் பத்து ரூபாய் கொடுக்கமாட்டோம். வட்டியில் - அது எந்த வகை வட்டியானாலும் அது பல்கிப் பெருகிக் கொண்டே தான் இருக்கும். பல்கிப் பெருகுதல் வட்டிக்கு வட்டியில் மட்டும் தான் ஏற்படும் என்பது தவறாகும்.

இதைப் புரிந்து கொண்டு 2:279 வசனத்தையும் சிந்திக்கின்ற யாரும் எல்லாவிதமான வட்டியையும் இஸ்லாம் அடியோடு தடுத்திருப்பதை அறிந்து கொள்வர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...




Share your views...

0 Respones to "காபீர்களாய்ப்போன காதியானிகள்."

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed