கசப்பான, துயரமான சம்பவங்கள்.



கசப்பான, துயரமான சம்பவங்கள்.
வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
k,m.jawahir (jamali)
மீண்டும் மீண்டும் சில கசப்பான, துயரமான சம்பவங்களை நினைவு கூறுவது ஒருபுறம் பழைய ஞாபகத்தை கிளரி பகை மையை வளர்க்கும் என்று குறை கூறப்படலாம்.

ஆனால் மறுபுறத்தில் அவ்வாறான நினைவு கூறல் கள், அதிலும் குறிப்பாக சமூகம் சார்ந்த வன்முறைகள் இழப்புக் கள் என்பன பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புக்கு உட்படுத்தியவர்கள் என சம்பந்தப்பட்ட தரப்பி னர்களை அவ்வாறான சம்பவங் கள் எதிர்காலத்தில் இடம் பெறாமல் இருக்க வழிவகைகளை காண்பதற்கும் மீள் இணக்கத்துக்கான சமூக பெறுமதி களையும் சமூக கட்டுமானங்களையும் பலப்படுத்துவதற்கு அவசியமான ஒரு சந்தர்ப்பமாக இந்நினைவு கூறல் கள் அமைய வேண்டும்.

1990ம் ஆண்டு முஸ்லிம்களின் மீதான திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக் கையினை முன்னெடுக்கும் வகையில் புலிகள் மகிழக்கின் சகல பிரதேசங் களிலும் தமது மனித விரோத மிலேச்சத் தனமான வெறியாட்டங்களை கட்ட விழ்த்து விட்ட ஆண்டாக அமைந்தாலும் 1990ம் ஆண்டு ஆகஸ்து மாதம் அவ்வாறான முஸ்லிம் இன அழிப்பு நடவடிக் கைகளின் உச்சமாக இருந்தது.

காத்தான்குடி மீரானியா, ஹுசைனியா பள்ளிவாசல் படு கொலைகள் (03/08/1990) மேலும் ஏறாவூர் மிச் நகர், சதாம் ஹுஸைன் கிராமம், மீரா கேணீ, ஐயங்கேணீ தழுவிய எல்லைப் புற படுகொலைகள் (11/08/1990) என்று நூற்றுக் கணக்கான முஸ் லிம் ஆண்கள் பெண்கள் குழந் தைகள் கொல்லப்பட்டனர்.

காத்தான்குடியில் பள்ளிவா சல்களில் பெற்றோர்களுடனும் சகோதரர்களுட னும் இரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஆறு வயதுக் குழந்தை ஒன்று உட்பட 12வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12 பேரும் 13 தொடக்கம் 16 வயதி குற்பட்ட சிறார்கள்10 பேரும் அடங்குவர், அவ்வாறே எறாவூர் படுகொலை களில் தூக்கத்திலிருந்த குழந்தைகள் மட்டு மல்ல வயிற்றிலிருந்த சிசுவும் சிதைக்கப்பட்டது. ஏறாவூரில் கொல்லப்பட்ட குழந்தைகள் /சிறுவர்கள் தொகை சுமார் 31 ஆகும் இக்குழந்தை கொலைகள் புலிகளுக்கு வாடிக்கையானவை யாகும் .

# காத்தான்குடி படுகொலையை அடுத்து கொழும்பில் முஸ்லிம் காங்கி ரஸ் தலைவர் அஷ்ரப் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

# கொழும்பில் உள்ள அஷ்ர பின் இல்லத்தில் முஸ்லிம் காங் கிரஸ்; தமிழ் காங்கிரஸ்; ஈ.பீ ஆர்.எல்.எப்; கூட்டணி; புளொட்; ஈ. பீ. டீ. பீ; ரெலோ; ஈ.என்.டீ. எல்.எப். ஆகிய கட்சிகளின் தலை வர்களும் முக்கியஸ்தர்களும் கூடினார்கள்.

# அக்கூட்டத்தில் அஷ்ரப் அறி க்கை ஒன்றை சமர்ப்பித்தார். விடு தலை புலிகள் தான் காத்தான்குடி படுகொலைக்கு காரணம் என்பதை சுட்டிக்காட்டிய அந்த அறிக்கையில் புலிகள் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

# இக்கூட்டத்தில் குமார் பொன் னம்பலம் . மேதிலால் நேரு ஆகி யோர் குறிப்பிட்ட அறிக்கையுடன் தாம் முரண்படுவதாக கூறினார்.

# வடக்கு-கிழக்கில் இடம் பெறும் தமிழர் படுகொலைகள் தொடர்பாக அறிக்கையில் எது வும் இடம்பெறவில்லை அதனை குறிப்பிடாமல் இருப்பது சரி யல்ல என்று மோதிலால் நேரு குறிப்பிட்டார்.

# குமார் பொன்னம்பலம் ஒரு கேள்வியை எழுப்பினார். “மேற்படி கொலைகள் நடைபெற்ற பகுதி அரச படையினரின் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியாகும். அப்படியிருக்கும்போது விடு தலைப்புலிகள்தான் இதனைச் செய்தனர் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர் கள்” என்று கேட்டார்.

# கரிகாலன் நியூட்டன் ஆகிய புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் தாக்குத லின் போது காணப்பட் டுள்ளனர். மக்கள் கண்டுள்ளனர் என்று அஸ்ரப் கூறி னார்.

# ”இருட்டான நேரத்தில் அத்தனை தெளிவாக இனம் கண்டது எப்படி? என்று குறுக்காக கேள்வி தொடுத்தார். குமார் பொன்னம்பலம்.

# இக்கட்டத்தில் விவாதம் சூடு பிடித்தது. அந்த சூட்டைத் தணிக்க சிற்றுண்டி வகைகளும், குளிர்பானம், தேனீர் ஆகியனவும் பரிமாறப்பட்டன.

# காத்தான்குடி படுகொலையை சுவையான சிற்றுண்டிகளை ஒரு கை பார்த்தபடி கட்சிகளின் பிரதி நிதிகள் தொடர்ந்து விவாதித்தனர். காத்தன்குடி படுகொலையை யார் செய்தார்கள் என்று குறிப்பிடாமல் பொதுவான கண்டன மாக தெரிவித்தால் அதில் கை யொப்பமிடலாம் என்று கூறினர் தமிழ் காங்கிரஸ் பிரதிநிகள்.

# முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரபுக்கும் குமார் பொன்னம் பலம்,மோதிலால் நேரு ஆகி யோருக்கும் நல்லுறவு நிலவிய நேரம் அது.

# அதனால் அவர்களையும் அனு சரித்துக்கொண்டு செல்லவே அஷ்ரப் விரும்பினார். புலிகளையும் குறிப்பிடாமல் கண்டிக்க உடன்பட்டார். ஏனைய கட்சிகளும் ஒரு விதமாக சம்மதித்தன. ஈ.பீ.டீ.பீ. மட்டும் உறுதியாக மறுத்து விட்டது. யார் காரணம் என்பதை கூறாமல் கண்டிப்பதை விட கண்டிக்காமல் இருக்கலாம் என்று கூறியது ஈ.பீ.டீ.பீ.

# இக் கூட்டத்தில் கூட்டணிப் பிரதிநிதிகள் நைசாக நழுவினர்.

# புலிகளை நேரடியாகக் குற்றம் சாட்டினால் கையொப்பம் போட அவர்களும் தயாராக இருக்க வில்லை. விவாதம் சூடாக நடந்த சமயத்தில் “அறிக்கையை அனுப்புங்கள் ஏற்புடையதாக இருந்தால் கையொப்பம் போடுகி றோம்” என்று கூறிவிட்டு நழுவிவிட்டனர்.

# இந்நிலையில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையிலேயே கூட்டம் கலைந்தது.

# அரசும், அதன் ஆதரவுடன் இயங்கும் தமிழ் குழுக்களும் காத்தான்குடி படுகொலையில் புலிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

# இலண்டன் பீ.பீ.சீ வானொலி காத்தான்குடி படுகொலைகளை மறை முகமாக நியாயப்படுத்தியது. ஸ்ரீ லங்கா தகவல் தொடர்பு சாதனங்கள் தமிழ் மக்களின் படுகொலைகளை மூடி மறைத்தும் முஸ்லிம் மக்களின் படு கொலைகளை பகிரங்கப்படுத்தி வருவ தாக பீ.பீ.சீ கூறியது.

உடனடி புனருத்தாரண மனி தாபிமான தேவைகளுக்கான துணைக்குழு (Sub Committee On Immediate Humanitarian and Rehabilitation) சார்பில் வன்னி சென்று சில சிரேஷ்ட முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தமிழ் செல்வ னுடன் பேச்சு வார்த்தைகள் நடத் தினர்.

அப்போது தமிழ் செல்வன் தன்னை சந்தித்த அந்த முஸ்லிம் பிரதிநிதிகளிடம் 1990ஆகஸ்டில் நடைபெற்ற, குறிப்பாக காத் தான்குடி படுகொலைகள் தங்க ளுக்கும் கிழக்கு மாகாணத்து உறுப்பினர்களுக்கும் இடையி லான தொடர்பு கள் துண்டிக்கப் பட்டிருந்த நிலயில் இடம்பெற்ற தாகவும் அதனால் அச்சம் பவங்கள் துரதிஷ்டவசமாக நடைபெற்றுவிட்டதாகவும் அதற்காக , வருத்தப் படுவதாகவும் அப்பிரத்தி யோக சந்திப்பில் குறிப்பிட்டார்.

நன்றி: மீள்பார்வை.




Share your views...

0 Respones to "கசப்பான, துயரமான சம்பவங்கள்."

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed