வழிகேடுக்கு வக்காலத்து வாங்கும் தவ்ஹீத்(?)வாதிகள்.
சென்ற 05.09.2011 அன்று தவ்ஹீத் அமைப்பான .நிதாஉல் ஹைர்.தஃவா அமைப்பால் "ஹதீஸ் கலையின் அடிப்படைகள் மற்றும் ஸஹீஹ், ழஈப் தரப்படுத்தும் முறைமை" என்ற தலைப்பில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. கருத்தரங்கில் சகோதாரர் Dr. Ahamed Ashraf என்பவர் விரிவுரையாற்றினார்.
இவர் ஏற்கனவே ஹதீஸ் துறையில் PhD முடித்த இலங்கையர் என்று இனங்கானப்பட்திருந்ததுடன் B.M.I.C.H. விவாதத்தில் தவ்ஹீத் அணி சார்பில் நின்று வாதித்திருந்தார்.
ஹதீஸ் கலையின் அடிப்படைகளையும், தரப்படுத்தும் முறைமைகளையும் இத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற ஒருவரிடமிருந்து படிக்கப்போகிறோம் என்ற சந்தோசத்தில் சிரமம் பாராது சென்ற எனக்கு உண்மையில் மிஞ்சியது பலத்த ஏமாற்றம் மட்டுமே. காரணம் أصول الحديث இணை அணுகும் முறையினை சொல்லித்தர வேண்டிய அவர், தனது சொந்த கருத்துக்களை திணிக்க முற்படுகிறார். பகிரங்கமாக பித்அத் என்றறியப்பட்டவைகளை ஆதரிக்கிறார். சிலபோது மழுப்புகிறார்.
குர்ஆணையும், சுன்னாவையும் மட்டுமே மார்க்கமாக கொண்டு செயல்படும் தவ்ஹீத்வாதிகளுக்கு ஏன் இந்த அனாச்சாரங்களுக்கு முட்டுக்கொடுக்கும் பணி? அதிலும் வேதனைக்குரிய விடயம் அந்த சபையிலே மூத்த ஆலிம்கள் வாய் மூடி இருந்ததுதான்.
ஹதீஸ் கலை ஆய்வு என்ற பெயரில் அவர் வைத்த கருத்துக்கள் சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தம் என நினைக்கிறேன்.
(1) முதலாவதாக தொழுகையில் அத்தஹியாத்தில் விரலசைத்தல் தொடர்பான ஹதீஸை ழஈப் என்று தட்டி விட்டார்.
(2) ஜமாஅத் தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளை எரிக்க நினைப்பதாய் நபி (ஸல்) அவர்களை கூறிய ஹதீஸில் வரும் قد هممت என்ற பதத்தை أختلاف என்கிறார்.
இவற்றைகூட அவரது ஆய்வு என்று சொல்லிவிடலாம். அடுத்தடுத்து என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்.
(3) மணப்பெண் கழுத்தில் மாப்பிள்ளை அணிவிக்கும் தாலியை மணப்பெண்ணின் கையில் கொடுத்து விட்டு பிறகு அவள் அணிந்து கொள்வது தவறில்லை என்கிறார். அதாவது மாப்பிள்ளை அணிவிக்காமல் கையில் கொடுக்கலாம் என்கிறார். இதற்கு சபையில் ஒருவர் விளக்கம் கேட்டபோது அதை யார் கொடுத்தாலும் கட்டுவதில் தான் பிரச்சினை என்கிறார்.
(4) பெண் பிள்ளைகள் பருவ வயதை அடைந்தால் அதை பகிரங்கப்படுத்துவதில் பிரச்சினை இல்லை என்கிறார்.
(5) ழஈப் ஆன துஆக்களை பொருள் நல்லதாயின் அதனை ஓதலாம் என்கிறார். இப்படிப் பல...
6)நெஞ்சின் மீது தக்பீர் கட்டும் ஸஹீஹான செய்தியையும் வாய் கூசாமல் ழயீப் என்று மலுப்பியும் விடுகிறார்.
7)நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா? என்ற செய்தியை நாம் குர்ஆனுக்கு முறனாக இச்சட்டம் இருப்பதால் இதையும் மறுக்கிரோம் ஆனால் இவர் இச்செய்தியைக்கூட .ழயீப்.என்று மூடலான முறையில் பதில் என்ற பெயரில் பதில் இல்லாமல் பதிலளித்தார்.
சாதாரண குர்ஆன் மதரஸா மானவனுக்கே பித்அத் என்று தெளிவாக புரிகின்ற விடயங்களை PhD. முடித்த இவருக்கு புரியவில்லையே என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. அத்துடன் சபையில் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது. ஏற்பாட்டு குழுவினரை நான் அணுகிய போது கடைசியாக அவருடன் பேசிவிட்டு செல்லுங்கள் என்றனர்.
உண்மையில் இது போன்ற முயற்சிகளை பார்க்கும் போது இன்றைய பிரச்சார களத்தில் தமக்கு தோன்றுவதையெல்லாம் எடுத்த எடுப்பில் மக்கள் மன்றத்தில் வைத்து தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொள்ள முனைகின்றனர் இன்றைய பிரச்சாரகர்கள்.
இது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். அத்துடன் ஏகத்துவ பிரச்சாரகர்கள் கருத்து முரண்பாடான ஒரு விடயத்தை மக்களிடம் வைக்க முன்னர் அது தொடர்பாக, ஏனைய அழைப்பாளர்கள், எதிர்கருத்தை கொண்டிருக்கும் அழைப்பாளர்களுடன் ஒரு கருத்து பரிமாற்றம் நடத்திய பின்னர்தான் மக்களிடம் முன்வரவேண்டும்.
அடுத்து முக்கியமாக, ஒருவர் ஒரு கருத்தை மக்களிடம் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு எதிர்கருத்து வந்தவுடன் மக்கள் முன்னிலையில் தான் எடுத்து வைத்த கருத்தை நிரூபிக்க திராணியுள்ளவராக ஒவ்வொரு அழைப்பாளர்களும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அல்லாமல் ஒன்றை சொல்லிவிட்டு எதிர்குரல் வந்தவுடன் ஓடி ஒழிந்து கொள்ளக்கூடாது.
இதற்கு சிறந்தொரு எடுத்துகாட்டாக தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஸ்ரீ லங்கா தொஹீத் ஜமாஅத்தை குறிப்பிடலாம். ஒன்றாக இருந்து ஆய்வு செய்த பின்னரே நாங்கள் மக்களிடம் தீர்ப்பு வழங்குவோம். அதனால்தான் எதிர்கருத்து வரும்போது உறுதியாக நின்று முகம் கொடுக்கின்றோம்.
எனவே நாம் அனைவரும் ஓரணியில் நின்று குர்'ஆன், ஸுன்னா என்ற அடிப்படையில் மாத்திரம் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் நன்மக்களாக நம்மனைவரையும் வல்ல அல்லாஹ் மாற்றுவனாக!
நாம் முன்வைக்கும் இந்த விடயம் பிழையானது என்றோ இப்படி ஏதும் நடை பெற வில்லை என்றோ இச்செய்தியை யாராவது மறுத்தால் இன்ஷா அல்லாஹ் எந்த இடமோ எந்தக் காலமோ பாராது அவருடன் பேசத் தயாராக இருக்கின்றோம்.
Share your views...
1 Respones to "வழிகேடுக்கு வக்காலத்து வாங்கும் தவ்ஹீத்(?)வாதிகள்."
assalamu alaikum
jawahir awarkale, ikkatturaiyai marupadiyum wasiththu wittu weliyidawum. ungalukku neengale muranpaduwadhu ponra thagawalkal adangiyullana.
satru nithaanamaga ungal dha'awa paniyai thodarungal.
ABDHULLH
July 14, 2011 at 1:27 AM
Post a Comment