ஷாபிஃ மத்ஹப் ஓர் ஆய்வு.
தூய நபி வழி இருக்க! தீய நரக வழி எதற்கு?
ஜவாஹிர் ஜமாலி - வவுனியா.  தொடர் - 01.

சர்வ புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கின்ற நாங்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழிப்படியே நடக்க வேண்டும். அது அல்லாது சன்மார்க்க  தூய வழி இருக்க ஸஹாபாக்கள், இமாம்கள், பெரியார்கள், நாதாக்கள், மூதாக்கள் நல்லடியார்கள் என்று சொல்லி இஸ்லாத்தை இலுக்காக்கும் செயற்பாட்டில் ஈடுபடாமல் தவிர்ந்து இஸ்லாம் காட்டும் தூய வழியில் செல்லுவதற்காகத்தான் இக்கட்டுரையை எழுத என் பேனா முனைகின்றது.

இன்று நம்மில் சிலர் ஸஹாபாக்களைப் பின்பற்றுகிறோம், இமாம்களைப் பின்பற்றுகிறோம். என்று சொல்லிக் கொன்டு விதன்டா வாதம் பேசிக் கொன்டு அலைவதைப் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக இலங்கையில் அதிகமாக இருக்கின்ற மத்ரஸாக்களைக் குறிப்பிடலாம். அதில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களில் மத்ஹபு பாடங்கள். அப்பாடங்கள் இல்லாத மத்ரஸாக்களே கிடையாது. இம்மத்ரஸாக்களில் 'ஸூன்னத் வல் ஜமாஅத், தப்லீஃ, தரீக்கா, ஸலபிய்யா” போன்ற மத்ரஸாக்ளும் தவ்ஹீத் போர்வையில் இயங்கும் மத்ரஸாக்களும் அடங்கும்.

இவை அனைத்திலும் இமாம் ஷாபிஃ அவர்களின் பெயரைப் பயன் படுத்தி அவருக்கு சம்மந்தம் இல்லாத மத்ஹபு சட்டத்தையெல்லாம் புனைந்து இந்த நூலை எழுதியவர் இமாம் ஷாபிஃ என்று அவரின் பெயரைப் பயன்படுத்தி பிளைப்பு நடாத்தும் சமுதாயத்தைப் பார்க்கலாம்.

குறிப்பாக : மத்ரஸாப் பாடத்திட்டங்கள் 08 வருடம் (தவ்ரதுல் ஹதீஸுடன்) அல்லது 07,06,05 - போன்ற வருடங்களைக் கொண்டதாகவும் அமைந்திருக்கின்றது. இன்னும் ஆலிம் பட்டம் சூட்டப்பட்ட பிறகு 'இப்தா” பத்வாக் கலை கற்பிக்கப்படுகின்றது. சிலர் பாகிஸ்தான், இந்தியா தேவ்பன்த். போன்ற நாடுகளுக்குச் சென்று இக்கலையைக் கற்று வருகின்றனர். இன்னும் இலங்கையிலும் 'பானந்துரை” தீனிய்யா மத்ரஸாவிலும். இக்கலை 03 வருடங்கள் வரையருக்கப்பட்டதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கலையைக் கற்றவர்கள் 'முப்திகள்” இவர்கள்தான் (பத்வா) மார்க்க விளக்கம் சொல்ல வேண்டும். இக்கலையைக் கற்றுக்கொள்ளாதவர்கள் 'முப்திகள்” அல்ல 'முப்ஸிதுகள்” குழப்பவாதிகள். என்று மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுவதையும், பரத்தப் படுவதையும் கானலாம்.

இன்னும் இலங்கையில் இற்றைவரைக்கும் கிட்டத்தட்ட 80 முப்திகளுக்கு மேலாக இக்கலையைக் கற்றவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் ஒரு முப்தி ஸாஹிப் கூட குர்ஆனையும், ஆதாரபுர்வமான ஹதீஸையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லுகின்றாரா என்று பார்த்தால் கிடையாது. ஆனால் அனைவரும் சுய கௌரவத்தையும் மக்கள் புகழ்ச்சியையும் மக்கள் ஆதரவையும் பார்க்கின்றார்களே தவிர அல்லாஹ், ரஸூல் சொன்னதைப் பார்ப்பதோ, மார்க்கத்தை தெளிவாகச் சொல்வதோ கிடையாது.
 
ஆனால் இக்கலையில் உள்ள விபரீதங்கள், அசிங்கியங்கள், ஆபாசங்கள். நபி வழியையும் இறைவழியையும் மட்டம் தட்டும் மத்ஹபு குப்பைச் சட்டங்கள் போன்றவற்றை இன்ஷா அல்லாஹ் இக்கட்டுரையின் முடிவில் தெளிவாகவும், விரிவாகவும் விளக்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் ஸூன்னத் வல் ஜமாஅத் போர்வையில் நடாத்தப்படும். மத்ஹப் சட்டங்களை பாடமாகக் கற்பிக்கப்படும் மத்ரஸாக்களில் முதலாம் வகுப்பு முதல் இறுதியாக ஆலிம் பட்டம் கொடுக்கப்படும் வரை நடாத்தப்படும் ஷாபிஃ மத்ஹப் சட்டங்களை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால். ஷாபிஃ மத்ஹபு சட்டத்திற்கும் இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களுக்கும் மார்க்க ரீதியான தொடர்புகள் இருந்ததா இல்லையா?  என்ற செய்திகளைப் பார்ப்போம். இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்கள் தனது கைப்பட பல நூற்களை எழுதினாலும் அதில் முக்கியமான நூல் என்று சொன்னால் 'கிதாபுல் உம்மு” என்ற நூலைக் குறிப்பிடலாம்.

அந்த நூற்களில் பல விடயங்களும், சட்டதிட்டங்களும் குர்ஆன் ஸுன்னாவுக்கு உடன் பட்டு இருந்தாலும் சில சட்டதிட்டங்கள் குர்ஆன் ஸூன்னாவுடன் முறன்பட்டு இருப்பதனையும் நாம் கானலாம் இதனுடைய விளக்கத்தையும் பின்னர் தெளிவாக விபரிப்போம்.
ஸூன்னத் வல் ஜமாஅத் மத்ரஸாக்களில் கற்பிக்கப்படும் ஷாபிஃ மத்ஹபு நூற்கள்.

(متن سفينة النجا)  1.   ஸபீனதுன் நஜா.
(رياض البدية)   2.  றியாளுல் பதிய்யா.
(فتح القريب)   3.  பத்ஹூல் கரீப்.
(عمدة السالك وعدة النسك)    4.  உம்ததுஸ் ஸாலிகி வ உத்ததுன் நாஸிகி.
(اعانة الطالبين)    5.  இஆனதுத் தாலிபீன். (பத்ஹூல் முயீன்)
(حاشيتا قليوبي وعميرة)    6.  கிதாபுல் மஹல்லி (ஹாஷியதா கல்யு+பி  வ உமைரா)

இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்கள் எழுதிய நூற்களை ஆய்வுக்கு கொன்டுவருவதற்கு முன்னால் அவரின் பிறப்பு, வழர்ப்பு, வாழ்க்கைச் சரித்திரங்கள், போன்றவற்றை வரலாற்று ரீதியாகப் பார்ப்போம். இந்த வரலாற்றை இங்கு குறிப்பிடுவதால் நாங்கள் ஷாபிஃ மத்ஹபைச் சார்ந்தவர்களோ அல்லது அம்மத்ஹபைப் பின்பற்றுபவர்களோ என்று தப்பாக கருதி விடவேண்டாம். ஏனெனில் பல வருடங்கள் இக்கலையைக் கற்று இதனுடைய தவருகளை வாழ்வின் பல படித்தரத்திலும் வைத்து ஆய்வு செய்த பிறகே எழுத்து வடிவில் கொன்டு வந்துள்ளோம்.

இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்.
     இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அல் இமாமுல் முத்தலிபி முஹம்மத் இப்னு இத்ரீஸுஷ் ஷாபிஈ (ரஹ்). இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி - 150 - மீலாதி - 766. ஆம் வருடத்தில் 'உஷ்ஷா” என்கிற ஊரில் பிறந்தார்கள். உஷ்ஷா என்பது மிஸ்ருக்கும் ஷாம் தேசத்திற்குமிடையில் உள்ள பாலஸ்தீன் என்னும் பெருநகரைச் சார்ந்த பகுதியாகும்.
  
      அவரின் சிறு பிராயத்தின் சுருக்கமான செய்தி. அவர்உஷ்ஷாவில் பிறந்து பாலப் பருவத்தில் அவரின் தகப்பனார் இறந்து விட்டார்கள். இரண்டு வயதான போது தனது தாயார் அவரைப் பார்த்து மகனேஉனது குடும்பத்தார் வசிக்கும் மக்கா நகருக்கு போய்ச் சேர்ந்து அறிவைப் படித்துக் கொள்ளுங்கள் எனக்கூறி மக்காவிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அவர் அங்கு ஓதுவதற்காக மத்ரஸாவில் சேர்ந்து மார்க்கக் கல்வியைப் படித்தார்கள்.

 மேலும் அவர் மிகவும் ஏழ்மையில் வறுமையில் இருந்தார்கள். கற்கும் பொழுதிலிருந்தே பிக்ஹ் களையில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவராக இருந்தார்கள். இன்னும் மதீனா, யெமன், பஃதாத், மிஸ்ர். போன்ற நாடுகளுக்கு சென்றும் தனது மார்க்க கல்வியை கற்றுள்ளார்கள். அவரிடம் இருந்து மார்க்கக் கல்வியைக்கற்றவர்கள் பலரும் இருக்கின்றனர். இதனை விரிவு படுத்தப் போனால் இவ் ஆய்வு இடம் கொடுக்காமல் போய்விடலாம். அதனால் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன்.

இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களின் மரணம்.
ஹிஜ்ரி - 204. மீலாதி - 820. ஆம் ஆண்டு மிஸ்ரில் காஹிரா என்ற பகுதியில் இறையடிசேர்ந்தார்கள் (இன்னா லிள்ளாஹ்) கிட்டத்தட்ட 54 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்துள்ளார்கள். இவறின் கொள்கைக் கோட்பாடுகள் கல்வி கற்ற துறைகள் அனைத்தையும் கீழே இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களின் வாழ்க்கை சரித்திரத்திர தொகுப்பின் அருபு மூலப் பிரதியையும் இனைத்துள்ளோம்.

 محمد بن إدريس الشافعي
 الاسم بالكامل -  محمد بن إدريس الشافعيّ القرشي
الحقبة -  150   هـ 
  80,  - 204  هـ 
المولد - 150  هـ 

இமாம் ஷாபிஃ அவர்கள் எழுதியவைகள். 
'கிதாபுல் உம்மு, அர்ரிஸாலா, இஹ்திலாபுல் ஹதீஸ், முஸ்னதுஷ் ஷாபியிஃ, கிதாபு அஹ்காமில் குர்ஆன், கிதாபு அன்நாசிஹ் வல் மன்ஸூஹ், கிதாபுல் கிஸாமா, கிதாபுல் ஜிஸிய்யா, கிதாபு கிதாலி அஹ்லில் பகிய்யி, கிதாபு ஸபீலுன் நஜாத், தீவானுஷ் ஷாபியிஃ.
.
   நபிவழிக்கு மாற்றமாக என்னையோ என் நூலையோ பின்பற்றாதீh;கள்!
عَنْ الشَّافِعِيِّ رَحِمَهُ اللَّهُ أَنَّهُ قَالَ إذَا وَجَدْتُمْ فِي كِتَابِي خِلَافَ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُولُوا بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ 
وَسَلَّمَ وَدَعُوا قَوْلِي: وَرُوِيَ عَنْهُ إذَا صَحَّ الْحَدِيثُ خِلَافَ قَوْلِي فَاعْمَلُوا بِالْحَدِيثِ وَاتْرُكُوا قَوْلِي - المجموع شرح المهذب  63 - 01

“நபி (ஸல்) அவா்களிடமிருந்து ஒரு நபிவழியை நீங்கள் பெற்று, அது எனது சொல்லுக்கு மாற்றமாக இருந்தால் நபிவழியையே பின்பற்றுங்கள். எனது சொல்லை விட்டு விடுங்கள்.” என்று இமாம் ஷாபீஃ அவா்கள் கூறினார்கள்.
நூல்: அல் மஜ்மூஃ ஷெரஹ் அல் முஹத்தப், பாகம்: 01. பக்கம்: 63, மனாகிபுஷ் ஷாபீஃ - இமாம் பைஹகீ, பாகம்: 1, பக்கம்: 472, தாரிக் இப்னு அஸாகீர், பாகம்: 51, பக்கம்: 389, தாரிக் ஸியரு அஃலாமுந்  நுபலா, பாகம்: 10, பக்கம்: 77.

“எனது புத்தகத்தில் நபி வழிக்கு மாற்றமானதை நீங்கள் பெற்றுக் கொண்டால் நபிவழியையே பின்பற்றுங்கள்! எனது சொல்லை விட்டு விடுங்கள்” என்று இமாம் ஷாபீஃ அவா்கள் கூறினார்கள்.
நூல்: முக்தஸா; அல் முஅம்மல், பக்கம்: 128, அல் மத்கல் - இமாம் பைஹகீ, பாகம்: 1, பக்கம்: 224, தாரிக் இப்னு அஸாகீர், பாகம்: 51, பக்கம்: 386.

இந்த மத்ஹபின் தலைவராகப் போற்றப்படுபவா்கள் இவா்கள் கூறுவதைப் போல் மத்ஹபில் உள்ள சட்டத்தின் படிதான்  நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்களா? அல்லது திருக்குர்ஆன் மற்றும் நபிவழியின் படி நடக்க கட்டளையிட்டுள்ளார்களா? என்பதை இந்தக் கட்டுரையில் மிகத்தெளிவாக எடுத்துரைப்போம். இதில் இமாம் ஷாபீஃ அவா்களின் கூற்றை ஆதாரத்துடன் கூறியுள்ளோம். ஷாபீஃ மத்ஹபைப் பின்பற்றி நடப்பவா்கள் உண்மையாளர்களாக இருந்தால் இமாம் ஷாபீஃ அவா்களின் கூற்றை மதித்து நடப்பார்களா?

உலமாக்கலே, பொது மக்களே. ஷாபிஃ இமாம் சொன்னதைப் பாருங்கள்.         மத்ஹப் நூல்களில் தவறுகள் இருப்பது உறுதி.

فإنه حينئذٍ يكون مذهباً للشافعي؛ عملاً بقوله : إذا صح الحديث، فهو مذهبي -    نهاية المطلب في دراية المذهب - 165
'எனது கருத்து (ஸஹீஹானதாக) ஹதீஸாக இருந்தால் அதுதான் எனது வழிமுறை.           நூல்: நிஹாயதுல் மத்லபி பீ திராயதில் மத்ஹபி. பாகம் - 165.
  
وَقَدْ قَالَ الشَّافِعِيُّ إذَا صَحَّ الْحَدِيثُ فَاضْرِبُوا بِمَذْهَبِي عَرْضَ الْحَائِط - اسنى المطالب في شرح روض الطالب - 363 - 02
'எனது கருத்துக்கள் ஸஹீகான (ஆதாரபு+ர;வமானதாக) இருப்பவைகளே. அதற்கு மாற்றமான மத்ஹபு சட்டங்களை. சுவரிற்குப் பின்னால் தூக்கி எரிந்து விடுங்கள். நூல்: அஸ்னல் மதாலிபி பீ ஷெரஹி ரவ்ழித் தாலிபி. பாகம்: 02. பக்கம்: 363.

ஸூன்னத் வல் ஜமாஅத் மத்ரஸாவின் முதலாம் வகுப்பு. பிக்ஹ் நூல்.
'ஸபீனதுன் நஜா” 'ஸபீனதுஸ் ஸலாஹ்”

பொருள்: வெற்றியின் கப்பல். அஷ் ஷைக் ஸாலிம் ஹழ்ரமி (ரஹ்) அவர்களால் அறபு மொழியில் கோர்வை செய்யப்பட்ட 'ஸபீனதுன் நஜா” என்ற சிறு நூலை 'சன்மார்க்கச் சட்டங்கள்” என்று மௌலவி. இஹ்ஸான் (ரஷாதி) அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால் இந்த நூலிற்கும் இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரின் பெயரைப் பயன் படுத்தி முன்னேற்றம் அடையப் பார்க்கின்றார்களே தவிர வேரெதுவும் கிடையாது.

முதலாவதாக. ஸபீனதுன் நஜாவில். இஸ்லாத்தின் கடமைகள், ஈமானின் கடமைகள், என்று தொடராக வருகின்றது. அதற்கு அடுத்த படியாக. வுழுவின் கட்டாயக் கடமைகள் என்ற பாடத்தை ஆரம்பம் செய்கின்றார். அதில் நிய்யத் வைத்தல், முகம் கழுவுதல், முழங்கை உற்பட இரு கைகளையும் கழுவுதல், தலையின் ஒரு பகுதியை நீர் கொண்டு தடவுதல். என்று எதுகிறார். இங்குதான் குழப்பம் ஏற்படுகின்றது.

தலையின் ஒரு பகுதியை மஸ்ஹூ செய்ய வேண்டும் என்று ஷாபிஃ இமாம் சொன்னார்களா என்று பார்த்தால் சில இடங்களில் கூறியிருந்தாலும்கூட மிகச் சிறந்த முறை என்று அவர் எழுதுவது இதுதான்.

وَالِاخْتِيَارُ لَهُ أَنْ يَأْخُذَ الْمَاءَ بِيَدَيْهِ فَيَمْسَحَ بِهِمَا رَأْسَهُ مَعًا يُقْبِلُ بِهِمَا وَيُدْبِرُ يَبْدَأُ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ يَذْهَبَ بِهِمَا إلَى قَفَاهُ ثُمَّ يَرُدَّهُمَا حَتَّى يَرْجِعَ إلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ  وَهَكَذَا رُوِيَ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم   - الام للشا فعي -01 -41-

'வுழுச் செய்வதில் மிகச் சிறந்த முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையும் இதுதான். தன்னீரை எடுத்து தமது ஈரக் கையினால் தடவி (மஸ்ஹூ) செய்தார்கள். தலையின் முன் பகுதியில் இருந்து ஆரம்பித்து பிடரி வரைக்கும் கையை கொன்டு சென்றார்கள், பிறகு எந்த இடத்திலிருந்து மஸ்ஹ் செய்ய ஆரம்பித்தார்களோ அவ்விடத்திற்கே மீட்டிக் கொன்டு வந்தார்கள். (அதாவது. தமது இரு கைகளையும் முன்னிருந்து பின்பாக, பின்னிருந்து முன்னாகக் கொன்டு வந்தார்கள்).         ஆதாரம்: அல் உம்மு. பக்கம் - 01. பாகம் - 41.

قَالَ الشَّافِعِيُّ : فَيَمْسَحُ جَمِيعَ رَأْسِهِ وَصُدْغَيْهِ - الحاوي الكبير - 117-01
'இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர;கள் கூறுகின்றார;கள். பு+ர்த்தியாக தலையையும், காதுச் சோனைகளையும் மஸ்ஹூ செய்ய வேண்டும்.                                      ஆதாரம்: அல்ஹாவியல் கபீர். பாகம் - 01. பக்கம் - 117.

192 - شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ، سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ لَهُمْ، فَكَفَأَ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، بِثَلاَثِ غَرَفَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ يَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ، 
فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ بِهِمَا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَغَسَلَ رِجْلَيْهِ» وحَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: مَسَحَ رَأْسَهُ مَرَّة - بخاري

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் வுழுச் செய்தார்கள். அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் வுழுவைப் பற்றிக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, அவர்களுக்கு வழுச் செய்துகாட்டினார்கள்.

(ஆரம்பமாக குவளையிலிருந்த தண்ணீரைத்) தம்மிரு கையில் ஊற்றி முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது கையைக் குவளைக்குள் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி மூன்று முறை வாய் கொப்பளித்து (மூக்கிற்குள் நீர் செலுத்தி சுத்தப்படுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைக் குவளையில் நுழைத்து (தண்ணீர் அள்ளி) இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பிறகு அக்குவளைக்குள் தமது கையை நுழைத்து (ஈரக்கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள். அதாவது தமது இரு கைகளையும் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டு வந்தார்கள். பிறகு அந்தக் குவளைக்குள் தமது கையை நுழைத்து (தண்ணீர் அள்ளி) தமது இரு கால்களையும்  கழுவினார்கள்.

உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ”அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது தலையை (ஒரே) ஒரு தடவை மட்டுமே (ஈரக்கையால்) தடவினார்கள்' என்று இடம்பெற்றுள்ளது.                                 ஆதாரம்: புஹாரி - 192.

எனவே நபி (ஸல்) அவர்களின் வுழுச் செய்த முறையும் இமாம் ஷாபிஃ (ரஹ்) அவர்கள் சொன்ன முறைப்படியே இருக்கின்றது. ஷாபிஃ மத்ஹபை பின்பற்றுபவர்கள் கவனத்திற்கு! நீங்கள் உண்மையில் ஷாபிஃ மத்ஹபைத்தான் பின்பற்றுபவர்களாக இருந்தால் இம்முறைப்படியே இனி வருங்காலங்களில் வுழுச் செய்து நபி வழியையும் சுன்னாவையும் நிலைநாட்டுவீர்கள் என்று நினைக்கின்றோம். எனவே ஷாபிஃ இமாம் இக்கருத்தைச் சொல்லாமல் சுன்னாவிற்கு மாற்றமாகச் சொல்லி இருந்தால் அக்கருத்தையும் தூக்கி வீசிடுவோம்.

இருதியாக. தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் வுழு சரியாக இருக்க வேண்டும் வுழு இல்லையென்றால் தொழுகை கிடையாது என்பது நபி மொழி எனவே நாம் செய்கின்ற வுழுவை நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறைப்படியே செய்ய வேண்டும். அதற்கு மாற்றமான முறையில் வுழுச் செய்தால் அவ்வுழு ஏற்புடையதாக இருக்காது. வுழு சரியின்றி இருந்தால் தொழுகை ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது. எனவே மத்ஹபு வளியில் வுழுச் செய்து நன்மையையும் இலந்து நரகம் சென்று விடாமல்! நபி வழியில் வுழுவையும் தழுயையையும் நிழைநாட்டி சுவனம் செல்ல முயற்சிப்போமாக.
நிய்யத்து மையத்தா? என்ற தலைப்பின் ஆய்வுடன் மறு இதழில் வளரும். (இன்ஷா அல்லாஹ்)  


Read More Add your Comment 0 comments


பெண்களுக்கு கத்னா செய்வது பாவமா? பாக்கியமா???




பெண்களுக்கு கத்னா செய்யலாமா?

வன்னியின் அழைப்பாளன்.
k,m.jawahir jamali.


எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. சாந்தியும் சமாதானமும் சன்மார்க்கப் போதகர் நபி (ஸல்) அவர;கள் மீது உன்டாவதாக.
ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை. இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறையை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

ஆனால் சிலர் அறிவின்மையினால் பெண்களுக்கும் கத்னாவை செய்துவிடுகிறார்கள். பெண்களின் பிறப்புறுப்பில் உணர்வுகளின் முடிச்சு என்று கூறப்படும் பகுதியை வெட்டி எடுப்பதை பெண்களின் கத்னா என்கின்றனர். அதாவது பெண்களின் இல்லற இன்பத்தை குறைப்பதற்காக அவர்களின் பாலுறுப்பில் இன்பத்தை உணரும் பகுதியின் முனையை வெட்டிவிடுவார்கள். இறைவன் அளித்த பாக்கியமான இல்லற இன்பத்தை முழுமையாக பெண்கள் அடையமுடியாத துர்பாக்கியமான நிலை ஏற்படுகிறது. இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகிறது. ஆவை அனைத்தினுடைய அறிவிப்பாளர;களும் (ழயீப்) பலவீனமானவர்களாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இஸ்லாத்திற்கு அவப்பெயரை பெற்றுத் தரும் இந்த அவச்செயலை முஸ்லிம்கள் கட்டாயம் தவிர்ந்துகொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு கத்னா செய்வது போல் பெண்களுக்கு கத்னா செய்ய இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா?
ஷாபிஃ இமாம் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கத்னா கடமை என்கின்றனர். அபூஹனீஃபா இமாம், மாலிக் இமாம் ஆகியோர் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது சுன்னத் என்று கூறுவதாக நவவி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்று கூறினாலும் அது சம்மந்தமாக வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதாக இல்லை.

உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்தார். அவரிடம் ஒட்ட நறுக்கி விடாதே! மேலோட்டமாக நறுக்குவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அபூதாவூதில் ஒரு ஹதீஸ் உள்ளது.

حدثنا سليمان بن عبد الرحمن الدمشقي وعبد الوهاب بن عبد الرحيم الأشجعي قالا حدثنا مروان حدثنا محمد بن حسان قال عبد الوهاب الكوفي عن عبد الملك بن عمير عن أم عطية الأنصارية أ امرأة كانت تختن بالمدينة فقال لها النبي صلى الله عليه وسلم لا تنهكي فإن ذلك أحظى للمرأة وأحب إلى البعل قال أبو داود روي عن عبيد الله ب عمرو عن عبد الملك بمعناه وإسناده قال أبو داود ليس هو بالقوي وقد روي مرسلا قال أبو داود ومحمد بن حسان مجهول وهذا الحديث ضعيف(அபூதாவூத் - 4587)

இதில் இடம் பெறும் முஹம்மது இப்னு ஹஸ்ஸான் என்பவர் யாரென்று தெரியாதவர். இப்னு அதீ, பைஹகீ, அபூதாவூது ஆகியோர் இதனை உறுதிப்படுத்துகின்றனா;. இதே ஹதீஸ் பைஹகீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

17338 - وأخبرنا أبو علي الروذباري أنبأ أبو بكر بن داسه ثنا أبو داود ثنا سليمان بن عبد الرحمن وعبد الوهاب بن عبد الرحيم الأشجعي قالا ثنا مروان ثنا محمد بن حسان قال عبد الوهاب الكوفي عن عبد الملك بن عمير عن أم عطية الأنصارية : أن امرأة كانت تختن بالمدينة فقال لها النبي صلى الله عليه و سلم لا تنهكي فإن ذلك أحظى للمرأة وأحب إلى البعل قال أبو داود محمد بن حسان مجهول وهذا الحديث ضعيف ( سنن البيهقي الكبرى
ஜ8 ஃ324)


(இதுவும் முஹம்மத் பின் ஹஸ்ஸான் என்பவர் வழியாக அறிவிக்கப்படுவதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும். இந்த ஹதீஸ் ஹாகிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

6236 - ما حدثناه أحمد بن سلمان الفقيه ببغداد ثنا هلال بن العلاء الرقي ثنا أبي ثنا عبيد الله بن عمرو عن زيد بن أبي أنيسة عن عبد الملك بن عمير عن الضحاك بن قيس قال : كانت بالمدينة امرأة تخفض النساء يقال لها : أم عطية فقال : لها رسول الله صلى الله عليه و سلم اخفضي و لا تنهكي فإنه أنضر للوجه و أحظى عند الزوج تعليق الذهبي قي التلخيص : سكت عنه الذهبي في التلخيص المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص ஜ5 ஃ264ஸ

இதன் அறிவிப்பாளரான அலா என்பவர் இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர். எனவே இதுவும் பலவீனமான ஹதீஸ் தான். இந்தக் கருத்தில் பஸ்ஸார், அபூநயிம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

رواه البزار وفيه مندل بن علي وهو ضعيف وقد وثق وبقية رجاله ثقات - مجمع الزوائد
ஜ5 ஃ310)

இந்த ஹதீஸில் முன்தில் இப்னு அலி என்பார் இடம் பெறுகிறார். அவர் பலவீனமானவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும். கத்னா ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும் என்ற ஹதீஸ் அஹ்மத் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

حَدَّثَنَا سُرَيْجٌ، حَدَّثَنَا عَبَّادٌ يَعْنِي ابْنَ الْعَوَّامِ، عَنِ الْحَجَّاجِ، عَنْ أَبِي الْمَلِيحِ بْنِ أُسَامَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
اَلْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ، مَكْرُمَةٌ لِلنِّسَاءِ (مسند أحمد -
20719)


இதன் அறிவிப்பாளர் ஹஜ்ஜாஜ் என்பார் பலவீனமானவர். தனது ஆசிரியரை விட்டு விட்டு ஆசிரியரின் ஆசிரியர் பெயரைப் பயன்படுத்தக் கூடியவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

பைஹகீயிலும் இது இடம் பெற்றுள்ளது. இது இப்னு அப்பாஸின் சொந்தக் கூற்று என்பதே சரியான முடிவு என்று அவரே கூறுகிறார்.

عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ இ مَكْرُمَةٌ لِلنِّسَاءِ ” هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ இ وَالْمَحْفُوظُ مَوْقُوفٌ (السنن الكبرى للبيهقي - 17565)

இந்தக் கருத்தில் வருகின்ற எந்த ஒரு ஹதீஸும் விமர்சனத்துக்கு உட்படாமல் இல்லை. அதனால் பெண்கள் கத்னா செய்வது இஸ்லாமிய வழி அல்ல என்பதை உணரலாம். மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வை இறைவன் வழங்கியுள்ளான். அந்த உணர்வைக் கொண்டே உலகம் நிலை பெற்றுள்ளது. அவர்கள் உடலுறவின் மூலம் அந்த இச்சையைத் தணித்துக் கொள்கின்றனர;.

பெண்களுக்கு கத்னா செய்வதால் அவர்கள் அந்த பாக்கியத்தை இழந்து விடுகின்றனர். இல்லறத்தில் அவர்கள் பூரண திருப்தியை அடைவதில்லை. அடைய முடியாது. ஆண்களுக்கு கத்னா செய்வது அவா;களின் அந்த உணர்வுக்குத் தடையாக இராது. அதற்கு உறுதுணையாக இருக்கும் . இதற்கு மேல் விளக்கமாக இதை எழுதஇயலாது. இறைவன் எந்த நோக்கத்திற்காக பிறப்புறுப்புக்களை அமைந்துள்ளானோ அந்த நோக்கத்தில் பெரும்பகுதி பெண்களுக்கு கத்னா செய்வதால் அடிபட்டுப் போகின்றது. இறைவன் வழங்கிய பாக்கியத்தை அழித்துக் கொள்வது என்ற அடிப்படையில் பாக்கும் போது பெண்களுக்கு கத்னா செய்வது கொடூரமானது என்று அறியலாம். ஆனால் கத்னா செய்யப்பட்ட இரண்டு உறுப்புக்கள் சந்தித்தால் குளிப்புக் கடமையாகும் என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டும்.

நீங்கள் குறிப்பிடும் செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
عَنْ أَبِي مُوسَى قَالَ اخْتَلَفَ فِي ذَلِكَ رَهْطٌ مِنْ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ فَقَالَ الْأَنْصَارِيُّونَ لَا يَجِبُ الْغُسْلُ إِلَّا مِنْ الدَّفْقِ أَوْ مِنْ الْمَاءِ وَقَالَ الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ قَالَ قَالَ أَبُو مُوسَى فَأَنَا أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى عَائِشَةَ فَأُذِنَ لِي فَقُلْتُ لَهَا يَا أُمَّاهْ أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَيْءٍ وَإِنِّي أَسْتَحْيِيكِ فَقَالَتْ لَا تَسْتَحْيِي أَنْ تَسْأَلَنِي عَمَّا كُنْتَ سَائِلًا عَنْهُ أُمَّكَ الَّتِي وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُ( رواه مسلم - 579)

ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து கத்னா செய்யப்பட்ட இரு உறுப்புக்கள் சந்தித்து விட்டாலே (இருவர் மீதும்) குளிப்பு கடமையாகிவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி). நூல் : முஸ்லிம் (579)

இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆணுறுப்பையும் பெண்ணுறுப்பையும் கிதான் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். இந்த வார்த்தைக்கு கத்னா செய்யப்பட்ட உறுப்பு என்று பொருள் இருக்கின்றது. இதே வார்த்தையைக் கொண்டு பெண்ணுறுப்பைப் பற்றி கிதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதால் ஆண்களுக்கு கத்னா செய்வதைப் போன்று பெண்களுக்கும் கத்னா செய்யும் நடைமுறை அன்றைய காலத்தில் இருந்துள்ளது என்ற வாதத்தைச் சிலர் வைக்கின்றனர்.

இரண்டு பொருள்களை ஒரு பொருளின் பெய்ரால் குறிப்பிடுவது அரபுகளிடம் சர்வசாதாரணமான நடைமுறையாகும். இரண்டு பொருட்கள் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தால் அல்லது ஒன்றையொன்று ஒத்திருந்தால் அவற்றில் ஒன்றின் பெயரை மற்றதற்கும் சொல்லும் வழக்கம் அரபுமொழியில் தக்லீப் எனப்படுகிறது. பின்வரும் செய்திகளைக் கவனித்தால் இதைத் தெளிவாக அறியலாம்.


Read More Add your Comment 0 comments




ஏப்ரல் பூல் ? முட்டாள்கள் தினம்.
இஸ்லாத்தில் ஏற்புடையதா??
வன்னியின் அழைப்பாளன். k.m. ஜவாஹீர் (ஜமாலி)


னித குலத்தின் ஈருல வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திரு மறைக் குர் ஆன் ஜாஹியாக்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை ஏற்படுத்திய மாற்றங்களையும் சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்று விடும்.

நாங்கள் வாழுகின்ற சமகால, தேசிய, சர்வதேச சமூக அமைப்புக்கள். இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான ஜாஹிலிய்யத்தின் அடிப்படை அடித்தலத்தில் அமைந்திருப்பதை அவதானிக்கின்றோம்.
அறிவும், ஆராய்ச்சியும் அமோகமாய் முன்னேறிய இன்றைய கால கட்டத்தில் மனிதர்களில் ஒரு சாரார் மௌட்டீகத்திற்கும், பிற்போக்கு சிந்தனைகளுக்கும் கூஜா தூக்குகின்ற அவல நிலையை இன்று கண்கூடாகக் கான்கிறோம். கற்காலத்திலிருந்து பொற்காலத்திற்குத் தாவிய மனிதன் மீண்டும் கற்காலத்திற்கே செல்கிறானோ என அவதானிகள் சிந்திக்குமளவிற்கு மனித குலம் இன்று பாழ்பட்டுப் போயுள்ளது.

கொள்கையற்ற மனிதர்களை கவனிப்பாரற்று விட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட உயர்ந்த மார்க்கமாகிய இஸ்லாமியக் கொள்கையில் வாழுகின்றோம். எனக்கூறும் முஸ்லிம்களின் நிலையோ மேற்கத்தயக் கலாசாரத்தை விட ஒரு படி முன்னேறிக் காணப்படுகின்றமை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.

நவீன நாகரீகம் என்ற பெயரில் இறைஞர் யுவதிகளிடத்தில் கட்டுப்பாடற்ற உறவைத் தோற்றுவிக்கும் அபாயமும், ஆடைக்குறைப்பும், ஒழுக்கச் சீர் கேடுகளும் இன்று பரந்து காணப்படுகின்றது. முஸ்லீம்களைப் பாதுகாக்க வேண்டுமெனின் இன்றைய முஸ்லீம் பாடசாலைகள் இஸ்லாமிய மயப்படுத்தப் படவேண்டும்.

இன்று பல் வேறுபட்ட சமூகத் தீமைகளுக்கு வளி கோர்ப்பது கட்டுப்பாடற்ற ஆண் - பெண் உறவாகும். கல்வி கற்க பாடசாலை செல்லும் அதிகமான மாணவர்களின் புத்தகப் பையில் (school bagளுஉhழழட டீயப) சினிமா நட்சத்திர காவாலிகளின் வண்ணப் புகைப் படங்கள், கிரிக்கட் ஹீரோக்களின் ஸ்டிக்கர்கள், அழகு சினிமா விபச்சாரிகளின் ஆபாஸ அசிங்கமான போட்டோக்கள். விரஸமான ஆபாஷ நூற்கள், மஞ்சல் பத்திரிகைகள், பாட்டுப் புத்தகங்கள், நீலப் பட வீடியோ சீடீக்கள்.

காதல் கடிதங்கள், கையடக்க ரேடியோ, கெமரா போன். போன்ற பொருட்களைக் கானமுடிகின்றது. இவ்வாரு மாணவர்கள் அச்சம் பயம் எதுவுமின்றி இவைகளை பாடசாலைக்கு கொண்டு செல்லுகின்றனர;. அது அதிபர் ஆசிரியர்களின் கட்டுப்பாடும் கண்டிப்பின்மையும், இஸ்லாமிய அறிவு புர்த்தியான முறையில் கற்பிக்கப்படாமையுமே இதற்குக் காரணமாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த மட்டில் போலிகளையும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் அடியோடு நிராகரிக்கும் ஓர் இறைக்கொள்கையது. மனிதனின் பகுத்தறிவுக்கு வேட்டு வைக்கும் அத்தனை கொள்கைகளையும் தூக்கி வீசுமாறு அறிவுருத்தும் இம்மார்க்கத்தில் ஒரு முஸ்லிம் எப்படி ஏப்ரல் பூலை அனுஷ்டிக்க முடியும்?

ஏப்ரல். April Fool.
“ஏய் அதோ பார்றா வானத்திலே வௌ்ள காக்கா பறக்குது”
“ஹலோ மிஸ்டர்” “உங்க ஷூவோட லேஸ் கழண்டிருக்கு”
“அடி உன் ஒரு காது கம்மல காணோம்டி”

இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லி எதிரிலிருப்பவரை ஏப்ரல் பூலாக்க ஏப்ரல் 1 அன்று கஜினியாய் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள். பலர் பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில், பொது இடங்களில் என அனைத்து இடங்களிலும் ஏப்ரல் 1 அன்று இந்த முயற்சி நடக்கும். அடுத்தவரை முட்டாளாக்கப் பார்க்கும் இந்த முட்டாள்களின் தினம் உலகம் முழுவதும் பிரபல்யம்.

பலர் மற்றவர்களின் குடும்பத்தார்களையும் “அடே உன்ட வாப்பா மௌத்தாம்மடா” உன் நாநா “பஸ்ஸில அடிபட்டுவிட்டாராம்டா? என்றெல்லாம் மனிதர்களை ஏமாற்றும் பொய்யர்களாக மாறுகின்றனா். இதனையெல்லாம் நபிகளார் ஒரு போதும அங்கீகரிக்க வில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ-صلى الله عليه وسلم- « كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ
مَا سَمِعَ.
“தான் கேள்விப் படுவதையெல்லாம் அறிவிக்கின்ற ஒருவன் அவன் பொய்கூறுகிறான் என்பதற்கு அதுவே போதிய சான்றாகும்.
(முஸ்லிம் - 5789)

இச் செய்தியில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள். தான் கேள்விப்படுகின்ற அனைத்தையும் ஒரு முஸ்லிம் அறிவிப்பதை வன்மையாகத் தடைசெய்கிறார்கள். அவ்வாறு ஒருவன் அறிவிப்பதே அவன் மிகப் பெரும் பொய்யன் என்பதற்குச் சான்றாகக் கொள்ள வேண்டு மென்றும் கூறுகிறார்கள்.

அப்படியென்றால் நாமாக ஒரு கற்பனையை உருவாக்கி அவற்றுக்கு வடிவம் கொடுத்து அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு எத்திவைத்து ஏப்ரல் பூலை அனுஷ்டிக்கின்றோம் எனக்கூறுவது நபிவழிக்கு முரணல்லவா?

நபிவழிக்கு மாற்றமாக நடப்பது நரகவழியல்லவா? அன்புக்குரியவர்களே! சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ் தனது அருல் மறையில்.

இறைவிசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை உண்மையாக அஞ்சிக்கொள்ளுங்கள். உண்மையாளர்களோடு நீங்களும் இருந்துகொள்ளுங்கள் (அல் குர்ஆன் - 9:119)

பொய்யான அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்யும் இம்மார்க்கத்தில் எங்கனம் ஏப்ரல் பூலுக்கு அனுமதியிருக்கும்?

ஏப்ரல் பூலோ, மீலாது விழாக்களோ, பிறந்ததின விழாக்களோ இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டவையல்ல.

மாறாக மாற்றுமத இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் இஸ்லாமியப் போர்வையில் தருவிக்கப்பட்டவையே! இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்துவமும் அதன் உயர்வும் தெரியாத அறிவிலிகளால்தான் இச்சடங்குகள் எமது மார்க்கத்தினுல் புகுத்தப்பட்டன. இதனைத் தான் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.

عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எங்களது இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும்.
(புஹாரி - 2697)
நன்மையான விடயம்தானே செய்வதனால் என்ன குறைந்துவிடப்போகின்றது…?
ஏப்ரல் பூலை பகிடிக்கு அனுஷ்டிப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது..?
போன்ற அற்பத்தனமான கேள்விகளை அடுக்கி அல்லாஹ்வின் தூதரின் முன்மாதிரியில்லாத இம்மடமைத் தனங்கலுக்கு இரகசிய அங்கீகாரத்தை எடுப்பதற்கு சில இளைஞர்கள் விரும்புகின்றனர்.

இஸ்லாமிய சட்டக்கோவையில் ஒருமனிதனை ஏமாற்றுவது உரிமை மோசடி எனக்கொள்ளப்படுகின்றது. ஏப்ரல் பூல் எனும் பெயரில் இன்று எத்தனையோ தொழிலதிபர்கள், கல்விமான்கள், இணையதள வாசகர்கள், சுத்தமாக ஏமாற்றப்படுகிறார்கள்.

செய்தி ஊடகங்களும் இந்நாளில் தன் பங்கிற்கு மக்களுக்கு தவறான, சாத்தியமற்ற செய்திகளை வழங்கி மக்களைப் பரிதவிக்க விடுகின்றனர். “பில்கேட்ஸ்” புனித இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார். “புஷ் “நாஸ்தீகக் கொள்கைக்குத் தாவி விட்டார்” எனப் பரவிய வதந்திகள் இதற்கு சிறந்ததொரு சான்றாகும்.

இறுதியாக இஸ்லாமியர்களான நாங்கள் இஸ்லாத்தின் தனித்துவத்தை கட்டிக்காப்பதிலும், இஸ்லாம் ஓர் நாகரீகமான வாழும் கொள்கை என்பதை சர்வதேச உலகுக்கு எடுத்துச் சொல்லுவதிலும் முன்மாதிரியாக வாழ்வோமாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் காட்டி நேரான பாதையில் நாம் வாழ அருள் பாலிப்பானாக.


Read More Add your Comment 0 comments


விற்ப்பவனும் வாங்குபவனும் ஏமாற்றமடையக் கூடாது




வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
ஜவாஹிர் ஜமாலி.

பொதுவாகவே இஸ்லாமிய பொருளாதாரம் என்பது எவரையும் ஏமாற்றாமல் இருப்பதாகும் பிறரை ஏமாற்றி சம்பாதிப்பது ஒரு முஸ்லிமிற்றகு ஹராமாகும்.

நபி (ஸல்) காலத்தில் பேரீச்சையும் திராட்சையும் இருந்தது. இதை மரத்தில் பிஞ்சாக இருக்கும் போதே கனியான உடன் வாங்கிக் கொள்கிறேன் என்று விலை பேசுவார்கள். இப்படி செய்கிற வியாபாரத்தை நபிகள் நாயகம் தடுத்தார்கள்.

ஆனால் பிஞ்சை விற்பதையோ விலை பேசுவதையோ நபிஸல் தடுக்கவில்லை மரத்தில் உள்ள பிஞ்சை விலை பேசலாமேலொளிய பிஞ்சாக இருக்கும் போது காயான உடன் வாங்கிக்கொள்கிறேன் என்று விலை பேசக்கூடாது ஏனென்றால் இஸ்லாத்தில் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது என்பது இஸ்லாமிய வயாபாரத்தின் அடிப்படை.

ஏன் நபிகள் நாயகம் தடை செய்கிறார்கள் என்றால் உதாரணத்திற்கு ஒரு மரத்தில் பேரீச்சையோ திராட்சையோ பிஞ்சாக இருக்கிறது. இதை வாங்குபவன் இதை கனியான உடன் நான் வாங்கிக்கொள்கிறேன் என்கிறான்.

காயாக இருக்கும் போதே அந்த பொருள் இவ்வளவு வரும் என்று அவனொரு கணக்கை வைத்திருப்பான். அந்த கணக்கு வந்தால் பொருளை வாங்கியவன் நஷ்டமடைய மாட்டான் ஆனால் அவன் போட்ட கணக்கு வரவில்லை என்றால் பொருளை வாங்கியவன் நஷ்ட மடைகின்றான்.

பொருளை விற்றவன் அவன் ஒரு கணக்கை வைத்திருப்பான் (அதாவது இவ்வளவு தான் இதில் லாபம் வரும் என்று) பொருளை விற்றவன் போட்ட கணக்கின் அடிப்படையில் லாபம் வந்தால் அவன் நஷ்டமடைய மாட்டான். இப்படி இருவர் மனம் புண்பட்டு செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை இந்த வியாபாரத்தில் ஏமாற்றும் நோக்கம் இல்லாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் இதைத் தடை செய்தார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا نَهَى الْبَائِعَ وَالْمُبْتَاعَ - رواه البخاري

அப்துல்லாஹ் பின் உமர் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும். (புகாரி 2194)

حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا وَعَنْ النَّخْلِ حَتَّى يَزْهُوَ قِيلَ وَمَا يَزْهُو قَالَ يَحْمَارُّ أَوْ يَصْفَارُّ

ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிலிக் (ரலிலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள் என்று கூறினார்கள். அனஸ் (ரலிலி) அவர்களிடம், பக்குவம் அடைவது என்றால் என்ன?’என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலிலி) அவர்கள், சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது என்று விடையளித்தார்கள். (புகாரி 2197)

பேரீச்சம்பழம் மரத்தில் பிஞ்சாக இருக்கும் போது விற்கக் கூடாது. அப்படியே விற்கவேண்டும்மென்றால் கனியாக ஆனவுடன் உள்ள விலையை பேசக்கூடாது. பிஞ்சிற்கு என்ன விலையோ அதைத்தான் பேசவேண்டும் .

பேரீச்சம்பழத்தை பொருத்தவரை அது மஞ்சள் நிறத்தையோ சிவப்பு நிறத்தயோ அடைந்துவிட்டால் அதற்க்குபிறகு அது மரத்திலே இருந்தாலும் அதற்க்கு விலை பேசுவது குற்றமில்லை. ஏனென்றால் அது எல்லா விதமான ஆபத்தையும் கடந்துவிட்டது உதாரணமாக பயிரை எடுத்துக் கொண்டால் பயிரில் உள்ள அனைத்தும் அரிசியாக வரும் என்று சொல்ல முடியாது ஆனால் அதன் கீழ்பகுதி மஞ்சள் நிறத்தை அடைந்துவிட்டால் அதன் பிறகு அதற்க்கு ஆபத்தில்லை.

அதேபோன்றுதான் பேரீச்சை பிஞ்சாக இருக்கும் போது காயானதற்குறிய பணத்தை விற்பவன் வாங்கக்கூடாது. பேரீச்சம்பழத்தைப் பொருத்தவரை அது மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாகவோ ஆனதற்கு பிறகு அது ஆபத்தைத் தாண்டிவிட்டது. இப்போது காயானதற்குறிய பணத்தை விற்பவன், பொருளை வாங்குபவனிடத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்று மேற்க்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கெள்ளளாம் .

ஒவ்வொன்றிர்க்கும் ஒரு ஆபத்து இருக்கிறது. அந்த ஆபத்தை அது கடந்துவிட்டால் விட்டால் அதற்கு பிறகு எந்த இடையூறும் இருக்காது என்று தெரிந்ததற்கு பின்னால் அதை விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை என்பது கீழ்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்
حَدَّثَنَا حَجَّاجٌ حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا وَكَانَ إِذَا سُئِلَ عَنْ صَلَاحِهَا قَالَ حَتَّى تَذْهَبَ عَاهَتُهُ

இப்னு உமர் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் "பலன் உறுதிப்படுவது என்றால் என்ன என்று கேட்கப்பட்டது.' (அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே!'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். புகாரி -1486.

உதாரணமாக ஒரு கனியயோ அல்லது மற்றதையோ ஆபத்து கடந்துவிட்டால் அதை மேல் சொன்ன ஹதீஸின் அடிப்படையில் அதை விற்க்கலாம் பேரீச்சம்பழமாக இருந்தால் அது மஞ்சல் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ இருந்தால் அது ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிட்டது ஒரு நெற்க்கதிராக இருந்தால் அதன் கீழ் புறத்தில் மஞ்சல் நிறம் வந்து விட்டர்ôல் அது ஆபத்தைக் கடந்துவிட்டது இன்னும்.
மரத்தில் உள்ள பிஞ்சைக்காட்டி, காயிற்கு விலை பேசி பணத்தை வாங்குவது மார்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் ஒரு மனிதர் மற்றொரு மனிதனிடத்தில் மரத்தில் உள்ள பிஞ்சைக்காட்டி பணத்தை வாங்கிக் கொண்டு இதை காயான உடன் எடுத்துக்கொள் என்று சொல்கிறார் அந்த மனிதரும் சரி என்று சொல்கிறார் பிறகு பருவ நிலையாலோ அல்லது மழை வந்ததாலோ வராததாலோ அந்த பிஞ்சு காயாக வில்லை உதிர்ந்து விடுகிறது. இப்போது ஒரு சகோதரன் தனது மற்றொரு சகோதரருடைய பணத்தை வாங்குவது எப்படிக் கூடும் என்று நபிஸல் அவர்கள் கேட்கிறார்கள்.

عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ التَّمْرِ حَتَّى يَزْهُوَ فَقُلْنَا لِأَنَسٍ مَا زَهْوُهَا قَالَ تَحْمَرُّ وَتَصْفَرُّ أَرَأَيْتَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ

ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:“நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பக்குவமடைவதற்கு முன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்! என அனஸ் (ரலிலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலிலி) அவர்களிடம், பக்குவமடைதல் என்றால் என்ன? என்று கேட்டோம். அதற்கவர்கள், “சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்! என்று பதிலளித்தார்கள்.

மேலும், அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால் உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக) கருதுவீர்! என்றும் கேட்டார்கள். (புகாரி 2208)

இந்த ஹதிஸை நாம் பார்க்கும் போது விற்பவன் மீது மட்டும் குற்றம் என்பதைக் காட்டுகிறது ஆனால் நபிஸல் அவார்கள் சொல்லும்போது விற்பவன் மீதும் வாங்குபவன் மீதும் குற்றம் என்று சொல்லியிருக்கிறார்கள் ஆதாரம்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا نَهَى الْبَائِعَ وَالْمُبْتَاعَ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும். புகாரி 2194.

ஒரு காய் மரத்தில் இருக்கும் நிலையில் அதை அப்படியே விற்ப்பது தவறில்லை. இந்த நிலையைக்காட்டி இதற்கு அடுத்த நிலையில் உள்ளதற்கு விற்க்கக் கூடாது.
வியாபாரம் என்பது மன நிறைவாக இருக்க வேண்டும் விற்பாபவனும் வாங்குபவனும் பாதிக்கப்பட கூடாது.

مزابنة
முஸாபனா என்கின்ற மற்றொரு வியாபாரத்தையும் நபிஸல் அவர்கள் தடுத்துள்ளார்கள் முஸாபனா என்றால் மரத்திலுள்ள பக்குவப்பட்ட பேரீச்சம்பழத்திற்கு பக்குவப் படாத பேரீச்சம்பழத்தை விற்ப்பது ஒரு இனத்தை அதே இனத்தைச் சேர்ந்த ஒன்றிற்க்கு விற்ப்பது . இந்த வகையான வியாபாரம் தவணை முறையில் தான் நடை பெறும் .

உதாரணமாக.
ஒரு பேரீச்சம்பழத்திற்கு பதிலாக ஒரு பேரீச்சம்பழத்தை திராட்சைக்கு பதிலாக திராட்சையை மிளகாய்கு பதிலாக மிளகாயை விற்பது ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டை விற்பது மார்கத்தில் தடையில்லை. அதாவது பேரிச்சைக்கு பதிலாக பேரீச்சையோ அல்லது திராட்சைக்கு பதிலாக திராட்சையையோ விற்ப்பது ஹராம் இல்லை.

எப்படி இருந்தால் ஹராம் என்றால் மரத்தில் உள்ளதைக் காட்டி இதில் 100 கிலோ இருக்கும் இது பழமான உடன் நீ எடுத்துக் கொள். இப்போது எனக்கு 100 கிலோ கொடு என்ற ஒருவர் மற்றொருவரிடம் கேட்டால் கொடுக்கலாம். தவறில்லை எப்போது தவறாகும் என்றால் அவர் சொன்னதைப் போன்று 100 கிலோ கிடைத்தால் தவறில்லை. அப்படி இல்லாமல் வாங்கியவர் 100 கிலோவை வாங்கிவிட்டு மரத்தில் உள்ளது 90 கிலோவாகவோ 80 கிலோவாகவோ இருந்தால் மரத்தில் உள்ள பொருளை வாங்கியவர் பாதிக்கப்படுகிறார். இப்போது 100 கிலோ வாங்கியவர் கிடைக்காமல் போன 10 கிலோவிற்கு என்ன பதில் சொல்வார்? இதை நபிஸல் அவர்கள் வட்டி என்று சொல்கிறார்கள்.

அப்படி மரத்தில் உள்ளது 100 கிலோவிற்கு அதிகமாக இருந்தால் விற்றவன் பாதிக்கப் படுகிறான்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْمُزَابَنَةِ وَالْمُزَابَنَةُ بَيْعُ الثَّمَرِ بِالتَّمْرِ كَيْلًا وَبَيْعُ الزَّبِيبِ بِالْكَرْمِ كَيْلًا

அப்துல்லாஹ் பின் உமர் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடைசெய்தார்கள்! “முஸாபனா’ என்பது மரத்திலுள்ள பேரீச்சங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு முகத்தலளவையில் விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு முகத்தலளவையில் விற்பதுமாகும்! (புகாரி 2185)

முஹாக்கலா என்ற வியாபாரத்தை நபிஸல் அவர்கள் தடை செய்தார்கள் முஹாக்கலா என்றால் பக்குவப்பட்ட நெல்லை அதே இனத்தைச் சேர்ந்த ஒரு பொருளிற்கு விற்பது
நெற்கதிர்களை கதிரில் வைத்து விற்பதை நபிஸல் அவர்கள் தடுத்தார்கள் அது மஞ்சள் நிறம் ஆனதற்ககு பின்னால் விற்ப்பதை அனுமதித்தார்கள் நெற்க்கதிர்களை பச்சையாக இருக்கும் போது பச்சைக்கு என்ன விலையோ அதைத்தான் விலை பேசவேண்டும் அது மஞ்சளாதனற்கு பின்னால் உள்ள நிலைக்கு விலை பேசக்கூடாது.

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الشَّيْبَانِيِّ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ

இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “முஹாகலா, முஸாபனா’ ஆகிய வியாபாரங்களைத் தடைசெய்தார்கள். புகாரி - 2187.

நபிஸல் அவர்கள் ஏமாறக்கூடிய ஏமாற்றக்கூடிய அûத்து வாயில்களையும் அடைக்கிறார்கள்
வியாபாரம் என்று வரும்போது விற்ப்பவனும் வாங்குபவனும் நஷ்டமடையாமல் இருப்பது இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்பயைாகும்.
عن ابن عباس , قال : " نهى رسول الله صلى الله عليه وسلم أن تباع الثمرة حتى تبين صلاحها , أو يباع صوف على ظهر , أو لبن في ضرع , أو سمن في لبن " *- سنن الدارقطني - كتاب البيوع

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் ஓரு பழம் அதன் பக்குவத்தை அடையும் வரையும் இன்னும் கால்நடையின் முதுகின் மீதுள்ள முடியையும் (அறுப்பதுக்கு முன்) இன்னும் மடுவிலுள்ள பாலையும் இன்னும் பாலிலுள்ள நெய்யையும் விற்பதை நபிகள் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் ( நூல் தாரகுத்குத்னி)

உதாரணமாக ஆட்டினுடைய ரோமத்திலிருந்து கம்பளி செய்யப்படுகிறது. ஆட்டினுடைய ரோமத்தை விற்ப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. எப்போது தடுக்கிறது என்றால் ஆட்டை அறுப்பதற்கு முன்னாலே ரோமத்தை விலை பேசுவதை இஸ்லாம் தடுக்கிறது.

அதேபோல மாட்டிலிருந்து பால் கறப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. எப்போது தடுக்கிறது என்றால் ஒருவனிடத்தில் மாட்டைக் காட்டி ஒரு 100 ரூ வாங்கிவிட்டு இதிலுள்ள பாலை கறந்து கொள் என்று சொன்னால் தவறாகும். அந்த மடுவில் 100 ரூ பால் இருந்தால் இருவரில் ஒருவருக்கும் நஷ்டம் ஏற்ப்படாது ஆனால் அதில் 100 ரூ பால் இல்லை என்றால் வாங்கியவன் நஷ்டமடைகிறான்.

அதில் 100 ரூ அதிகம் பால் இருந்தால் விற்றவன் நஷ்டமடைகிறான். இந்த வகையான வியாபாரத்தை இஸ்லாம் தடுக்கிறது. இருவர் வியாபாரம் செய்தால் இருவர் மனதிற்க்கும் வருத்தம் ஏற்ப்படாமல் மனநிறைவோடு இருக்கவேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறது. அதேபோல பாலில் வெண்ணை இருக்கும் அந்த பாலைக் காட்டி நாளை இதைக் கடை .அதில் வரும் வெண்ணையை நீ எடுத்துக் கொள் என்று சொல்லி பாலை கடைவதற்கு முன்னாலே விலை பேசுவதை நபி (ஸல்) தடுத்தார்கள்.

இவையெல்லாம் நபி (ஸல்) காலத்திலுள்ள வியாபாரம் இந்த வகையான வியாபாரங்களை நபி (ஸல்) தடை செய்தார்கள். ஒரு பொருளை விற்பதாக இருந்தால் விற்க்க கூடியவன் அந்த பொருளைக் காட்டவேண்டும். அப்படி பொருளை காட்டவில்லை என்றால் விற்பவனுக்கும் ஹராம். அதை வாங்கு பவனுக்கும் ஹராம். இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி வியாபாரம் செய்வது நபி (ஸல்) தடுத்துள்ளார்கள் என்பதை மேற்க்கண்ட ஹதீஸிலிருந்து பார்த்தோம். ஒரு பொருள் எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையில் தான் அதை விற்கவேண்டும். அதற்க்கு அடுத்த நிலையில் உள்ளதற்கு விலை பேசுவதைத் தடுத்தார்கள் என்பதையும் மேற்க்கண்ட ஹதீஸிலிருந்து பார்த்தோம்.
மேற்கண்ட வியாபாரங்கள் எல்லாம் நபி (ஸல்) காலத்தில் இருந்தது. இதோடு ஒப்பிட்டு சமகாலத்திலுள்ள வியாபாரத்தை பார்ப்போம்.

சேர் மார்க்கெட்.
அதில் முதலிடத்தில் இருப்பது சேர் மர்கட் ((share market) மல்டி லெவல் மார்கட்டிங் (multilevel marketting) சேர் மார்க்கெட் என்பது ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 1 கோடி மதிப்புள்ள தொழில் பங்கில் 30 லட்சம் ரூபாயை சேராக விற்கிறார் என்று வைத்து கொள்வோம். ஒரு பங்கு என்பது 10 ரூபாயக்கு மேல் தாண்டக்கூடாது என்பது தான் சட்ட விதிமுறை. எனவே இந்த 10 ரூபாய் உள்ள ஒரு பங்கை 100 பங்காக சேர்த்து முதல் தடவையாக அதை 1000 ரூபாய் மதிப்பாக விற்பனை செய்கிறார். இந்த முதல் 1000 ரூபாய் மதிப்புள்ள பங்கிற்கு முகமதிப்பு என்று பெயர்.

விற்பனைக்கு விட்ட அந்த 30 இலட்சம் ரூபாயில் முக மதிப்பில் உள்ள பங்கின் மதிப்பை நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்கிறார். உதாரணமாக 1000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்கின் மதிப்பு 2000 3000 4000 என்று ஏறி சில நேரங்களில் 1000 மதிப்புள்ள பங்கு 5 இலட்சம் வரை கூட சென்றுவிடும். 30 இலட்சம் மதிப்புள்ள பங்கு 10 மடங்காகி 3கோடி என்றாகிவிடுகிறது.

இதிலே மார்க்கத்தில் தடுக்கப்பட்ட வியாபார முறைகள் பல உள்ளன.
30 இலட்சம் மதிப்புள்ளது 3 கோடியாக ஆனதால் அவரிடமுள்ள 70 இலட்சம் மதிப்புள்ள பங்கின் மதிப்பு 7 கோடி என்று இல்லாததை இருப்பதை போன்று காட்டப்படுகிறது.
இந்த கம்பெனியில் போய் நாம் சேர்ந்தால் அவர் நம்முடைய பங்கை எந்த வியாபாரத்தில் என்று தெரியாது. ஹலாலா? ஹரமா? என்றும் தெரியாது.

தவறான வியாபாரம் செய்தால் அதில் நமக்கும் பங்கு உண்டு.
இன்னும் நாம் 10000 முக மதிப்பில் உள்ள ஒரு பங்கை நாட்கள் சென்று 5 இலட்சத்திற்கு வாங்குகிறோம் என்று வைத்து கொள்வோம். இலாப சதவீதத்தை நாம் வாங்கிய 5 இலட்சத்திலிருந்து கணக்கிடாமல் ஆரம்பத்தில் உள்ள 10000 என்ற முகமதிப்பிலிருந்து கணக்கிட்டு நமக்கு இலாபத்தை கொடுப்பார். இது நாம் ஏமாறுகின்ற மோசடி.

எம் எல் எம் என்பது மூன்று வகைகளில் உள்ளது.

முதல் வகை
ஒரு நிறுவனம் உறுப்பினராக சேர்வதற்கு 50000 ரூபாயை வாங்கிக் கொள்ளும். அதற்கு பதிலாக அதை விட குறைந்த 10000 ரூபாய் மதிப்புள்ள(தங்க காசு போன்று) ஒரு பொருளை அந்த உறுப்பினரிடம் கொடுத்து மீதமுள்ள 40 000 ரூபாயை அவரது கணக்கில் வைத்துக் கொள்ளும். அடுத்து இந்த 1 உறுப்பினர் தன் வழியாக ஆறு பேரை சேர்த்து விட வேண்டும் . அதாவது அவர் இரண்டு பேர் இன்னொரு இரண்டு பேர் என்று ஆறு பேரை சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்த்தால் அந்த முதல் உறுப்பினருக்கு ஆறு பேரிடமுள்ள தொகையிலிருந்து இலாபத்தொகையாக ரூ 10,0000 கொடுக்கப்டும்.
இன்னும் அந்த உறுப்பினர்களில் யாராவது ஒருவர் தன் தொகையை திரும்ப பெற வேண்டுமென்றால் 6 பேரை சேர்த்தால் தான் கிடைக்கும். அதற்கிடையில் அவர் முதன்முதலில் செலுத்திய பணம் திரும்ப கிடைக்காது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்படும்.

இதில் உள்ள மோசடிகள்.
இதில் பொருளை கொடுத்து பணத்தை கொடுத்து வாங்கிகுகிற எந்த வியாபாரமும் இல்லை. ஆரம்பத்தில் தங்க காசு போன்ற பொருட்கள் கொடுப்பது கூட அது அன்பளிப்பு என்றாகிவிடும். அதை தவிர வேறு எந்த வியாபாரமும் நடக்காது. இவ்வாறு பணத்தை கொடுத்து பொருளை வாங்குகிறது வியாபாரமாகுமா ? இவ்வாறு வியாபாரம் செய்வது ஹலாலாகுமா ? இது மிகப் பெரிய மோசடி . 6 பேரை சேர்த்து விட்டால் நமக்கு ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்குமே தவிர இதிலே எந்த வியாபாரமும் நடக்காது .

அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனம் தான் எந்த ஒரு கொடுக்கல் வாங்கல் இல்லாமல் மோசடியாக கோடி கோடியாக சம்பாதிக்கிறது. இன்னும் இது ஒரு சங்கிலி தொடர் போன்று எந்த முடிவும் இல்லாமல் சென்று கொண்டிருப்பதால் இதில் ஏமாந்தால் யாரையும் நேரடியாக சட்டத்தின் பிடியில் நிறுத்த முடியாது. ஒரு நிறுவனம் என்றால் அதன் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் ஏதாவது ஒரு வகையிலே தொடர்பிருக்க வேண்டும். ஆனால் இதில் முதலாளி யார் என்றே தெரியாமல் நம்மை ஏமாற்றிவிடுவார்கள்.

இரண்டாவது வகை.
ஒரு உறுப்பினர் 20,000 செலுத்தி 5000 மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கி கொள்வார். அவையனைத்தும் போலியானவைகள் . மூலிகை படுக்கை போன்ற பொருட்கள் . இதில் ஒரு உறுப்பினர் 5 பேரை சேர்த்தால் அவருக்கு ஒரு நபர் வீதம் இலாபம் கிடைக்கிறது.
இது போலியான பொருட்களை விற்று செய்ய கூடிய மோசடியாகும்.

மூன்றாவது வகை.
20,000 செலுத்தி அந்த நிறுவனத்தில் சேரும் ஒரு உறுப்பினருக்கு வெளியில் கிடைக்கக்கூடிய பேஸ்ட் பிரஸ் போன்ற பொருட்கள் 10,000 ரூபாய் மதிப்பிற்கு வழங்கப்படும். மீதமுள்ள 10,000 ரூபாய் அவரது உறுப்பினர் கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும். இன்னும் இந்த பொருட்களுக்கு மார்கெட் விலையை விட பன்மடங்கு விலையை உயர்த்தி வைத்திருப்பார்.

10 ரூபாய் மதிப்புள்ள ஒரு பேஸ்ட் பொய்யான விஷயங்களை கூறி 24 ரூபாய்க்கு பெருமளவு விற்கப்படும். அது மட்டுமல்லாமல் சங்கிலித் தொடராக உறுப்பினர்களை சேர்த்து விட வேண்டும். அவர் யாரையெல்லாம் சேர்த்துவிடுகிறாரோ அவரிடமிருந்து வரக்கூடிய இலாபத்திலிருந்து பங்கு உண்டு.

மேற் சொன்ன அனைத்து வியாபாரங்களையும் சேர்மார்க்கெட்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இவ்விரண்டு வியாபாரங்களுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை மேற் சொன்ன வியாபாரத்திலாவது பிஞ்சைக்காட்டி வியாபாரம் செய்தார்கள் என்று வருகிறது ஆனால் இதில் பங்கை முதலீடு செய்தவருக்கு என்ன வியாபாரம் செய்கிறோம் தெரியாது
ஆனால் நபி (ஸல்) அவர்கள் இல்லாததை இருப்பாதகக் கட்டி வியாபாரம் செய்வதை நபிகள் நாயகம் தடுத்துள்ளார்கள் என்பதை மேற் சொன்ன ஹதீஸில் இருந்து தெரிகிறது.
இடைத்தரகர் (புரோக்கர்)
இது போன்ற மற்றறொரு வியாபாரம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்துள்ளது
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு விவசாயி கோதுமையோ அல்லது பேரிச்சம் பழத்தையோ அறுவடை செய்து கிராமத்தில் இருந்து சந்தைக்குக் கொண்டு வருவார் அப்போது உள்ளூர் வாசி அவரை வழி மரித்து இதை நான் விற்றுத்தருகிறேன் என்று சொல்லி பொருளை வாங்கும் பழக்கம் இருந்தது இதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
கிராம வாசி சிரமப்பட்டு அந்தப்பொருளை கொண்டு வருகிறார்.
அவர் சந்தைக்குச் சென்றால் தான் அந்தப் பொருளின் விலையையும் அந்தப்பொருள் தட்டுப்பாடாக இருக்கிறதா? இல்லையா? என்பதையும் அவரால் அறிய முடியும் இதற்க்கு இடமளிக்காமல் உள்ளூர் வாசி அவரை வழி மறித்து அவரிடம் உள்ள பொருள் அனைத்தையும் இந்தப் பொருளுக்கு சந்தையில் என்ன விலை என்று தெரியாத அந்த விவசாயிடத்தில் குறைந்த விலைக்கு உள்ளூர் வாசி வாங்கிக் கொள்கிறார் இதை இஸ்லாம் தடுக்கிறது ஏனென்றால் சிரமப்பட்டு பொருளை எடுத்து வருகிற அந்த விவசாயிடத்தில் எந்தச்சிரமமும் படாத உள்ளூர் வாசி குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு விற்று விடுகிறான்.

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا نَتَلَقَّى الرُّكْبَانَ فَنَشْتَرِي مِنْهُمْ الطَّعَامَ فَنَهَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَبِيعَهُ حَتَّى يُبْلَغَ بِهِ سُوقُ الطَّعَامِ قَالَ أَبُو عَبْد اللَّهِ هَذَا فِي أَعْلَى السُّوقِ يُبَيِّنُهُ حَدِيثُ عُبَيْدِ اللَّهِ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலிலி) கூறியதாவது: நாங்கள் (சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்குவோம். நபி (ஸல்) அவர்கள் அதைக் கடைவீதிக்குக் கொண்டு செல்லாமல் (அதே இடத்தில்) விற்பதைத் தடை செய்தார்கள்.(புகாரி 2166)

இப்படி கிராம வாசியை வழி மரித்து வாங்கும் நகரவாசி அதிக லாபம் அடைகிறான். இப்போது கிராம வாசி நஷ்டம் அடைகிறான் இன்னும் நபி (ஸல்) அவர்கள் இதை எந்த அளவுக்கு கண்டிக்கிறார்கள் என்றால் இதைப்போன்று வழி மரித்து வாங்குபவர்களை கன்ட இடத்தில் அடிக்குமாறு கட்டளையிட்டார்கள் இன்னும் நபிகள் நாயகம் அவர்கள் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த 1400 வருடங்களுக்கு முன்பே அழகான தீர்வைச் சொன்னார்கள்.

ஒரு கிராம வாசி தன்னுடைய பொருளை அருவடை செய்து கிராமத்தில் இருந்து நகரத்திற்க்கு எடுத்து வருகிறார் இனி அவர் சந்தைக்குச் செல்வது தான் பாக்கி. அதற்க்குள் ஒரு நகர வாசி இதை நான் விற்றுத்தருகிறேன் என்று அவரிடமிருந்து விலைக்கு வாங்குகிறார். இவர் பொருளை 500 ரூ வாங்கி சந்தையில் வந்து ரூ 1000 விற்கிறார் இது மோசடியாகும்
ஏனென்றால் கிராம வாசியே சந்தைக்கு வந்திருந்தால் பொருளின் விலை குறைந்திருக்கும் நகரவாசி என்கின்ற இடைத்தரகர் மூலமாக வந்ததால் விலை அதிகமாக இருக்கிறது இதனால் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَبْتَاعُ الْمَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا تَنَاجَشُوا وَلَا يَبِعْ حَاضِرٌ لِبَادٍ

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் வியாபாரம். செய்துகொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! (விலையை உயர்த்துவதற்காக ஆளமர்த்தி அதிக விலை கேட்கச் செய்வதும் கூடாது!) கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!
இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.புகாரி- 2160. 2158 .2140.
ஆன்லைன் பிஸினஸ்.
விலைவாசி ஏறுவதற்கு மற்றொருகாரணம் ஆன்லைன் பிஸ்னஸ் ஆகும். ஆன் லைன் பிஸ்னஸ் என்பது மக்களுக்கு எதுவும் கிடைக்க கூடாது என்பதற்காக தனக்கு தேவையில்லாத பொருளையும் கூட (நெட்டில்) ஆன் லைனில் புக்கிங் செய்வது. பிறகு அந்த புக்கிங் செய்யப்பட்ட இடத்திற்கோ பொருளிற்கோ புக்கிங் செய்தவனே ஒரு மனிதனை தயார் செய்து விலையை ஏற்றிவிடுவான். உதாரணமாக லாட்ஜில் ஒரு ரூம் ஒரு மனிதருக்கு தேவைப் படுகிறது.

ஆனால் அந்த ரூம் அனைத்தும் ஆன் லைன் மூலமாக புக்கிங் செய்யப் பட்டிருக்கிறது புக்கிங் செய்த நபரினுடைய ஆள் அதாவது புரோக்கர் அந்த ரூமின் விலை ஐநூறு ரூபாயாக இருந்தால் 700 ரூ க்கு விற்ôக்கப்படும். இந்த விதமான வியாபாரத்தை இஸ்லாம் தடுக்கிறது நபிஸல் அவர்கள் சொன்னார்கள் விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் மத்தியில் தரகர்கள் இருக்க கூடாது. இதே போன்று தான் மண்டபமும் ஆன் லைன் மூலமாக புக்கிங் செய்யப் படுகிறது.
மற்றொன்று ஆன்லைனில் பொருட்களையும் விலை பேசிவிட்டு அதை பதிக்கி வைக்கிறார்கள். அதற்கு தட்டுப்பாடு வந்த உடன் அதற்குறிய விலையைவிட அதிக விலைக்கு விற்கிறார்கள் இப்படி ஒவ்வொரு பொருட்களுக்கும் தட்டுப்பாடு வந்த உடன் விலையை அதிகப்படுத்தி விற்கிறார்கள் இதுவே விலைவாசி உயற்வதற்கு காரணமாக இருக்கிறது. உள்ளூர்வாசி வெளியூர் வாசிக்கு விற்ககூடாது என்கிற ஹதீஸின் அடிப்படையில் இந்த வகையான வியாபாரம் தடை செய்யப் பட்டிருக்கிறது.

இன்னும் நபி நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நஜ்ஷ் என்கின்ற வியாபாரம் இருந்தது. நஜிஷ் என்றால் வாங்கும் எண்ணமில்லாமல் விலையை உயர்த்துவது. ஏறத்தாழ ஏலம் எடுப்பதை போன்று. ஒருவர் விலையை கூட்டிக்கேட்பார் ஒருவர் விலையை குறைத்துக் கேட்பார். நபி (ஸல்) அவர்கள் வட்டி யென்கிற அளவிற்கு நபிஸல் அவர்கள் சொல்கிறார்கள் இன்னும் இஸ்லாம் வாங்கும் எண்ணமில்லாமல் விலையை ஏற்றக்கூடாது என்று தடுக்கிறது நமக்கு தேவையென்றால் விலையை ஏத்தி கேட்கலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ وَلَا تَنَاجَشُوا وَلَا يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلَا تَسْأَلُ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا

அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் கூறியதாவது : கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை மணவிலக்கு (தலாக்) செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தனது பாத்திரத்தை நிரப்பிக்கொள்ள வேண்டாம்!” என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்! நூல் புகாரி- 2140 2173 2777.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மற்றொரு வியாபாரம் இருந்தது அதாவது புரேக்கர் மூலமாக கை மாத்ததி வருவது இஸ்லாமிய அடிப்படையில் ஒரு பொருளை விற்பதாக இருந்தால் அது நமக்கு சொந்தமாக இருக்கவேண்டும் அப்படி கைமாற்றிவிடுவதாக இருந்தாலும் கூட நம்மிடம் எந்த சரக்கு இருக்கிறதோ அதற்கு தான் கை மாற்றிவிட வேண்டும் அப்படி நம்மிடம் சரக்கு இல்லாமல் இருக்குமேயானால் அதற்கு நிபந்தனைகள் இருக்கிறது அப்படி பணத்தை வாங்கிக் கொண்டு சரக்கு நம் கைவசம் இல்லையேன்றால் அதன் தரத்தையும் அதன் எடையையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உதாரணத்திற்கு நாம் அரிசியை விற்பனை செய்கிறோம் ஆனால் சரக்கு நம் கைவசம் இல்லையேன்றால் இன்ன அரிசியென்று அதனுடைய பெயரைத் தெளிவு படுத்த வேண்டும் இது இன்ன தரம் என்று அதன் தரத்தை தெளிவு படுத்தவேண்டும் இப்படி தரத்தயோ அளவையோ தெளிவுபடுத்தாமல் செய்யப்படும் வியாபாரத்தை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஏனென்றாôல் பொருளை வாங்குபவன் பாதிக்கப்படுவான். இன்றைக்கு புழக்கத்தில்லுள்ள கமிஷன் ஏஜன்டு தரத்தையும் எடையையும் தெளிவுபடுத்தி விற்றால் விற்பது கூடும்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ فِي الثِّمَارِ السَّنَتَيْنِ وَالثَّلَاثَ فَقَالَ أَسْلِفُوا فِي الثِّمَارِ فِي كَيْلٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا ابْنُ أَبِي نَجِيحٍ وَقَالَ فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ

இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, மக்கள் இரண்டு மூன்று வருடங்களில் கனிகளைப் பெற்றுக்கொள்வதாக முன்பணம் கொடுத்துவந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அளவும் தவணையும் குறிப்பிடப்பட்ட கனிகளுக்காக முன்பணம் கொடுங்கள்! என்றார்கள்.
மற்றோர் அறிவிப்பில் “அளவும் எடையும் குறிப்பிடப்பட்ட கனிகளுக்காக” என்றுள்ளது.
(புகாரி 2253)

தரத்தையும் எடையையும் தெளிவுபடுத்தவேண்டும் என்று நபிஸல் அவர்கள் கூறினார்கள்
இன்னும் நபிஸல் அவர்கள் சொன்னாôகள் ஒரு மனிதர் ஒரு உணவுப் பொருளை வாங்கவில்லை அதாவது அதை கைபற்றாமல் விற்கிறார். இப்படி விற்பது கூடாது ஏனென்றால் இது ஒரு தெளிவில்லாத வியாபாரமாகும். உதாரணமாக ஒரு மனிதர் ஒரூ பொருளை கைபற்றாமல் விற்கிறார் அது ஒரு கோதுமை மூட்டை என்று வைத்துக் கொள்வோம்.

அது தரமானது தானா என்று அவர் திறந்து பார்கவில்லை அப்படி திறந்து பார்காமல் விற்க கூடாது, தரம் எடையையும் தெளிவுபடுத்தாமல் விற்கக்கூடாது. கை மாற்றிவிட்டு பொருள் கை மாற்றப்பட்டவருக்கு பாதிப்பு வந்தால் கை மாற்றிவிட்டவன் நான் இதை திறந்து பார்கவே இல்லை உன் கண் முன்னால்தான் நான் உனக்கு இதை நான் விற்றேன் என்மீது எந்த குற்றமுமில்லை என்று சொல்லி கைமாத்திவிட்டவர் நளுவிவிடிவார் இதனால் தான் நபி (ஸல்) அவர்க்ள் இதை தடை செய்தார்கள்.

حَدَّثَنِي أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَه

: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் ஓர் உணவுப் பொருளை வாங்கினால், அது அவரது கைக்கு (முழுமையாக) வந்து சேராத வரை அதை அவர் விற்கக்கூடாது! இதை இப்னு உமர் (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .நூல் புஹாரி - 2133 2132 2137.
பொருளை கை மாற்றி விடும் புரேக்கர்கள் அந்தப் பொருளை கைப்பற்றி இது என்னுடையது என்றும் இது இன்ன தரம் எடை உள்ளது என்றும் தெளிவு படுத்தினால் அந்த வியாபாரம் கூடும் இன்னும் நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் உன்னிடம் இல்லாத ஒன்றுக்கு வியாபாரம் செய்யக்கூடாது.
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَأْتِينِي الرَّجُلُ يَسْأَلُنِي مِنْ الْبَيْعِ مَا لَيْسَ عِنْدِي أَبْتَاعُ لَهُ مِنْ السُّوقِ ثُمَّ أَبِيعُهُ قَالَ لَا تَبِعْ مَا لَيْسَ عِنْدَك

ஆகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபியவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஒரு மனிதர் வந்து வியாபாரத்தில் என்னிடம் இல்லாத ஒன்றை கேட்கிறார். நான் அவருக்காக கடைவீதியில் வாங்கி பிறகு அவரிடம் விற்பனை செய்யலாமா? என்று கேட்டேன். அதறக்கு நபி (ஸல்) அவர்கள் உன்னிடம் இல்லாத ஒன்றிற்க்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று சென்னார்கள்.
நூல் திர்மிதி- 1153.

நபி ஸல் அவர்களின் காலத்தில் பேரிச்சைத் திராட்ச்சை போன்ற பொருட்க்களை விவசாயிகள் பயிரிடக்கூடியவராக இருந்தார்கள். நேரத்தில் அவர்களுக்கு பணம் தேவைப்படுமானால் பணம் உள்ளவர்களிடத்தில் சென்று நான் பேரிச்சையையோ அல்லது திராட்சையையோ. பயிரிட்டிருக்கின்றேன் எனக்கு இப்போது பணம் தேவைப்படுகின்றது அதை நீங்கள் தந்தால் நான் பயிரிட்டுள்ள இன்ன தரமுடைய பேரிச்சையையோ திரட்சையையோ இன்ன விலைக்கு தருகிறேன் என்று சொல்லி பணத்தை வாங்குவதை நபி ஸல் அவர்கள் அனுமதித்ததாக. புஹாரியில்- 2239 ல் உள்ளது.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَالنَّاسُ يُسْلِفُونَ فِي الثَّمَرِ الْعَامَ وَالْعَامَيْنِ أَوْ قَالَ عَامَيْنِ أَوْ ثَلَاثَةً شَكَّ إِسْمَاعِيلُ فَقَالَ مَنْ سَلَّفَ فِي تَمْرٍ فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ بِهَذَا فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக்கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்துவந்தனர். நபி (ஸல்) அவர்கள், “ஒருவர், (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக்கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்!” என்று கூறினார்கள். (புகாரி 2239)

எதை விற்க்கிறேமோ அதைத் தெளிவு படுத்தினால் பண நெருக்கடியின் போது பொருளை விற்பவரிடத்தில் முன்பாகவே பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்பது தெளிவாகிறது எனவே வியாபாரம் என்பது ஒரு சேவையாக இபாதத்தாக இருக்கவேண்டுமே தவிர பிறரை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.
பதுக்கல்.
ஒருவர் ஒரு பொருளை கேட்க்கும் போது அதை அவருக்கு கொடுக்காமல் மறைத்து வைப்பது அதாவது பதுக்குவதாகும் இதைப்பற்றி நபி ஸல் அவர்கள் கடுமையாக கன்டித்துள்ளாôகள்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ قَالَ كَانَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ يُحَدِّثُ أَنَّ مَعْمَرًا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ

எவன் ஒருவன் பதுக்கி வைக்கிறானோ அவன் பாவம் செய்யக்கூடியவன் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் நூல் முஸ்லிம்- 3012.
பதுக்கல் என்பது அதிகமான பொருட்களை தன்னுடைய கடையில் வைத்திருப்பது பதுக்கல் அல்ல மாறாக தன்னிடம் உள்ள பொருள் மக்களுக்கு தேவைப்படும் போது தராமல் அந்தப்பொருளுக்கு தட்டுப்பாட்டை உண்டாக்கி குறைந்த விலை உள்ளதை அதிக விலைக்கு விற்பதாகும்.

மற்றொரு விசயம் என்ன வென்றால் ஒரு வியாபாரி தான் செய்யும் வியாபரத்தில் குறையை தெளிவுபடித்தினால் அவனுடைய வியாபாரத்தில் பரக்கத் செய்யப்படும் அவன் மறைத்தால்(அதாவது பதுக்கினால் ) வியாபாரத்தில் பரக்கத் செய்யப்படாது வியாபாரம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا(29)

நம்பிக்கை கொண்டோரே உங்களிக்கிடையே உங்கள் பொருட்க்ளை தவறான முறையில் உண்னாதீர்கள். திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர உங்ளையே கொன்று விடாதீர்கள் அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்(4;29)

குறைந்த மதிப்புள்ள பொருளை அதிகமான விலைக்கு விற்கிறார்கள் இவர்களிடமிருந்து பொருளை வாங்குபவன் எப்படி மனநிறைவோடு வாங்கமுடியும். உதாரணமாக பத்து ருபாய் மதிப்புள்ள் ஒரு பொருளை பதுக்கி வைத்து அந்த பொருளிற்கு தட்டுப்பாடு வந்த உடன் 20, 30 40.

ரூபாய் என்று விலையை உயர்த்தி விற்பது மேலே சொன்ன குர்ஆன் வசனத்திற்கு முற்றிலும் மாற்ற மானதாகும். இன்னும் மனனிறைவைப் பற்றி எப்படிச் சொல்கிறான் என்றால் வியாபாரம் என்பது மன நிறைவோடுதான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள் ஒருவர் பொருளை வாங்குகிறார். ஒருவர் பொருளை விற்கிறார். இவ்விருவருக்குமுள்ள மனனிறைவைப் பற்றி சொல்லும் போது விற்பவரும் வாங்குபவரும் அவ்விருவரும் பிரியாமல் இருக்கும் காலமெல்லாம் விருப்பத்திலே இருக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு மனிதர் மற்றெரு மனிதரிடத்தில் பொருட்களை வாங்குகிறார். வாங்கி முடித்தவுடன் முக்கியமான பொருட்கள் நினைவிற்கு வருகிறது இதை மாற்வேண்டும் என்று கேட்டால் மாற்றிக் கொடுப்பது பொருளிற்கு சொந்தக் காரனின் கடமையாகும் இது எப்போது என்றால் அவ்விருவரும் பிரியாமல் இருக்கும் வரைதான்.

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ يَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ اخْتَرْ وَرُبَّمَا قَالَ أَوْ يَكُونُ بَيْعَ خِيَارٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரிடம் (உறுதிப்படுத்துவதோ முறிப்பதோ) உமது விருப்பம் என்று கூறினாலும் முறித்துக்கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள் (புகாரி 2109).


Read More Add your Comment 0 comments


வேண்டாம் கந்தூரி உரூஸ்.



வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
ஜவாஹிர். ஜமாலி.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

'"நபி வழி நடந்தால் நரகமில்லை இதை நாடாத பேருக்கு சொர்க்கமில்லை சொர்க்கமில்லை'" என்று ஒரு கவிஞர் பாடிய பாடலை நம் இஸ்லாமிய பெருமக்கள் மிகவும் ரசித்துக் கேட்கின்றனர். ஆனால் இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தவரின் வாழ்க்கை நம்முடைய நபி முகம்மது: (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் அமைந்திருக்கிறதா என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
வேண்டாம் மாற்று மதக் கலாச்சாரங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '"யார் பிற சமுதாயத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறார்களோ அவன் அவர்களைச் சார்ந்தவனே '" (நூல் : தப்ரானீ)

அன்பிற்குரிய இஸ்லாமிய பெரியோர்களே தாய்மார்களே நபியவர்கள் கூறிய மேற்கண்ட ஹதீஸை சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் தர்ஹா கந்தூரி எனக் கொண்டாடுகின்றீர்களே இதற்கும் மாற்று மதத்தவர்கள் கொண்டாடக்கூடிய திருவிழாக்களுக்கும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கிறதா?

அவர்கள் யானையோடு உற்சவம் கொண்டாடுகிறார்கள். நீங்கள் யானையோடு சினிமாப்பாட்டுக்களை கொட்டடித்துக் கொண்டு கொடியேற்றுவிழா கொண்டாடுகிறீர்கள். அவர்கள் தேர் இழுத்தால் நீங்கள் சந்தணக் கூடு உரூஸ் கொண்டாடுகிறீர்கள். அவர்கள் சிலைக்கு பட்டுடுத்தி மாலை போட்டால் நீங்கள் கப்ருக்கு பச்சை போர்வை போர்த்தி பூ போடுகின்றீர்கள். அவர்கள் சிலைகளிடம் பிரார்த்தனை செய்தால் நீங்கள் கப்ரிலே கையேந்துகிறீர்கள்.

அவர்களுடைய விழாக்களிலே ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கண்டுகளித்தால் நீங்களும் தர்ஹாக்களிலே ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கண்டுகளிக்கிறீர்கள். இப்படி மாற்று சமுதாயத்தவர்களுக்கு ஒப்பாக நடத்தப்படும் தர்ஹா திருவிழாக்கள் நபியவர்கள் காட்டித் தந்தவையா? பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதோ கப்ருகளை தர்ஹாக்களாக கட்டி வழிபாடு நடத்துவர்களைப் பற்றி நபியவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

கட்டப்பட்ட கப்ருகளை தரைமட்ட மாக்குங்கள்.
'"உயர்ந்திருக்கின்ற எந்தக் கப்ரையும் தரைமட்டமாக ஆக்காமல் விட்டுவிடக்கூடாது'" என்று எனக்குக் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : அலி (ரலி) நூல் : முஸ்லிம் (1609)

தர்ஹா கட்டி கந்தூரி கொண்டாடாதீர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '"எனது கப்ரை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது சலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய சலவாத்து எனக்கு எடுத்துரைக்கப்படும்.. '"
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அபூதாவுத் (1746)

தர்ஹா கட்டினால் இறைவனின் சாபம் ஏற்படும்.
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது '"யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை தர்ஹாக்களாக ஆக்கிவிட்டனர் என்று கூறினார்கள்.. '"
அறிவிப்பர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (1330)

நபியவர்கள் தன்னுடைய கப்ரைக் கூட விழாக் கொண்டாடக் கூடிய இடமாக ஆக்கிவிடக்கூடாது என எச்சரிக்கை செய்திருக்கும் போது இன்றைக்கு நாம் யார் யாருக்கெல்லாமோ தர்ஹாக்கள் கட்டி விழாக் கொண்டாடுகிறோமே இது எவ்வளவு பெரிய பாவச் செயல் என்பதை இஸ்லாமியப் பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இறந்தவர்கள் நம்முடைய துஆவைக் கேட்கமாட்கள்.
அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். . நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (அல் குர்ஆன் 35 : 13, 14)

மேற்கண்ட வசனத்தை சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி இறந்தவர்கள் யாரை அழைத்தாலும் அவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்றும் மறுமையில் இறைவனிடம் நமக்கு எதிராக வருவார்கள் எனவும் இறைவன் தெளிவாகக் கூறியிருக்கும் போது இன்றைக்கு அல்லாஹ்விடம் கையேந்தாமல் தர்ஹாக்களிலே கையேந்தக் கூடிய என்சமுதாய பெரியோர்களே தாய்மார்களே இது இறைவனுக்கு செய்யக்கூடிய மாபெரும் இணைகற்பித்தல் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த இணை கற்பிக்கும் மாபதகச் செயலில் ஈடுபட்டால் இறைவன் அதனை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான். இப்படிப்பட்டவர்கள் ஒரு போதும் சொர்க்கம் புகமுடியாது என இறைவன் எச்சரிக்கை செய்கின்றான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4: 48)

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' (அல்குர்ஆன் 5 : 72)

எனவே இது போன்ற தர்ஹா கந்தூரி வழிபாடுகளை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளையும் குடும்பங்கயையும் கரிக்கும் நரக நெருப்பை விட்டும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66 :6)


Read More Add your Comment 0 comments


அந் நுஃமான் பின் முகர் ரின் அல் - முஸனீ




வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
ஜவாஹிர் (ஜமாலி)

மதாயின் நகரம். பாரசீகத்தின் பேரரசன் யஸ்தஜிர்து கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அவனது பேரவைக்கு ஒரு பிரதிநிதிக்குழு வந்திருந்தது. அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு என்னென்னவோ பேச, சக்கரவர்த்திக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.

“பிரதிநிதிகளைக் கொல்லக் கூடாது என்ற நடைமுறை மட்டும் இல்லாதிருப்பின் உங்களையெல்லாம் நான் கொன்றிருப்பேன். உங்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. திரும்பிச் செல்லுங்கள்" ம்ஹூம், போதாது; வெறுமனே இவர்களை அதட்டி அனுப்பினால் போதாது. அவமானப்படுத்த வேண்டும்! அவர்களது முகத்தில் மண் பூச வேண்டும் என்று கதறியது அவன் மனம்.
"மூட்டை நிறைய மண் எடுத்து வாருங்கள்"

உடனே எடுத்து வந்தார்கள் சேவகர்கள். “இவர்களது குழுவில் உயர்குடி வகுப்பினன் எவனோ அவனது முதுகில் மணல் மூட்டையை ஏற்றி வைத்து, மக்களெல்லாம் காணும் வகையில் இவர்களை மதாயின் நகரை விட்டே துரத்துங்கள்"

விரைந்து எழுந்தார் ஆஸிம் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு. "இந்தக் குழுவில் உயர்குடியைச் சேர்ந்தவன் நானே" என்று பரிசு வாங்கச் செல்பவர்போல் அந்த மணல் மூட்டையைப் பெருமிதமாய் ஏற்றுக் கொள்ள, மக்களெல்லாம் பரிகாசமும் நையாண்டியுமாய்ப் பார்க்க அந்தத் தூதுக்குழு தங்களது படை முகாமிற்குத் திரும்பியது. படைத் தலைவர் ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆவலுடன் கேட்டார், “சென்ற காரியம் என்ன ஆயிற்று?"

“மனம் மகிழுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ், அவர்களது அரசாங்கத்தின் சாவியை நம்மிடம் ஒப்படைத்துவிட்டான்" என்று மணல் மூட்டையை இறக்கி வைத்தார் ஆஸிம்.

யஸ்தஜிர்த் மண் மூட்டையை ஏற்றி வைத்ததோ அவமானப்படுத்த. அதைச் சுமந்து வந்ததில் எவ்வளவு அவமானம் ஆத்திரம் ஏற்பட்டிருக்க வேண்டும்?. ஆனால், அவன் தனது நிலத்து மண்ணை அள்ளித் தானாகத் தந்து, தங்களது வெற்றிக்கு வித்திட்டுவிட்டான் என்று பெருமிதமடைந்தார்கள் தோழர்கள்! அல்லாஹ்வின் பாதையில் களமிறங்கியதும் என்ன பிரச்சினையானாலும் சரி, சிக்கலானாலும் சரி அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை! அனைத்தையும் ஆக்கபூர்வமாகவே பார்க்கும் பரந்த நோக்கு இருந்திருக்கிறது அவர்களுக்கு. ரலியல்லாஹு அன்ஹும்.


மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் ஓர் ஊர் இருந்தது. அங்கு முஸைனா எனும் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்தபின் மக்காவிலிருந்து மற்ற முஸ்லிம்களும் மெதுமெதுவே மதீனா வந்தடைய ஆரம்பித்தனர். அவர்களெல்லாம் முஸைனாவைக் கடந்துதான் செல்ல வேண்டும். வழக்கத்திற்கு மாறான, அதிகமான போக்குவரத்து; மதீனாவில் நிகழ்ந்துவரும் மாற்றம்; இவையெல்லாம் முஸைனா குலத்து மக்கள் மத்தியல் செய்தியாக ஆரம்பித்தன. “என்னதான் நடக்கிறது அங்கே?" என்று ஆவலும் ஆர்வமுமாய் விசாரிக்க, பதிலாய்க் கிடைத்த தகவல்களெல்லாம் அவர்களுக்கு ஆச்சரியமளித்தன!

“அப்படியா? உண்மையாகவா? இப்படியெல்லாம்கூட வாழலாமா? சிறப்பாக இருக்கே!"

கோத்திரங்களுக்கெல்லாம் சில தலைவர்கள், பெருந்தலைவர் என்று உண்டு. முஸைனா கோத்திரத்திற்கும் ஒருவர் இருந்தார்; அந்நுஃமான் இப்னுல்-முகர்ரின். அவருக்கு ஒன்பது சகோதரர்கள். சனான், ஸுவைத், அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், அகீல், மஅகல், நயீம், மார்தி, தர்ரார்.

ஒருநாள் மாலை சகோதரர்கள், நண்பர்கள், பெரியவர்கள் என்று கூட்டமாய் அமர்ந்து பேசி்க்கொண்டிருந்தார்கள். நுஃமான் மனதில் சிலநாளாய் ஓர் எண்ணம் ஓடிக்கொண்டிருந்ததது. அன்று வாய்ப்பு அமைந்துவிட, பேசினார்:

“என் மக்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். முஹம்மது என்றொருவர் இங்கு யத்ரிபிற்கு வந்திருக்கிறாரே, அவர் மக்களுக்குக் கருணை கற்றுத் தருகிறாராம்; நீதியும் நேர்மையும் போதிக்கிறாராம். இன்னும் அவரைப் பற்றிக் கேள்விப்படுவதெல்லாம் நல்லவையாகவே இருக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து மக்களெல்லாம் முந்திக்கொண்டு அவரிடம் செல்கிறார்கள். நல்லவற்றை ஏற்றுக்கொள்வதை நாம் ஏன் தாமதப்படுத்த வேண்டும்? என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் நான் முடிவு செய்துவிட்டேன். நாளைக் காலை முதல் வேலையாக நான் யத்ரிப் சென்று அவரைச் சந்திக்கப் போகிறேன். என்னுடன் வர விருப்பமுள்ளவர்களெல்லாம் பயணத்திற்குத் தயார் செய்து கொள்ளுங்கள்"

அச்சொற்கள் விழுந்த செவிகள் அறிவுக் கூர்மையுள்ள செவிகள். மறுநாள் பொழுதுவிடிந்தது. நுஃமான் வெளியே வந்து பார்த்தால் அவரின் அனைத்து சகோதரர்களும் நானூறு போர்வீரர்களும் என்று ஒரு படையே பயணத்திற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது.

புருவம் உயர்த்தி யோசித்தார் நுஃமான். ‘இத்தனைபேர் செல்கிறோம்; இறைத்தூதர் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறோம்; வெறுங்கையுடன் எப்படிச் செல்வது? ஏதாவது அன்பளிப்பு அளிக்க வேண்டுமே..’ சோதனையாய் அந்த ஆண்டில் மழையின்றி, விளைச்சல் இன்றி, வறுமையில் இருந்தார்கள் அவர்கள். கால்நடைகளும் ஏதும் அதிகமில்லை. பஞ்சத்திலிருந்து காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் சில அவரது வீட்டிலும் அவரின் சகோதரர்கள் வீட்டிலும் இருந்தன. அவற்றையெல்லாம் தேற்றி ஓட்டிக்கொண்டு, கிளம்பியது அந்தப் படை - மதீனாவை நோக்கி.

“வருகிறது ஒருபடை, தங்களை ஆரத் தழுவிக்கொள்ள" என்ற நற்செய்தி நபியவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பெருமகிழ்வுடன் அவர்களை வரவேற்க நபியவர்கள் தயாரானார்கள்.

நானூற்று சொச்சம் பேரும் வாகனப் பிராணிகளும் ஆடுகளும் என்று பாலை வெயிலில் நடந்து வந்தால் எப்படி இருக்கும்? காற்றில் மணல் புழுதி பறக்க, நிலம் திடும் திடுமென அதிர மதீனாவில் நுழைந்தார்கள் நுஃமானும் சகோதரர்களும் முஸைனி குலத்துப் போர் வீரர்களும். மதீனாவே மகிழ்ச்சியில் அதிர்ந்தது! எத்தனையோ கோத்திரத்திலிருந்து வருகிறார்கள்; தனித்தனியாக வருகிறார்கள், சிறு குழுவாய் வருகிறார்கள்; இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்க, தம் சகோதரர்கள் அனைவரும் தம் குலத்தின் நானூறு போர் வீரர்களும் திருமண நிகழ்ச்சிபோல் ஒரு கோத்திரமே வந்து இணைவதைக் காண்பது மதீனாவிலிருந்த முஸ்லிம்களுக்குப் புதுசு. வரலாற்றில் தனித்தன்மையை பெற்றுவிட்ட ஒரு பெருநிகழ்வு அது.

அவர்கள் அளித்த பரிசை நபியவர்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். குர்ஆனிலுள்ள சூரா தவ்பாவின் 99ஆவது வசனம் இந்நிகழ்வை இப்படிக் குறிக்கிறது -

"கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறைத் தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் பேரருளில் புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்"

நுஃமான் ஒரு கோத்திரத்தின் தலைவர். மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்து கொண்டிருந்தவர். ஆள் பலம், படை பலம் உள்ளவர். வீர தீர சகோதரர்களே பத்துப் பேர். இவர்கள் அனைவரும் மெனக்கெட்டு ஊரிலிருந்து பயணம் கிளம்பிச் செல்கிறார்கள். பணம் கொடு, பதவி கொடு, மந்திரி சபையில் இடம் கொடு, இட ஒதுக்கீடு கொடு என்றெல்லாம் பேசவில்லை! உலக ஆதாயங்களைப் பற்றி மூச்சே இல்லை.

‘ஒரே இறைவன் என்கிறீர்கள். நன்றாக அறிவுக்குப் புரிகிறது. நல்லறம் போதிக்கிறீர்கள்; தீய செயல்களைச் செய்யக் கூடாதெனச் சொல்கிறீர்கள். மனதில் ஆனந்தம் பொங்குகிறது. நாங்கள் பத்துப் பேர் மட்டுமே சகோதரர்கள் இல்லை; இஸ்லாத்தினுள் காலடி எடுத்துவைத்த எல்லோருமே சகோதரர்கள் என்கிறீர்கள். அதன் உன்னதம் சிலிர்க்கிறது. இங்கு வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தென்படுகிறது. நிரந்தரம் என்பது மறுமைக்குள் ஒளிந்திருப்பதை உணர முடிகிறது. போதும்! இது போதும் எங்களுக்கு!’ என்று தலைமைப் பகட்டு, இறுமாப்பு அனைத்தையும் கழட்டி வைத்துவிட்டு அடக்கமாய் இஸ்லாத்திற்குள் நுழைந்தார் அந் நுஃமான் இப்னு அல்-முகர்ரின், ரலியல்லாஹு அன்ஹு.

அதன்பிறகு -

அகழி யுத்தம், இதர யுத்தங்கள் என்று இஸ்லாத்திற்காக நடைபெற்ற போர்களிலெல்லாம் நபியவர்களுடன் இணைந்து களத்தில் ஒரே வீரவிளையாட்டுதான். போரில் நபியவர்களின் கொடியை ஏந்திச் செல்லும் பொறுப்பும் பெருமையும் அவருக்குக் கிடைத்தது. மக்கா படையெடுப்பின்போது பெரும் படை சென்றது; அதில் பத்தாயிரம் வீரர்கள்வரை இருந்தனர் என்று முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோமல்லவா? அதில் நுஃமானின் முஸனி கோத்திரத்தின் வீரர்கள் மட்டுமே ஆயிரத்து முந்நூறு பேர்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் மூன்று முக்கியப் பிரச்சினைகள் அவரை நெருக்கின. முதலாவதாக உஸாமா பின் ஸைதையும் அவர் தலைமையில் படையையும் ரோமர்களை நோக்கி அனுப்பி வைப்பது. இரண்டாவது, "நானும் நபி, நானும் இறைத் தூதுவன்" என்று கிளம்பினார்களே கிறுக்கர்கள், அவர்களிடம் போர் தொடுப்பது. மூன்றாவது இஸ்லாத்திலிருந்து தடம் புரண்டு போனதுமில்லாமல் தூற்றத் தொடங்கியவர்களை நேர்படுத்துவது.

ஒரு பாராவில் எழுதிவி்ட்டாலும் இவை மூன்றுமே நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாத பெரும் சோதனைகள். அவை அனைத்தையுமே தமது இரண்டரை ஆண்டுகால ஆட்சியிலேயே அபூபக்ரு எதிர்கொண்டு சாதித்துக் காட்டியது இன்ஷா அல்லாஹ் நாம் படித்தறிய வேண்டிய தனி வரலாறு.

முன்னர் நாம் பார்த்த சில தோழர்களின் வரலாற்றில் பொய்யன் முஸைலமா பிரதானமாய் தென்பட்டிருப்பான். இங்கு நேர்வழியிலிருந்து பிறழ்ந்துபோன கூட்டங்களுடன் நடைபெற்ற ரித்தா போர்க் காட்சிகள் சிலவற்றைப் பார்த்துவிடுவோம்.

நபியவர்கள் மரணிக்குமுன் புதிதாய் இஸ்லாத்தில் நுழைந்த கோத்திரத்தினர் சிலர் இருந்தனர். அவர்கள் மத்தியில் ஓரிறைக் கொள்கை முற்றிலும் வேரூன்றாமல் இருந்தது. பண்டைய பழக்க வழக்கங்களில் ஊறித் திளைத்திருந்த அவர்கள் மனதிலிருந்து அப்பழக்கம் முழுவதுமாய் விடுபடவில்லை. நபியவர்களின் மரணச் செய்தி கிடைத்ததும், ‘சரி தான்! புதிதாய் முஹம்மத் தோற்றுவித்த கலாச்சாரம் அது. ஆட்டம் முடிந்தது’ என்று அவர்களது மனதில் குலப் பெருமை, அதிகார வேட்கை, பண ஆசை ஆகியனவெல்லாம் திரும்பவும் குடியேற ஆரம்பித்தன.

“ஸகாத்தா? என் பணம்; என் காசு; என் சொத்து. அதெல்லாம் தரமாட்டேன். போனால் போகிறது, தொழுது கொள்கிறேன்; நோன்பு நோற்கிறேன்" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

'மதீனாவிலிருந்து முஸ்லிம் வீரர்களின் பெரும் படை உஸாமாவின் தலைமையில் ரோமர்களை நோக்கிச் சென்றுவிட்டது; கலீஃபாவும் முஸ்லிம்களும் முஹம்மதை இழந்த சோகத்தில் மனமும் உடலும் நொடித்துப் போய் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் வலுவிழந்து விட்டனர். அவர்களால் நம்மை எதுவும் செய்துவிட முடியாது' என்ற இறுமாப்பும், இஸ்லாத்திலிருந்து விலகிப்போன முர்த்தத்களிடம் குடிகொள்ளலாயிற்று.

இஸ்லாமிய வரலாற்றில் கடுங்கொந்தளிப்பான காலகட்டம் அது.

முஸ்லிம்களுக்கு எதிராக பனூ கதஃபான், பனூ அஸத், பனூ தாய் ஆகியோர் போர்களத்திற்கு வந்துவிட்டார்கள். பனூ தால்பா பின் ஸஅத், பனூ மர்ரா, பனூ அபாஸ் எனும் கோத்திரத்தினர் தங்களது படையுடன் மதீனா நகருக்கு அருகே அமைந்துள்ள அப்ராக் எனும் திறந்தவெளிக்கு வந்துவிட்டனர். பெருங் கூட்டமாய்க் கூடி நெருக்குதல் அளித்தால் கலீஃபா அபூபக்ரு இணங்கிவிடுவார் என்ற திட்டம் இருந்தது அவர்களுக்கு. அப்படி இல்லையா மதீனாவைத் தாக்கிக் கைப்பற்றுவோம்! கிள்ளுக்கீரை என்று நினைத்துவிட்டனர் ஸித்தீக்குல் அக்பரை.

அந்தக் கோத்திரங்களின் குழுவொன்று அபூபக்ருவைச் சந்தித்து, “ஸகாத்தெல்லாம் முஹம்மது நபி இருக்கும்போது கேட்டார்கள்; தந்தோம். அவர் சென்றுவிட்டார். அதனால் அதை நாங்கள் உங்களுக்குத் தரத் தேவையில்லை. எங்களை ஸகாத் கடமையிலிருந்து விடுவித்துவிடுங்கள். இல்லையா எங்களுக்கு இஸ்லாமெல்லாம் தேவையில்லை. நாங்கள் வெளியேறுகிறோம்"

உமர் (ரலி) உட்பட மூத்தத் தோழர்கள் மத்தியில் இந்த முர்தத்களை எதிர்த்துப் போர்தொடுப்பதில் தயக்கம் இருந்தது. பயமல்ல; அரசியல் தயக்கம்.

"ஸகாத் மட்டும்தானே தரமாட்டேன் என்கிறார்கள். ஆனால் தொழுது கொள்கிறேன், இதர கடமைகள் செய்கிறேன் என்கிறார்கள்; எனில் அவர்களும் முஸ்லிம்களாகத்தானே கருதப்பட வேண்டும். கலிமாச் சொல்லியிருக்கும் இவர்களிடம் எப்படிப் போரிடுவது?"

அதற்கு அபூபக்ரு (ரலி) உரைத்த பதில் சுருக்கமானது. வலிமை வாய்ந்தது. “அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையில் வேறுபாடு காண்பவன் யாராக இருந்தாலும் நிச்சயம் அவனை எதிர்த்து நான் போரிடுவேன. ஸகாத் அவர்களது சொத்தின் மீதான உரிமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களிடம் சிறியதொரு பெண் ஆட்டை ஸகாத்தாக கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது எனக்குத் தரமறுத்தால் போர்தான். அவ்வளவு ஏன், மூக்கணாங்கயிறு ஒன்றை ஸகாத் கடமையாய் அவர்கள் நபியவர்களிடம் அளித்திருந்து அதை இப்பொழுது தர மறுத்தாலும் சரியே"

நமக்கு இதில் பாடம் இருக்கிறது. ‘எவ்வளவு நேரம்தான் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருப்பது, கொஞ்சம் தொழுதுவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நேற்றுதான் இரண்டு ஏழைக்கு மீந்துபோன சோற்றைப் போட்டேன்; இன்று ஸகாத்தும் கொடுக்கணுமா?’ என்று சொல்வதற்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் என்ன பொழுது போக்கா? அவை மார்க்கத்தின் அடித்தளமல்லவா!

அபூபக்ருவின் அந்த பதில், வந்த குழுவினரைப் பேச்சடைத்துப் போகச் செய்தது. அதேநேரத்தில் அபூபக்ருவின் திட்டவட்டமான இந்த பதில் உமர், இதரத் தோழர்களின் உள்ளங்களைத் திறக்க, பளீரென உண்மை அவர்களுக்குப் புரிந்தது.

தம் பதிலால் வந்தவர்கள முகத்தில் தெரிந்த மாறுதலைத் தெளிவாகப் படித்துவிட்டார் அபூபக்ரு. அவர்கள் போருக்குத் தயாராகி மதீனாவைத் தாக்கத் திட்டமிடுகிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்தது.

திரும்பிய குழு, தங்கள் தலைவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தது. அந்த அனைத்துக் கோத்திரத்தின் தலைவர்களும் பரபரவென்று ஆலோசனை செய்தார்கள். ‘முஸ்லிம்களின் பெரும் படையொன்று மதீனாவை விட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டதால் போதிய படை பலம் இன்றி முஸ்லிம்கள் பலகீனமான நிலையில் இருக்கிறார்கள். நம் தாக்குதலை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் அவர்களிடம் இப்போது வலுவில்லை. இதுதான் சரியான தருணம். மதீனா நம் கையில் வந்துவிட்டால் அதன் நிர்வாகம் நமதே' அந்த ஒவ்வொரு கோத்திரமும் வெற்றியில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தைக் கனவு கண்டு, வாயைத் துடைத்துக்கொண்டு, “நாங்கள் தயார்" என்று ஏகமனதாய் அறிவித்துவிட்டன.

இங்கு மதீனாவில் தற்காப்பு ஏற்பாடுகள், போர் ஏற்பாடுகள் என உடனே மளமளவென்று காரியத்தில் இறங்கினார் கலீஃபா அபூபக்ரு. முதற்காரியமாகப் பெண்களையும் குழந்தைகளையும் கோட்டைகளுக்குள்ளும் மலைகளுக்கும் அனுப்பி வைத்தார். மதீனா நகருக்கு வெளியே காவல்படை அமைக்கப்பட்டது. பிறகு, இஸ்லாத்தில் திடமாய் நிலைத்திருந்த இதர கோத்திரத்தினருக்கு உடனே தகவல் அனுப்பப்பட்டது. வழி தவறிப்போனவை சிலகோத்திரங்கள்தாமே. இஸ்லாம் ஆழ வேரூன்றிக் கிடந்த அஸ்லம், கிஃபார், அஷ்ஜா, ஜுஹைனா, கஅப் மற்றும நுஃமானின் முஸைனா கோத்திரங்களுக்குத் தகவல் வந்து சேர்ந்ததுமே, குதிரைகள், ஒட்டகங்கள், போர்த் தளவாடங்கள் என்று மதீனாவின் வீதிகள் அக்கோத்திரங்களின் முஸ்லிம் வீரர்களால் நிறைந்தன.

அபூபக்ருவின் யூகம் தவறாகவில்லை. எதிரிகள் வந்து பேசிச் சென்று மூன்று நாட்கள்கூட ஆகியிருக்கவில்லை. அஸத், கத்ஃபான், அப்ஸ், திப்யான், பக்ரு கோத்திரங்கள் படை திரண்டனர். தீஹுஸ்ஸா என்ற பகுதியில் முகாம் அமைத்துக் கொண்டு குறிப்பி்ட்ட அளவிலான படை வீரர்கள் முதலில் மதீனாவை நோக்கிக் கிளம்பினர்.

நகருக்கு வெளியே இருந்த காவல் படைவீரர்கள் கிளம்பி வரும் ஆபத்தை உடனே கலீஃபாவுக்குத் தெரிவிக்க, "அங்கேயே இருங்கள். இதோ வந்துவிட்டேன்" என்று கலீஃபா அபூபக்ரும் இன்னும் சில போர் வீரர்களும் உடனே அங்கு விரைந்தனர்.

போன வேகத்தில் அப்படியே முஸ்லிம்களைத் துவட்டி துவம்சம் செய்துவிட்டு மதிய உணவை மதீனாவில் சாப்பிடலாம் என்று படு அலட்சியத்துடன் வந்த எதிரிகள் மதீனா நகருக்கு வெளியே அத்தகைய பாதுகாப்பையும் முஸ்லிம் போர்வீரர்களையும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மதீனா நோக்கிச் செல்லும் சாலையெங்கும் திறமையான முஸ்லிம் போர்வீரர்கள் காவல் நிற்க, துவங்கியது சண்டை! நிறைய நேரம் எடுக்கவில்லை. சற்று நேரத்திலேயே எதிரிகளை விரட்ட ஆரம்பித்துவிட்டனர் முஸ்லிம்கள். மிரண்டு திரும்பி ஓடஆரம்பித்தனர் எதிரிகள். விடாமல் அவர்களை விரட்டிக் கொண்டு சென்றது முஸ்லிம் படை. வெற்றிச் செய்தியை எதிர்நோக்கி முகாமிட்டுக் காத்திருந்த எதிரிப் படையின் இதர போர்வீரர்கள், மூச்சிரைக்க தங்களது படை ஓடிவருவதையும் அவர்களை முஸ்லிம் படையினர் ஆவேசமாய்த் துரத்திக் கொண்டு வருவதையும் பார்த்துத் திடுக்கி்ட்டு எழுந்தனர். தங்களுக்கு பலத்த உயிர்ச்சேதம் ஏற்படப் போகிறது என்று தெளிவாகத் தெரிந்தது.

உடனே ஒரு காரியம் செய்தார்கள். தங்களிடமிருந்த முரசுகளையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு ஆவேசமாய்க் கொட்ட ஆரம்பித்தார்கள். பயங்கரமான முரசு ஒலிகள். அத்திட்டம் சரியாக வேலை செய்தது. முஸ்லிம்களின் ஒட்டகங்கள் அவ்வொலியில் மிரண்டு திக்குத் தெரியாமல் ஓடத் துவங்கின. அவற்றையெல்லாம் சமாளித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குள் முஸ்லி்ம் படைகளுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. ஒருவழியாய் உயிரிழப்பு எதுவும் இல்லாமல் மதீனா திரும்பியது முஸ்லிம்களின் படை.

இதனிடையே முஸ்லிம்களை எப்படியும் வென்றுவிடுவோம் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த எதிரிகள் முன்னமேயே தில்-கிஸ்ஸா பகுதியிலிருக்கும் தங்கள் நண்பர்களுக்குத் தகவல் அனுப்பியிருந்தனர். “முஸ்லிம்கள் நோஞ்சான் நிலையில் இருக்கிறார்கள். வேறொரு வழிபிடித்துக் கிளம்பி வாருங்கள். பிய்த்து எறிந்துவிடலாம்" அந்த தில்-கிஸ்ஸா மக்களும் ஒரு படை திரட்டிக் கொண்டு மதீனா நோக்கி வர ஆரம்பித்தனர். இந்தப் படை அணியும் மதீனாவை எளிதாய்க் கைப்பற்றி விடலாம், பெரிதாய் எதிர்ப்பெல்லாம் இருக்காது என்று ஏகப்பட்ட நம்பிக்கையுடனும் அலட்சியத்துடனும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு விதி வேறுவிதமாய் மதீனாவில் காத்திருந்தது.

‘தம்பி உடையான படைக்கு அஞ்சான்’ என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு தம்பிக்குப் பதிலாய் அண்ணன் தம்பிகள் பத்துப்பேர் கிடைத்தால்? அபூபக்ரு ரலி படை திரட்டினார். வலப்பக்க அணிக்குத் தலைமை நுஃமான் இப்னு முகர்ரின். இடப் பக்க அணிக்கு அவர் சகோதரர் அப்துல்லா இப்னு முகர்ரின். காலாட் படைக்குத் தலைமை மற்றொரு சகோதரர் ஸுவைத் இப்னு முகர்ரின். மதீனாவிலிருந்து கிளம்பியது இந்தப் படை. எதிரிகளை அவர்கள் சற்றும் எதிர்பாராமல் தாக்கும் திட்டம் தீட்டப்பட்டது. எனவே முஸ்லிம் படையினர் படு கவனமாய் எச்சரிக்கையுடன் சப்தமே எழுப்பாமல் மிக மிக அமைதியாய் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர்.

இருள் முற்றிலும் விலகாத விடியற்காலை நேரம்.

தங்களது அருகில் நெருங்கிவிட்ட முஸ்லிம் படைகளின் குசுகுசுப்பான சப்தம்கூட கேட்காத நிலையில் இருந்த எதிரிகளை பாய்ந்து தாக்கியது முஸ்லிம் படை. “என்ன, ஏது" என்று உணர்வதற்குள் வாள்கள் சுழன்றன; ஈட்டிகள் பாய்ந்தன; அம்புகள் பறந்தன. எதிரிகளின் உடல்களை சரமாரியாகத் துளைக்க ஆரம்பித்தன.

பொழுது விடிந்து சூரியன் எழுவதற்குள் எதிரிகள் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் களத்தை வி்ட்டு ஓட, மீதமிருந்தவர்களை முஸ்லிம் படையினர் துரத்த, தில்-கிஸ்ஸாவரை எதிரிகளை ஓடஓட விரட்டினர் முஸ்லிம்கள். இறுதியில் எதிரிகளின் கால்நடைகள் முஸ்லிம்கள் வசமாயின.

பின்னர், அந் நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் ஒரு படைப்பிரிவை அப்பகுதியில் காவலுக்கு நிறுத்திவிட்டு கலீஃபா அபூபக்ரு மற்ற வீரர்களுடன் மதீனா திரும்பினார். இந்நிலையில் அலீ (ரலி) முக்கியமான ஆலோசனையொன்றை அறிவித்தார். கலீஃபா இத்தகைய அபாய நடவடிக்கைகளில் தாமே நேரடியாக ஈடுபடாமல் மற்ற தோழர்களைத் தளபதியாக அனுப்ப வேண்டும் என்ற அவரது ஆலோசனையை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு அதை அபூபக்ருவிடம் எடுத்துச் சொல்லித் தடுத்தனர்.

அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட அபூபக்ரு, காலீத் பின் வலீத், இக்ரிமா பின் அபூஜஹ்ல் போன்ற திறமையான பதினொரு தளபதிகள் தலைமையில் பல பகுதிகளுக்கும் படையனுப்பினார். அவர்களில் ஒருவர் நுஃமானின் சகோதரர் ஸுவைத் இப்னு முகர்ரின். அவரது தலைமையில் ஒரு படைப்பிரிவு திஹாமா பகுதிக்குச் சென்று போரிட்டது. பின்னர் முர்தத்கள் அனைவரின் மீதும் ஏககாலத்தில் முழுவீச்சில் போர் தொடுக்கப்பட்டு அவர்களது பிரச்சினை ஒருவழியாய் முடித்து வைக்கப்பட்டது.

கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்களுடன் காதிஸிய்யாவில் நிகழ்வுற்ற யுத்தம் சில பல அத்தியாயங்களுக்கு நீளும் தனி வரலாறு. சுவையான வீர வரலாறு.

பாரசீகம் நோக்கிச் சென்ற முஸ்லிம் படைகளும் போர்களும் பற்றி முன்னர் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம். பாரசீகத்தினுள் முஸ்லிம் படைகள் நுழைய ஆரம்பித்த நாளாய் பற்பல போர்கள். அவற்றுள் மிக முக்கியமான ஒன்றுதான் இந்த காதிஸிய்யா. பாரசீகர்களின் முதுகெலும்பை ஒடித்த யுத்தம் அது.

அப்போரில் முஸ்லிம் படைகளுக்குத் தலைவராக ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹுவை நியமித்தார் உமர். பிரம்மாண்டமான பாரசீகப் பேரரசின் வலிமையான படைகளை எதிர்கொள்ள முஸ்லிம் படைகள் தயாராகிக் கொண்டிருந்தன. அப்பொழுது ஸஅதுக்கு உமரிடமிருந்து கடிதமொன்று வந்தது.

“அவர்களுடைய வலிமையைப் பற்றிக் கேள்விபட்டு, அவர்களிடமுள்ள போர்த் தளவாடங்களின் பிரம்மாண்ட எண்ணிக்கையைக் கண்டு தயங்கவோ அஞ்சவோ வேண்டாம். அல்லாஹ்வின் உதவியை நாடுங்கள்; அவனிடமே நம்பிக்கைக் கொள்ளுங்கள். அறிவிலும் துணிவிலும் சிறந்த நம் தோழர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அந்த அரசனிடம் அனுப்பிவைத்து அவனை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலில் அழைப்பு விடுங்கள்"

கலீஃபா உமரின் ஆலோசனைப்படி ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் முதல் ஆள் நுஃமான் இப்னு முக்கர்ரின். மற்றவர்கள் பி்ஸ்ரிப்னு அபீரஹ்ம் அல் ஜுஹானி, ஹம்லா இப்னு ஜுவை அல்-கினானி, ஹன்ளலா இப்னு அர்-ரபீஉத்-தமீமி, ஃபுராத் இப்னு ஹிப்பான் அல்-அஜாலி, அதிய் இப்னு ஸுஹைல், அல்-முகீரா இப்னு ஸராரா.

மேற்கொண்டு ஏழுபேரை உமர் தேர்ந்தெடுத்து ஸஅதுக்குத் தகவல் அனுப்பினார். அவர்கள் அதாரிதிப்னு ஹாஜிப் அத்-தமீமி, அல்-அஷ்அத் பின் ஃகைஸ் அல்-கின்தி, அல்-ஹாரித் இப்னு ஹஸன் அத்-துஹாலி, ஆஸிம் இப்னு அம்ருத்-தமீமி, அம்ரிப்னு மஅதிகரிப் அஸ்-ஸுபைதி, அல்-முகீரா இப்னு ஷுஅபா அத்-தகஃபி, அல்-முஸன்னா இப்னு ஹாரிதா அஷ்-ஷைபானி.

முஸ்லிம்கள் சென்று சந்தித்துப் பேசவிருப்பது அக்கால வல்லரசு ஒன்றின் பேரரசனிடம். எனவே படுகவனமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அது. அறிவிலும் துணிவிலும் மதி நுட்பத்திலும் மிகச் சிறந்தவர்கள் அவர்கள். இந்தப் பதினாலுபேர் அடங்கிய முஸ்லிம்களின் பிரதிநிதிக் குழுவிற்கு அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாரசீகத் தலைநகர் மதாயின் வந்தடைந்தார்கள் அவர்கள். யஸ்தஜிர்தின் பேரவையில் சந்திப்பு நிகழ்ந்தது.

முன்னர் போர்களில் ஏற்பட்டிருந்த தோல்விகளால் ஏற்கெனவே உஷ்ணத்தில் இருந்தான் அவன். மொழிபெயர்ப்பாளரை அருகில் வைத்துக் கொண்டு அவர்களுடன் உரையாடினான். “உங்களை இங்கு வரவழைத்தது எது? எங்களது நிலத்திற்குள் இந்தளவு படையெடுத்து ஊடுருவ உங்களை ஊக்குவித்தது எது? நாங்கள் வேறு பல வேலைகளில் மும்முரமாய் இருப்பதால் எங்களைத் தாக்கலாம் என்று உங்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிட்டதோ?"

நுஃமான் தன்னுடன் வந்திருந்த தோழர்களை நோக்கி, “நீங்கள் விரும்பினால் நான் இவனிடம் பேசுகிறேன். அல்லது நீங்கள் யாராவது அவனிடம் பேச விரும்பினால் முன் செல்லவும்"

“நீங்கள் பேசுங்கள் நுஃமான்" என்றவர்கள் யஸ்தஜிர்திடம் இவர் பதிலுரைப்பார் என்று நுஃமானைக் காட்டினர்.

அல்லாஹ்விற்கு நன்றியும் புகழும் உரைத்துவிட்டு, அவன் தூதர் மீது ஸலாவத் சொல்லிவிட்டுப் பேச ஆரம்பித்தார் நுஃமான்.

“அல்லாஹ் எங்கள் மீது இரக்கம் கொண்டான்; தூதர் ஒருவரை அனுப்பினான். அவர் எங்களுக்கு நேர்மையைக் கற்றுத் தந்தார்; அதை ஒழுகும்படி கட்டளையிட்டார். தீமைகளைப் பற்றி எச்சரித்தார்; அதையெல்லாம் நாங்கள் கைவிட எங்களுக்குக் கட்டளையிட்டார். மிக சொற்ப காலத்தில், அல்லாஹ் எங்களது ஏழ்மையை நீக்கி வளம் அளித்தான்; கீழ்நிலையிலிருந்த எங்களுக்கு கீர்த்தி அளித்து உயர்த்தி வைத்தான்; எங்கள் மத்தியில் நிலவிய விரோதத்தையும் போரையும் சகோதரத்துவமாகவும் கருணையாகவும் மாற்றிவிட்டான்.

“அவர் அழைப்பிற்கு இணங்கி நாங்கள் அடிபணிந்து நடந்தால் அல்லாஹ் எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு அளிப்பான் என்று சத்தியவாக்கு அளித்துள்ளார். சில கோத்திரங்கள் ஏற்றுக் கொண்டனர்; வேறு சிலர் மறுத்துவிட்டனர். அவரை எதிர்த்த அரபு மக்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்க எங்களுக்கு உத்தரவிட்டார். முதலில் அந்த அரபு மக்களிடமிருந்து எங்கள் பணியைத் துவக்கினோம். தொடக்கத்தில் சிலர் விருப்பமின்றி இம்மார்க்கத்தில் இணைந்து அதன்பிறகு இதிலுள்ள உன்னதத்தை உணர்ந்து தங்களது முடிவு தவறில்லை என்று பெருமகிழ்வடைந்தார்கள். வேறுசிலர் துவக்கத்திலேயே விருப்பத்துடன் இணைந்து அனைத்து நன்மைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

“பின்னர் அண்டை தேசத்து மக்களை அழைக்க அவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். நீங்கள் எங்களது அண்டை நாட்டுக்காரர்கள். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறோம். நல்லொழுக்கத்தைப் பண்பாய் போற்றும் மார்க்கம் இது. அதை நோக்கியே மக்களை ஊக்குவிக்கிறது. கீழ்மை, அற்பத்தன்மையை எல்லாம் இம்மார்க்கம் நிந்திக்கிறது. அவற்றிலிருந்து விலகிவிடும்படி இது நம்மை எச்சரிக்கிறது. இதை ஏற்றுக் கொள்பவர்கள் அநீதியிலிருந்தும் ஏகஇறை நம்பிக்கையற்ற இருட்டிலிருந்தும் விலகி, நீதியும் ஒளிவாய்ந்த இறைநம்பிக்கையும் உள்ள இடத்தை வந்தடைவார்கள்.

“நீங்கள் எங்களது இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொண்டால், அல்லாஹ்வின் வேதத்தை தங்களிடம் விட்டுச் செல்வோம். நீங்கள் அதற்குப் பாதுகாப்பாளன் ஆவீர்கள். அதன் சட்டதிட்டப்படி நடப்பது உங்களது கடமையாகிறது. உங்களது காரியங்களை நீங்களே நிர்வகித்துக் கொள்ளலாம். எங்களது தலையீடு இருக்காது.

“நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நிர்ணயிக்கப்படும் ஜிஸ்யா வரியை நீங்கள் எங்களுக்குச் செலுத்த வேண்டும். நாங்கள் உங்களுக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளிப்போம்.

“அதையும் மறுத்தால், போர் ஒன்றே தீர்வு"

இவை அத்தனையையும் கேட்ட யஸ்தஜிர்து கோபத்தில் துடித்தான். ‘யார் இவர்கள்? எங்கிருந்து கிளம்பி வந்தார்கள்? நாம் யார்? நம் அந்தஸ்து என்ன? பெருமை என்ன? கீர்த்தி என்ன? யாரைப் பார்த்து என்ன பேச்சு இது?’

யஸ்தஜிர்து பேசினான்:

“உலகத்திலேயே உங்களைப் போன்ற கீழ்த்தரமான மக்கள் இருந்ததில்லை. குறைந்த எண்ணிக்கையில் இருந்தீர்கள். துண்டு துண்டாய்ப் பிரிந்து போய்க் கிடந்தீர்கள். ஏழ்மையில் உழன்றுக் கொண்டிருந்தீர்கள். எங்களது மாநில ஆளுநர்களுக்குக் கீழ்படிந்து கிடந்தீர்கள். அவர்களும் உங்களை இலகுவாய் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் பாரசீகத்தை எதிர்த்து நிற்பதையெல்லாம் கனவிலும் நீங்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது நீங்கள் எங்களை வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால் அது உங்களுடைய மிகப் பெரிய முட்டாள்தனமாகும்"

சற்று நிதானப்பட்டவன், பரிதாபப்பட்டவனாக, “வறுமையினால் துன்பப்படுகிறீர்கள் என்றால் சொல்லுங்கள். உங்களது நிலைமை சீரடையும்வரை நாங்கள் உண்ண உணவளிப்போம். உடுத்த உடை அளிப்போம். உங்களின் தலைவர்களைக் கௌரவிப்போம்; உங்களை கனிவுடன் நடத்தி நிர்வாகம் செய்ய ஓர் அரசனையும் நியமிப்போம்"

முகீரா இப்னு ஸராரா எழுந்து நின்றார். “நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். சொல்லப்போனால் அதைவிட மோசமான நிலையிலிருந்தோம். அதெல்லாம் கடந்த காலம்" என்று சொல்லிவிட்டு பின்னர் அல்லாஹ் தன் கருணையினால் எப்படித் தங்களை உயர்த்தினான் என்பதையெல்லாம் விவரித்து, இறுதியில் நுஃமான் சொன்னதையே மீண்டும் கூறினார்.

அதற்குமேல் அவனால் பொறுக்க முடியவில்லை.

“பிரதிநிதிக் குழு கொல்லப்படக் கூடாது என்ற நடைமுறை மட்டும் இல்லாதிருப்பின் உங்களையெல்லாம் நான் கொன்றிருப்பேன். உங்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. திரும்பிச் செல்லுங்கள்" ம்ஹூம், போதாது; வெறுமனே இவர்களை அதட்டி அனுப்பினால் போதாது. அவமானப்படுத்த வேண்டும்! அவர்களது முகத்தில் மண் பூச வேண்டும் என்று கதறியது அவன் மனம்.

“மூட்டை நிறைய மண் எடுத்து வாருங்கள்"

உடனே எடுத்து வந்தார்கள் சேவகர்கள். “இவர்களது குழுவில் உயர்குடி வகுப்பினன் எவனோ அவனது முதுகில் மணல் மூட்டையை ஏற்றி வைத்து, மக்களெல்லாம் காணும் வகையில் இவர்களை மதாயின் நகரை விட்டே துரத்துங்கள்"

விரைந்து எழுந்தார் ஆஸிம் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு. "இந்தக் குழுவில் உயர்குடியைச் சேர்ந்தவன் நானே" என்று பரிசு வாங்கச் செல்பவர்போல் அந்த மணல் மூட்டையைப் பெருமிதமாய் ஏற்றுக் கொள்ள, மக்களெல்லாம் பரிகாசமும் நையாண்டியுமாய்ப் பார்க்க அந்தத் தூதுக்குழு தங்களது படை முகாமிற்குத் திரும்பியது. படைத் தலைவர் ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆவலுடன் கேட்டார், “சென்ற காரியம் என்ன ஆயிற்று?"

"மனம் மகிழுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ், அவர்களது அரசாங்கத்தின் சாவியை நம்மிடம் ஒப்படைத்துவிட்டான்" என்று மணல் மூட்டையை இறக்கி வைத்தார் ஆஸிம்.

அதன் பிறகு ருஸ்தம் தலைமையில் மிகப் பெரும்படை கிளம்பி வந்ததும், மகா உக்கிரமான போர் காதிஸிய்யாவில் நிகழ்வுற்றதும் அதில் முஸ்லிம்கள் அசகாய வெற்றி பெற்றதும் இறுதியில் ருஸ்தம் கொல்லப்பட்டதும் அவையெல்லாம் அத்தியாயம் அத்தியாயமாய் விரியும் தனி வரலாறு.
oOo
தொடர்ந்து பாரசீகத்தின் உள்ளே சிறிது சிறிதாக முன்னேறிச் சென்று கொண்டேயிருந்தன முஸ்லிம் படைகள். எப்படியாவது ஒருகட்டத்தில் முஸ்லிம் படைகளைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும், அவர்களை வென்று பாரசீகத்திலிருந்து விரட்டிவிட வேண்டும், என்ன செய்யலாம்? என்று கவலையுடன் யோசித்துக் கொண்டேயிருந்தான் யஸ்தஜிர்த்.

“அடுத்தக்கட்டப் போருக்குத் தயாராகுங்கள்!" என்று அறிவித்து விட்டான். ரம்ஹொர்முஸ் என்ற நகரில் ஹுர்முஸான் தலைமையில் பாரசீகப் படைகள் தயாராயின. இச்செய்தியை ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு, கலீஃபா உமருக்குத் தகவல் தெரிவிக்க, மதீனாவிலிருந்து போர்க் கட்டளைகள் விரைந்து வந்தன.

பஸ்ரா நகரிலிருந்து ஸஹ்லிப்னு அதிய்யி தலைமையில் ஒரு படையை அனுப்பி வைக்கும்படி அபூமூஸா அல்அஷ்அரீக்குக் கட்டளையிடப்பட்டது. அதே நேரத்தில் கூஃபா நகரிலிருந்து அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் ஒரு படை புறப்பட வேண்டும். இந்த இருபடைகளும் ரம்ஹொர்முஸ் நோக்கி முன்னேற வேண்டும். இருபடைகளும் ஓர் இடத்தில் இணைந்து, அந்த ஒருங்கிணைந்த படைக்கு, நபியவர்களோடு பலபோர்களில் கலந்துகொண்ட அபூஸப்ரா இப்னு அபீருஹ்ம் அல்ஆமிரீ தலைமை ஏற்க வேண்டும்.

அதன்படி கூஃபா நகரிலிருந்து அந்நுஃமான் தமது படையுடன் ரம்ஹொர்முஸ் நோக்கிப் புறப்பட்டார்.

இந்தச் செய்திகளையெல்லாம் அறிந்த ஹுர்முஸான் திட்டம் தீட்டினான். பஸ்ரா நகரிலிருந்து வரும் படை நுஃமானின் படையுடன் ஒன்றிணைந்துவிட்டால் முஸ்லிம்களது பலம் அதிகமாகிவிடுமே என்று அவனுக்குக் கவலை. நுஃமானின் படையை வழியிலேயே சந்தித்து முறியடித்துவிட்டால்? காரியம் எளிதாகிவிடும்! எனவே அவன் தனது படைகளுடன் நுஃமானின் படையை எதிர்கொள்ளக் கிளம்பிச் சென்றான். அர்பக் எனும் பகுதியில் இரு படைகளும் மூர்க்கமாய் முட்டிக்கொண்டன. கடுமையான யுத்தம் மூண்டது. அந்தப் போரில் நுஃமான் ஹுர்முஸானை வென்றார். போர் தோல்வியில் முடிந்ததும் அங்கிருந்து தப்பித்த ஹுர்முஸான் ரம்ஹொர்முஸுக்குத் திரும்பாமல் தஸ்தர் எனும் நகருக்கு ஓடினான். பின்தொடர்ந்தது நுஃமானின் படை.

பின்னர் தஸ்தர் வெற்றி கொள்ளப்பட்டதும் அப்போரில் மற்றொரு தோழரின் வீரசாகசமும் முன்னர் படித்தது நினைவிருக்கிறதா? அவர் ???????????? ???????? ????? .
oOo
காதிஸிய்யாப் போருக்குப்பின் நான்கு ஆண்டுகள் கழித்து மற்றொரு பெரும் போர் நிகழ்ந்தது. அது நஹாவந்த் போர். அந்த நான்கு ஆண்டுகளும் பாரசீகப் படைகளைத் துரத்தித் துரத்தி, மூச்சுவிடக்கூட அவர்களுக்கு அவகாசம் அளிக்காமல் போருக்குமேல் போர் புரிந்து நகருக்கு மேல் நகரங்களைக் கைப்பற்றி, பாரசீகத்தின் வெகுஉள்ளே ஊடுருவி விட்டிருந்தனர் முஸ்லிம்கள். அந்தத் தோல்விகளும் அவமானமும் பாரசீகர்களை அளவிலாத கோபத்திலும் விரக்தியிலும் ஆழ்த்தியிருந்தன.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத யஸ்தஜிர்தோ மீண்டும் பெரும் படையொன்றைத் திரட்டினான். இலட்சத்து ஐம்பதினாயிரம் வீரர்கள் அடங்கிய பெரும்படை. அவர்களுக்கு ஃபைரஸான் என்பவனைத் தளபதியாக நியமித்தான். போர்க் களமாக நஹாவந்த் குறிக்கப்பட்டது.

இதனிடையே கஸ்கர் எனும் நகருக்கு அந்நுஃமானை ஆளுநராக நியமித்திருந்தார் கலீஃபா. உமர், தம் ஆளுநர்களைத் தேர்ந்தெடுக்கும் லாவகமே தனிக் கட்டுரை சமாச்சாரம். அதில் முக்கியமான ஒரு விஷயம் - உமர் ஒருவரை ஆளுநராய் நியமிக்கிறார் என்றால் அது அவரது தரத்திற்கான மாபெரும் சான்று.

ஒருகாலத்தில் ஒரு கோத்திரத்திற்கே தலைவராக இருந்தவர் நுஃமான். மக்களை ஆண்டவர்; தலைமைக்குரிய பெருமிதங்களை அனுபவித்தவர். பின்னர் இஸ்லாத்தில் நுழைந்தபின் ஓய்வு ஒழிச்சலற்ற ஓட்டம், இடைவிடாத போர் என்றாகிப்போனது வாழ்க்கை. அவையெல்லாம் எத்தகைய களைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்? இந்நிலையில் அதிகாரமும் பதவியும் கிடைத்தால் அதைப் பெற்றுக்கொண்டு, இறுமாப்பெல்லாம் இல்லாது போகட்டும், ‘உஸ்... அப்பாடா..' என்று சாய்ந்து அமர்ந்து கொண்டு சேவகர்களை ஏவல் புரிந்து நிர்வாகம் பார்த்துவிட்டு, சொகுசை அனுபவித்திருக்க வேண்டுமல்லவா? இதென்ன பதவி, அந்தஸ்து, சொகுசு என்று அதெல்லாம் நுஃமானுக்குக் கொஞ்சம்கூட சரிப்பட்டு வரவில்லை. தம் மன உளைச்சலை உமருக்குக் கடிதம் எழுதினார்:

‘எனக்கும் கஸ்கருக்குமான உவமை என்ன தெரியுமா? இளைஞன் ஒருவன் அலங்காரமும் நறுமணமும் பூசிக் கொண்டு மினுமினுக்கும் ஓர் அழகிய பரத்தையின் பக்கத்தில் இருப்பதைப் போன்றுள்ளது என் நிலை. உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அல்லாஹ்விற்காக என்னை எனது இந்தப் பதவியிலிருந்து விடுவித்து முஸ்லிம் படைகளிடம் அனுப்பிவையுங்கள்"

அவரின் இறையச்சத்தை, அவரின் இந்த மனோபாவத்தை இதைவிடச் சிறப்பாய் வேறெந்த வரிகள் விவரித்துவிட முடியும்? நாமெல்லாம் வாழ்க்கையில் எதை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? அவர், ரலியல்லாஹு அன்ஹு!

நஹாவந்த் போர் ஆயத்தச் செய்தி மதீனா வந்தடைந்த நேரத்தில்தான் நுஃமானிடமிருந்தும் கடிதம் வந்து சேர்ந்தது. உமர் தம் ஷூரா குழுவினருடன் ஆலோசித்தார். அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் முஸ்லிம் படைகள் பாரசீகர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவானது.

பதிலெழுதினார் உமர். “நஹாவந்த் செல்லுங்கள். அங்குள்ள நம் படைக்குத் தலைமையேற்றுக் கொள்ளுங்கள்"

அப்படையின் குழுத் தலைவர்களாய் ஹுதைஃபா இப்னுல்-யமான், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹும் நியமிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் படையில் முப்பதாயிரம் வீரர்கள் இருந்தனர். இலட்சத்து ஐம்பதினாயிரம் வீரர்களை எதிர்த்து முப்பதாயிரம் வீரர்கள்! நுஃமான் தலைமையில் அந்தப் படை நஹாவந்த் வந்தடைந்தது.

நஹாவந்த் பலமான அரண் கொண்ட நகர். உயர்ந்த நெடிய சுவர். ஆழமான அகழி. தவிர குதிரைகள் முன்னேற முடியாத வகையில் கூர்மையான இரும்பு முள்கள் நிலங்களில் பரப்பி மறைத்து வைக்கப்பட்டன. சுவர்களின் மேலே திறமையாய் அம்பெய்யும் பாரசீக வீரர்கள் தகுந்த இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

விரைந்த முன்னேறிவந்த முஸ்லிம்களின் குதிரைப்படை இரும்பு முள் குத்தி, நிலைகுத்தி நின்றுவிட்டது. திறமையான தற்காப்பு நடவடிக்கை அது. நகரின் அரண் சுவரை நெருங்கவிடாமல் தடுக்கும் இரும்பு முள்கள், அதைத் தாண்டி அகழி என்று இவற்றையெல்லாம் சமாளித்து சில முஸ்லிம் வீரர்கள் சுவரருகே நெருங்கினால் மேலிருந்து அம்புகள் மழையாய்ப் பொழி்ந்து தாக்கின.

பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாமல் இப்படியே இரண்டு நாள் கழிந்தது. படைத் தலைவர்களையெல்லாம் அழைத்து ஆலோசனை நிகழ்த்தினார் நுஃமான். அப்பொழுது துலைஹா இப்னு குவைலித் அல்-அஸதி ஒரு யோசனையை முன்வைத்தார்.

“முஸ்லிம்களின் குதிரைப்படை பாரசீகர்களுடன் சண்டையைத் துவங்க வேண்டும். அவர்கள் தூண்டப்பட்டு நகரின் சுவருக்குப் பின்னாலிருந்து வெளிவருவார்கள். அவர்களைக் கண்டதும் பயந்து பின்வாங்குவதுபோல் குதிரைப்படை பின்வாங்க வேண்டும். அதைக் கண்டால் பாரசீகர்கள் என்ன செய்வார்கள்? ‘விடாதே! துரத்து!’ என்று பின் தொடர்ந்து துரத்த ஆரம்பிப்பார்கள். அது அவர்களை அவர்களது அரணை வி்ட்டு, தொலைவிற்கு இட்டு வந்துவிடும். முஸ்லிம்களின் படையொன்று அங்கு மறைந்திருக்க வேண்டும். அப்பொழுது பாரசீகர்களை மறைந்துள்ள முஸ்லிம்களின் படை திடீரென்று வந்து தாக்கத் துவங்கினால் மீண்டும் தங்களது அரணுக்குள் ஓடிவிட முடியாத நிலை பாரசீகர்களுக்கு ஏற்படும். முடித்துவிடலாம்"

மற்றொரு குறிப்பில், "இரவு கவிழ்ந்ததும் தீப்பந்தம் ஏற்றுங்கள். எதிரியின் கவனத்தைக் கவரும்படி நிறைய தீப்பந்தங்கள் எழட்டும். அதை ஏந்திக்கொண்டு வேகமாய்ப் பின்வாங்குங்கள். பயந்து பின்வாங்கும் முஸ்லிம்களைப் பிடித்து விடவேண்டும் என்று ஆசையில் அவர்கள் வெளியே ஓடிவருவார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் அடிநாதம், எதிரிப்படைகளை அவர்களது அரணுக்கு வெளியே தந்திரமாக வரவழைப்பது.

அந்த யோசனை நுஃமானுக்குப் பிடித்திருந்தது. உடனே காரியங்கள் நடைபெறத் துவங்கின. தனது படையை மூன்று குழுவாகப் பிரித்தார் நுஃமான்.

முதல் பிரிவுக்குத் தலைவராக காஃகா இப்னு அம்ரு. இப்பிரிவு குதிரைப்படை. இவர்களது பணி எதிரிகளின் அரண் சுவரைத தாக்கி போரைத் துவங்க வேண்டும்.

இரண்டாவது பிரிவுக்கு நுஃமான் தலைவர். இந்தப் படையினர் தகுந்த இடங்களில் பதுங்கி மறைந்திருக்க வேண்டும். எதிரிகள் நெருங்கியதும் களத்தில் குதித்து அவர்களுடன் நேருக்கு நேரான போர் தொடுப்பது என்று முடிவானது.

மூன்றாவது பிரிவு மற்றொரு குதிரைப் படை. இவர்கள் முஸ்லிம் படைகளிலேயே வலிமையான வீரர்கள். இவர்களும் தூரத்தில் மறைந்திருக்க வேண்டும். எதிரிகள் நெருங்கியதும் அவர்களின் இருபுறமிருந்தும் தாக்குதல் தொடுக்க வேண்டும்.

"எல்லோரும் அவரவர் இடங்களில் பதுங்கிக் கொள்ளவும். நான் உத்தரவு அளிக்கும்வரை சண்டையைத் துவங்கக் கூடாது" என்று கட்டளையிட்டார் நுஃமான். நபியவர்களிடம் பயின்ற தோழர் அவர்.

“நான் மூன்று முறை தக்பீர் உரைப்பேன். முதல் தக்பீரில் தயாராகி விடுங்கள். இரண்டாவது தக்பீருக்கு உங்கள் ஆயுதங்களை உருவிக் கொள்ளுங்கள். மூன்றாவது தக்பீரில் நாம் அனைவரும் ஒரே நேரத்தில் எதிரிகளின் மீது பாய்வோம்"

காஃகா (ரலி) தம் வேலையைச் சிறப்பாக ஆரம்பித்தார். மிகுந்த சாதுரியத்துடன் காரியமாற்றினார். தமது குதிரைப் படையுடன் அவர் பின்வாங்குவதைக் கண்ட பாரசீகர்கள் உற்சாகமடைந்தார்கள். "பிடியுங்கள் அவர்களை" என்று தாங்கள் நிலத்தில் பரப்பி வைத்திருந்த இரும்பு முள்களை தாங்களே அகற்ற ஆரம்பித்தனர். குதிரைகளில் ஏறி முஸ்லிம்களைத் துரத்த வேண்டுமல்லவா? முஸ்லிம் வீரர்களுக்குத் தங்களது குதிரைப் படையைச் செயலிழக்க வைத்த இரும்பு முள் பிரச்சினை அகன்றது.

‘ஹோ’வென்று கடலலைபோல் பாரசீகப் படைகள் பாய்ந்து வெளியே ஓடிவந்து முஸ்லிம்களைத் துரத்த ஆரம்பித்தன. நன்றாக அவர்களை முன்னேறி வரவி்ட்டுக் காத்திருந்தது மறைந்திருந்த முஸ்லிம்களின் படை. அவர்கள் எளிதில் பின்வாங்கி அரணுக்குள் நுழைந்து கொள்ள முடியாத தூரத்தில் வந்ததுதான் தாமதம், உரத்து எழுந்தன மூன்று தக்பீர்கள். களத்தில தொம் தொம்மென்று வந்து குதித்தனர் நுஃமான் தலைமையிலான முஸ்லிம் படையினர். அதேநேரம் எதிரிகளின் இருபுறமிருந்தும் மறைந்திருந்த குதிரைப் படையினர் பாய்ந்தோடி வந்தனர். பின்வாங்குவதைப்போல் ஓடிக்கொண்டிருந்ததே காஃகா தலைமயிலான படை, அது சரேலெனத் திரும்பி நின்று எதிரிகளை நேருக்குநேர் நிமிர்ந்து பார்த்தது.

துவங்கியது மகா யுத்தம். எங்கிருந்து வந்தார்கள், எப்படி வந்தார்கள் என்று தெரியாமல் நாலாபுறமும் வசமே சூழப்பட்டனர் பாரசீகர்கள். என்ன ஏது என்று அடுத்து யோசிப்பதற்குள் வாள்கள் சுழல ஆரம்பித்தன. வீறுகொண்ட வேங்கையைப்போல் களத்தில் சுழன்று கொண்டிருந்தார் நுஃமான். வரலாறு பத்திரமாய்ப் பதிவு செய்து வைத்துள்ள மிக உக்கிரமான போர் அது. சரசரவென எதிரிகளை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தது முஸ்லிம்களின் படை. ஆட்டுக்கல்லில் அகப்பட்ட தானியத்தின் நிலைதான் அன்று பாரசீகர்களின் நிலை. உயிரற்ற உடல்கள் சரமாரியாக நிலத்தில் வீழ்ந்து கொண்டிருந்தன. குருதி பெருக்கெடுத்து ஓடியது. நிலமெங்கும் சடலங்கள். தப்பித்து ஓடியவர்களும் தாங்கள் வெட்டி வைத்திருந்த அகழியிலேயே வீழ்ந்து மடிந்தனர். துணியைக் கிழித்தெறிவதுபோல் அந்தப் போரில் பாரசீகப் படை கிழித்தெறியப்பட்டது. பாரசீகப் படைத் தலைவன் ஃபைரஸானை காஃகா பின்தொடர்ந்து சென்று பிடிக்க, அவன் கதை முடிந்தது.

குதிரையின்மேல் அமர்ந்து நுஃமான் போரிட்டுக் கொண்டிருக்க ஓர் அசந்தர்ப்ப தருணத்தில் அவரது குதிரை தடுமாறி விழுந்துவிட்டது. கீழே விழுந்த அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு அங்கேயே அப்பொழுதே வீரமரணம் அடைந்தார். அதைக் கண்டுவிட்ட நுஃமானின் சகோதரர் உடனே ஒரு காரியம் செய்தார். நுஃமானின் கையிலிருந்த கொடியை தாம் ஏந்திக் கொண்டு, நுஃமானின் சடலத்தை ஒரு துணி கொண்டு மறைத்து அதை முஸ்லிம்கள் காணாமல் மறைத்து விட்டார்.

போரெல்லாம் முடிந்து வெற்றியடைந்தவுடன்தான் முஸ்லிம்கள் தங்களின் படைத் தலைவரைத் தேட ஆரம்பித்தனர். நுஃமானின் சகோதரர் துணியை விலக்கி, “இதோ உங்கள் படைத்தலைவன். வெற்றியைத் தரிசிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய அல்லாஹ் வீரமரணத்தையும் அவருக்குப் பரிசளித்துள்ளான்" என்று சத்தியம் சொன்னார்.

கலீஃபா உமருக்கு செய்திகள் அறிவிக்கப்பட்டன. நுஃமானின் மறைவைக் கேட்டு “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" என்றவர் கண்ணீர்விட்டு அழுதார். வேறு யாரெல்லாம் வீரமரணம் அடைந்தார்கள் என்று விசாரிக்க, பட்டியல் தெரிவிக்கப்பட்டது.

“முஸ்லிம்கள் மத்தியில் அவர்கள் பரிச்சயமில்லாதவர்களாக இருக்கலாம். அதனாலென்ன? அவர்களுக்கு வீரமரணத்தைப் பரிசாய் அளித்த அந்த ஒருவனுக்கு அவர்களின் முகமும் மரபும் வமிசமும் நன்றாகவே தெரியும். உமர் அறிந்தால் என்ன, அறியாவிட்டால் என்ன?" என்றார் உமர்.

சொகுசெல்லாம் புறந்தள்ளி, வாழ்வெல்லாம் போராக, ஒவ்வொரு கணமும் இறைப்பணியாக வாழ்ந்து வீரமரணம் எய்தி, இவ்வுலகிலிருந்து மறைந்தார் அந்நுஃமான் இப்னு அல் - முகர்ரின்.ரலியல்லாஹு அன்ஹு.....


Read More Add your Comment 1 comments


 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed