ஏப்ரல் பூல் ? முட்டாள்கள் தினம்.
இஸ்லாத்தில் ஏற்புடையதா??
வன்னியின் அழைப்பாளன். k.m. ஜவாஹீர் (ஜமாலி)
மனித குலத்தின் ஈருல வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திரு மறைக் குர் ஆன் ஜாஹியாக்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை ஏற்படுத்திய மாற்றங்களையும் சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்று விடும்.
நாங்கள் வாழுகின்ற சமகால, தேசிய, சர்வதேச சமூக அமைப்புக்கள். இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான ஜாஹிலிய்யத்தின் அடிப்படை அடித்தலத்தில் அமைந்திருப்பதை அவதானிக்கின்றோம்.
அறிவும், ஆராய்ச்சியும் அமோகமாய் முன்னேறிய இன்றைய கால கட்டத்தில் மனிதர்களில் ஒரு சாரார் மௌட்டீகத்திற்கும், பிற்போக்கு சிந்தனைகளுக்கும் கூஜா தூக்குகின்ற அவல நிலையை இன்று கண்கூடாகக் கான்கிறோம். கற்காலத்திலிருந்து பொற்காலத்திற்குத் தாவிய மனிதன் மீண்டும் கற்காலத்திற்கே செல்கிறானோ என அவதானிகள் சிந்திக்குமளவிற்கு மனித குலம் இன்று பாழ்பட்டுப் போயுள்ளது.
கொள்கையற்ற மனிதர்களை கவனிப்பாரற்று விட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட உயர்ந்த மார்க்கமாகிய இஸ்லாமியக் கொள்கையில் வாழுகின்றோம். எனக்கூறும் முஸ்லிம்களின் நிலையோ மேற்கத்தயக் கலாசாரத்தை விட ஒரு படி முன்னேறிக் காணப்படுகின்றமை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.
நவீன நாகரீகம் என்ற பெயரில் இறைஞர் யுவதிகளிடத்தில் கட்டுப்பாடற்ற உறவைத் தோற்றுவிக்கும் அபாயமும், ஆடைக்குறைப்பும், ஒழுக்கச் சீர் கேடுகளும் இன்று பரந்து காணப்படுகின்றது. முஸ்லீம்களைப் பாதுகாக்க வேண்டுமெனின் இன்றைய முஸ்லீம் பாடசாலைகள் இஸ்லாமிய மயப்படுத்தப் படவேண்டும்.
இன்று பல் வேறுபட்ட சமூகத் தீமைகளுக்கு வளி கோர்ப்பது கட்டுப்பாடற்ற ஆண் - பெண் உறவாகும். கல்வி கற்க பாடசாலை செல்லும் அதிகமான மாணவர்களின் புத்தகப் பையில் (school bagளுஉhழழட டீயப) சினிமா நட்சத்திர காவாலிகளின் வண்ணப் புகைப் படங்கள், கிரிக்கட் ஹீரோக்களின் ஸ்டிக்கர்கள், அழகு சினிமா விபச்சாரிகளின் ஆபாஸ அசிங்கமான போட்டோக்கள். விரஸமான ஆபாஷ நூற்கள், மஞ்சல் பத்திரிகைகள், பாட்டுப் புத்தகங்கள், நீலப் பட வீடியோ சீடீக்கள்.
காதல் கடிதங்கள், கையடக்க ரேடியோ, கெமரா போன். போன்ற பொருட்களைக் கானமுடிகின்றது. இவ்வாரு மாணவர்கள் அச்சம் பயம் எதுவுமின்றி இவைகளை பாடசாலைக்கு கொண்டு செல்லுகின்றனர;. அது அதிபர் ஆசிரியர்களின் கட்டுப்பாடும் கண்டிப்பின்மையும், இஸ்லாமிய அறிவு புர்த்தியான முறையில் கற்பிக்கப்படாமையுமே இதற்குக் காரணமாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த மட்டில் போலிகளையும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் அடியோடு நிராகரிக்கும் ஓர் இறைக்கொள்கையது. மனிதனின் பகுத்தறிவுக்கு வேட்டு வைக்கும் அத்தனை கொள்கைகளையும் தூக்கி வீசுமாறு அறிவுருத்தும் இம்மார்க்கத்தில் ஒரு முஸ்லிம் எப்படி ஏப்ரல் பூலை அனுஷ்டிக்க முடியும்?
ஏப்ரல். April Fool.
“ஏய் அதோ பார்றா வானத்திலே வௌ்ள காக்கா பறக்குது”
“ஹலோ மிஸ்டர்” “உங்க ஷூவோட லேஸ் கழண்டிருக்கு”
“அடி உன் ஒரு காது கம்மல காணோம்டி”
இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லி எதிரிலிருப்பவரை ஏப்ரல் பூலாக்க ஏப்ரல் 1 அன்று கஜினியாய் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள். பலர் பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில், பொது இடங்களில் என அனைத்து இடங்களிலும் ஏப்ரல் 1 அன்று இந்த முயற்சி நடக்கும். அடுத்தவரை முட்டாளாக்கப் பார்க்கும் இந்த முட்டாள்களின் தினம் உலகம் முழுவதும் பிரபல்யம்.
பலர் மற்றவர்களின் குடும்பத்தார்களையும் “அடே உன்ட வாப்பா மௌத்தாம்மடா” உன் நாநா “பஸ்ஸில அடிபட்டுவிட்டாராம்டா? என்றெல்லாம் மனிதர்களை ஏமாற்றும் பொய்யர்களாக மாறுகின்றனா். இதனையெல்லாம் நபிகளார் ஒரு போதும அங்கீகரிக்க வில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ-صلى الله عليه وسلم- « كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ
مَا سَمِعَ.
“தான் கேள்விப் படுவதையெல்லாம் அறிவிக்கின்ற ஒருவன் அவன் பொய்கூறுகிறான் என்பதற்கு அதுவே போதிய சான்றாகும்.
(முஸ்லிம் - 5789)
இச் செய்தியில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள். தான் கேள்விப்படுகின்ற அனைத்தையும் ஒரு முஸ்லிம் அறிவிப்பதை வன்மையாகத் தடைசெய்கிறார்கள். அவ்வாறு ஒருவன் அறிவிப்பதே அவன் மிகப் பெரும் பொய்யன் என்பதற்குச் சான்றாகக் கொள்ள வேண்டு மென்றும் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் நாமாக ஒரு கற்பனையை உருவாக்கி அவற்றுக்கு வடிவம் கொடுத்து அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு எத்திவைத்து ஏப்ரல் பூலை அனுஷ்டிக்கின்றோம் எனக்கூறுவது நபிவழிக்கு முரணல்லவா?
நபிவழிக்கு மாற்றமாக நடப்பது நரகவழியல்லவா? அன்புக்குரியவர்களே! சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ் தனது அருல் மறையில்.
இறைவிசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை உண்மையாக அஞ்சிக்கொள்ளுங்கள். உண்மையாளர்களோடு நீங்களும் இருந்துகொள்ளுங்கள் (அல் குர்ஆன் - 9:119)
பொய்யான அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்யும் இம்மார்க்கத்தில் எங்கனம் ஏப்ரல் பூலுக்கு அனுமதியிருக்கும்?
ஏப்ரல் பூலோ, மீலாது விழாக்களோ, பிறந்ததின விழாக்களோ இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டவையல்ல.
மாறாக மாற்றுமத இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் இஸ்லாமியப் போர்வையில் தருவிக்கப்பட்டவையே! இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்துவமும் அதன் உயர்வும் தெரியாத அறிவிலிகளால்தான் இச்சடங்குகள் எமது மார்க்கத்தினுல் புகுத்தப்பட்டன. இதனைத் தான் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.
عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எங்களது இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும்.
(புஹாரி - 2697)
நன்மையான விடயம்தானே செய்வதனால் என்ன குறைந்துவிடப்போகின்றது…?
ஏப்ரல் பூலை பகிடிக்கு அனுஷ்டிப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது..?
போன்ற அற்பத்தனமான கேள்விகளை அடுக்கி அல்லாஹ்வின் தூதரின் முன்மாதிரியில்லாத இம்மடமைத் தனங்கலுக்கு இரகசிய அங்கீகாரத்தை எடுப்பதற்கு சில இளைஞர்கள் விரும்புகின்றனர்.
இஸ்லாமிய சட்டக்கோவையில் ஒருமனிதனை ஏமாற்றுவது உரிமை மோசடி எனக்கொள்ளப்படுகின்றது. ஏப்ரல் பூல் எனும் பெயரில் இன்று எத்தனையோ தொழிலதிபர்கள், கல்விமான்கள், இணையதள வாசகர்கள், சுத்தமாக ஏமாற்றப்படுகிறார்கள்.
செய்தி ஊடகங்களும் இந்நாளில் தன் பங்கிற்கு மக்களுக்கு தவறான, சாத்தியமற்ற செய்திகளை வழங்கி மக்களைப் பரிதவிக்க விடுகின்றனர். “பில்கேட்ஸ்” புனித இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார். “புஷ் “நாஸ்தீகக் கொள்கைக்குத் தாவி விட்டார்” எனப் பரவிய வதந்திகள் இதற்கு சிறந்ததொரு சான்றாகும்.
இறுதியாக இஸ்லாமியர்களான நாங்கள் இஸ்லாத்தின் தனித்துவத்தை கட்டிக்காப்பதிலும், இஸ்லாம் ஓர் நாகரீகமான வாழும் கொள்கை என்பதை சர்வதேச உலகுக்கு எடுத்துச் சொல்லுவதிலும் முன்மாதிரியாக வாழ்வோமாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் காட்டி நேரான பாதையில் நாம் வாழ அருள் பாலிப்பானாக.
Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to " "
Post a Comment