மனிதன் மீது ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?



மனிதன் மீது ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?
k,m.jawahir (jamali)

ஜின் இனத்தைச் சார்ந்தவன் தான் ஷைத்தான். ஷைத்தான் நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லோரிடமும் இருக்கிறான். இதற்கு நல்லவர்களோ சஹபாக்களோ விதிவிலக்கில்லை.

ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் உள்ள ஷைத்தான் மட்டும் நபியவர்களுக்குக் கட்டுப்பட்டு விட்டான். இவன் மற்ற அனைவரிடமும் இருந்து கொண்டு கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துவான். நல்லவர்கள் இவன் கூறுவதைப் புறக்கணித்து விடுவார்கள். தீயவர்கள் செயல்படுத்துவார்கள் என்பது ஷைத்தானைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம்.

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள். அல்குர்ஆன் (7 : 201)

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்ட போது, ”ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டு விட்டாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ”என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?'' என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?'' என்று கேட்டார்கள். நான், ”அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”ஆம்' என்றார்கள். ”ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் ”ஆம்' என்றார்கள். நான், ”தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான்'' என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (5422)

எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையைப் பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படும் போது அவர்களிடத்தில் மட்டும் ஷைத்தான் வந்துவிட்டதாக தவறாக நம்புகிறார்கள்.

ஷைத்தான் ஒருவரிடத்தில் இருப்பதால் அவருக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் மனிதர்கள் அனைவருக்கும் அப்படி பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஷைத்தான் அனைவரிடமும் இருக்கிறான்.

ஆனால் இவ்வாறு அனைவருக்கும் பைத்தியமோ மோசமான நோய்களோ உளறல்களோ ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் இது போன்ற பலவீனங்கள் ஏற்படுகிறது. இறைவனுடைய நாட்டத்தால் இந்த பலவீனங்கள் ஏற்படுகிறதே தவிர ஷைத்தானால் ஏற்படுவதில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்கüடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். - உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.)

அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ”நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்'' என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட அவ்விருவரும், ”அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ”ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான.அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்'' என்று சொன்னார்கள்.
புகாரி (3281)

ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே ஷைத்தான் நமது உடலில் இரண்டறக் கலந்துள்ளான் என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.

அடுத்து உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தைப் போட்டு விடுவான் என்று அஞ்சுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உடலில் இரண்டறக் கலந்துள்ள ஷைத்தானால் உள்ளத்தில் தீய எண்ணங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ஷைத்தான் நமது உடலுடன் கலந்திருந்தாலும் தீய எண்ணங்களை மட்டுமே அவனால் ஏற்படுத்த முடியுமே தவிர கை கால்களை முடக்குவதோ நோய்களை ஏற்படுத்துவதோ பைத்தியமாக்குவதோ ஷைத்தானால் முடியாத காரியம்.
ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்.
ஷைத்தானை விரட்டுவதாகக் கூறி சம்பாதிக்க நினைப்பவர்களும் மக்களை ஏமாற்றுபவர்களும் ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் இடஞ்சல்களை விவரிக்கும் சில ஹதீஸ்களை மக்களிடம் சொல்கிறார்கள்.
ஷைத்தானால் மனிதனுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுவதால் மனிதனை விட்டும் ஷைத்தானை நாங்கள் விரட்டுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி கேட்டு பாமர மக்களை வழிகெடுக்கிறார்கள்.
இவர்கள் தங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு ஹதீஸ்களில் சொல்லப்பட்ட இடஞ்சல்கள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தர முடியுமா?
தொழுகையில் கவனம் திரும்புவது கொட்டாவி விடுவது சுப்ஹ‚ தொழாமல் உறங்குவது இவையெல்லாம் ஷைத்தானால் ஏற்படுவதாக ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.
அப்படியென்றால் இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்குத் தொழுகையில் கவனம் திரும்பாதா? அவர்களுக்கு இனி கொட்டாவியே வராதா? அவர்கள் சுப்ஹ‚ தொழுகையை விடாமல் கடைப்பிடிப்பார்களா? ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்களுக்குத் தவறான எண்ணங்களே ஏற்படாதா? இந்த அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலே ஷைத்தானை விரட்டுவதாக இவர்கள் கூறுவது வடிகட்டியப் பொய் என்பதை அறியலாம்.

அனைவரிடமிருந்தும் ஷைத்தானை விரட்டுவார்களா?
ஷைத்தான் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாக கூறும் போலி ஆண்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப்பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?

நபிமார்களுக்கு ஷைத்தான் இடஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். அல்குர்ஆன் (6 : 112)

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.
அல்குர்ஆன் (22 : 52)

ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள் ஷைத்தானை விரட்டுகிறார்களா?
ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். அல்குர்ஆன் (26 : 221)

ஷைத்தானை விரட்டுவதாகக் கூறுபவர்கள் மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களிடத்தில் தான் ஷைத்தான் இருக்கிறான்.

ஷைத்தானின் வலையில் சிக்கியவர்கள் மற்றவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவதாக நினைப்பது எவ்வளவு அறிவீனம் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஏமாற்றுபவர்களின் சதியில் சிக்கி தங்கள் பொருளையும் அறிவையும் இழந்துவிட வேண்டாம்.
ஷைத்தானால் ஏற்படும் தீங்கு.
தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்கு கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள்.அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.
மனிதன் தான் ஷைத்தானிற்கு கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அது போன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான். இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

”அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். அல்குர்ஆன் (4 : 119)

அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான். அல்குர்ஆன் (2 : 169)

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். அல்குர்ஆன் (114 : 5)

அதிகபட்சமாக ஷைத்தானால் கணவனைப் பற்றி மனைவியிடத்திலும் மனைவியைப் பற்றி கணவனிடத்திலும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி இருவரையும் பிரிக்கும் வேûயைத் தான் செய்ய முடியும். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து ”நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், ”(சொல்லிலிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, ”நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, ”நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (5419)

வேறெதுவும் செய்ய முடியாது?
ஒருவரை பைத்தியமாக மாற்றுவது உடல் உறுப்புக்களைச் செயலிழக்கச் செய்து முடக்கிப் போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை ஷைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

”அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு..அல்குர்ஆன் (14 : 22)

”எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் ஷைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன். அல்குர்ஆன் (17 : 65)

அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் (34 : 21)

குர்ஆன் கூறும் இந்த அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டால் பில்லி சூனியம் ஏவல் போன்ற பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். பில்லி சூனியம் ஏவல் போன்ற காரியங்கள் ஷைத்தானின் உதவியால் நடப்பதாகப் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வசனங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்த்து எரிகிறது.
தீங்கை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரம்.
நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல் தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டும் உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளளவு கூட ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானிற்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.

”அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். அல்குர்ஆன் (48 : 11)

தீமைகளை ஏற்படுத்துவதும் அல்லாஹ்வின் செயலே என்று திருக்குர்ஆன் கூருகிறது.

”அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன். அல்குர்ஆன் (5 : 76)

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்குர்ஆன் (10 : 106)

இந்த விபரங்களை நன்கு மனதில் பதிவு செய்து கொண்டு பின்வரும் ஹதீஸ்களை அணுக வேண்டும். மேற்கண்ட ஆதாரங்களுக்கு முரணாக இல்லாத வகையில் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஷைதானால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் எனும் ஹதீஸ்களின் விளக்கம்.
முர்ரா பின் வஹப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் தன் குழந்தையுடன் வந்தார். அக்குழந்தைக்கு பைத்தியம் பிடித்திருந்தது. அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு. நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அக்குழந்தை குனமடைந்தது.
அஹ்மது (16890)

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஷைத்தானால் பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்பது போல் தெரிகின்றது.
ஷைத்தானுக்கு தீய எண்ணத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறு அதிகாரம் வழங்கப்படவில்லை. தீங்கை ஏற்படுத்தும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது என்பதை முன்பே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிரூபித்திருக்கின்றோம்.

ஷைத்தானுக்கு பைத்தியம் ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று நம்புவது குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிரான நம்பிக்கையாகும். எனவே இந்த ஹதீஸை அதன் நேரடிப் பொருளில் விளங்கினால் குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் மோதவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.

பின்வரும் அடிப்படையை புரிந்து கொண்டால் மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இந்த ஹதீஸை விளங்கிக் கொள்ள முடியும்.

ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்.
கெட்ட காரியங்களையும் வெறுப்பிற்குரிய விஷயங்களையும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறும் வழக்கம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அரபுமொழியிலும் உள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
அல்குர்ஆன் (5 : 90)

மது அருந்துவது சூதாடுவது பலிபீடங்களை உருவாக்குவது குறிபார்ப்பதற்கு அம்புகளை பயன்படுத்துவது இவையனைத்தும் கெட்ட மனிதர்களின் செயல்பாடுகளாகும். ஆனால் இவற்றை அல்லாஹ் ஷைத்தானின் செயல்களாக மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான்.
”நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார். அல்குர்ஆன் (18 : 63)

மறதி உட்பட எல்லா தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

அய்யூப் (அலை) அவர்கள் தனக்கு நோய் ஏற்பட்டிருக்கின்றது என்பதை தெரிவிக்க ஷைத்தான் என்னைத் தீண்டிவிட்டான் என்ற வார்த்தையை கூறியிருக்கிறார்கள்.
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்). அல்குர்ஆன் (38 : 41)

நோயை ஏற்படுத்துவது அல்லாஹ்விற்கு மட்டும் உரிய ஆற்றலாக இருந்தாலும் வெறுக்கத்தக்க விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்ற மரியாதை நிமித்தமாகவே நோயை ஷைத்தான் ஏற்படுத்தியதாக அய்யூப் (அலை) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனில் வேறொரு இடத்தில் அய்யூப் (அலை) அவர்கள் செய்த இதே பிரார்த்தனையை அல்லாஹ் விவரிக்கிறான்.

”எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை. அல்குர்ஆன் (21 : 83.84)

38:41 வது வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை இந்த வசனம் தெளிவாக விவரிக்கிறது. 21:83 இந்த வசனத்தில் ஷைத்தானைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை. எனக்குத் துன்பம் நேர்ந்துவிட்டது என்றே அய்யூப் (அலை) அவர்கள் கூறியதாக உள்ளது.

தனக்கு துன்பம் ஏற்பட்டுவிட்டது என்பதைத் தான் அய்யூப் (அலை) அவர்கள் ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று குறிப்பிடுகிறார்கள். நோயை ஷைத்தான் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது என்பதற்கு அய்யூப் (அலை) அவர்களின் இக்கூற்று மிகச் சிறந்த சான்றாக உள்ளது.

இஸ்லாமிய நம்பிக்கைப்படி பைத்தியங்கள் எந்தத் தீமை செய்தாலும் அவர்கள் பாவிகளாக மாட்டார்கள். ஷைத்தானின் வேலை அனைவரையும் பாவிகளாக்குவது தான்.

பைத்தியமாக்கப்படுவதால் ஷைத்தானுக்கு நட்டமே தவிர லாபம் இல்லை. எனவே ஷைத்தான் யாரையும் பைத்தியமாக்கும் அதிகாரத்தை பெறவில்லை. அது அவனது அலுவலும் இல்லை.

கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் உள்ளவர்களுக்கு ஷைத்தான் என்று கூறப்படும்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது ”நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது ”நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர். அல்குர்ஆன் (2 : 14)

கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3275)

(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ”அல்அர்ஜ்' எனுமிடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அந்த ஷைத்தானைப் பிடியுங்கள்.

ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் (4548)

தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடித்திரிபவரையும் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு சொல்லப்பட்டுள்ள ஷைத்தான் என்ற வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் விளங்க மாட்டோம்.
நேரடிப் பொருளில் விளங்கினால் தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடுபவரையும் ஷைத்தான் என்று கூற வேண்டிய நிலை வரும். இவர்களிடம் கெட்ட செயல் உள்ளது என்ற அடைப்படையில் தான் இவர்களை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எல்லோரும் புரிந்துகொள்கிறோம்.

ஒட்டகத் தொழுவத்தில் தொழுவது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத் தொழுவத்தில் தொழாதீர்கள். ஏனென்றால் ஒட்டகங்கள் ஷைத்தான்களாகும் என்று கூறினார்கள். ஆடுகளை கட்டுமிடத்தில் தொழுவது பற்றி கேட்கப்பட்ட போது அங்கே நீங்கள் தொழுகலாம். ஏனென்றால் அவை பரகத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : அபூதாவுத் (156)

ஒட்டகங்கள் ஆடுகளைப் போன்று அமைதியாக இருக்கும் பிராணி இல்லை. தொழுது கொண்டிருக்கும் போது தொழுகையாளியின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் இடஞ்சல்களைத் தரும் பிராணி என்பதால் நபியவர்கள் ஒட்டகங்களை ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள்.

எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் எதிரி என்று கூறப்பட்டிருக்கும் வார்த்தை ஷைத்தானைக் குறித்தாலும் அதன் மூலம் நாடப்படுவது ஷைத்தான் அல்ல. மறாக பைத்தியம் என்ற நோயாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரவின் முற்பகுதி வந்து விட்டால் -அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால்- உங்கள் குழந்தைகளை (வெüயே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெüயே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (சுதந்திரமாக வெüயே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
புகாரி (3304)

மேற்கண்ட செய்தியைப் பற்றியும் விளக்கம் கேட்டிருந்தீர்கள். இதற்கும் நாம் முன்பு கூறிய விளக்கமே பொருந்தும். விஷ ஜந்துக்களைத் தான் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இருள் பரவத் தொடங்கும் போது சிறுவர்களை வெளியே விட வேண்டாம் என்றும் இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு வெளியில் விடலாம் என்றும் கூறப்படுகிறது. ஆங்காங்கே சுற்றத் திரியும் விஷ ஜந்துக்கள் இரவில் ஓய்வெடுப்பதற்காக இந்த நேரத்தில் தான் தனது இருப்பிடத்தை நோக்கி விரைகின்றன. மாலை நேரம் வந்து விட்டால் பறைவைகள் உட்பட எல்லா உயிரினங்களும் தனது இருப்பிடத்தை நோக்கிச் செல்வதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.
சிறுவர்கள் விபரம் அற்றவர்கள் என்பதால் அவர்கள் கவனக்குறைவாக இந்த விஷப் பிராணிகளை மிதித்து விட்டால் அதனால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெளியே விடவேண்டாம் என்கிறார்கள்.
மேலும் இந்த ஹதீஸில் இந்தத் தடையுடன் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

இரவில் உறங்கும் போது கதவுகளை பூட்டி விட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ஷைத்தான் பூட்டப்பட்ட கதவை திறக்க மாட்டான் என்றும் கூறுகிறார்கள். இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் தான் என்பதை இது தெளிவாக விளக்குகிறது.
ஷைத்தான் மனதில் ஊடுருவி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த வல்லவன். கதவை பூட்டிவிடுவதால் அவனுடைய வருகையை யாராலும் தடுத்துவிட முடியாது. இரவில் கதவை பூட்டிவிட்டால் வீட்டிற்குள் பாம்பு பள்ளி எலி போன்ற இடஞ்சல் தரும் பிராணிகள் உள்ளே வராது என்பது தான் இதன் கருத்து.
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு இந்தக் கருத்தை தௌ;ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டுவிடுங்கள்; விளக்கை அணைத்துவிடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடிவைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலி(விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்.
ஜாபிர் (ரலி) அவர்கள்.
முஸ்லிம் (4099)

ஷைத்தான் எந்த பையையும் அவிழ்க்கமாட்டான். மூடப்பட்ட எந்தக் கதவையும் பாத்திரத்தையும் திறக்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கெடுதல் தரும் பிராணிகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். எலியின் அபாயத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்திருப்பதும் நமது விளக்கத்தை மேலும் வலுவூட்டுகிறது.
பாலைவனங்களிலும் குகைகளிலும் தனித்திருப்பது தடுக்கப்பட்டிருக்கின்றது ஏனெனில் அங்கு ஷைத்தான் இருப்பான் என்று ஒரு நபிமொழி இருப்பதாக சிலா; கூறுகின்றனா.

அவாகள்; கூறியவாறு நபிமொழியை நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்தக் கருத்துப்பட திர்மிதியில் ஒரு நபிமொழி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பயணிக்கும் ஒருவர் ஷைத்தான் ஆவார். பயணிக்கும் இருவர் ஷைத்தான் ஆவார்கள். மூன்று நபர்களே பயணிகளாவார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நூல் : திர்மிதி (1597)

தனியாகவோ இருவர் மட்டுமோ பயணம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். அவ்வாறு பயணம் செய்பவர்களை ஷைத்தான் என்றும் கூறுகிறார்கள்.

தனியாக பயணம் செய்யும் போது காட்டு விலங்குகளால் தாக்கப்படலாம். தீடிரென ஒரு ஆபத்து நேர்ந்தால் அதை நம்மால் சமாளிக்க முடியுôமல் போய்விடும். இதுபோன்ற பல காரணங்களால் தான் இவ்வாறு பயணம் செய்ய வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
அவா;கள் குறிப்பிட்ட செய்தியும் இதேக் கருத்தைத் தான் தருகிறது. பாவைனத்திலும் குகைளிலும் தனியாக இருந்தால் அது கண்டிப்பாக ஆபத்தான சூழ்நிலை தான். எந்த நேரத்திலும் நம் உயிருக்கு பேராபத்து ஏற்படலாம். காட்டு விலங்குகளால் விஷ ஜந்துக்களால் ஏற்படலாம். கொள்ளையர்களால் தாக்கப்படலாம்.

மேலும் ஷைத்தான் எல்லா இடங்களிலும் எல்லோருடனும் இருக்கும் போது பாலைவனத்தையும் குகைகளையும் குறிப்பிட்டு அங்கே ஷைத்தான் இருக்கின்றான் என்று கூறுவதென்றால் அங்கே மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறப்பட்டுள்ளது என்பதை சந்தேகமற அறியலாம்.

இந்த கழிப;பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகைதரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, ”இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : ஸைது பின் அர்கம் (ரலி)
நூல் : இப்னு மாஜா (292)

இது இவா;களின் இன்னுமொரு சான்றாகும். இந்த ஹதீஸில் கழிப்பிடங்கள் ஷைத்தான்கள் வருகை தரும் இடங்கள் என்றும் அவற்றின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் முன்பு கூறிய அடிப்படைகளுக்கும் விளக்கங்களுக்கும் மாற்றமான எந்த அம்சமும் இந்த ஹதீஸில் இல்லை.

ஷைத்தான்களால் தீங்கு ஏற்படாது என்று நாம் கூறவில்லை. மாறாக தீய எண்ணத்தை ஏற்படுத்தும் தீங்கை மட்டுமே ஷைத்தான்களால் செய்ய முடியும் என்றே கூறுகிறோம்.

ஆங்காகங்கே அரசாங்கத்தால் கட்டப்பட்டிருக்கும் கழிவறைக்குள் சென்று பார்த்தால் இந்த ஹதீஸ் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அறியலாம்.

மலம் ஜலம் கழிப்பதற்காகவே கழிவறை பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அந்த கழிவறைக்குள் சென்றவர்கள் ஆபாசமான படங்களையும் அசிங்கமான வரிகளையும் மாநகராட்சி கழிவறைக்குள் எழுதி வைத்திருக்கின்றனர்.
இன்னும் இந்த மாநாகராட்சி கழிவறைகள் விபச்சாரத்திற்கும் ஓரினைச் சேர்க்கைக்கும் கேந்திரமாக பயன்படுகிறது.
கழிவறையில் ஷைத்தான் ஏற்படுத்திய தவறான எண்ணங்களால் இவ்வளவு அசிங்கம் நடக்கின்றது. இதனால் தான் என்னவோ நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் செல்லும் போது ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு நமக்கு கூறியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு. தீய எண்ணத்தை ஏற்படுத்துவதும் உண்மையை மறுத்துவிடுமாறு கூறுவதுமே ஷைத்தானின் ஆதிக்கம். நல்ல எண்ணத்தை ஏற்படுத்துவதும் சத்தியத்தை உண்மைப்படுத்துமாறு கூறுவதுமே வானவரின் ஆதிக்கம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : திர்மிதி (2914)

இவா;களால் ஆதாரமாகக் காட்டப்படும் மற்றொரு ஹதீஸே மேலே நாம் குறிப்பிட்டது. இச்செய்தியில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெறும் அதாஉ பின் சாயிப் என்பவர் பலவீனமானவர் ஆவார்.

இவர் நினைவாற்றல் பாதிக்கப்பட்டவராவார். இவர் மேற்கண்ட செய்தியை நல்ல நினைவாற்றல் இருக்கையில் அறிவித்தாரா அல்லது நினைவாற்றல் பாதிக்கப்பட்ட பிறகு அறிவித்தாரா என்று தெரியவில்லை. எனவே இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறமுடியாது.
இத்துடன் நாம் கூறிய விளக்கத்துக்கு மாற்றமான எந்த கருத்தையும் இந்த ஹதீஸ் கூறவில்லை. மாறாக ஷைத்தானுக்கு தீய எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு ஆற்றல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று நாம் கூறிய கருத்தையே இதுவும் கூறுகின்றது.





Read More Add your Comment 0 comments




ஷிர்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழ முடியுமா?
k.m.jawahir (jamali)

ஷிர்க வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது?

பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிக்குச் செல்லக் கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.

وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ (108)9

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ”நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ”அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல்குர்ஆன் (9 : 107)

மேற்கண்ட வசனத்தில் இறை மறுப்புக்காரியம், தீங்கு, பிரிவை ஏற்படுத்துவது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்பவர்களுக்கு புகலிடம் அளிப்பது ஆகிய நான்கு தன்மைகள் உள்ள பள்ளிக்குப் போகக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த வசனத்தில் நான்கு தன்மைகள் சேர்த்துக் கூறப்பட்டிருந்தாலும் வேறு ஆதாரங்களைப் பார்க்கும் போது பெரும்பாவமான இணை வைப்பு என்ற ஒரு பாவம் மட்டும் ஒரு பள்ளியில் நடந்தால் அந்தப் பள்ளிக்கும் போகக் கூடாது என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியும்.

وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا(18).72

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் (72 : 18)

அல்லாஹ்வை மட்டும் வணங்கும் இடமே பள்ளிவாசல்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு இடத்தில் அல்லாஹ்வும் வணங்கப்படுகிறான். மவ்லூத் என்ற பெயரால் நபி (ஸல்) அவர்களும் அப்துல் காதர் ஜைலானி ஹாகுல் ஹமீது பாதுஷா ஆகியோரும் வணங்கப்படுகிறார்கள் என்றால் நிச்சயம் அந்த இடம் பள்ளிவாசல் என்ற அந்தஸ்த்தை இழந்து விடுகின்றது. ஒரு பள்ளிவாசலுக்கு கிடைக்கும் சிறப்புகள் அந்த இடத்துக்குக் கிடைக்காது.

அல்லாஹ்வின் பெயர் மட்டும் துதிக்கப்படுவதையே பள்ளிகளுக்குரிய தன்மையாக அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விடபெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் (2 : 114)

الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ إِلَّا أَنْ يَقُولُوا رَبُّنَا اللَّهُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنصُرَنَّ اللَّهُ مَنْ يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ(40)22

”எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;
அல்குர்ஆன் (22 : 40)

فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ(36)24

(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்.
அல்குர்ஆன் (24 : 36)

எனவே ஓரிடத்தில் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டால் அந்த இடத்தில் நாம் அல்லாஹ்வை வணங்குவது தடுக்கப்பட்டிருக்கின்றது. அல்லாஹ் மட்டும் வணங்கப்படும் இடத்திலேயே அல்லாஹ்வை நாம் வணங்க வேண்டும்.


Read More Add your Comment 0 comments


குப்ரின் மீது எழும் தனிமனிதனதும் சமூகங்களினதும் வரலாற்று முடிவு.



குப்ரின் மீது எழும் தனிமனிதனதும் சமூகங்களினதும் வரலாற்று முடிவு.
வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
k,m.jawahir (jamali)

நிராகாரிப்பாளர்களின் செயல்கள் வெட்டவெளியில் தோன்றும் கானல் நீரை ஒத்தவை. தாகமுடையோன் அதனை நீரென்றே கருதி விடுகிறான். அங்கே வந்து பார்க்கும் போது தான் அது எதுவுமல்ல என அவனுக்குத் தெரிகிறது. அங்கே அவன் அல்லாஹ்வைக் காண்பான்.

அல்லாஹ் அவனது கணக்கைப் புரணமாகத் தீர்த்து விடுகிறான். அல்லாஹ் மிக விரைவாகக் கணக்குக் கேட்கக் கூடியவனாவான். (ஸுரா நூர் : 39) இந்த வசனம் இறைநிராகரிப்பாளர்களின் செயல்களுக்கு உதாரணம் கூறுகின்றது.

அச்செயல்கள் எத்தகைய பெறுமானமும் அற்றவை என்பதே இந்த உதாரணத்தின் சுருக்கமான பொருள். இஸ்லாம் வாழ்க்கையை உலகம் என்ற சிறிய, குறுகிய பகுதியோடு மட்டும் முடித்துக் கொள்ளவில்லை. மனிதன் உலகில் தோன்றியது தொடங்கி சுவர்க்கம் அல்லது நரகம் என்பது வரையில் வாழ்க்கைச் சாலை நீண்டிருக்கின்றது என்பது அதன் திட்டவட்டமான கருத்தாகும்.

செயல்களின் பெறுமானம் இந்த கணிப்பீட்டை வைத்தே மதிப்பிடப்படல் வேண்டும். இந்த வகையில் ஈமானின் அடிப்படையில் செயல்கள் அமையாத போது அது எந்தப் பயனும் அற்றதாக பெறுமானம் இல்லாததாக மாறி விடுகிறது. இத்தகைய பரந்த கண்ணோட்டத்தில் மனிதன் செயல்களை நோக்குவதில்லை.

குறிப்பாக பௌதிக உலக முன்னேற்றங்களிலும் மதச்சார்பற்ற சிந்தனையிலும் மூழ்கி, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் தற்கால மனிதன், உலோகாயாத அடிப்படையில் செயல்கள் நோக்குகிறான்.

பௌதிக உலகில் மனிதனின் சாதனைகள் இன்று அளப்பெரியனவாகும். இயற்கையின் சக்திகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அவனது முயற்சி படிப்படியாக வெற்றியடையத் துவங்கியதும், வெற்றிப் பாதையில் கடவுட் கொள்கை அநாகரிக காலத்தில் வாழ்ந்த பயந்த, பலவீனமான மனிதனுக்கே தேவைப்பட்டது.

பலமும்,சக்தியும் கொண்டு பிரபஞ்சத்தையே தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயலும் நவீன மனிதனுக்குக் கடவுள் ஏன்? அவன் தாழ் பணிய வேண்டிய அவசியம் தான் என்ன, என்று அவன் பேசத் துவங்கி விட்டான்.
இறைநிராகரிப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக வாழ்வு பொதுவாக வரலாறு நெடுகிலும் இவ்வாறு தான் அமைந்துள்ளது. ஷுஅரா, ஹுத் போன்ற ஸுராக்கள் ஆத், ஸமூத் சமூகங்கள் பௌதிக உலக வாழ்வின் கண்ட முன்னேற்றங்களால் எத்தகைய மனோ நிலை கொண்டு வாழ்ந்தார்கள் என்பதை விளக்குகின்றன.

அவர்களது செயற்பாடுகளால் பௌதிக உலகில் அதிசயங்கள் நிகழ்ந்தன. அற்புதமான காலகட்டடக் கலைத்திறன் கைவரப் பெற்றவர்களாக வாழ்ந்த அவர்கள், கோட்டை கொத்தளங்களை நிர்மாணித்து, புமியில் அதிசயம் புரிந்தனர்.

நாம் நிரந்தரமாக வாழ்வோம், எமக்குக் கிடைத்திருக்கும் செல்வமும் பலமும் அழிந்து போகப் போவதில்லை என அவர்கள் கருதத் தலைப்பட்டனர். ஹுத், ஸாலிஹ் (அலை) ஆகிய இரு தூதர்களும் இவர்கள் இந்தப் போக்கைக் கண்டித்தார்கள். அல்லாஹ்வின் பால் அவர்களை அழைக்க இத்தூதர்கள் அரும்பாடுபட்டார்கள்.

இறுதியில் அவர்களுக்குச் செவிமடுக்காத அனைவரையும் அல்லாஹ் அழித்து விட்டான். ஸுரா ஷுஅரா 123-150. வரையுள்ள வசனங்கள் இக்கருத்தை விளக்குகின்றன. சமூகங்கள் மட்டுமல்ல, தனிமனிதர்களின் நிலையும் இத்தகையதே. செல்வமும் அதிகாரமும் கையில்குவியும் போது இறை நிராகரிப்பை அடித்தளமாகக் கொண்டெழும்பும் தனிமனித வாழ்வும் இதே மனோநிலையைக் கொண்டதாக அமைகிறது.

காரூன், மூஸா (அலை) அவர்களின் சமூகத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன், தான் சேமித்த செல்வங்கள் அனைத்தும்தனது அறிவைக் கொண்டு சம்பாதித்தவை என அவன் கருதினான். தன் உழைப்பு தனக்கு வாழ்வளிக்கும் எனக் கூறினான். ஆனாலும் அவனுடைய உழைப்பு அவனைக் காக்கவில்லை.

அவன் கட்டிக் காத்த செல்வம் அவனுக்குப் பிரயோசனம் கொடுக்கவில்லை. அவனும் அழிந்து போனான். இக்கருத்தை அல்குர்ஆன் ஸுரா அல் கஸஸில் 76-86 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறது. இரு நபர்களில் ஒருவன் பெரும் பணக்காரன். பெருந்தோட்டங்களுக்குச் சொந்தக் காரன், மற்றவன் ஏழை.

தன்னிடம் குவிந்திருக்கும் செல்வத்தால் மதிமயங்கிப் போனான் பணக்காரன். இந்தத் தோட்டமும் நிறைந்த செல்வமும் தன்னை வாழ வைக்கும். தன் செல்வம் என்றும் அழிந்து போகாது என்ற மனப்பிரமை அவனுக்கு ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அவனது தோட்டம் அழிந்து, சேர்த்து வைத்த செல்வமும் அழிந்தது.

உண்மை அப்போது தான் அவர்களுக்கு விளங்கியது. இச்சம்பவத்தை அல்லாஹ் ஸுரா கஹ்ப் 32-42 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறான். இறைநிராகரிப்பை அடிப்படையாகக் கொண்டு எழும் தனி மனித வாழ்வு, சமூக வாழ்வு, இறைநிராகரிப்பை அடித்தளமாகக் கொண்டமையும் நாகரிகம், அனைத்தும் எத்தகைய பிரயோசனத்தையும் கொடுக்காமலேயே அழிந்து போகும் என்பது மிக அடிப்படையானதொரு உண்மை.

இதனை நிரூபிக்கும் வகையில் அல்குர்ஆன் முன்வைக்கும் வரலாற்று நிகழ்வுகளில் சிலரே மேலே தரப்பட்டன. இக்கருத்தை சுருக்கமாகத் தருகிறது கீழ்வரும் இறைவசனம் : நாம் நல்லதையே செய்கிறோம் என்ற எண்ணத்தில் உலக வாழ்வின் முயற்சிகள் பிரயோசமற்று வீணாகிப் போன செயல்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் நஷ்டவாளிகளை உங்களுக்குச் சொல்லட்டுமா?

அவர்கள் தான் தங்களது இரட்சகனையம் அவனைச் சந்திப்பதையும் மறுப்பவர்கள். (கஹ்ப் : 103-105) முற்றிலும் இந்தக் கருத்தைத் தான் அல்குர்ஆன் மேற்குறிப்பிட்டுள்ள உதாரணத்தில் தருகிறது. இந்த உதாரணத்தை இருவகையில் விளக்க முடியும். மறுமையோடு இணைத்து இந்த உதாரணத்தை நோக்க முடியும்.

உலக வாழ்வை மட்டும் வைத்தும்நோக்க முடியும். செயல்களின் உண்மைப் பெறுமானம் மறுமையில் அது கொடுக்கும் விளைவைப் பொறுத்ததே. இந்த உலகம் நிரந்தரமானதல்ல. மனிதன் இந்த உலகில் என்ன உழைத்தாலும், என்ன திரட்டினாலும் அவை அனைத்தும் அழிந்து போகும். அவனும் அழிந்து போவான். இக்கருத்தோடு இணைத்து உதாரணத்தை நோக்குங்கள்.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட பொருட்கள் கானல்நீர், தாகம் கொண்டவன், தாகம் கொண்டவன் நீர் தான் என எண்ணிக் கொள்ளும் பிரமை. அதனைப் பின்பற்றி ஓடும் அவனது நடவடிக்கை. தாகம் கொண்டோன் - வாழ வேண்டும் என்ற தாகம் கொண்டோன் - உலகப் பொருட்களே தன் தாகத்தைத் தீர்க்கும் என நம்புகிறான். ஏனெனில் அதற்கு அப்பால் பார்க்கும் ஆற்றல் அவனுக்கில்லை.

அவனது முயற்சி முழுக்க முழுக்க உலகப் பொருட்களைத் திரட்டுவதிலேயே செலவாகிறது. உணவு, உடை, வீடு, சுகாதார வசதிகள் இப்படித் தேடித் தேடிக் குவிக்கிறான். தன்னைக் காக்கும் அரும் பொருட்கள் இவை என அவன் நம்புகிறான்.

தூரத்தில் நின்று பார்க்கும் போது - தாகத்தால் பார்க்கும் போது வெட்டவெளியிலே கானல் நீர் உண்மை நீர் போன்று தெரிகிறது. அள்ளிப் பருக ஓடோடி வருகிறான். அது கானல் நீருமல்ல - எதுவுமல்ல - வெறும் பிரமை எனப் பின்னால் புரிகிறது. தன்னைக் காக்கும் அரும்பொருட்களாகத் தான் தோற்றமளித்தன.

உலகப் பொருட்களும், ஆனால் தான் சேர்த்து வைத்த பொருட்கள் இருக்க - அவற்றைப் பாதி அனுபவிக்கும் போதே அல்லது அனுபவிக்க முடியாமலேயே இறந்து போகிறான் மனிதன். மஹ்ஷர் வெளியில் எழும்புகிறான். சுவர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்கிறான். தனது இறந்த கால வாழ்வை நினைத்துப் பார்க்கிறான்.

அவனுக்குப் புhpகிறது. நிச்சயமான இந்த மறுமை வாழ்வு தான் உண்மையான வாழ்வு (அன்கபு+த் : 64) என்று. நான் இவ்வளவு காலமும் உலகம் தான் வாழ்வு என்ற மாயையில் ஏமாந்து போனேன். வாழ்க்கைக்கான பொருட்களை அடக்கியிருக்கும் வாழும்வீடு என்ற உலகத்தின் காட்சி வெறும் பொய்த் தோற்றம்.

கானல் நீர் என்பது அப்போது தான் அவனுக்குப் புரிகிறது. அந்தப் பொய் மானைத் தொடர்ந்து ஓடி வந்தேனே எத்தகைய கைசேதம். சேமித்த செல்வம், பெற்றிருந்த அதிகாரம், அனைத்தும் அழிந்து போயின. எதுவும் இங்கில்லை. அவை இல்லாவிடடாலாவது பரவாயில்லை.

தான் யாரை நிராகரித்தேனோ அந்த அல்லாஹ் நிற்கின்றானே என்பது தான் அடுத்த அதிர்ச்சி நிராகரிப்பாளனுக்கு அல்லாஹ் அவனது செயல்களுக்கான கணக்கைப் புரணமாகத் தீர்த்து விடுவான். இந்த உலக வாழ்வு மறுமை வாழ்வோடு ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலம்.

அது மட்டுமல்ல. பொதுவாக இந்தப் புமியின் வயதோடு ஒப்பிடும் போது தனிமனித வாழ்வு என்பது மிக மிக அற்பமான காலப்பகுதியாகும். அல்லாஹ்வின் கேள்வி கணக்கு மிக விரைவானது. நீண்ட நெடுங்காலம் நிராகரிப்பை இவ்வுலகில் அவன் விட்டு வைக்கவில்லை. வாழ்க்கைத் தாகத்தைத் தீர்க்க உலகத்தைக் கட்டியாளும் எல்லா மனிதர்களுக்கும் இந்த உதாரணம் பொருந்தும்.

இந்த வாழ்வு நிலையற்றது. மறுமையில் மஹ்ஷர் (கணக்குத் தீர்க்கும்) வெளியில் நின்று பார்க்கும் போது தான் எவ்வளவு மோசமாக நாம் ஏமாந்து விட்டோம் என்பதை இறைநிராகரிப்பில் வாழ்ந்த ஒவ்வொரு தனிமனிதனும் விளங்கிக் கொள்வான். அல்குர்ஆன் சொன்ன உதாரணத்தின் ஒரு பக்கம் இது. அது தரும் இன்னொரு கருத்தும் நோக்கத்தக்கது. இறைநிராகரிப்பின் அடிப்படையில் எழும் சமூக ஒழுங்கும் நிலைக்காது.

அது சீர்குலையக் கூடிய தண்டனையைப் பெறும். இது குர்ஆன் கூறும் தவிர்க்க முடியாத விதி. உலக வாழ்விலேயே அதற்கான தண்டனையை அது பெறும். தனி மனிதர்கள் செய்யும் தீமைகளுக்கான கூலி சில வேளை இவ்வுலகிலே கிடைக்காது போகலாம். ஆனால், சமூகம் செய்யும் தீமை, இறைநிராகரிப்புக்கான கூலி நிச்சயமாகக் கிடைத்தே தீரும்.

எத்தனை பிரதேசங்கள் அல்லாஹ்வினதும் அவனது தூதர்களினதும் கட்டளைகளைப் பிடிவாதத்தோடு புறக்கணித்தன. அவற்றை நாம் கடுமையாக விசாhpத்தோம். யாரும் நினைத்துப் பார்க்காத கடும் தண்டனையைக் கொடுத்தோம். (தலாக் : 8) இக்கருத்தின் அடிப்படையில் இந்த உதாரணம் நோக்கப்படும் போது அது கொடுக்கும் கருத்து சற்று வித்தியாசப்படுகிறது.

பௌதிக உலகும் அதன் செல்வங்களும் வாழ்வின் அடிப்படை என நினைத்து அவற்றைத் தளமாகக் கொண்டு எழுகிறது ஒரு சமூக வாழ்வு. அச்சமூகத்தின் செயல்கள் மிகப் பொpய விளைவுகளைத் தருகின்றன. வாழ்க்கை வசதிகள் பெருகுகின்றன. எண்ணற்ற கண்டுபிடிப்புகள், இயற்கையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரும் மிகப் பரிய முயற்சிகள் சிறிது சிறிதாக வெற்றியடைகின்றன.

வாழ்க்கைத் தாகம் தீர்ந்தது. அதோ தெரிகிறது. உன்னத வாழ்வு, வறுமையும், பட்டினியும், பிணியும் ஓடி ஒழியப் போகின்றன. மனிதன் மரணத்தையே வென்று விடப் போகிறான் என்ற எண்ணம் தோன்றுகிறது. வாழ்வை அனுபவிக்கப் போகிறேன் என்று எண்ணி, நாகரிகத்தின் உச்சியில் நிற்கும் போது சேர்த்ததெல்லாம் கானல் நீராகத் தோன்றத் துவங்குகிறது. வாழ்க்கைத் தாகத்தைத் தீர்க்க இவைகளால் முடியாது.

இவை வாழ்க்கையின் புறத்தேவைகளை மட்டுமே தீர்க்க முடியும். அக வாழ்வு சீரழிந்ததால் புறவாழ்வு அர்த்தமற்றதாகி விடுகிறது. புறவாழ்வின் செல்வங்கள் அழிவுக்கும் சீர்கேட்டுக்கும் பயன்படத் துவங்குகின்றன. வாழ்க்கை காகப் பௌதிக உலகின் முன்னேற்றங்களைத் தேடிய மனிதன் ஏமாற்றம், விரக்தி, தற்கொலை, மனநோய்கள் இவற்றால் பீடிக்கப்படுகிறான்.

நான் கானல் நீரை நீராக நினைத்து ஓடி வந்திருக்கிறேன் என்று அப்போது அவனுக்குப் புரிகிறது. சமூக வாழ்வுக்கு அல்லாஹ் விதித்த சட்டம் தொழிற்படத் துவங்குகிறது. அல்லாஹ் தன் கணக்கை மிகப் புரணமாகவே தீர்த்து விடுகிறான். அழிவுக்கு உட்படுகிறது. அந்தச் சமூக வாழ்வு. கட்டியெழுப்பிய நாகரிகத்தின் வெறும் தடயங்களும் அடையாளங்களுமே எஞ்சுகின்றன.


Read More Add your Comment 0 comments


கவலையிலும் துக்கத்திலும் என்ன செய்வது..




கவலையிலும் துக்கத்திலும் என்ன செய்வது..
k,m.jawahir (jamali)

கவலையிலும் துக்கத்திலும் உங்களுக்கு ஏற்படும் சிரமங்கள் - துன்பங்களை பொறுமையுடனும் அமைதியுடனும் ஏற்றுக் கொள்ளுங்கள் எப்போதும் தைரியம் இழந்து விடாதீகள். மேலும் துக்கம் மற்றும் கவலையை அளவுக் கதிகமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் உலகில் எந்த மனிதனும் துக்கம் கவலை சோதனைகள் தோல்லிகள் நஷ்டங்கள் மற்றும் இழப்புகள் ஆகிய வற்றை விட்டும் அச்சமற்றவனாகவும் பாதுகாப்பு உடையனவாகவும் இருக்க முடியாது.

ஆயினும் இறைநம்பிக்கையாளனின் பண் பாட்டிலும் இறை நிராகரிப்பாளரின் பண்பாட்டிலும் பெரும் வேறுபாடு இருக்கிறது. இறைநிராகரிப்பாளனுக்கு ஒரு தக்கமோ கவலையோ ஏற்பட்டு விட்டால் அவன் அதிக கவலையில் மூழ்கி விடுகிறான் தன் உணர்வாற்றலை இழந்து கை - கால்களை பயன்படுத்தி நிலைனையைச் சரி செய்ய முயலாமல் அதே கவலையில் வீழ்ந்து நிராசைக்குப் பலியாகிறான் மேலும் சில சமயம் அதிக துக்கங்களைத் தாங்க முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கிறான்!
இதற்கு மாறாக இறைநம்பிக்கையாளனுக்குப் பெரும் பெரும் விபத்து ஏற்பட்டாலும் அவன் பொறுமையைக் கைவிடுவது இல்லை பொறுமை மற்றும் நிலைகுலையாமையின் உருவமாகத் திகழ்ந்து பாறை போல் உறுதியாக சத்தியப்பாதையில் நிலைத்து நிற்கிறான் அவன் இவ்வாறு சிந்திக்கிறான்:

இறைவிதியின்படியே இவை அனைத்தும் நடந்திருக்கிறது இறைவனின் எந்த ஒரு கட்டளையும் விவேகம் மற்றும் நம்மைகள் இல்லாமல் இருப்பதில்லை மேலும் அவனுடைய இந்த சிந்தனையானது இறைவன் எது செய்தாலும் மக்களின் நன்னைக்காகவே செய்கிறான் திண்ணமாக இதில் நன்மையின் அம்சம் இருக்கக்கூடும் எனும் அவனுடைய அந்த சிந்தனை இறைநம்பிக்கையாளனுக்கு ஆன்மிக அமைதியையும் மனத்திருப்தியையும் ஈட்டித் தருகிறது துக்கம் மற்றும் கவலையில் ஆர்வத்திதிலும் அவனுக்கு ஓர் இன்பம் ஏற்படுகிறது.

விதி பற்றி இந்தக் கோட்பாடு ஒவ்வொரு சிரமத்தையும் அவனுக்கு இலகுவாக்கி விடுகிறது திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான் புவியில் ஏற்படுகிற அல்லது உங்களின் மீது இறங்குகிற எந்தத் துன்பமானாலும் அதனை நாம் உருவாக்குவதற்கு முன்பு அதனைக் குறித்து ஒரு சுவடியில் (அதாவது விதி ஏட்டில்) எழுதி வைக்காமல் இல்லை அப்படிச் செய்வது ஏக இறைவனுக்கு மிக எளிதானதாகும் (இவையனைத்தும்) எதற்காகவெனில் உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்ப்பட்டாலும் நீங்கள் மனம் துவண்டுவிடக் கூடாது.

மேலும் ஏக இறைவன் உங்களுக்கு வழங்கியிலுப்பவற்றைக் கொண்டு நீங்கள் புரித்துப் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்!'' திருக்குர்ஆன் 57:22, 230 அதாவது விதியின் மீது நமிபிக்கை இருப்பதன் ஒரு பலன் இதுவோ இறைநம்பிக்கையாளர் பெரும் விபத்துக்களையும் விதியின் தீர்ப்பு எனக் கருதி தம் கவலையை நீக்கும் வழிவகையினைத் தேடிக் கொள்கிறார்.

மேலும் இந்த துயரத்தைக் கொண்டு அவன் அதிக கவவையும் அடை வதில்லை நிலைகுலைந்து போவதுமில்லை ஒவ்வொரு விவகாரத்தைக் குறித்தும் கருணையுள்ள இறைவன் இதில் என்ன நன்மை வைத்திருப்பான் என்பதை அறிவதில் அவன் கண்ணும் கருத்துமாய் இருக்கிறான்.

பொறுமையை மேற்கொண்டு நன்றி செலுத்துவதன் வாயிலாகவும் ஒவ்வொரு தீமையிலிருந்தும் நன்மையான அம்சங்களைப் பெற்றுக் கொள்ள அவன் முயற்சி செய்கிறான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இறை நம்பிக்கையாளரின் விவகராம் எத்துணை அழகானது! எந்த ஒரு நிலையிலும் அவன் நன்மைகளை ஈட்டிக் கொண்டேயிருக்கிறானே! அவனுக்கு துக்கம் நோய் வறுமைநிலை ஏற்பட்டால் அவன் அமைதியுடன் அவற்றைப் பொறுத்துக் கொள்கிறான் மேலும் இந்த சோதனை அவனை நம்மையை ஈட்டிக் கொள்ளச் செய்கிறது இதற்குப் பதிலாக அவனுக்கு மகிழ்ச்சியும் செல்வச்செழிப்பும் கிடைத்தால் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான்.

இந்த செழிப்பும் அவனுக்கு நன்மை ஈட்டித் தரும் ஓர் அம்சமாக அமைந்து விடுகிறது.'' நூல்: முஸ்லிம். நீங்கள் துக்கம் கவலை தரக்கூடிய செய்தி ஏதேனும் செவியுற்றால் அல்லது ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் துக்கம் துயரம் ஏற்பட்டால் அல்லது ஒரு பெரும் துன்பத்துக்கு நீங்கள் ஆளானால் அதைப் போக்கிக் கொள்ளும் முகமாக ‘‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்''

பொருள்:‘நாம் இறைவனுக்காகவே இருக்கிறோம் மேலும் நாம் அவனிடம் செல்லக்கூடியவர்களாய் இருக்கிறோம்!'' என்று கூறிக் கொள்ளுங்கள். இதன் விளக்கம் இதுவே: நம்மிடம் உள்ளவை அனைத்தும் இறைவனுடையதே! அவனே அவற்றை வழங்கியிருக்கிறான் அவனே அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறான் நாமும் அவனுடையதாகவே இருக்கிறோம். ஒவ்வொரு நிலையிலும் இறை உவப்பைக் குறித்து நாம் திருப்தி அடைகிறோம் அவனுடைய ஒவ்வொரு செயலும் நுட்பம் விவேகம் மேலும் நீதியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது அவன் செய்வதெல்லாம் ஒரு பெரும் நம்மையை முன்னிட்டே செய்கிறான்.

வாய்மையான அடிமையின் பணி இதுவே தம் எஜமானனின் செயலைக் குறித்து எந்நேரத்திலும் அவன் நெற்றியைச் சுருக்குவதில்லை துக்கம் அடைவதில்லை! இறைவன் கூறுகிறான்: ‘‘மேலும் சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள் உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம் (இந்த நிலையில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே) நீர் நற்செய்தி கூறுவீராக! அவர்கள் (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் தன்பம் நேரிடும் பொழுது ‘‘நிச்சயமாக நாம் ஏக இறைவனுக்கே உரியவர்கள்.
மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கிறோம்.'' என்று சொல்வார்கள் அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்ரு நல்வாழ்த்துக்களும் நல்லருளும் உண்டாகும் இன்னும் அத்ததையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்! திருக்குர்ஆன் 2:155-157 இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியானுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது அவன் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன் நாம் இறைவனுக்காகவே இருக்கிறோம் மேலும் நாம் அவனிடமே செல்லக் கூடியவர்களாய் இருக்கிறோம்.

என்று கூறிக்கொண்டால் ஏக இறைவன் அவனுடைய அந்தத் துன்பத்தின் விளைவை அவனை விட்டும் ஏக இறைவன் அகற்றிவிடுகிறான்! மேலும் அவனுக்கு நன்மையான முடிவை வழங்குகிறான்! மேலும் அவனுடைய இந்த பண்புக்குப் பகரமாக அவனுக்கு விருப்பமான பொருளை இறைவன் வழங்குகிறான். ஒரு முறை விளக்கு அணைந்துவிட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன் - நாம் இறைவனுக்காகவே இருக்கிறோம் மேலும் நாம் அவனிடமே செல்லக்கூடியவர்களாய் இருக்கிறோம் என்று கூறினார்கள்.

அதற்கு அங்கிருந்த ஒருவர் ‘‘இறைத்தூதர் அவர்களே! விளக்கு அணைவதும் ஒரு துன்பமாகுமா? என்று கேட்டார். அதற்கு ‘‘ஆம்! இறைநம்பிக்கையாளனுக்கு எதுவெல்லாம் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறதோ அது வெல்லாம் துன்பம்தான் என்று விளக்கினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த முஸ்லிமுக்கேனும் மனவருத்தம் உடல்பாதிப்பு நோய் துக்கம் அல்லது கவலை இதுபோன்ற ஏதேனும் ஏற்பட்டு ஏன் காலில் ஒரு முள் குத்தினாலும் சரியே அவர் மேலும் அதனைப் பொறுத்துக் கொண்டால் அதற்காக ஏக இறைவன் அவரின் பாவங்களை மன்னித்துவிடுகிறான்.'' நூல்: புகாரீ, முஸ்லிம்.

ஒரு துன்பம் அல்லது விபத்து ஏற்படும்போது துக்கத்தை வெளிப்படுத்துவது இயற்யையான செயல்தான்! ஆனால் ஒரு விஷயத்தைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள் துக்கமும் கவலையும் கடுமையானதாய் இருக்கும் நிலையில் உங்கள் நாவிலிருந்து சத்தியத்துக்கு மாறான எந்த சொல்லும் வெளிப்பட்டு விடக்கூடாது மேலும் பொறுமை மேற்கொள்வதற்கான நன்றி செலுத்துவகற்கான நடத்தையை நீங்கள் கைவிட்டு விடக் கூடாது.

நபி(ஸல்) அவர்ளின் புதல்வர் இப்ராஹீம்(ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் மரணத்தைத் தழுவிக் கொண்டிருந்த நேரம்!
இந்த துக்ககரமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீமே உன்னுடைய பிரிவு எங்களுக்குப் பெரும் துக்கத்தைத் தந்திருக்கிறது ஆனாலும் நம் நாவிலிருந்து இறைவனின் விருப்பத்துக்கு உகந்த வார்த்தைகளே வெளிப்படும்.'' நூல்: முஸ்லிம்.

துக்கத்தின் கடுமை (உங்களை வாட்டிக் கொண்டு) இருந்தபோதிலும் இறைவனுக்கு நன்றி கொல்லும் சொற்களையோ இறைவனைக் குறை கூறும் சொற்களையோ நடத்தையையோ வெளிப்படுத்தாதீர்கள் மேலும் ஷரீஅத் - இஸ்லாமிய சட்டத்துக்குப் புறம்பான செயல்களைப் புரியாதீர்கள் ஒப்பாரி வைப்பது சட்டை அல்லது வேறு ஆடைகளைக் கிழித்துக் கொள்வது கன்னங்களில் அறைந்துகொள்வது வெறித்தனமாகக் கூச்சலிடுவது துக்கத்தில் தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொள்வது போன்றவை இறைநம்பிக்கையாளனுக்கு எவ்விதத்திலும் ஆகுமானவை அல்ல!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் ஒருவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொள்கிறானோ தம் கன்னங்களில் அறைந்துகொள்கிறானோ மேலும் அஞ்ஞானக் காலத்தைப் போன்று வெறித்தனமாக கூச்சலிடுகிறானோ மேலும் ஒப்பாரி வைத்து அழுகிறானோ அவன் என் சமுதாயத்தைச் சார்ந்தவன் அல்லன்!'' நூல்: திர்மிதீ.

நபித்தோழர் ஜஃபர் (ரலி) அவர்கள் ஷஹீத் - இறைவழியில் கொல்லப்படுதல் - ஆனார் இந்தச் செய்தி அவரின் குடுப்பத்தாருக்கு எட்டியபோது அந்தக் குடுப்பப் பெண்கள் துக்கத்தின் காரணமாக வெறித்தனமாக கூச்சலிட ஆரம்பித்தனர் மேலும் ஒப்பாரி வைத்து ஆழத்தொடங்கினர் அப்போது அவர்கள் இவ்வாறு கூச்சலிட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி அனுப்பினார்கள்.

ஆனாலும் அவர்கள் செவிசாய்ப்பதாய் இல்லை மீண்டும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அனுப்பினார்கள் ஆனாலும் அவர்கள் கேட்பதாய் இல்லை எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவர்களின் வாய்களில் மண்ணை நிரப்புங்கள் என்று கூறினார்கள். நூல்: புகாரீ.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.‘ஜனாஸாவிற்குப் பின்னால் செல்பவர்கள் தீப்பாத்திரங்களையோ அல்லது சாம்பலையோ கொண்டு செல்லக்கூடாது.'' ஜனாஸாவுக்குப் பின்னால் செல்லும்போது துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக அரபு மக்கள் தங்கள் மேலாடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு சட்டை மட்டும் அணிந்து செல்வார்கள் அப்போது அதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அஞ்ஞானக் கால சடங்குகளையா பின்பற்றுகிறீர்கள் உங்களுடைய முகங்களைத் தீயதாக மாற்றியமைத்து விடுமாறு துஆ செய்ய என்மனம் விரும்புகிறது என்று கூறினார்கள்.

அவ்வாறு கூறியதும் அவர்கள் அனைவரும் தாங்கள் மேலாடைகளை எடுத்து அணிந்து கொண்டனர் அதற்குப் பின்னர் அவர்கள் அவ்வாறு ஒருபோதும் செய்யவில்லை.
நூல்: இப்னுமாஜா.

நோயாளியும் வேதனையையும் எவர் தாங்கிக் கொள்கிறாரோ அத்தகைய இறைநம்பிக்கையாளர்களின் பாவங்கள் களையப்பட்டு விடுகின்றன மேலும் அவர் தூய்மை நிலையை அடைகிறார் இன்னும் மறுமையில் அவருக்கு மாபெரும் நற்கூலி அருளப்பட இருக்கிறது. அண்ணலார் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோய் வாய்ப்பட்டிருக்கும் அல்லது வேதனைகளைத் தாங்கிக் கொள்ளட்டும் இறைநம்பிக்கையாளனுடைய பாவங்கள் - மரங்கள் தமது இலைகளை உதிர்ப்பது போன்று களையப்பட்டு விடுகின்றன: நூல்: புகாரீ, முஸ்லிம்.
ஒரு முறை பெண் ஒருத்தி நடுங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் ஏன் நடுங்குகிறாய்? என்று வினவினார்கள் அதற்கு அவள் என்னைக் காய்ச்சல் சூழ்ந்து கொண்டது எனவே அது ஏக இறைவனுக்குத் தெரிய வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்கிறேன் என்று கூறினாள் அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்:

‘‘காய்ச்சலைக் குறை கூறாதீர்கள் ஏனெனில் நெருப்பு எவ்வாறு இரும்பில் காணப்படும் அழுக்கைத் தூய்மைப்படுத்து கிறதோ அவ்வாறே காய்ச்சல் ஆதத்தின் சந்ததியினருடைய பாவங்களைத் தூய்மைப்படுத்துறது.'' நூல்: முஸ்லிம்.

நபித்தோழர் அதாஃ இப்னு ரபாஹ்(ரலி) அவர்கள் தம்முடைய வாழ்வின் ஒரு நிகழ்ச்சியை அறிவிக்கிறார்: ‘‘கஅவாவின் அருகில் நின்றுகொண்டு அப்பாஸ்(ரலி) அவர்கள் என்னிடம் கேட்டார்கள் அதற்து நான் நிச்சயமாக! அப்பெண்ணைக் காண்பியுங்கள்! என்று கூறினேன் அதோ பாருங்கள்! அந்த கருப்பு நிறமுடைய பெண் ஒரு முறை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களே! எனக்கு வலிப்பு நோய் இருக்கிறது எனக்கு வலிப்பு வந்து விட்டால் என் உடல் என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதில்லை இத்தகைய நிலைகளில் (சில நேரங்கள்) நான் முழு நிர்வானமாகவும் ஆகி விடுகிறேன்.

எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்களே! தாங்கள் எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கோரினாள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ இந்த நோயினால் ஏற்படும் வேதனையைத் தாங்கிக் கொண்டால் அதற்காக ஏக இறைவன் உனக்கு சுவர்க்கத்தை அளிப்பான் அல்லது நான் உனக்காக பிரார்த்தனை புரிந்தால் ஏக இறைவன் அந்த (வலிப்பு) நோயை குணமாக்கி விடுவான் என்று கூறினார்கள் இதைக் கேட்ட அப்பெண்மணி கூறினார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களே இந்த வேதனையைப் பொறுமையாக சகித்துக் கொள்கிறேன் ஆனால் எனக்கு அந்த நோயின் வேதனை ஏற்படும்போது நான் நிர்வாணமாக ஆகிவிடுவதிலிருந்தும் என்னைக் காக்க வேண்டிய எனக்காகப் பிதார்த்தனை புரியுங்கள்!'' எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்மணிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
என அப்பாஸ்(ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதாஃ (மேலும்) கூறுகிறார்: அப்போது உம்மே ரஃபஸ் என்ற உயரமான அந்த பெண்மணியை நான் கஅபா வாசலில் கண்டேன். எவருடைய மரணத்துக்காகவும் மூன்று தினங்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்காதீர்கள்! தங்களுக்குப் பிரியமான மற்றும் நெருங்கிய உறவினர்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்காகத் துக்கம் அனுஷ்டிப்பதும் கண்ணீர்.

சிந்துவதும் இயல்பானதே ஆனால் அது மூன்று தினங்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவருடைய மரணத்துக்காகவும் மூன்று தினங்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிப்பது இறைநம்பிக்கையாளர் எவருக்கும் ஆகுமானதல்ல! ஆயினும் மனைவியானவள் தம் கணவன் இறந்ததற்காக நான்கு மாதம் பத்துநாள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் அந்த நாள்களில் அவள் சாபமிடப்பட்ட ஆடைகள் அணிவதோ அல்லது நறுமணம் புசவோ அல்லது மற்ற அலங்காரங்கள் செய்து கொள்வதோ கூடாது.'' நூல்: திர்மிதீ.

ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் சகோதரர். இறந்துவிட்டால் நான்காவது நாள் அதை விசாரிப்பதற்காக சில பெண்கள் அவரிடம் சென்றனர் அப்போது அவர்கள் அனைவருக்கும் எதிரில் அவர் நறுமணம் புசிக்கொண்டார். பின்னர் கூறினார் இப்போது நான் நறுமணம் புசிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் ஏற்படவில்லை இருப்பினும் நான் ஏன் இப்போது புசினேன் என்றால் கணவனுக்காக மனைவி துக்கம் அனுஷ்டிப்பதைத் தவிர்த்து வேறு எவரும் யாருடைய மரணத்துக்காகவும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிப்பது ஆகுமானதல்ல!

இதை நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.
துக்கம் மற்றும் வேதனையான காலகட்டங்களில் ஒருவருக்கொருவர் பொறுமையை மேற்கொள்ளும்படியும் தைரியமாய் இருக்கும்படியும் அறிவுரை கூறிக்கொள்ளுங்கள். உஹத் யுத்தத்திலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி வந்தபோது பெண்கள் தங்கள் உறவினர்கள் நிலை குறித்து விசாரிப்பதற்காகக் கூடினார்கள். அப்போது ஹம்னா பின்த் ஜஹஷ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாக வந்தார்கள் பொறுமையாய் இருக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவருக்கு ஆறுதல் கூறினார்கள் பின்னர;
அவரின் சகோதரர் அப்துலலாஹ்(ரலி) இறந்த செய்தியைக் கூறி பொறுமையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள் அதைக் கேட்ட ஹம்னா (ரலி) ‘‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன் - நாம் இறைவனுக்காகவே இருக்கிறோம் மேலும் அவனிடமே செல்லக்கூடியவர்களாய் இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும் தம் சகோதரரின் பாவமன்னிப்புக்காக துஆ-பிரார்த்தனை செய்தார் அதன் பின்னர் நபி(ஸல்) அவர்கள் உங்கள் மாமன் ஹம்ஸா (ரலி) அவர்கள் விஷயத்திலும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள் என்றார். அப்போது அதற்கும் அவர் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன் என்று கூறினார் பின்னர் அவருக்காக பாவமன்னிப்பு கோரினார்.
அபுதல்ஹா (ரலி) அவர்களின் பிள்ளை நோய் வாய்ப்பட்டிருந்த போது பிள்ளையை அதே நிலையில் விட்டு விட்டுத் தம் வேலைகளை செய்யச் சென்று விட்டார் அவர்கள் சென்ற பின்னர் அந்த பிள்ளை மரணம் எய்திவிட்டது அபுதல்ஹா (ரலி) அவர்களின் துணைவியார் இந்தச் செய்தி அபு தல்ஹா(ரலி) அவர்களுக்குத் சேரவேண்டாம் என்று மக்களிடம் கூறிவிட்டார்.

அபுதல்ஹா (ரலி) அவர்கள் வேலைகளை முடித்துவிட்டு திரும்பியதும் மகனுடைய நிலை குறித்து விசாரித்தார் அதற்கு அவரின் மனைவி பிள்ளை முன்பைவிட அமைதியாகவே இருக்கிறான் என்று கூறிவிட்டார் அபுதல்ஹா(ரலி) அவர்கள் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். (இருவரும்) காலைப் பொழுதை அடைந்ததும் அவரது மனைவி மிகத் தந்திரமாக ‘‘எவரேனும் ஒரு பொருளை இரவல் கொடுத்து விட்டுப் பின்னர்.

அதைக் கேட்கும்போது அதைப் பெற்றவர் திரும்பத் தராமல் மறுக்க முடியுமா என்று கேட்டார். இதனைக் கேட்ட அபுதல்ஹா அதை எப்படி தடுத்துக் கொள்ள முடியும்? என்று கூறினார் அப்போது பொறுமையின் உருவமாகத் திகர்ந்து அவரின் மனைவி கூறினார். தங்களின் மகன் விஷயத்தில் தாங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள்!'' நூல்: முஸ்லிம்.

சத்தியப்பாதையில் ஏற்படும் துன்பங்களை நல்ல முறையில் எதிர் கொள்ளும் இந்த பாதையில் ஏற்படும் துக்கத்தைக் குறித்து கவலைப்படாதீர்கள். சோகத்தில் ஆழ்ந்து விடாதீர்கள். மாறாக அதனைக் குறித்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் அவன் பாதையில் இந்த தியாகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களின் தாயார் அஸ்மா (ரலி) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்தார்.

அப்போது , அவரைப் பார்ப்பதற்காக இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அங்கு சென்றார்கள். அப்போது அவரின் தாயார், கூறினார் மகனே என்னுடைய உள்ளத்தில் இரண்டு ஆசைகள் இருக்கின்றன அவற்றில் ஒன்றாவது நிறைவேறும் வரை என்னை இறைவன் உயிரோடு வைத்திருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் ஒன்று: நீ போர்க்களத்தில் ஷஹீ தாக்கப்பட்டு - இறைவனின் பாதையில் கொல்லப்பட்டு - நீ ஷஹீதான அச்செய்தியை நான் கேட்டு பொறுமையுடன் இருக்க வேண்டும் அல்லது நீ போர்க்களத்தில் வெற்றி அடைய வேண்டும்.

உன்னை வெற்றிவீரணாகக் கண்டு என் கண்கள் குளிர வேண்டும்.'' இறைவன் நாட்டத்தால் அப்துலலாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தம் தாயார் உயிருடன் இருக்கும்போதே ஷகீதாகிவிட்டார் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் ஷஹீதான பின்னர் ஹஜ்ஜாஜ் (எனும் கொடுங்கோல் மன்னன்) அவரைக் கழுவில் ஏற்றிவிட்டான் அப்போது அஸ்மா (ரலி) அவர்கள் மிகவும் முதுமை நிலையை அடைந்து விட்டார்கள் இத்தகைய பலவீனமான நிலையிலும்கூட அஸ்மா(ரலி) அவர்கள் தன் மகனின் அந்த துர்க்கரமான (சோகக்) காட்சியைக் காண அங்கு வந்தார்கள் தன்னுடைய மகனின் சடலத்தைக் கண்டு அழுவதற்குப் பதிலாக குதிரையின் முதுகிலிருந்து கீழே இறங்கு வதற்கு இந்த சவாரிக்கு இன்னும் நேரம் வாய்க்கவில்லை என்று கூறினார்கள்.

கவலை மற்றும துக்ககரமான வேலைகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குங்கள் நண்பர்களின் துக்கத்தில் பங்கு கொள்ளுங்கள் மேலும் அவர்கள் அந்த துக்கத்தை மறந்து விடுவதற்காக அனைத்து உதவிகளும் புரியுங்கள்! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முஸ்லிம்கள் அனைவரும் ஓர் உடலைப் போன்றவர்கள் கண்ணில் வலி ஏற்ப்பட்டால் உடல் முழுவதும் அதன் வலியை உணர்கிறது அவ்வாறே தலையில் சிறு வலி ஏற்பட்டால் உடல் முழுவதும் அதன் வேதனையை அனுபவிக்கிறது'' நூல்: முஸ்லிம்.

ஜஅஃபர் தய்யார் (ரலி) அவர்கள் ஷஹீதானபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜஃபருடைய வீட்டாருக்காக உணவு தயார் செய்து அனுப்புங்கள். ஏனெனில் , அவர்கள் இன்று துக்கத்தில் இருப்பதன் காரணமாக , அந்த குடும்பத்தார் உணவு சமைத்திருக்க மாட்டார்கள்.'' நூல்: அபுதாவுத்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண், தன்னுடைய குழந்தை இறந்திருக்கும் நிலையில் அவளை நலம் விசாரிப்பவர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டு அங்கு ஆடை அணிவிக்கப்படுவார்.'' நூல்: திர்மிதீ.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘துன்பத்துக்கு ஆளாகி இருக்கும் ஒருவருக்கு ஆறுதல் கூற சென்றால் அந்த துன்பதுதில் ஆளாகியிருப்பவருக்கு எந்த அளவு நற்கூலி கிடைக்குமோ, அதே அளவு ஆறுதல் கூறச் சென்றவர்களுக்கும் கிடைக்கும்.'' நூல்: திர்மிதீ்.

இது தொடர்பாகவே, ஜனாஸாவில் கலந்து கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் ஜனாஸாவில் கலந்து கொண்டு ஜனாஸா தொழுகையில் ஈடு படுகிறாரோ, அவருடககு ஒரு கிராத் அளவு நன்மைகள் கிடைக்கும். அமலும். எவர் ஜனாஸா தொழுகைக்கு பின்னர் அதை அடக்கம் செய்வதிலும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத்துகள் அளவு நன்மைகள் கிடைக்கும்!'' அப்போது ஒருவர் வினவினார்: இரண்டு கீராத் என்பது எவ்வளவு பெரியது? அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘‘இரண்டு மலைக்கு சமமானவை'' என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரீ.

சோதனை மற்றும் துக்கம் ஆகியவை ஆட்கொள்ளும்போது இறைவன்பால் முற்றிலுமாகத் திரும்பி தொழுது நன்மையை வேண்டுங்கள் அடக்கத்துடன் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தியுங்கள்: யா அய்யு ஹல்லதீன ஆமனுஸ் தயீ னு பிஸ்யீ ஸப்ரி வஸ்ஸலவாதி. பொருள்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள் நிச்சயமாக ஏக இறைவன் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கிறான்.'' திருக்குர்ஆன் 2:153.
துக்கமான காலகட்டங்களில் அழுவதும் கண்ணீர் வடிப்பதும் மனித இயல்புதான் ஆனாலும் சப்தமிட்டு அழுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் நபி(ஸல்) அவர்கள் அழும்போது அவர்தம் அழுகையின் குரல் கேட்டகாது நீண்ட மூச்சு விடுவார்கள் மற்றும் கண்களில் கண்ணீர் வடியும் தீ மூட்டப்பட்ட அடுப்பின் மேலுள்ள பாத்திரம் கொதிப்பது போன்ற சப்தம் அவர்தம் நெஞ்சிலிருந்து வரும் மேலும் அவர்கள் துக்கம் கொண்டால் சில வார்த்தைகளைக் கூறுவார்கள்.

கண்கள் கண்ணீரை வடிக்கின்றன இதயம் கவலை கொண்டிருக்கிறது இருப்பினும் கூட இறைவனுக்குப் பிடித்தமான வார்த்தைகளை மட்டுமே நாவிலிருந்து வெளிப்படுத்துவோம்.'' இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தால் வானத்தின்பால் தம் தலையை உயர்த்தி ஸுப்ஹானல்லாஹில் அஸீம். பொருள்: ‘‘தூய்மையும் மேன்னையும் உடைய மாட்சிமை மிக்க இறைவனே! என்று கூறுவார்கள். அதன் பின்னரும் துக்கம் தொடர்ந்தால் இன்னும் அதிகமாக பிரார்த்தனை செய்ய நேரிட்டால், யா ஹைய்யு யா ஃகயும். பொருள்: ‘‘நித்திய ஜீவனாக உள்ளவனே! பேரண்டத்தை நன்கு நிர்வகிப்பவனே.'' என்று கூறுவார்கள்: அறிவித்தவர்: அபுஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ.

துக்கமும் கவலையும் கடினமாய் இருக்கும் போது துன்பங்களைக் கண்டு உள்ளம் அமைதியின்மையையும் கவலையும் கொண்டிருக்கும் போதும் இவ்வாறு துஆ - பிரார்த்தனை புரியுங்கள்! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: துன்னூன் அவர்கள் மீன் வயிற்றில் இருக்கும்போது புரிந்த பிரார்த்தனை இதுவே: லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினஸ்ஸா லிமின். ‘‘உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை ; தூய்மைனானவன் நீ! திண்ணமாக. நான் குற்றம் செய்து விட்டேன்!''
அறிவித்தவர்: ஸஅத் பின் அபி வக்காஸ்.

திருக்குர் ஆன் 21:87. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனவே, ஒரு முஸ்லிம் தனக்கு துன்பம் ஏற்றபட்டுவிடும்போது, அத்தகைய ஒரு கடினமான சுழலிலும் இந்தப் பிரார்த்தனையைச் செய்தால் இறைவன், அதனை அவசியம் ஏற்றுக் கொள்வான். (அதாவது , அடியானின் இந்தக் கோரிக்கையை நிறை வேற்றுவான்.) நபி(ஸல்) அவர்களுக்கு ஏதேனும் துக்கம் அல்லது சோதனை ஏற்பட்டால், அவர்கள் இவ்வாறு பிரார்த்திப் பார்கள்: லாயிலாஹா இல்லாஹு ரப்புல் ஹஅர்ஷில்ஹ அஸும் லாஇலாஹஇல்லல்லாஹு அப்புஸ்ஸமாவதி அரப்புல் அர்ஸி அப்புல் அர்ஷில் கரீம்.

பொருள்: ‘‘இறைவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் எவருமில்லை! அவன் மகத்தான அர்ஷ் - இன் (சிம்மாசனத்தின்) அதிபதியாய் இருக்கிறான். இறைவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் எவரும் இல்லை! அவன்வானங்ககள் புமி ஆகியவற்றின் அதிபதியாவான். மேலும். மேன்மையான அர்ஷ் - இன் அதிபதி ஆவான்!'' அறிவித்தவர்: இப்னு அப்பாஸ் (ரலி).

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி வலா மத்ஜாஹ மினல் லாஹி இல்லா இலைஹி. இந்த துஆ - பிரார்த்தனை 99 நோய்களுக்கு நிவாரணியாக உள்ளது. யார் இதனை ஓதுவோரோ , அவர் கவலையையும் துக்கத்தையும் விட்டு பாதுகாப்பாய் இருப்பார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒருவனுக்கு துக்மோ அல்லது துன்பமோ ஏற்பட்டால், அவர் இந்த துஆ - பிரார்தனை புரியட்டும்.

இறைவன் அவரின் துக்கத்தையும் துன்பத்தையும் - மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் மாற்றி விடுவான். அதாவது பவாங்களில் இருந்து விலகி இருக்கச் செய்யும்வலிமை மேலும், நற்செயல் புரியும் பேற்றினை வழங்கும் ஆற்றல் வல்ல இறைவனுக்கு மட்டுமே உரித்தானது. அவனுடைய சினத்திலிருந்து தப்பிக்க புகலிடம் எதுவும் இல்லை;

அவனுடைய ஆளுமையை தவிர! அல்லாஹும்ம இன்னீ ஹஅப்துக வப்னு அப்திக வப்னு அமதிக நஸியதீ பியதிக மாஸின் ஃபீ ஹுக்முக அத்லுன் ஃபீய்ய ஃகஸாஉக அஸ் அலுக பிகுல்லி இஸ்மின் ஹுவலக ஸம்மைதா பிஹி நஃப்ஸக அவ் அன்னஸல்தஹு ஃபிஹி கிதாபிக அவ் அல்லம்தஹு அஹதன்(ம்)மின் கலுஃகிகா அவிஸ்தா ஸர்தா பிஹி ஃபீ இல்மில் கைபி இன்தக அன்தஜ் அலலல்ஃகுர் ஆனல் அஸீம ரபைஹஅ ஃகல்பீ வநூர பஸரீ வஜலஅஹ ஹுஸ்னீ வதவஹாப ஹமீ.

பொருள்: ‘‘இறைவா! நான் உன்னுடைய அடிமையாவேன். என் தந்தையும் உனது அடிமையே! என் தாயும் அவ்வாறே உன் அடிமையாவார்! என்னுடைய குடும்பவலிமை உன் கைகளில்தான் இருக்கிறது. (அதாவது. நான் முழவதுமாக உன் கட்டுப் பாட்டில்தான் இருக்கிறேன்.) என்னுடைய விவகாரங்களில் உன்னுடைய கட்டளையேசெயல் படுகிறது. என்னைக் குறுத்து உன்னுடைய ஒவ்வொரு கட்டளையும் முற்றிலும் நீதியின் பால்தான இருக்கிறது.

நான் உன்னுடைய பெயரைக்கொண்டே - நீ உன்னுடைய ஆளுமைக்கு சூட்டியுள்ள அல்லது இறைவேதத்தில் அருளியிருக்கிற அல்லது உன் படைப்பினங்களில் எவருக்கேனும் கற்றுத்தந்த அல்லது உன்னுடைய மறைவான கருவுலத்தில் வைத்திருக்கின்ற உன்னடைய அந்தப் பெயரைக் கூறியே.

நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். மகத்தான. திருக்குர்ஆனை என் உளகீற்றாக , என் கண்களுக்கு உளியாக, என் துயரங்களுக்கு நிவாரணியாக என்னுடைய அச்சத்தைப் போக்கக் கூடியதாக. அமைத்து விடுவாயக!'' அறிவிப்பார்: அப்லுல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆதாரம: அஹ்மத்.

உப்னுஹிப்பான் ,ஹிஸ்னு ஹிஸீன் உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் உங்களுடைய வாழ்வு கடினமானதாகி விட்டால், பிறகு உங்கள் வாழ்வு பெரும் துன்பக் களமாக தோன்றினாலும் கூட அந்நேரத்திலும் மரணம் வரவேண்டும் என்று விரும்பாதீர்கள். உங்கள்கைளைக் கொண்டே உங்களை மாய்துக்கொள்ளும் மானக் கேடான செயலைக் குறித்து எப்போழுதும் கற்பனைக் கூட செய்யாதீர்கள். மேலும் இது கோழைத்தனமாகும். இது இறைவன் பால் செய்யப்படும் பெரும் பாவமும், அவன் அருளிய அமானிததத்துக்குப் புரியும் மோசடியும் ஆகும்.

தாங்கிக் கொள்ள முடியாத அளவு பிரச்னைகள் ஏற்பட்டால் பின் வரும் துஆவை - பிரார்த்னையை புரியுங்கள். அல்லாஹும்ம அஹ்யினூ மாகானதில் ஹயாது கைரன்(ல்) லி வதவஃப்ஃபனீ இஸா கானதில் வஃபாது கைரன்(ல்)லி.
பொருள்:‘இறைவா! எதுவரை வாழ்திருப்பது எனக்கு சிறந்ததாய் இருக்குமோ , அதுவரை நீ என்னை வாழவைப்பாயாக! எப்போது மரணமே எனக்கு சிறந்ததாய் இருக்குமோ அப்போது நீ எனக்கு மரணத்தை அளிப்பாயாக!'' நூல்: புகாரீ, முஸ்லிம்.

ஒருவரை சோதனைகள், துன்பங்கள் ஆழ்ந்திருப்பதைக் கண்டால் இந்த துஆவை - பிரார்த்னையை புரியுங்கள்! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘‘எவரையேனும் நீர் துன்பத்தில் ஆழ்ந்திருக்கக் கண்டால். இந்த துஆவை -பிரார்த்தனையைப் புரிவீராக! இறைவன் நாடினால், அந்த துன்பத்த விட்டும் அவர் பாதுகாப்பாய் இருப்பார்.'' அல்ஹம்து லில்லாஹில்லஸீ ஹஅஃபானீ மிம்மாப் தலா கல்லாஹு பிஹி வஃப்ஃபஸ்ஸல்லனீ அலா கஸீரின்(ம்) மிம்மன் கலஃதஃப்ஸீலன்.

பொருள்: ‘‘எந்த துன்பத்தில் நீ ஆழ்ந்திருக்கிறாயோ, மேலும் பல படைப்பினங்கள் எத்தகைய துன்பங்களில் ஆழ்ந்திருக்கின்றனவோ, அத்தகைய துன்பத்திலுருந்து என்னைக் காப்பாற்றி வைத்து எனக்கு மேன்மை வழங்கிய இறைவகுக்கே நன்றி அனைத்தும் உரித்தாகுக!'' நூல்: திரமிதி.


Read More Add your Comment 0 comments


இலங்கை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு என்ன நடைபெற்றது



இலங்கை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு என்ன நடைபெற்றது என்பதைக்காட்டும் சில உதாரணங்கள்.
k,m.jawahir (jamali)

சிகப்பு ஆகஸ்ட் : கிழக்கு முஸ்லிம் இனசுத்திகரிப்பு - 2006.


§ ஆகஸ்ட் -01 - மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்1990.
§ ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை.
§ ஆகஸ்ட்-03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை.
§ ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாய்கள் படுகொலை.
§ ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாய்கள் படுகொலை.
§ ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாய்கள் படுகொலை.
§ ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை.
§ ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை.

முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது.

சிறுவர் சிறுமியரின் பெண்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடு இன்றி கொத்தி கொதறி பிச்சு எறியப்பட்டனர் இந்த பயங்கரவாதபுலிகள் ஒரு மாதமே ஆன சிசுவை கூட விடவில்லை தலையில் அடித்து தலை சிதறடிக்கப்பட்ட பின் வீசி எறிந்தார்கள் புலி பயங்கரவாதிகள்.

104 முஸ்லிம்கள் 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

§ ஆகஸ்ட் 03-மூதூர் முஸ்லிம்கள் வெளி யேற்றம்.
§ ஆகஸ்ட்- 12 ஏறாவூர் ‘முஸ்லிம் கிராம படுகொலை.
12 ஆகஸ்ட் 1990 அன்று, 116 முஸ்லிம்கள் ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் இதில் கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றோம்.

1. ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
2. ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்
3. எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்
4. ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்
5. எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்
6. எஸ். சனூஸியா- (01 வயது) -பெண்
7. ஏ. றிபாகா -(01 வயது) -பெண்
8. எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்
9. எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்
10. யூ. லாபிர் -(03 வயது)- ஆண்
11. எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்
12. ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்
13. எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்
14. எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்
15. எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்
16. எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்
17. எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்
18. எம். ஐ. எம். தாஹிர்- (06 வயது)- ஆண்
19. எம். எல். எப். றிஸ்னா- (05 வயது)- பெண்
20. எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்
21. எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )
22. எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)
23. எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)
24. ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்
25. ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்
26. எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)
27. எம். ஐ. ஜரூன் -(10 வயது)
28. எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)
29. எம். ஐ. அஸ்றப் -(11 வயது)
30. எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)
31. எம். கமர்தீன் -(12 வயது)
32. எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)
33. ஏ. எல். மக்கீன்-(12 வயது)
34. எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)
35. ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)
36. வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)
37. எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)
38. எம். எஸ். பைசல்-(13 வயது)
39. எம். பீ ஜவாத்- (13 வயது)
40. யூ. எல். எம். அனஸ்- (13 வயது)
41. ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)
42. எச். எம். பௌசர்-(14 வயது)
43. ஏ. ஜௌபர்- (14 வயது)
44. எம். எஸ். எம் சகூர் -(14 வயது)
45. ஏ. சமீம்- (14 வயது)
46. எம். இஸ்ஸதீன்- (15 வயது)
47. எம். எம். எம். பைசல் -(15 வயது)
48. எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்
49. எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்
50. எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்
51. எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்
52. எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்
53. எம். எல். சமீமா-(10 வயது)- பெண்
54. எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்
55. எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்
56. ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்
57. ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்
58. யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்
59. ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்
60. ஏ. எல் சமீர்- (10 வயது) -ஆண்
மூலம்: லங்காமுஸ்லிம்.


Read More Add your Comment 0 comments


 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed