August 30, 2013

வன்னியின் அழைப்பாளன்.

மௌலவி - ஜவாஹிர் ஜமாலி (கட்டார்)

வெற்றியாளர்களின் தேசம் - இதுவே யஹூதி, நஸ்ரானி, ஷிய்யாக்களின் அழிவின் மயாணம்.

சிரியா அன்றும், இன்றும்.

வளைகுடா நாடுகளில் பற்றி எரிந்த "ஜனநாயக தீ' , மத்திய தரைக்கடல் நாடான சிரியாவில் பல மாதங்களாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபர், சர்வாதிகார கரம் கொண்டு இந்த தீயை அணைக்க பார்க்கிறார். அந்நாட்டு ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன.

சிரியா பழமையான வரலாறு கொண்ட நாடு. கி.மு., 3000ம் ஆண்டு முதல் எகிப்தியர், சுமேரியர், ஆரியர், பாபிலோனியர், பாரசீகர் என பலர் ஆட்சி செய்துள்ளனர். கி.பி., 640ம் ஆண்டு முகலாயர்கள் கைப்பற்றினர். பின் பிரெஞ்சுக்காரர்களின் நாடு பிடிக்கும் ஆசையில் சிரியா சிக்கியது. 1946ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் சுதந்திரம் அளித்தனர். 1961ம் ஆண்டு வரை எகிப்தின் ஒரு பகுதியாகவே சிரியா விளங்கியது. 1961 செப்.28ல் தனி நாடாக மலர்ந்தது. 1970ம் ஆண்டு முதல் "பாத்' எனும் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சிரியா ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டது. இதனால் ஒரே குடும்பத்தின் ஆட்சியே நடந்து வருகிறது. 1970-2000 வரை ஹபிஸ் அல் அசாத் என்பவர் ஆட்சி செய்தார். அவருக்கு பின் அவரது மகன் பஷர் அல் அசாத் ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு, ஜனநாயகத்துக்காக போராடிய அனைத்து குழுக்களும் முடக்கப்பட்டன.

2011
ம் ஆண்டு சில அரேபிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சி புரிந்த அதிபர்களுக்கு எதிராக புரட்சி வெடித்தது. இப்புரட்சி துனீசியா, லிபியா போன்ற நாடுகளில் ஜனநாயகம் தழைக்க வழி செய்தது. இதன் காரணமாக ஜனநாயகத்தை விரும்பிய சிரியா நாட்டு போராட்ட குழுக்களும், புரட்சியில் குதித்தன. 2011ம் ஆண்டு உள்நாட்டுப்போர் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

உள்நாட்டு போரில் அதிபரின் ராணுவம், மனிதத் தன்மையை மறந்து செயல்படுகிறது. உலக நாடுகள் சிரியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இஸ்லாமிய கூட்டமைப்பில் இருந்தும் சிரியா வெளியேற்றப்பட்டது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலும் பலமுறை எச்சரித்தாகிவிட்டது. எதையும் சிரியா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ரஷ்யாவும், சீனாவும் மட்டுமே சிரியாவுக்கு ஆதரவளித்து வருகின்றன. சிரியாவின் உள்நாட்டு விவகாரத்தில், எந்த நாடும் தலையிடக் கூடாது என தெரிவிக்கின்றன. இப்போரினால் அண்டை நாடுகளான ஈராக், ஜோர்டான், துருக்கி, லெபனான் உள்ளிட்ட நாடுகளிலும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. தற்கொலைப்படை தாக்குதலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதனால் தீவிரவாத இயக்கங்களுக்கும், இந்தப்போரில் பங்கிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ரசாயன குண்டு தாக்குதல்:

எந்த போரிலும் ரசாயன குண்டுகள் பயன்படுத்தக் கூடாது என்பது, பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் விதிமுறை. இது மனித சமுதாயத்திற்கு எதிரான கொடூரமான செயல் என்பதாலேயே இந்த ஏற்பாடு. ஆனால் இதையும் மீறி, சமீபத்தில் சிரிய ராணுவத்தினர் நடத்திய ரசாயன குண்டு வெடிப்பு தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள அயர்ன் டர்மா, சமால்கர், ஜோபர் ஆகிய பகுதிகளில் ஆக.21ல், அதிகாலை 3 மணி அளவில் இந்த கொடூர ரசாயன குண்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நுரையீரலுக்குள் நச்சுப் பொருட்கள் பரவி, நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்ததால், சம்பவ இடத்திலேயே கொத்துகொத்தாக, பலர் துடிதுடித்து பலியாயினர்.

கண்டனம்:

இச்சம்பவத்திற்கு ஐ.நா.,வும், பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் சிரியா, பழியை புரட்சியாளர்களின் மீது சுமத்தியது. தாக்குதல் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஆனால் சம்பவ இடத்தில், ஆய்வு மேற்கொள்ள அனுமதி தர முடியாது எனவும் சிரியா தரப்பில் கூறப்பட்டது. ராசாயன தாக்குதல் குறித்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் கலந்து பேசினார் அமெரிக்க அதிபர் ஒபாமா. முடிவில், ராணுவ நடவடிக்கை மூலம், சிரிய ராணுவத்திற்கு பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி அமெரிக்க விமானம் தாங்கிய போர்க்கப்பல்கள், சிரியா நோக்கி சென்றுள்ளன. அப்பாவி மக்கள் மீது, ராசாயன குண்டு மூலம் தாக்குதல் நடத்திய, சிரியா மீது கரிசனப்பார்வை கூடாது. ராணுவ தாக்குதல் தொடுத்தாக வேண்டும் என பல உலக நாடுகள் கங்கணம் கட்டியுள்ளன. ஐ.நா.,வின் அனுமதி தேவையில்லை எனவும் அறிவித்துள்ளன.

கலவரம் நடக்க காரணம்:

சிரியாவில், அதிபர் பஷர் அல்-அசாத் குடும்பம், 35 ஆண்டுகளாக அந்நாட்டை ஆண்டு வருகிறது. ஆட்சியை விட்டு அதிபர் விலக, மக்கள் பொறுமை காத்தனர். அது நடக்காத காரணத்தால், அதிபர் பதவி விலகக் கோரி கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போராட்டத்தை துவக்கினர். உள்நாட்டு போருக்கு இதுவே முக்கிய காரணம்.

ஆதரவு நாடு:

சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா குரல் கொடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிராக, சிரியா, ரசாயன குண்டு பயன்படுத்துவதாக கூறி, அமெரிக்கா அந்நாட்டு உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது. அவ்வாறு தலையிட்டால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என, ரஷ்யா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது.

பாதிப்புகள் என்ன

சிரியா தாக்கப்பட்டால், அந்நாடு மட்டுமல்லாது, இந்தியா உட்பட பல நாடுகளும் மறைமுகமாக பாதிக்கப்படும்.
*
உலக அளவில் பொருளாதாரம் சீரழியும்
*
கச்சா எண்ணெய் விலை உயரும்
*
கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும
*
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா போன்ற நாடுகள் பெட்ரோல் இறக்குமதிக்கு அதிகம் செலவழிக்க நேரிடும்.
*
இறக்குமதி அதிகரித்து, இந்திய ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும்
*
இந்தியாவில் விலைவாசி உயரும்
*
அமெரிக்க ஆதரவு, ரஷ்ய ஆதரவு என உலக நாடுகளிடையே மீண்டும் பிளவு ஏற்படும்.


எங்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் - இஸ்ரேல்


தங்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை, அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிரியா அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீது சிரியா தாக்குதல் நடத்தக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து ரசாயன ஆயுதத் தாக்குதலில் சிரியா ஈடுபட்டால், அதிலிருந்து தப்பிக்க, சுவாசக் கவசத்தை இஸ்ரேல் மக்கள் வாங்கி வருகின்றனர். மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைத் தவிர்க்கும் வகையில் ஜெருசலேம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஷிமோன் பெரஸ் பேசியது:

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இஸ்ரேலுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை. இந்நிலையில், இஸ்ரேல் மீது சிரியா தாக்குதல் நடத்தினால், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம். தாக்குதலை எதிர்கொள்ளும் அளவுக்கு இஸ்ரேலிடம் வலிமையான ராணுவமும், பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன.

இஸ்ரேல் மீது சிரியா, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பு ஆகியவை தாக்குதல் நடத்தக் கூடும் என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும்.

சிரியாவில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் (ரசாயன ஆயுதத் தாக்குதல்), மனித இனத்துக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரான குற்றமாகும். எனவே, அந்த விவகாரத்தில் தலையிட சர்வதேச சமூகம் விரும்புகிறது'' என்றார்.

சிரியா தம் மீதும் தாக்கலாம் - இஸ்ரேலியர்கள் அச்சம்

அமெரிக்கா மற்றும் அதனது கூட்டு நாடுகளின் எவ்வகையான தலையீட்டிலும் தமது நாடு வெற்றிபெறும் என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உறுதி அளித்துள்ளார். இந்த பிரச்சினை ஆரம்பமானது தொடக்கம் இதன் உண்மையான எதிரி தானாக வெளிப்படும் வரை நாம் காத்திரந்தோம்.

எமது மனோதிடம் உறுதியாக உள்ள நிலையில் எந்த தாக்குதலுக்கும் முகம்கொடுத்து தாய் நாட்டை பாதுகாக்க தயாராகவே இருக்கிறோம்என்று அல் அக்பர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அஸாத் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே மேற்கு நாடுகள் சிரியா மீது வான் தாக்குதலை ஆரம்பிக்கும் பட்சத்தில் அதற்கு சிரியா பதில் நடவடிக்கைகளை எடுத்தால் தயாராக இருக்குமாறு தமது படையினருக்கு அழைப்பு விடுத்துள்ள இஸ்ரேல் மேலதிக ஏவுகணை அலகுகளையும் நிறுவியுள்ளது.

எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள ஆயுதப்படைகள் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேலில் பதற்றத்துக்கான எந்த சமிக்ஞையும் கிடையாது என்றும் ஆனால் அங்கு விஷவாயுவைத் தடுக்கும் முக மூடிகளுக்காகவும் வடக்கில் வான் தாக்குதலுக்கான பங்கர்களிலும் மக்கள் வரிசையில் நிற்பதாகவும் அங்குள்ள பி.பி.சி. செய்தியாளர் கூறுகிறார்.

August 30, 2013

சிரியா மீதான தாக்குதலை எதிர்க்கிறது ஈரான்


ரசாயன குண்டு வீச்சு விவகாரத்தில் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சிரியாவில் அதிபர் ஆசாத்தை எதிர்த்துப் போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த 21-ந் தேதி ரசாயன குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்பட்டது. இதில் 1300 பேர் பலியாகினர் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் சிரியாவோ இதை மறுத்திருந்தது. மேலும் ரசாயன குண்டுகள் வீசப்பட்ட இடத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் ஆய்வும் செய்தனர். இதனிடையே ரசாயன குண்டுகள் வீசிய சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா கூறியிருந்தது. இதற்கு ்ரான் எதிர்ப்பு தெரிவித்து கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏற்கெனவே சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா மீது தாக்குதல் - பிரித்தானியா பாராளுமன்றத்தில் விவாதம்


பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரமான விவாதம் ஆரம்பித்துள்ளது. சிரியாவில் இராணுவ தலையீட்டுக்கான அடிப்படைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஆதரவைக் கோருகிறது.

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் தன்னால் தாக்கல் செய்யப்படும் தீர்மானமானது சிரியா விடயத்தில் ஒரு பக்கசார்பு நிலைப்பாட்டை எடுப்பதோ அல்லது சிரியாவில் ஆட்சிமாற்றத்துக்காக அங்கு ஆக்கிரமிப்பதோ அல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் டேவிட் கமெரன் கூறினார்.

அது அங்கு நடந்த பெரும் எடுப்பிலான இரசாயன தாக்குதல் குறித்தது என்றும், போர்க்குற்றம் ஒன்றுக்கான பிரிட்டனின் பதில் நடவடிக்கை குறித்தது என்றும் அவர் கூறினார்.

டமாஸ்கஸில் கடந்த வாரம் ஒரு இரசாயன ஆயுதத் தாக்குதல் நடந்தது என்பதை சிரியாவின் அரசாங்கம் கூட மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார். அதற்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று உளவுத்தகவல்கள் உறுதியாகக் கூறுவதாகவும், மனித நேய தலையீட்டு கொள்கையின் அடிப்பையில் அங்கு பிரிட்டன் தலையிடலாம் என்று சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழில்கட்சியின் தலைவர் எட் மிலிபாண்ட், அரசாங்க தீர்மானத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவந்திருக்கிறார்.
இராணுவ தலையீட்டை கொள்கை அடிப்படையில் தான் எதிர்க்க மாட்டேன் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், எந்த ஒரு முடிவுக்கும் முன்பாக ஆதாரம் முன்வைக்கப்பட வேண்டும் என்றும், இரசாயன தாக்குதலுக்கு அதிபர் அசாத்தின் அரசாங்கமே பொறுப்பு என்பதற்கான உறுதியான ஆதாரம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

அசாத் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுவதற்கான பணி ஐநா பரிசோதனைக்குழுவுக்கு இல்லாது விட்டாலும், அவர்களது முடிவு அதற்கு வழி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்புச் சபை இலகுவாக இருக்காது என்று கருதி வேறு குறுக்கு வழியை தேடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே சிரியா மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தமது அரசு எதிர்த்து போராடி தம்மை பாதுகாத்துக் கொள்ளும் என்று சிரிய அதிபர் பஷார் அல் அஸத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் கூறுகிறது.

யேமன் நாட்டு அரசியல்வாதிகள் குழு ஒன்றுடன் பேசும்போது, சிரியா மீதான அத்தகைய இராணுவத் தாக்குதல் அச்சுறுத்தல், தமது மக்களில் சுயாதீனமான விருப்பம் என்று அவர் கூறுவதை அதிகரிக்கவே செய்யும் என்றும் அதிபர் அஸத் தெரிவித்ததாகவும் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ நாட்டிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது என்றும், உதவி தேவைப்படும் மக்களை சென்றடைந்து வேண்டியதை செய்வதற்கு தமது தடைகள் இல்லாத அனுமதி தேவை எனவும் கோரியுள்ளது.

சிரியாவின் பல பகுதிகளுக்கு உதவிகள் சென்றடைவது பல மாதங்களாக முடங்கிப் போயுள்ளதால், பல பகுதிகளில் முக்கியமான மருந்துப் பொருட்கள், உணவு மற்றும் குடிநீர் ஆகியவை பற்றாக்குறை நிலையில் உள்ளன என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

சிரியா மீது யுத்தம் - இன்னும் எந்த முடிவையும் நான் செய்யவில்லை - ஒபாமா


சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நான் இன்னும் முடிவு செய்யவில்லை என தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியின் போது ஒபாமா கூறியதாவது:-

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் நமது தரப்பின் தாக்கங்களை வெளியிடுவது தொடர்பான தேர்வை செய்ய வேண்டியது அவசியம் என்றே நான் கருதுகிறேன்.

இதன் மூலம் பஷர் அல்-ஆசாத்தின் அரசு சரியான சிமிக்ஞையை உணர்ந்துக்கொண்டு, மீண்டும் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடாமல் இருக்கும் என்றும் கருதுகிறேன்.

சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவையும் நான் செய்யவில்லை. எனினும், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிரான பன்னாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்'.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

எங்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் - இஸ்ரேல்


தங்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை, அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிரியா அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீது சிரியா தாக்குதல் நடத்தக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து ரசாயன ஆயுதத் தாக்குதலில் சிரியா ஈடுபட்டால், அதிலிருந்து தப்பிக்க, சுவாசக் கவசத்தை இஸ்ரேல் மக்கள் வாங்கி வருகின்றனர். மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைத் தவிர்க்கும் வகையில் ஜெருசலேம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஷிமோன் பெரஸ் பேசியது:

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இஸ்ரேலுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை. இந்நிலையில், இஸ்ரேல் மீது சிரியா தாக்குதல் நடத்தினால், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம். தாக்குதலை எதிர்கொள்ளும் அளவுக்கு இஸ்ரேலிடம் வலிமையான ராணுவமும், பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன.

இஸ்ரேல் மீது சிரியா, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பு ஆகியவை தாக்குதல் நடத்தக் கூடும் என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும்.

சிரியாவில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் (ரசாயன ஆயுதத் தாக்குதல்), மனித இனத்துக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரான குற்றமாகும். எனவே, அந்த விவகாரத்தில் தலையிட சர்வதேச சமூகம் விரும்புகிறது'' என்றார்.


சிரியா மீது ராணுவ நடவடிக்கை : பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தோல்வி


சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது.

சிரியாவில் அதிபருக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் ரசாயன குண்டுகளை வீசி தாக்கி வருவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தி, அதனை பணிய வைக்க அமெரிக்கா முடிவு செய்து. அதற்காக இங்கிலாந்தின் ஒத்துழைப்பை நல்கியிருந்தது.

இதையடுத்து, சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் அந்நாட்டு பிரதமர் கேமரூன். அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், அது 13 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ரஷ்யாவின் போர் கப்பல்களும் தயார்..!


சிரியா நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அந்நாட்டுக்கு உதவ, ரஷ்யா, போர் கப்பல்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி மேரி ஹார்ப் கூறியதாவது: சிரியா அதிபர் பஷர்-அல்-ஆசாத்தின் உத்தரவில்லாமல், ரசாயன தாக்குதல் நடந்திருக்காது. அவருடைய உத்தரவில்லாமல், இந்த தாக்குதல் நடந்திருந்தாலும், அதிபர் என்ற முறையில் ஆசாத், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து, ஐ.நா.,பாதுகாப்பு சபையை நாடப்போவதில்லை. ஏனென்றால், சிரியாவுக்கு, ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது. இந்த விஷயத்தில், ஐ.நா., பாதுகாப்பு சபையில் ரஷ்யா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, தாக்குதலை நடத்த விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடும். இவ்வாறு மேரி கூறினார்.

ஈரான் அச்சம் : சிரியா மீது போர் தொடுக்கப்பட்டால், வளைகுடா பகுதியில் பதற்ற நிலை ஏற்படும், எனவே, இந்த தாக்குதலை தடுக்க, ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி, ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

ரஷ்ய போர்க்கப்பல் : சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க உள்ளன. எனவே, சிரியாவின் நட்பு நாடு என்ற முறையில், ரஷ்யா, தன் பங்குக்கு, நீர்முழ்கி கப்பல் எதிர்ப்பு கப்பல்களையும், ஏவுகணை தாங்கிய கப்பல்களையும், அனுப்ப திட்டமிட்டுள்ளது.

August 30, 2013

இங்கிலாந்தின் துணை இல்லாமல் சிரியா மீது தாக்குதல் நடத்த தயார் - பிரான்ஸ்


சிரியா மீது தாக்குதல் நடத்த தனது நெருங்கிய நட்பு நாடான இங்கிலாந்துடன் பேசி போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்.பி.க்களின் ஆதரவை திரட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முடிவு செய்தார்.

சிரியா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் டேவிட் கேமரூன் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

இந்த தீர்மானம் தோல்வியடைந்தது தொடர்பாக கருத்து கூறிய அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹகெல், 'ஒவ்வொரு நாட்டுக்கும் சில விவகாரங்களில் சுயமாக முடிவெடுக்கும் பொறுப்பு உள்ளது. அந்நாடுகளின் பொறுப்பை நாங்கள் மதிக்கிறோம்' என்றார்.

அமெரிக்கா தங்கள் மீது தனித்தே கூட தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி சிரியா மக்களிடையே நிலவி வருகிறது.

டமாஸ்கஸ் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அதிநவீன 'ஸ்கட்' ரக ஏவுகணைகள் மற்றும் ஏவு இயந்திரங்களை பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே, ஈரான் ராணுவ மந்திரி உசேன் டெகானுடன் இன்று தொலைபேசியில் பேசிய சிரியா ராணுவ மந்திரி பஹ்த் அல்-பிரெய்ஜ், 'வல்லரசுகளின் எவ்வித மூர்க்கத்தனமாக தாக்குதலையும் சந்திக்க சிரியாவும், சிரியாவின் மக்களும் தயாராக உள்ளனர்' என்று தெரிவித்தார். சிரியா அரசுக்கு சொந்தமான 'சனா' செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தின் துணை இல்லாமல் போனாலும் சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே இன்று அறிவித்தார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரான்கோயிஸ் ஹாலண்டே கூறியதாவது:-

'
சிரியா மக்களின் மீது கடந்த 21ம் தேதி நடத்தப்பட்ட ரசாயன குண்டு தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் மீண்டும் சரிப்படுத்த முடியாத தீங்கான நடவடிக்கை ஆகும்.

சிரியா மக்களுக்கு இந்த மிகப்பெரிய கொடுமையை இழைத்த செயல் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது. பஷர் அல்-ஆசாத் அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இங்கிலாந்து பங்கேற்காவிட்டாலும் இது தொடர்பாக நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட பிரான்ஸ் தயாராக உள்ளது.

சிரியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளும் தயாராக உள்ளபோதிலும், எங்களது தலையீட்டை நியாயப்படுத்துவதற்குள தேவையான சூழ்நிலை உருவாகும் வரை பிரான்ஸ் காத்திருக்கும்'.

இவ்வாறு அவர் கூறினார்.

சிரியா மீது போர் தொடுக்க ஐக்கிய நாடுகள் ஒப்புதல் எனக்குத் தேவையில்லை – ஒபாமா.

ரசயான ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்க தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் எனக்குத் தேவையில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார்.

சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, புரட்சிப் படையினர் அரசுக்கு எதிராக போராடி வருகின்றர்.  சிரிய அரசு, போராட்டக் காரர்களை இராணுவத்தைக் கொண்டு கடுமையாக தாக்கி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 21ஆம் தியதி டமாஸ்கஸ் அருகே அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது ரசாயண குண்டுகள் வீசப்பட்டது. இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.  அமெரிக்கா சிரியாவை தாக்கப் போவதாக அறிவித்து அதனுடைய நேச நாடுகளின் ஆதரவைக் கோரியது. ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைக்கு போதிய ஆதரவு கிடைக்காமல் தீர்மானம் தோல்வியடைந்தது. எனவே சிரியா மீதான தாக்குதலுக்கு தனது ஆதரவு இல்லை என்று இங்கிலாந்து அறிவித்து விட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் மட்டுமே அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ராணுவ உயரதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்திய பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசும் போது, " ரசாயன ஆயுதங்களை சிரிய அரசு பயன்படுத்தியதால், அதற்கு அதிபர் பஷார் அல் ஆசாத் பதில் சொல்ல வேண்டும். உலகளவில் ரசாயன ஆயுதம் தடை செய்யப்பட்ட நிலையில், சிரியாவின் செயல் இவ்விசயத்தை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது,

எனவே, அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளது. இதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் எனக்குத் தேவையில்லை. எல்லா நாடுகளும் இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை.  நட்பு நாடுகளின் ஆதரவு இருந்தாலே போதுமானது.  அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மட்டுமே தேவைப்படுகிறது" என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சிரிய அரசு, "ஒபாமா அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதே அவர் தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது" என்று கூறியிருக்கிறது.

சிரியா மீது தாக்குதல் தாமதமாகலாம்..! அனுமதிக்காக காத்திருக்கும் ஒபாமா..!!

சிரியா, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்து உள்ளார்.

சிரியா நாட்டில், அதிபர் பஷர்-அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்துவிட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன.இதனால் சிரியாவில், தொடர்ந்து சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். 7 லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

ரசாயன ஆயுதம்:சிரியா நாட்டுக்கு ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை வினியோகம் செய்து வருகின்றன. இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா., பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை.கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர். ரசாயன குண்டு வீச்சில், நச்சு புகை பரவி, 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். இதுவரை ரசாயன குண்டு பயன்படுத்தியதற்கான தடயம் கிடைக்கவில்லை. சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்காக, மற்ற நாடுகளின் ஆதரவை, ஒபாமா திரட்டி வருகிறார்.""சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில், இந்த கவுன்சில், முற்றிலும் செயலிழந்துவிட்டது. அதனுடைய ஒப்புதலை பெறாமல், சிரியா மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்,'' என, அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார்.சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டன் பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், இந்த தாக்குதலுக்கு, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆதரவளித்து உள்ளன.

ஆதாரம் உள்ளது:சிரியாவில், ரசாயன குண்டுகளை வீசி, விஷ வாயுவை பரவவிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்து உள்ளார்.

"
சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு, அமெரிக்க பார்லிமென்ட்டின் ஒப்புதலை கோரியுள்ளார் அதிபர் ஒபாமா. ஒபாமாவின் இந்த நடவடிக்கை, சிரியா மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையிலிருந்து பின்வாங்குவதாக உள்ளது' என, சிரியா பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.

ஆனால் இந்த கருத்தை, அமைச்சர் ஜான் கெர்ரி மறுத்துள்ளார். ""சிரியா விஷயத்தில், அமெரிக்க அரசு சுதந்திரமாக செயல்படுவதற்காக தான், இந்த நடவடிக்கையை ஒபாமா எடுத்துள்ளார்,'' என, ஜான் கெர்ரி தெரிவித்து உள்ளார்.சிரியாவில் போர் மேகம் சூழ்ந்து வருவது குறித்து, அரபு நாடுகள் நேற்று கூடி விவாதித்தன. எகிப்து, ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகள், "தாக்குதலுக்கு பதில், பேச்சு வார்த்தையின் மூலம் இப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும்' என, வற்புறுத்தின.

மீண்டும் போர் ஏற்படக்கூடாது’ - சர்வ மதத்தினரையும் பிரார்த்தனையில் பங்கேற்க அழைப்பு.

சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்கா, பிரான்சு நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க முயன்று வருகின்றன. எனவே எந்தநேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் போரை தடுத்து சுமுக தீர்வு ஏற்பட வழி காணும்படி உலக நாட்டு தலைவர்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார். மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுவது போல ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றாலும், ‘மீண்டும் போர் ஒருபோதும் ஏற்படக்கூடாதுஎன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் விடுத்த அறிக்கையில், இந்த விவகாரத்தில் சிரியாவில் அமைதி நிலவ வேண்டி உலகம் முழுவதிலும் உள்ள 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைவரும் வருகிற 7–ந்தேதி பிரார்த்தனை நடத்த வேண்டும். அன்று வாடிகன் நகரில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் நான் பங்கேற்பேன். மக்கள் நலனுக்காக நடக்கும் இந்த பிரார்த்தனையில் மற்ற கிறிஸ்தவர்களும், சர்வ மதத்தினரும் பங்கேற்க அழைக்கிறேன்என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - சிரியா அறிவிப்பு.

தன் நாட்டின் மீது அமெரிக்கா தொடுக்கவுள்ள போரை எதிர்கொள்ள துப்பாக்கியின் விசையை தயார் நிலையில் தம் படைகள் வைத்துள்ளதாக சிரிய பிரதமர் வய்ல் அல் ஹல்கி கூறியுள்ளார்.

சிரிய அரசு தொலைக்காட்சியில் இன்று உரையாற்றிய சிரிய பிரதமர் வய்ல் அல் ஹல்கி எச்சூழலையும் எதிர்கொள்ளும் மனோநிலையில் துப்பாக்கியின் விசையை அழுத்த தயாராக தம் படைகள் உள்ளதாக கூறினார்.

ஆகஸ்டு 21 அன்று சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன குண்டு தாக்குதலை சிரிய அரசு நடத்தியதால் அதன் மேல் போர் தொடுக்க அமெரிக்க தயாராகி வரும் நிலையில் அதை தாங்கள் செய்யவில்லை என்று சிரியா மறுத்துள்ளது. இதை குறித்து விசாரித்து வரும் ஐ.நா அதிகாரிகள் சிரியாவிலிருந்து வெளியேறிய பின் சிரிய பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின் கீழ் யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து குர்ஆனும் ஹதீசும் மிக வன்மையான கண்டிக்கிறது.

சிரியாவில் அசாத் பலவீனப்பட்டுவிட்டதை அடுத்து முஜாஹிதீன்களது கை மேலோங்கிவிடக் கூடாது என்ற நிலையில் அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய காலனித்துவ சக்திகள் சிரியாவில் இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டதை கருத்திற்கொண்டு மனிதாபிமான இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் எமது முஸ்லிம் நாடுகள் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து குப்பார்களது காலனித்துவக் கொடியின்கீழ் இந்த பொய்யான காரணங்களுக்கு உடந்தையாக முஜாஹிதீன்களுக்கு எதிராக கூட்டுச் சேர்வது மிகப்பெரிய அநியாயமாகும்.

சிரியா மீதான இந்த இராணுவ முன்னெடுப்புக்கு முன்பு கட்டார், சவூதி போன்ற நாடுகள் இந்த காலனித்துவ சக்திகளது ஜெனரல்களுடன் அம்மானில் கூடியெடுத்த முடிவைத் தொடர்ந்தே இந்த இராணுவ முன்னெடுப்பு நகர்கிறது.

அத்துடன் யூ.என் அனுமதியின்றி தேவையான முழுமையான இராணுவப் பங்களிப்பை இந்த குப்பார்களுடன் சேர்ந்து சிரியாவிற்கு எதிரான இராணுவ முன்னெடுப்பில் வழங்குவதாக துருக்கிவாக்களித்துள்ளது. இது சிரிய முஜாஹிதீன்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் மாத்திரமன்றி அவர்கள் இஸ்லாத்தை ஷரீஆவை நிறுவும் போராட்டத்தை பலவீனப்படுத்தி குப்ருடைய ஆட்சி மீண்டும் தொடர வழிவகுக்கும் ஒரு ஈனச் செயலாகும்.

இவ்வாறு குப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின் கீழ் யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து குர்ஆனும் ஹதீசும் மிக வன்மையான கண்டிக்கிறது.

“(
எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர். (தௌபா 9:8)”

முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?” (4: 144)

எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.” (5: 52)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'
முஷ்ரிகீன்களது நெருப்பில் ஒளியைத்தேடாதீர்கள்.'

அதேநேரம் இஸ்லாத்தை நிலைநட்டுவதில் உதவி தேவைப்பட்டால் முஸ்லிம்களுக்கு உதவி வழங்குமாறு அல்குர்ஆன் ஏவுகிறது.

எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும்.” (8: 72)
சிரியாவின் மீதான அமெரிக்காவின் இராணுவ முன்னெடுப்பின் நியாயமற்ற காரணங்களும் அதன் உண்மையான முகங்களும்!

அமெரிக்கா கடந்த இரண்டு வருடமாக சிரியாவில் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அனுமதித்தது மாத்திரமன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காயப்படவும் அனுமதித்தது.

ஆனால், அமெரிக்கா இன்று அல்கௌதாஎனும் இடத்தில் இரசாயன ஆயுதத் தாக்குதல் மேற்கொண்டதன் விளைவாகவே சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதனால் அசாத் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாககூறிக்கொண்டு சிரியாவின் மீதான இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்வதில் எந்த நியாயங்களும் வெளிப்படை உண்மைகளும் இல்லை என்பதனை நாம் உணரலாம்.

அமெரிக்காவினது சிரியாவின் மீதான இராணுவ முன்னெடுப்பின் நியாயமற்ற காரணங்கள் பின்வருமாறு:
1.
கடந்த இரண்டு வருடமாக சிரியாவில் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அனுமதித்தது மாத்திரமன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காயப்படவும் அனுமதித்தது.

2.
எகிப்தில் ஜனநாயக அடிப்படையில் தெரிவசெய்யப்பட்ட முர்சியை பதவி கவிழப்பதில் பாரிய பங்களிப்பை வழங்கிவிட்டு ஆயிரக்கணக்கான மக்களை அல்-சிசி எனும் அரக்கன் கொன்று குவிக்க வழிசமைத்ததுடன் அங்கு மக்கள் புல்டோசர் கொண்டு நசுக்கப்படும் போது அவர்களுக்கு மனிதாபிமானமோ மனித உரிமையோ தென்படவில்லை.

3.
இராக்கிய அமெரிக்க படையெடுப்புக்கு முதலில் 'ஹலாப்ஜா' எனும் இடத்தில் சதாம் ஹூசைன் குர்திசிய மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பிரயோகித்தும் அமெரிக்கா சதாம் ஹூசைன் பலவீனப்பட்டு விட்டவுடன் அதை பின்பு காரணமாகக் காட்டி ஈராக்கின் மீது மிகமோசமான ஒரு இராணுவ முன்னெடுப்பை தற்துணிவுடன் மேற்கொண்டது மாத்திரமன்றி 'பலுஜா' நகரில் யுரேனிய அனுக்கழிவுகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி அந்த மக்களை கறுவறுத்த வரலாற்றுச் சாதனையை கொண்டுள்ளது.

4.
அதேநேரம் இஸ்ரேல் 2009 இல் காசா மக்களுக்கு எதிராக 'வைட்பொஸ்பரசு' எனும் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியபோது அதனை கண்டுகொள்ளவில்லை.

அவ்வாறாயின் ஏன் அமெரிக்கா இன்று சிரிய மக்கள் விடயத்தில் அதீத அக்கறை எடுத்த நிலையில் ஒரு இராணுவ முன்னெடுப்பை காலனித்துவ கூட்டு சக்திகளான பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் களமிறங்கியுள்ளது?

இந்த அமெரிக்க தலைமையிலனா காலனித்து சக்திகளின் இந்த நகர்வின் அடிப்படைக் காரணம் இன்று அசாத் நலிவடைந்து விட்டான். அவனது பெரும் தொகையான ஆயுதங்களை முஜாஹிதீன்கள் தம்வசப்படுத்தி விட்டார்கள். இவர்கள் கிலாபா ஆட்சியை நிறுவப் போராடுகிறார்கள் என்ற நோக்கம் ஒரு புறமிருக்க அவர்களது தலையீட்டின் முலம் முஜாஹிதீன்களை பலமிழக்கச் செய்து அங்கு மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியெழுப்பட்ட ஜனநாயக ஆட்சியை நிறுவி கிலாபா மீள் உருவாக்கத்தை அவர்கள் தடுக்கவேண்டும்.

அதன் மூலமாகத்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளில் தங்கள் கரத்தை பலப்படுத்தி தொடர்ந்தும் வளங்களை உறிஞ்சவும் தங்களது நுகர்வுச் சந்தையாக முஸ்லிம் நாடுகளை தக்கவைக்கவும் முடியும் என்பதனை நன்குணர்ந்து எடுக்கும் அரசியல் மற்றும் இராணுவ நகர்வாக இஸ்லாத்திற்கு எதிரான யுத்தப்பிரகடனமாக ஒவ்வொரு முஸ்லிமும் இதனைப் பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.

சிரியா மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் (வரைபடங்கள் இணைப்பு)

சிரியாவில் 426 சிறுவர்கள் உட்பட 1429 பேர் கொல்லப்பட்டதற்கு இரசாயனத் தாக்குதலே காரணம் என்பது தெளிவானது என்று தெரிவித்திருக்கும் அமெரிக்கா அந்நாட்டின் மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது.

 
அதேசமயம் சிரிய ஜனாதிபதி பஸார் அல்  அசாட்டை காடையன் , கொலைகாரன்என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி வெளிப்படையாக சாடியிருப்பதுடன் பாரதூரமான குற்றங்களை இழைத்த இந்த சர்வாதிகாரியை அமெரிக்கா விட்டுச் செல்ல முடியாதென்று கடும் தொனியில் தெரிவித்திருக்கின்றார்.

 
சிரியத் தலைநகர் டமாஸ்கஸிலிருந்து ஐ.நா. ஆயுதப் பரிசோதகர்கள் வெளியேறியிருக்கும் நிலையில் அமெரிக்கா விடுத்திருக்கும் இந்த அறிக்கை எந்தநேரமும் தாக்குதல் நடத்துவதற்கான சமிஞையாக அமைந்திருக்கிறது.

 
கெரி கருத்துத் தெரிவித்திருந்த பின்னர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகுறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாகவும் பயங்கரமான அளவுக்கு சிறுவர்களும் பெண்களும் அப்பாவிப் பொதுமக்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலகத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

 
ஆனால் சிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதை ஜேர்மனி நிராகரித்திருக்கிறது. அதேசமயம் வளைகுடாப் பிராந்தியத்தில் சிரிய ஆட்சியை அரபு லீக் கடுமையாக கண்டித்துள்ள போதிலும் குறிப்பிடத்தக்க அளவு ஆதரவு அமெரிக்காவுக்கு கிடைக்குமா என்பது பற்றி தெளிவற்ற நிலமையே காணப்படுகிறது.

விஷக்குண்டுகளை சிரியா பயன்படுத்தியது - அமெரிக்கா திட்டவட்டம்.

ரியாவில் கடந்த மாதம் 21-ம் தேதி அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடந்தது. போராளிகள் பகுதியில் நடந்த சண்டையின் போது அதிபர் படையினர் விஷக்குண்டுகளை பயன்படுத்தினர் என்பதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இதில் 1400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து சிரியா மீது தாக்குதல் நடத்த அமேரிக்கா தயாராகி வருகிறது. இருந்தும் சபையின் ஒப்புதலுக்காக அது காத்திருக்கிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் சிரியா இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது குறித்த ஆதாரம் இருந்தால் அதை ஐ.நா. ஆய்வாளர்களிடமும், ஐ.நா. பாதுகாப்பு சபையிடமும் சமர்பிக்க வேண்டும்
என்று கூறியிருந்தது.

இந்நிலையில் நேற்று அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியதாவது:-

 
சிரியாவில் கடந்த மாதம் நடைபெற்ற சண்டையின் போது நரம்புகளை பாதிக்கும் சரின் விஷவாயு குண்டுகளை அதிபர் படையினர் பயன்படுத்தியதற்கான ஆதரங்கள் அமெரிக்காவிடம் உள்ளன.

இறந்தவர்களின் இரத்தம் மற்றும் முடியை சோதித்ததில் நரம்புகளை பாதிக்கும் சரின் விஷவாயு பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இது எங்களுக்கு கிடைத்த தனிப்பட்ட ஆதாரங்கள் தான். ஐ.நா. ஆய்வாளர்களிடமிருந்து இதை பெறவில்லை. இதையே அடிப்படையாக வைத்து புகார் தொடரப்படும். எனவே, சிரியாவின் மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் எந்தவித தாக்குதலையும் சமாளிக்க தயாராக உள்ளதாக சிரியா அதிபர் ஆசாத் கூறியுள்ளார். சிரியாப்போராளிகள் குழுவின் தலைவர் அகமது-அல்-ஜார்பா நாசக்கார ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை அழிக்கும் சிரியா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.


சிரியாவில் கடந்த மாதம் 21-ம் தேதி அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடந்தது. போராளிகள் பகுதியில் நடந்த சண்டையின் போது அதிபர் படையினர் விஷக்குண்டுகளை பயன்படுத்தினர் என்பதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இதில் 1400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து சிரியா மீது தாக்குதல் நடத்த அமேரிக்கா தயாராகி வருகிறது. இருந்தும் சபையின் ஒப்புதலுக்காக அது காத்திருக்கிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் சிரியா இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது குறித்த ஆதாரம் இருந்தால் அதை ஐ.நா. ஆய்வாளர்களிடமும், ஐ.நா. பாதுகாப்பு சபையிடமும் சமர்பிக்க வேண்டும்
என்று கூறியிருந்தது.

இந்நிலையில் நேற்று அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியதாவது:-

 
சிரியாவில் கடந்த மாதம் நடைபெற்ற சண்டையின் போது நரம்புகளை பாதிக்கும் சரின் விஷவாயு குண்டுகளை அதிபர் படையினர் பயன்படுத்தியதற்கான ஆதரங்கள் அமெரிக்காவிடம் உள்ளன.

இறந்தவர்களின் இரத்தம் மற்றும் முடியை சோதித்ததில் நரம்புகளை பாதிக்கும் சரின் விஷவாயு பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இது எங்களுக்கு கிடைத்த தனிப்பட்ட ஆதாரங்கள் தான். ஐ.நா. ஆய்வாளர்களிடமிருந்து இதை பெறவில்லை. இதையே அடிப்படையாக வைத்து புகார் தொடரப்படும். எனவே, சிரியாவின் மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் எந்தவித தாக்குதலையும் சமாளிக்க தயாராக உள்ளதாக சிரியா அதிபர் ஆசாத் கூறியுள்ளார். சிரியாப் போராளிகள் குழுவின் தலைவர் அகமது-அல்-ஜார்பா நாசக்கார ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை அழிக்கும் சிரியா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.


நன்றி - 
இனையம்.




Share your views...

0 Respones to " "

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed