வேண்டாம் கந்தூரி உரூஸ்.



வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
ஜவாஹிர். ஜமாலி.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

'"நபி வழி நடந்தால் நரகமில்லை இதை நாடாத பேருக்கு சொர்க்கமில்லை சொர்க்கமில்லை'" என்று ஒரு கவிஞர் பாடிய பாடலை நம் இஸ்லாமிய பெருமக்கள் மிகவும் ரசித்துக் கேட்கின்றனர். ஆனால் இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தவரின் வாழ்க்கை நம்முடைய நபி முகம்மது: (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் அமைந்திருக்கிறதா என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
வேண்டாம் மாற்று மதக் கலாச்சாரங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '"யார் பிற சமுதாயத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறார்களோ அவன் அவர்களைச் சார்ந்தவனே '" (நூல் : தப்ரானீ)

அன்பிற்குரிய இஸ்லாமிய பெரியோர்களே தாய்மார்களே நபியவர்கள் கூறிய மேற்கண்ட ஹதீஸை சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் தர்ஹா கந்தூரி எனக் கொண்டாடுகின்றீர்களே இதற்கும் மாற்று மதத்தவர்கள் கொண்டாடக்கூடிய திருவிழாக்களுக்கும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கிறதா?

அவர்கள் யானையோடு உற்சவம் கொண்டாடுகிறார்கள். நீங்கள் யானையோடு சினிமாப்பாட்டுக்களை கொட்டடித்துக் கொண்டு கொடியேற்றுவிழா கொண்டாடுகிறீர்கள். அவர்கள் தேர் இழுத்தால் நீங்கள் சந்தணக் கூடு உரூஸ் கொண்டாடுகிறீர்கள். அவர்கள் சிலைக்கு பட்டுடுத்தி மாலை போட்டால் நீங்கள் கப்ருக்கு பச்சை போர்வை போர்த்தி பூ போடுகின்றீர்கள். அவர்கள் சிலைகளிடம் பிரார்த்தனை செய்தால் நீங்கள் கப்ரிலே கையேந்துகிறீர்கள்.

அவர்களுடைய விழாக்களிலே ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கண்டுகளித்தால் நீங்களும் தர்ஹாக்களிலே ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கண்டுகளிக்கிறீர்கள். இப்படி மாற்று சமுதாயத்தவர்களுக்கு ஒப்பாக நடத்தப்படும் தர்ஹா திருவிழாக்கள் நபியவர்கள் காட்டித் தந்தவையா? பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதோ கப்ருகளை தர்ஹாக்களாக கட்டி வழிபாடு நடத்துவர்களைப் பற்றி நபியவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

கட்டப்பட்ட கப்ருகளை தரைமட்ட மாக்குங்கள்.
'"உயர்ந்திருக்கின்ற எந்தக் கப்ரையும் தரைமட்டமாக ஆக்காமல் விட்டுவிடக்கூடாது'" என்று எனக்குக் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : அலி (ரலி) நூல் : முஸ்லிம் (1609)

தர்ஹா கட்டி கந்தூரி கொண்டாடாதீர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '"எனது கப்ரை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது சலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய சலவாத்து எனக்கு எடுத்துரைக்கப்படும்.. '"
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அபூதாவுத் (1746)

தர்ஹா கட்டினால் இறைவனின் சாபம் ஏற்படும்.
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது '"யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை தர்ஹாக்களாக ஆக்கிவிட்டனர் என்று கூறினார்கள்.. '"
அறிவிப்பர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (1330)

நபியவர்கள் தன்னுடைய கப்ரைக் கூட விழாக் கொண்டாடக் கூடிய இடமாக ஆக்கிவிடக்கூடாது என எச்சரிக்கை செய்திருக்கும் போது இன்றைக்கு நாம் யார் யாருக்கெல்லாமோ தர்ஹாக்கள் கட்டி விழாக் கொண்டாடுகிறோமே இது எவ்வளவு பெரிய பாவச் செயல் என்பதை இஸ்லாமியப் பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இறந்தவர்கள் நம்முடைய துஆவைக் கேட்கமாட்கள்.
அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். . நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (அல் குர்ஆன் 35 : 13, 14)

மேற்கண்ட வசனத்தை சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி இறந்தவர்கள் யாரை அழைத்தாலும் அவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்றும் மறுமையில் இறைவனிடம் நமக்கு எதிராக வருவார்கள் எனவும் இறைவன் தெளிவாகக் கூறியிருக்கும் போது இன்றைக்கு அல்லாஹ்விடம் கையேந்தாமல் தர்ஹாக்களிலே கையேந்தக் கூடிய என்சமுதாய பெரியோர்களே தாய்மார்களே இது இறைவனுக்கு செய்யக்கூடிய மாபெரும் இணைகற்பித்தல் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த இணை கற்பிக்கும் மாபதகச் செயலில் ஈடுபட்டால் இறைவன் அதனை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான். இப்படிப்பட்டவர்கள் ஒரு போதும் சொர்க்கம் புகமுடியாது என இறைவன் எச்சரிக்கை செய்கின்றான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4: 48)

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' (அல்குர்ஆன் 5 : 72)

எனவே இது போன்ற தர்ஹா கந்தூரி வழிபாடுகளை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளையும் குடும்பங்கயையும் கரிக்கும் நரக நெருப்பை விட்டும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66 :6)




Share your views...

0 Respones to "வேண்டாம் கந்தூரி உரூஸ்."

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed