கட்டாரில் இருந்து - வன்னியின் அழைப்பாளன்.
மௌலவி - ஜவாஹிர் ஜமாலி.

உங்கள் பொன்னான வாக்குகளை மண்ணாக்க வேண்டாம்.

இலங்கை முஸ்லீம்கள் சிந்திக்கும் தருனம்.
மாகாணசபைத் தேர்தலும், முஸ்லிம் சமூகமும்
வட மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் போன்றவற்றுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் மிகுந்த அவதானத்துடன் தமது வாக்கை அளிக்க வேண்டிய நிலையுள்ளது. முஸ்லிம் வேட்பாளர்கள் அளும்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சைக் குழுக்கள் என்று பல்வேறு கட்சிகளில் களத்தில் குதித்து உள்ளனர். இதனால் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு வேறு சில சமூகத்தினருக்கு வாய்ப்பானதாக மாறவும் வாய்ப்புள்ளது. மேலும் கடந்த காலத்தில் மாகாணசபை பிரதிநித்துவத்தை பெற்றருந்த பிரதேசங்கள் இம்முறை பிரதிநிதிகளை இழக்கும் வாய்ப்பு உள்ளது.

பள்ளிவாயல்கள்,சமூக அமைப்புக்கள்.கழகங்கள்,சங்கங்கள் போன்றவை முஸ்லிம்களின் வாக்களிப்பு வீ;தத்தை அதிகரிக்கச்செய்ய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இலங்கை முஸ்லிம்களிடத்தே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய மாமனிதர்களாக பின்வருவோரை நாம் பார்க்கிறோம்.அறிஞர் சித்திலெப்பை,டி.பி.ஜாயா,அராபிபாஷா,சேர்.ராசிக் பரீத்,பதியுதீன் முஹம்மட்,எம்.எச்.எம்.அஸ்ரப்.

குறிப்பாக எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களே முஸ்லிம் பெண்களிடத்தே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்ற உண்மையை உரத்துக்கூறலாம்.

வேட்பாளர்கள் எதிரணியினரை மோசமான வார்த்தைப்பிரயோகம் மூலம் விமர்சிப்பதை விடுத்து இங்கிதமான முறையில் தமது எதிர்காலச்செயற்றிட்டங்களை மக்கள் முன் வைக்கவேண்டும்.மோசமான விமரிசனங்கள்,வன்முறைகள் போன்றவற்றை மக்கள் வெறுக்கின்றனர்.இதனை வேட்பாளர்கள் அனைவரும் தமது மனதில்கொள்ளவேண்டும்.ஜனநாயக அடிப்படையில் செயற்பட யாவருக்கும் உரிமையுண்டு.

தாம் விரும்பிய ஒவ்வொருவருக்கும் வாக்களிப்பது வாக்காளரின் ஜனநாயக உரிமை .இவ்வுரிமை எமது மூதாதையர்களால் போராடிப்பெறப்பட்ட ஒன்றாகும்.எமது நாட்டில் ஆரம்பத்தில் படித்த வர்க்கத்தினருக்கும்,பின்னர் மத்தியதர வர்க்கத்தினருக்கும்,அடுத்து அனைத்து ஆண்களுக்கும்,இறுதியாகப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

இவ்வாறு பல சிரமங்கட்கு மத்தியில் கிடைத்த வாக்குரிமையின் பெறுமதியை எம் சமூகத்தில் குறிப்பிட்ட சிலர் அறியாமலுள்ளனர்.|இவர்கள் இராமன் ஆண்டாலென்ன ,இராவணன் ஆண்டாலென்ன,? அல்லது கூடவந்த குரங்கு ஆண்டாலென்ன?என்ற மனப்பாங்கில் செயற்படுகின்றனர்.இக்குழுவில் படித்த அரச ஊழியர்கள்,வயதான ஆண்கள்,வயதான பெண்கள்,சில சமய ஈடுபாடுடைய இளைஞர்கள்,ஹஜ்,உம்ரா கடமைகளைப் பூர்த்தி செய்த சிலர்.

இவர்கள் வாக்களிப்புத்தினத்தன்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிப்பதில்லை.இதனால் இவர்களின் வாக்கு வீணாகிறது.ஆனால் தமிழ் சிங்களப்பிரதேசங்களில் நிலைமை மாற்றமாக உள்ளது.இப்படி முஸ்லிம்களின் வாக்களிப்பு விகிதம் குறைந்தால் நிலைமை என்னவாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

கடந்த காலங்களில் விட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு இம்முறை நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்கு அளிப்போமாக! .வாக்கு என்பது வெறும ;ஒரு ஒ  புள்ளடி அல்ல. அதன் பின்னால் உள்ள தாற்பரியத்தையும் நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.நம்மால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதி நிதி சிறந்த மக்கள் சேவை செய்து பெயர் பெற்றால் அதன் நன்மையில் நமக்கும் பங்கு உண்டு.

மாறாக ,எம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி அடாவடி,பாரபட்சம்,அநீதி,ஊழல் போன்ற பாவச் செயல்களில் ஈடுபடுபவராக இருந்தால் அதன் பங்கும் ,பாவமும் எமக்கும் உண்டு. என்பதை புரிந்த கொள்ள வேண்டும்.

நாம் ஓருவருக்கு வாக்களிக்க முன்பு பின்வரும் விடயங்களைப் பற்றியும் சற்று யோசித்து முடிவு செய்வது சாலச் சிறந்தது என்பது எனது பணிவான யோசனையாகும்.

கல்வி கற்றவரா?
உண்மை,நேர்மை உள்ளவரா ?
மக்களால் இலகுவாக அணுகப்படக்கூடியவரா?
சமூகம் பற்றிய அக்கறை உள்ளவரா?
சமூகசேவையில் ஈடுபடுபவரா?
சவால்களை எதிர்கொள்ளும் திறன் உடையவரா?
ஊழல்களில் ஈடுபடுபவரா?
வாக்குறுதியைக் காப்பாற்றுபவரா?
சமய,சமூகவிழுமியங்களை மதிப்பவரா?
முதியோரையும் ,சிறியோரையும் நேசிப்பவரா?
பணம் சம்பாதிப்பதை நோக்காகக் கொண்டவரா?
சிறந்த சமூகம்பற்றிய தூரநோக்கு உடையவரா?
ஊடகங்களுடன் தொடர்புடையவரா?
சமூக அநீதியைத் தட்டிக்கேட்பவரா?
சிறந்த குரல்வளமும்,பேச்சாற்றலும் உடையவரா?
உரிமைகளைப் போராடிப் பெற்றுத்தரக்கூடியவரா?
உரிய அரசியல் கட்சிக்கு விசுவாசமானவரா?

பிரச்சினை எங்கே இருக்கிறது..?
இம்முறை வடமேல்,மத்திய,வட மாகாண சபை தேர்தலில் எமது  முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் மேடை போட்டு பேசுகின்றனர். என்றாலும் எந்த ஒரு அரசியல் கட்சியின் மேடையிலும் நீங்கள் எல்லோரும் கட்டாயம் வாக்களிக்க செல்லுங்கள் என்று கூறவில்லை. ஏன் ?
உதாரணமாக சென்ற வடமேல் மாகாண சபை குருணாகல் மாவட்டத்தில் அழிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகளை பார்த்தால் மொத்த முஸ்லிம் வாக்குகள் சுமார் 100000

ஐக்கிய தேசிய கட்சி + முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் 25000(பெறப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் 4 ) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் 14500 (பெறப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் 1 ) ஏனைய கட்சிகளுக்கு 500 அழிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகள் வெறும் 40000 ஏனைய 60000 முஸ்லிம் வாக்குகளிலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் மற்றும் மரணித்தவர்கள் என்று 20000 வாக்குகளை வைத்து விட்டு பார்த்தால்  எஞ்சியுள்ள 40000வாக்களர்களும் எங்கே போனார்கள் ?

(அவர்களும் வாக்களித்து இருந்தால் குருணாகல் மாவட்டத்தில் எமது முஸ்லிம் பிரதிநிதிகள் எண்ணிக்கை இன்னும் மூன்று அதிகரித்திருக்கும்) எமது முஸ்லிம் வாக்காளர்கள் என்ன நினைத்தார்களோ, யார் வென்றாலும் எமக்கு பிரயோஜனம் இல்லை என வீடுகளில் ஒதுங்கிக் கொண்டார்களா? இல்லை அந்தந்த கட்சிக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று விலகிப்போனார்கலா? இல்லை அல்லாஹ் தருவான் என்று சுருங்கி போனார்களா? தீர்வை அரசியல் வாதிகள் தேடவுமில்லை..... மக்கள் கவனிக்கவும் இல்லை.

ஆனால்...

பள்ளிகள் உடைக்கப்படுவது பற்றி அங்கலாய்க்கின்றோம். உரிமைகள் மிதிக்கப்படுகிறது என்று ஓலமிடுகின்றோம். முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்பதாக பகிரங்கமாக சொல்வதாக கர்ஜிக்கின்ன்றோம். இஸ்லாமிய  சரிஆ காட்டு மிராண்டி தனமான சட்டம் என்று கூறுபவர்களை கடிந்து கொள்கின்றோம். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று சொன்னவர்களை சாபாம் இடுகின்றோம். பிரச்சினை எங்கு இருக்கிறது என்று யாரும் பார்ப்பதில்லை.

வாக்காளர்கள் வீட்டிலே தூங்கிவிட்டு எங்களுக்காக பேச யாரும் இல்லையே என்று அரசியல்வாதிகளை திட்டி தீர்ப்பதில் பிரயோஜனமில்லை. இந்த நிலமை மாறவேண்டும். எமது முஸ்லிம் வாக்குகளின் பெறுமதியை முழு நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் காட்டவேண்டும். இதற்கான ஒரே வழி நமது முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் இயக்க வேறுபாடுகள் மறந்து போடப்பாடல் வேண்டும். அது எந்த கட்சியின் எந்த அபேட்சகருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அது உங்களின் சுதந்திரமான முடிவும் கூட.

ஆனால் அந்த அபேட்சகர் நிச்சயம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக இருக்க வேண்டும், அதிலும் சமூகத்தின் குரலாக என்றும் ஒலிக்க வேண்டும். இந்த கருத்து சில நேரம் துவேசக் கருத்து போன்று தோன்றலாம், அதுவல்ல எனது நோக்கம். பெரும்பான்மை சகோதரர்களுக்கு 1100000வாக்குகள் இருக்கின்றது.அனால் எமக்கோ வெறும் 100000 முஸ்லிம் வாக்குகள் மாத்திரம்தான் .இந்த எமது  100000 முஸ்லிம் வாக்குகளில் இருந்துதான் எல்லா கட்சிகளுக்கும் வாக்குகள் பிரிந்து போக வேண்டும்.இப்படி போனால் எமது வாக்குகள் வீனடிக்கப்படும் அபாயமும் எமது பிரதிநிகளின் எண்ணிக்கையில் குறைவும் ஏற்பட காரணமாக இருக்கும் என அஞ்சுகின்றேன்.

அதற்காக எங்கள் வாக்குகள் அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்படல் வேண்டும். எனவே இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் பள்ளிவாசல் ஊடாகவும்,மிம்பர் மேடைகள் ஊடாகவும் சமூகத்திற்கு வழங்கப்படல் வேண்டும்.இது ஒரு சமூகத்தின் கூட்டு பொறுப்பு. எனவே வருகின்ற 21 ஆம் திகதி முஸ்லிம்கள் அனைவரும் எமது உரிமைக்காக எமது வாக்குகள் அனைத்தையும் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று பயன்படுத்துவோம். அன்றைய தினம் எமது வேலைகளை சமூகத்தின் நன்மைக்காக சிறிது சுருக்கிக் கொள்வோம். எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.

(எந்த சமூகம் தங்களை தாங்களே மாற்றிக்கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை அல்லாஹ் மாற்ற மாட்டான்)

முஸ்லிம்களை விரட்டிய நிலை மீண்டும் ஏற்பட இடமளிக்கப்படாது - வவுனியாவில் மஹிந்த.
நாட்டை துண்டாடுவதற்கு பிரபாகரனுக்கு இடம்கொடுக்கப்படாதது போல வேறு எந்த தரப்பினருக்கும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (11) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

´இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஆட்சி நடத்த ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிய அதிகாரங்களே இந்த மாகாணத்திற்கும் (வட மாகாணம்) வழங்கியுள்ளோம். இன்று சிலரது தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்க்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் இருந்த கோரிக்கைகளே மீண்டும் விடுக்கப்படுகிறது.

அவர்களுக்கு நான் விசேடமாக ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டை துண்டு துண்டாக பிரிக்க பிரபாகரனுக்கு இடமளிக்கப்படாதது போன்று உங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. அதனை தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். அந்த கோரிக்கையின் பிரதிபலன்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அன்று முஸ்லிம் மக்களை தங்கள் கையில் கிடைத்த உடைகளோடு செல்லுமாறு விரட்டினர். சிங்கள மக்களையும் விரட்டியடித்தனர்.  ஜனநாயகத்தை மதித்த தமிழ் தலைவர்களை ஒவ்வொருவராக கொலை செய்தனர். அதனால் அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.


வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்யுமாறு ராவண பலய கோரிக்கை!
வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்யுமாறு, தாம் தேர்தல்கள் ஆணையாளருக்கு விடுத்து கோரிக்கை அடிப்படையில், அவர் இந்த விடயத்தை சட்ட மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லவிருப்பதாக ராவணபலய அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு 11-09-2013 ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் வைத்து தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்த போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலுக்காக முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில், நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்யுமாறு ராவணபலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் 12-09-2013 தினம் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்ததேசப்பிரிய, சட்ட மா அதிபரை சந்தித்து ஆலோசனை பெறவிருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல்கள் தொடர்பாக ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்.
வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி

வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தல் காலங்களில் பிரச்சினைகள், அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஒழுக்கவிழுமியங்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பினர்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.

ஓவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் வாக்குரிமையுண்டு. எனவே தத்தமது வாக்குரிமையை வீணாக்காமல் உரிய முறையில் பயன்படுத்துமாறும் அமைதியான முறையில் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று சுதந்திரமாக வாக்களித்துவிட்டு அவ்விடங்களில் தரித்து நேரத்தை வீணாக்காது திரும்பிவிடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

தேர்தல் நடைபெறும் நாட்களில் வாக்குச்சாவடிகளுக்கு அண்மித்த இடங்களில் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருப்பதையும் வீண் தர்க்கங்களில் ஈடுபடுவதையும் பொய் வதந்திகளை பரப்புவதையும் மற்;றவர்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துகொள்வதையும் தவிர்ந்துகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை கேட்டுக்கொள்கின்றது.

அஷ்ஷைய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  



மாகானசபைத் தேர்தலும், முஸ்லிமகள் நடந்து கொள்ள வேண்டிய விதமும்
முப்பதாண்டுகால முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த அடுத்த நிமிடத்திலிருந்தே அரசு தனது அடக்குமுறைகளை முஸ்லிம்களை நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ளது என்பதனை நாம் நாளாந்தம் அறிந்து வருகின்றோம். அரசுக்கு நேரடியாக இத்தகைய தீவிரவாத செயல்களில் ஈடுபட முடியாத காரணத்தினால் குறிப்பாக அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படவே என்று பொதுபலசேனா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல பள்ளிவாயல்கள் தகர்க்கப்பட்டுள்ளது இதனையும் நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம். இந்நிலையில் மூன்று மாகானங்களுக்கான மாகானசபை த்தேர்தலை நடாத்துவதற்கு அரசு முன்வந்துள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தாம் மட்டும்தான் யோக்கியர்கள் தங்களை மட்டும்தான் ஆதரிக்க வேண்டும் என்று ஊர் ஊராகக் கூக்குரலிடுவார்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சில முஸ்லிம் கட்ச்சிகளும் தமக்கு பிச்சைப் போடும் பச்சை, நீலக் கட்ச்சிகளைக் கவ்விக் கொண்டு தாங்கள்தான் இலங்கை முஸ்லீம்களின் ஏகப் பிரதிநிதிகள் எனவே முஸ்லீம்கள் நாங்கள் சொல்கின்ற கட்ச்சியைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றும் கூப்பாடு போடுவார்கள். இவர்கள் அனைவரும் தங்களது சுயநலத்துக்காக இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் அடகு வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் என்பதனை நாம் நன்கு தெரிந்தே வைத்துள்ளோம்.

இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம் , எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் நிலை எப்படி இருக்க வேணடும்? அவர்களின் ஜனநாயக அரசியல் போராட்டம் எப்படி அமைய வேண்டும், இந்த நாட்டில் ஆட்ச்சியாளர்களாலும், அராஜகவாதிகளாலும் முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட, இன்னும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் என்ன? ஏனைய சமூகங்களுடனான அவர்களின் உறவு எப்படி அமைய வேண்டும்? முஸ்லீம் மக்களுக்கிடையில் காணப்படும் அரசியல் ரீதியிலான முறன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது எப்படி? அதன் அவசியம் எத்தகயது? என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடை காணாமல், முஸ்லீம் மக்கள் பற்றிய கரிசனை என்பது போலித்தனமானது மட்டுமின்றி கேலிக்குரியதுமாகும்.

இலங்கை சுதந்திரம் பெற்று இன்று 65 வருடங்களை கடந்த பின்பும் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும்; கொண்டிருகின்றன, இலங்கை முஸ்லீம்களை சகல துறைகளிலும் நலிவுற்ற ஒரு சமுதாயமாக  ஆக்குவதற்கான அனைத்து செயற் திட்டங்களையும்; இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்து வரக்கூடிய இரு கட்சிகளும் எக்குறையுமின்றி மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் கட்சிதமாக செய்து வந்திருக்கின்றன என்பதனை நாமனைவரும் நன்கு அறிவோம், இலங்கை முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் பற்றி மிகவும் அச்சப்படுகின்ற சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

 இவையனைத்திற்கும்; முதல் முக்கிய காரணம் முஸ்லிம்கள் தங்களுக்குள் அரசியல் ரீதியாகவும், ஆன்மீகரீதியாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து காணப்படுவதாகும். அவர்கள்;. எப்பொழுது சுயநலமிக்க, மரம் விட்டு மரம் தாவும் இந்த அற்ப்ப அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லாது எக்காலத்திற்கும் பொருத்தமான வழிகாட்டல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அல்-குர்ஆன், அல்-ஹதீஸின் நிழலில் ஒன்றுபடுவார்களோ அன்றுதான் நம் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் நம்பிக்கைமிக்க, அச்சமில்லா எல்லா உரிமைகளும் கிடைக்கப் பெற்ற சமுதாயமாக மாறுவார்கள்.

முஸ்லிம்களை எந்தவொரு அரசியல்வாதியோ, கட்சியோ, இயக்கமோ, குழுவோ பாதுகாக்க முடியாது. மாறாக இஸ்லாமும் அதன் கொள்கைகளும்தான் இலங்கை முஸ்லிம்களை மட்டுமல்ல உலக முஸ்லிம்களையே பாதுகாக்கவல்லது இதுதான் ஒரு உண்மை முஸ்லிமுடைய விசுவாசமுமாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு வெறும் இனம், சமூகம், தேசியம், பிரதேசம், இயக்கம், கட்ச்சி என்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் செயல்;படும் எந்தவொரு தனிமனிதனோ, குழுவோ, இயக்கமோ, அரசியல் கட்சியோ, எம்மைப் பாதுகாக்கவோ, எமது உரிமைகளை வென்று தரவோ போவதில்லை என்பதுதான் எமது நம்பிக்கை. என்றாலும் எந்நிலையிலும் எமது வாக்குகள் வீணடிக்கப்பட அனுமதிக்க முடியாது. அது எமக்கு ஆபத்துக்கு மேல் ஆபத்தாகவேதான் அமையும்.

எனவே நடைபெறவிருக்கின்ற மாகானசபைகளுக்கான தேர்தலில் குறித்த மாகானங்களில் வாழுகின்ற முஸ்லீம்கள் தங்களது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தாம் எந்த கட்சியை ஆதரித்தால் தங்கள் பிரதேச முஸ்லிம்களுக்கு ஆரோக்யமாக அமையும் என்பதைக் கவனித்து வாக்களிக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த கட்சியைத்தான் ஆதரித்தாக வேண்டும் என்று குறிப்பிட்டடு சொல்ல முடியாது காரணம் அனைத்து கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். நீல கட்சியை விட பச்சை கட்சி சிறந்ததோ அல்லது இன்ன கட்சியை விட இன்ன சட்சி சிறந்ததோ என்று கூற முடியாது அப்படி யாராவது இன்ன கட்சியை விட இன்ன சட்சி சிறந்தது என்று கூறினால் அவர் பொய் சொல்கிறார் என்பதனை நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

இந்த அரசியலால் அல்லது இந்த அரசியல்வாதிகளால் நிச்சயமாக எம்மைப் பாதுகாக்கவோ அல்லது எமது உரிமைகளை வென்றடுக்கவோ முடியாது. நாம் எம்மையும் எமது உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் நாம் அரசியலுக்கு அப்பால் நின்று ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடுதல் அவசியமாகும்.

இதன் பொருள் அரசிய வேண்டாம் என்பது அல்ல அரசியல்வாதிகளால் இதனை சாதிக்கும் நிலையில் இன்றைய அரசியல் இல்லை. அது முடியாத கருமம் நமது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் எதை வேண்டும் என்றாலும் சொல்வார்கள் ஆனால் நிச்சயமாக அவர்களால் அவர்கள் சொல்வதை செய்ய முடியாது என்பதற்கு கடந்தகால அரசியல் வரலாறு சான்றாகவுள்ளது.

எனவே என்றும் போல் அரசியல்வாதிகள் அவர்களின் பனியை செய்து கொள்ளட்டும் அது அவர்களின் உரிமை அதை நாம் ஆட்சேபிக்க முடியாது என்றாலும் அரசியலுக்கு அப்பால் மாத்திரமின்றி இயக்கங்களுக்கு அப்பாலும் சென்று நாம் ஒன்றுபட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

நாம் எமக்கு மத்தியில் காணப்படும் குறுகிய அரசியல் வேறுபாடுகள், சுயகௌரவம், கட்ச்சிபேதம் இயக்க வேறுபாடு போன்றவைகளை புறந்தள்ளி நம் சமூக நலனை மட்டும் நோக்காகக் கொண்டு நம் சமூகத்திற்காக விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் செயல்பட்டு நாம் தோற்றாலும் நம் சமூகம் வெற்றிபெற வேண்டும் எனும் உயர் இலச்சியத்தின் அடிப்படையில்; ஒன்றுபட்டாக வேண்டியது இன்றைய சூழ்நிலையில் நமது தவிர்க்க முடியாத முக்கிய பொறுப்பும், கட்டாய கடமையுமாகும். கட்சியா? சுமூகமா? அல்லது இயக்கமா? சமூகமா? ஏன்ற நிலை ஏற்பட்டால் நாம் எதனைத் தெரிவு செய்வது என்பதில் நாம் தெளிவு பெறவேண்டு.

வல்ல அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்-குர்ஆன்: 8: 46)  
இங்கு வல்ல அல்லாஹ் மூன்று முக்கிய விடயங்கள் பற்றி வலியுறுத்துகின்றான்.
அவைகளாவன:
1.    அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நாம் முழுமையாக வழிப்பட்டு நடக்க வேண்டும்
2.    எந்நிலையிலும் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விடக்கூடாது
3.    அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுவதிலும், கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்ற வேளைகளில் பிரிந்து விடாதிருப்பதிலும் பொறுமையைக் கைகொள்ளுதல்.
இவைகளுக்கு மாறு செய்யும் போது ஏற்படவுள்ள அபாயங்கள் இரண்டினையும் வல்ல அல்லாஹ் அதன் தொடரில் அறிவுறுத்துகின்றான்.
1.    கோழைகளாகி விடுதல்.
2.    பலம் குன்றி பலஹீனர்களாகி விடுதல்.
இதனைத்தான் இன்றைய இஸ்லாமிய சமூகம் உலகளாவிய ரீதியில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது

இன்னும் வல்ல அல்லாஹ் எமது ஒற்றுமையின் அவசியம் பற்றி கூறும் போது, நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. (அல்-குர்ஆன்: 3: 102,103)

மேற்படி ஒரே வசனத்தில் ஒற்றுமையினை வலுப்படுத்திக் கொள்ளுமாறு கட்டளையிட்ட வல்ல அல்லாஹ் அதன் தொடரிலேயே பிரிந்துவிட வேண்டாம் என்று எச்சரிப்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும். அத்துடன் இந்த வசனங்களின் மூலம் வல்ல அல்லாஹ் இன்னும் சில முக்கிய விடயங்களையும் எமக்குக் கட்டளையிடுகின்றான்.
அவைகளாவன.

1.    ஒவ்வொரு தனிமனிதனும் தக்வா சார்ந்த வாழ்க்கையினை வாழ்தல்.
2.    மரணம் வரைக்கும் முஸ்லிமாகவே செயல்படுதல்.
3.    அல்-குர்ஆன், அல்-ஹதீஸின் நிழலில் ஒன்றுபட்டிருத்தல்.
4.    எந்நிலையிலும் பிரிந்து விடாது ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் இருந்து கொள்ளுதல்.
5.    அல்லாஹ் எமக்கு செய்திருக்கும் அருட்பேறுகளை நினைவு கூர்தல்.

மேற்படி இறைவசனங்களிலிருந்து இன்றைய எமது பலஹீனத்திற்கான காரணங்களை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. அதுதான் எமக்குமத்தியில் காணப்படும் குறுகிய மனப்பான்மை காரணமாக ஏற்பட்டுள்ள ஒற்றுமையிண்மை, மற்றும் கட்டுப்படாமையாகும், எனவே நாம் எமக்கு மத்தியில் காணப்படும் குறுகிய அரசியல் வேறுபாடுகள், சுயகௌரவம், கட்சிபேதம் போன்றவைகளை புறந்தள்ளி நம் சமூக நலனை மட்டும் நோக்காகக் கொண்டு நம் சமூகத்திற்காக விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் செயல்பட்டு நாம் தோற்றாலும் நம் சமூகம் வெற்றிபெற வேண்டும் எனும் உயர் இலச்சியத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டாக வேண்டியது இன்றைய சூழ்நிலையில் நமது தவிர்க்க முடியாத முக்கிய பொறுப்பும், கட்டாய கடமையுமாகும்.

வடமாகணசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றது..?
எதிர்வரும் இருபத்தோராம் திகதி சனிகிழமை நடைபெறஇருக்கும்  வடமாகாண  சபை தேர்தலை சர்வதேசமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது என்று கூறலாம்.

யாழ்ப்பாண மாவட்டம்

இந்தத்தேர்தலில் தேர்தலில் மாவட்டரீதியாக  உள்ள வாக்காளர்களை   மனதில்கொள்வோமானால்  யாழ்ப்பான  மாவட்டத்தில் 426813 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.2010ஆம் ஆண்டின்  ஜனாதிபதி தேர்தலின் போதும்இபாராளுமன்ற போதுத்தேர்தலின்போதும்,  உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின்போது கட்சி ரீதியாக  பிரதான கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளினையும் மனதில்கொண்டு எதிர்வரும்  மாகாண சபைத்தேர்தலில்   கட்சிகள் பெறப்போகும் வாக்குகளினை ஓரளவு அனுமானிக்க முடியும் .

வடமாகாணத்தைப்பொறுத்தவரை கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகுகளை விட இம்முறை வாக்களிப்பு வீதம் கணிசமான அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு ஏனெனில் தமிழ் தமது விடுதலை உணர்வுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு  இறுதிக்கேடயமாக அல்லது இறுதித்துருப்பாக இந்த வாய்ப்பை கருதுகிறார்கள் அந்தவகையில்   50 வீத வாக்குப் பதிவு நடைபெற்றால்  16 அங்கத்தவர்களை  தெரிந்தெடுக்கப்போகின்ற யாழ் மாவட்டத்தில்  213400 வாக்குகள் அளிக்கப்படலாம்.

அந்த வாக்குளில்  தமிழ்தேசியக்கூட்டமைப்பு  160000 வாக்குகளையும்  பொதுசன ஐக்கிய கூட்டமைப்பு   50000 வாக்குகளையும்  பெற வாய்ப்பிருக்கின்றது. இதில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் வாக்குகள் சரிவடைந்தால் அந்த வாக்குகள்  பொதுசன ஐக்கிய முன்னணியை போய்ச்சேரலாம்.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளினை  அடிப்படையாகக்கொண்டு ஒரு அங்கத்தவரை பெற தேவைப்படும்  வாக்குகள்  13337  ஆக இருக்கும்..150000 வாக்குகளைப்பெறும்  தமிழ் கூட்டமைப்பு 11 ஆசனங்களைத் தனதாக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. 60000 வாக்குகளைப்பெற்ற  பொதுசன ஐக்கிய முன்னணி  4 ஆசனங்களை  பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றது. ஐந்தாவது ஆசனத்திற்கு  முன்னணியும்  12ஆவது ஆசனத்துக்கு கூட்டமைப்பும் சரியான போட்டியிலிருக்கும்.

ஆக யாழ்பாணத்தில்   தமிழ் கூட்டணி                                                        1112 ஆசனங்கள்  பொதுசன ஐக்கிய  கூட்டணி                                                5/4   ஆசனங்கள்  பெற வாய்ப்புண்டு.   இறுதியில்  இரு பிரதான கட்சிகளுக்கும்  இடையில் 5000/6000 வாக்குகளே  எஞ்சிய வாக்குகளாக இருக்கும் அந்த எஞ்சிய  வாக்குகளை விட ஒன்றாவது கூட எடுக்கும் கட்சி ஆசனத்தைத்தட்டிக்கொள்ளும். ஐக்கிய தேசய கட்சி ஒரு மூன்றாயிரம் வாக்குகளை எடுக்கலாம்.

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தைபொறுத்தவரை  கடந்த  பாராளுமன்ற பொதுத்தேர்தல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் மக்கள் வாக்களித்த முறைகளை  நோக்குமிடத்து இம்முறை சற்று அதிகரித்த வாக்களிப்பு  நடைபெற வாய்ப்புண்டு.

மொத்தமாக உள்ள  75737 வாக்காளர்களில் 60 வீதமானவர்கள் வாக்களிப்பின் ஏறக்குறைய 45000 வாக்குகள் அளிக்கப்படும் அந்த 45000 வாக்குகளும் 5 மாகாண பிரதிநிதிகளை  தெரிவு செய்யப்போகின்றது.மிழ் கூட்டமைப்பு  கிட்டத்தட்ட 21-21500 வாக்குகளையும் இஅரச கூட்டணி   19000-20500 அளவிலான வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 7000-7500 வரையான வாக்குகளையும்  பெறுவதற்குரிய வாய்ப்பு உண்டு.இதன் அடிப்படையில் இரண்டு ஆசனங்கள் தமிழ் கூட்டமைப்பிற்கும், இரண்டு ஆசனங்கள்  அரச கூட்டுக்கட்சிகளுக்கும் கிட்டி விடும் ஐந்தாவது ஆசனம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு கிடைக்கும் ஏனெனில் ஐந்தாவது ஆசனத்துக்கு போட்டியிடும் அளவில் மற்றைய இரு கட்சிகளிடமும் எஞ்சிய வாக்குகள் இல்லை.

வவுனியா மாவட்டம்

வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 94644 வாக்காளர்கள் இருக்கின்றனர். கடந்த தேர்தல்களினையும் அதில் மக்களது வாக்களிப்பு வீதத்தையும் கருத்தில் கொண்டால் இம்முறை கிட்டத்தட்ட அரைவாசியினர்  வாக்களிக்க இடமுண்டு. இருப்பினும் 45000 பேர் இத்தேர்தலில் வாக்களிக்கின்றார்கள் எனக்கருதி  தெரிவுசெய்யப்பட இருக்கும் ஆறு பிரதிநிதிகளில் எந்தக்கட்சி அதிக பிரதி நிதியைப்பெறப்போகின்றது என்பதை நோக்கினால் இம்மாவட்டத்தில்  இம்முறை தமிழ்கூட்டமைப்பு 22500-23500 வாக்குகளை பெறலாம்.அரச கூட்டமைப்புக்கட்சி 15500-16500 இற்கிடையிலான வாக்குகளை பெறலாம். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 4000-4200 வாக்குகளைப்பெறலாம்  ஐக்கியதேசிய கட்சி கிட்டத்தட்ட 2500  வாக்குகளை பெற வாய்ப்புண்டு.(இடம்பெயர்ந்த வாக்காளர்களும் சேர்த்துக் கணிக்கப்பட்டபின்னர்) எனவே இம்மாவட்டத்தில்  தமிழ்கூட்டமைப்பு இலகுவாக மூன்று  ஆசனங்களையும்   அரச கூட்டமைப்பு  2 ஆசனங்களையும்  பெற்றுக்கொள்ளும். ஆறாவது எஞ்சியிருக்கும் ஆசனத்தை முஸ்லீம் காங்கிரஸ் பெறுமா  அல்லது  கூட்டமைப்பே பெறுமா என்பது போட்டியாக இருக்கும்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவைப்பொறுத்தவரை  53683பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றார்கள் எனினும் இவர்களில் 20 %  இற்கு குறைவானவர்களே  கடந்த தேர்தல்களில் வாக்களித்துள்ளமை   தரவுகளினூடாக அறியக்கிடைக்கின்றது. இடம்பெயர்வும் மக்களுக்கு தேர்தலை விடை தமது இருப்பிற்கு உள்ள சவால்களை சமாளிப்பதற்கு  முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இதற்கு காரணமாக கருதப்படலாம்.

இம்முறை  அந்த வாக்குகளை விட கணிசமான அளவு வாக்குகள் கூடுதலாக அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படினும் நிச்சயமாக என்னிக்கையைத் துணிய முடியாது.எனினும் எடுகோளாக ஒரு 25000 பேர் வாக்களிப்பார்கள் என வைத்துக்கொல்வோமெனில் 5  மாகான சபை உறுப்பினர்களை  தெரிவுசெய்யும் இந்தபோட்டியில் தமிழ் கூட்டமைப்பானது முழு உறுப்பினர்களையும் தமதாக்கிக்கொள்ள  வாய்ப்பு இருக்கின்றது. எதிர்த்து போட்டியிடும்  அரச கூட்டமைப்பு 2000 முதல் 2500 வாக்குகளை  பெறலாம் சிலவேளை அதனை விட குறைவாகவும் பெறலாம். ஆக இங்கு ஐந்து ஆசனங்கள் என வைத்துக்கொள்வோம். மொத்தத்தைக் கணக்கிட்டுப்பார்த்தால்  தமிழ்கூட்டமைப்பு                            யாழில்              11/12, மன்னாரில்    2/3, வவுயாவில்     4/ 5 முல்லைத்தீவில்    5/5

மொத்தமாக                                22/25 என்ற கணக்கில்  அங்கத்தவர்களை  பெறக்கூடியதாக இருக்கும். மன்னாரிலும்  வவுனியாவிலும் இருக்கும் தொங்குகின்ற இரு  ஆசனங்கழுமே நடைபெறவிருக்கின்ற மாகாணசபையின்  அதிகாரத்தை அலங்கரிக்க இருக்கின்ற ஆசனங்களாகும். முஸ்லீம் கட்சிகள் இணைந்து கேட்டிருந்தால்  மூன்றில் இரண்டு பெரும்பான்மையை   தீர்மானிக்கும்  தரப்பாக இருந்திருக்கலாம். இருப்பினும் இம்முறை முஸ்லீம் காங்கிரஸ்  வென்றெடுக்க  இருக்கும் இரண்டு ஆசனங்களும்  தங்காசனங்களாக இருக்கும் என்று கூறமுடியும். ஏனெனில் தமிழ் கூட்டமைப்பு 2/3 பெரும்பான்மையுடனேயே அதிகாரங்களை நிறுவிக்கொள்வதற்கான சட்ட வரைபுகளை மாகாணசபையில் வரையும்  அப்போது  மூன்றில் இரண்டு பெரும்பான்மை  தேவையெனில்  அது முஸ்லீம் காங்கிரசில் தங்கியிருக்கும். ஆனால்  இருபத்து நன்கு அல்லது இருபத்தைந்து ஆசனங்கள் கூட்டமைப்பிற்கு சென்றுவிடும் எனில்  எது எல்லாம் எட்டாப்பழமாகவே இருக்கும்.

அரச கூட்டமைப்பில் போட்டியிடுபவர்கள் மத்தியில் முஸ்லீம்கள் சார்பாக எத்தனை அங்கத்தவர்கள் வரவிருக்கின்றார்கள் என்பது  மக்களது கையிலேயே  இருக்கின்றதுவிருப்பு வாக்குகளே இதனைத்தீர்மானிக்கும்.        


முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தைக் குழப்ப முனாஜித் மௌலவி முயற்சி
(முஸ்லிம் காங்கிரஸ் ஊடக பிரிவு)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான  ரவூப் ஹக்கீம், வவுனியா மாவட்டத்தில் மாங்குளம், நேரிய குளம் கிராமத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்று அங்கு உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது ஒரு வெள்ளைநிற வேன் வந்து நின்றது. அதில் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அண்மையில் பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பாளராக போட்டியிடும் முனாஜித் மௌலவி என்பவர் அறங்கி மேடையை நோக்கி சத்தமிட்டவாறு வந்து கூட்டத்தைக் குழப்ப முற்பட்டார்.

ஆப்போது அங்கு குழுமியிந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவரைக் கூக்குரலிட்டு நையப்புடைத்து அங்கிருந்து வெளியேற்றினர். அவர் தனது சகோதரருடனும் சகபாடிகளுடனும் தாம் வந்த வெள்ளை வேனில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

அப்பொழுது அவரை கைது செய்யுமாறு பொலீஸ் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி அங்கு கூடியிருந்த மக்கள் அமைச்சர் ஹக்கீமிடம் கூறியபொழுது அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்புவதைவிட, மனநல மருத்துவ மனைக்கு அனுப்புவதே சிறந்தது என அமைச்சர் ஹக்கீம் நகைச்சுவையாகப் பதிலளித்தார். அத்துடன் கட்சிக்கு குழிபறித்துச் சென்று சோரம்போனவர் ஒரு மௌலவியாக இருந்தும் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டமை உலமாக்களுக்கே இழுக்கையும் அவமானத்தையும் ஏற்படுத்தும் செயலாகும் என்றார்.

உடனடியாக கலகமடக்கும் பொலீசார் அங்கு விரைந்து வருவதற்கிடையில் அவர் தப்பிச் சென்று விட்டார்.

நன்றி இனையம்.
http://www.jaffnamuslim.com/2013/09/blog-post_2269.html







Share your views...

0 Respones to " "

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed