எவை எல்லாம் வரதச்சணை?
வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
ஜவாஹிர் (ஜமாலி)
ஜவாஹிர் (ஜமாலி)
வரதட்சணை என்று நேரடியாகச் சொல்லித் தந்தால தான் வரதட்சணை என்று பலரும் நினைக்கின்றனர். சீர்வரிசைகளைக் கேட்காவிட்டாலும் அதைக் கொடுக்காவிட்டால் நம் மகளைச் சரியாக நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே கொடுக்கப்படுகின்றன. திருமணம் நடப்பதற்கு முன் அல்லது திருமணத்தின் போது கேட்காமல் கொடுத்தாலும் அதுவும் கேட்டது போல் தான்.
பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!
6979 - அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்த போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம் என்று கூறினார்கள். பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது' என்று சொல்கிறார்.
அவர் தம் தகப்பன் வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார்.
இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக் கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன் என்று கூறினார்கள்.
பிறகு, தமது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்...33.
அந்த நபருக்கு அன்பளிப்பாகத் தான் அது வழங்கப்பட்டது. ஆனாலும் ஜகாத் வசூலிக்கச் சென்றதால் தான் அவருக்கு வழங்கப்பட்டது என்பதால் அதை அன்பளிப்பாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதைச் சிந்தித்தால் வரதட்சணையில் எவை சேரும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
கணவனின் பணத்தைக் கணவனுக்குத் தெரியாமல் மனைவி மனைவி எடுக்கலாமா?
தாய்க்குத் தெரியாமல் மகனும், கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், பிள்ளைகளுக்குத் தெரியாமல் தாயும் சிறு சிறு பொருட்களையோ அல்லது பணத்தையோ எடுக்கின்றார்கள். இவ்வாறு பொறுப்பாளரிடம் கேட்காமல் எடுப்பது திருட்டா? இல்லையா?
ஒரு பொருளை அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் அல்லது அவரது அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது தான் திருட்டாகும். இதை யார் செய்தாலும் திருட்டு தான்.
எனினும் ஒரு குடும்பத் தலைவர் தனது குடும்பத்திற்குத் தேவையான பொருளைத் தர மறுக்கும் போது, அவருக்குத் தெரியாமல் அவரது மனைவியோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பாளரோ பணத்தை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.
ஆனால் குடும்பத் தேவைக்காக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆடம்பரச் செலவுக்காகவோ அல்லது வேறு வகைகளுக்காகவோ எடுக்கக் கூடாது.
முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், '(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமா?' என்று கேட்டார்.
அதற்கு, 'உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2211, 2460, 5359, 5364, 5370, 6641, 7161, 7170
இந்த ஹதீஸில், 'நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்' என்ற வாசகத்தைக் கவனிக்கும் போது, குடும்பச் செலவு அல்லாத இதர தேவைகளுக்காக எடுப்பது கூடாது என்பதை அறியலாம்.
திருமணத்தின் போது பெண்களுக்குத் தாலி அல்லது கருகமணி போடுகின்றார்கள். இது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? திருமணத்தில் பெண்கள் கழுத்தில் என்ன அணிய வேண்டும். திருமணத்தின் போது பெண்கள் என்ன ஓத வேண்டும்?
திருமணத்தின் போது தாலி அணிவதும், கருகமணி கட்டுவதும் முழுக்க முழுக்க பிற மதக் கலாச்சாரமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே!
(நூல்: அபூதாவூத் - 3512)
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு மதத்தின் கலாச்சாரத்தை, சடங்குகளைப் பின்பற்றுபவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார். எனவே எக்காரணம் கொண்டும் இந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது.
திருமணத்தின் போதும், திருமணத்திற்குப் பிறகும் பெண் கழுத்தில் ஏதாவது அணிந்து தான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. இதுவும் பிற மதத்தினரின் நம்பிக்கை தான். மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் தடுக்கப்பட்ட செயல் தான்.
இஸ்லாத்தைப் பொறுத்த வரை திருமணம் என்பது ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே ஆகும். இதற்கென எந்தவித அடையாளத்தையும் மார்க்கம் ஏற்படுத்தவில்லை.
திருமணத்தில் பெண்கள் ஓதுவதெற்கென நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட எந்த துஆவையும் கற்றுத் தரவில்லை. திருமண ஒப்பந்தம் முடிந்தவுடன் மணமக்களை வாழ்த்துவதற்காக ஒரு பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
ஒருவன் திருமணம் முடித்தால் அவனுக்கு.
பார(க்)கல்லாஹு ல(க்)க வபார(க்)க அலை(க்)க வ ஜமஅ பைன(க்)குமா ஃபில் கைரி
(பொருள்: அல்லாஹ் உனக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!)
என்று நபியவர்கள் வாழ்த்து சொல்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி 1011
அல்லது பாரகல்லாஹு லக்க என்று மட்டும் கூறலாம்.
அறிவிப்பவர் :அனஸ் (ரலி)
நூல் : புகாரி 5155..
Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "எவை எல்லாம் வரதச்சணை?"
Post a Comment