மௌலவி - ஜவாஹிர் ஜமாலி (கட்டார்)
பெருநாள் வாழ்த்தும், பொங்கள் வாழ்த்தும் சமமானதே?

இரு பெருநாற்களிலும் நம் முஸ்லிம் சமுதாயத்தில் இந்த ஈத் முபாரக் வாழ்த்துச் செய்தி சொல்லப்பட்டு வருவதனை தொன்றுதொட்டு பார்த்து வருகின்றோம். ஆனால் இந்த வாழ்த்து வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்களா? அல்லது இது அந்நிய மதத்தவர்களின் வழிமுறையில் இருந்து கொப்பி பன்னப்பட்டு வந்ததா? என்பதனை தெளிவாக அறிந்து கொள்வோம்.

பெருநாள் வாழ்த்து என்று சொல்வது ஆசி வழங்குவது போல் உள்ளது என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் இந்த ஆக்கத்தில் தெரிவித்திருந்தோம். ஆனால் ஸலாம் உண்டாகட்டும் என்று நாம் கூறும் போது ஆசி வழங்குகிறேன் என்று யாரும் கருதுவது இல்லை. ஸலாம் உண்டாக துஆச் செய்கிறேன் என்று தான் இதைப் புரிந்து கொள்கிறோம். அது போல் பெருநாள் வாழ்த்து என்றால் பெருநாள் தினத்தில் நன்றாக வாழ துஆச் செய்கிறேன் என்று தானே பொருள் கொள்ள வேண்டும் என்று சிலர் நமக்கு சுட்டிக் காட்டினார்கள். தக்க காரணங்களுடன் இவர்களின் விமர்சனம் இருந்ததால் இதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

அந்நியவர்கள் - பொங்கள் வாழ்த்து, தீபாவளி வாழ்த்து, கிறிஸ்மஸ் வாழ்த்து. புத்தாண்டு வாழ்த்து. பிறந்தநாள் வாழ்த்து. இது போன்று நம் சமுதாயத்தினரும். ஹஜ் வாழ்த்து, தியாகப் பெருநாள் வாழ்த்து, ரமழான் வாழ்த்து, என்று காபீர்களைப் பின்பற்றுவதனையும் நம் சமுதாயத்தில் பார்க்கலாம்.

இன்னும் - كـل عـــام وانــتـــــم بـــخـــــيــــــــر - குல்லு ஆமின் வ அன்தும் பிஹைரின். என்ற வார்த்தையையும் சில அறிவிலி உலமாக்களும், பொது மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவை அனைத்து ஹதீஸ்களும் நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்டுத்தி சொல்லப்பட்ட பொய்யான ஹதீஸ்களே. எனவே இப்படியான வார்த்தைகளையும் அவசியம் தவிர்ந்துகொள்ளுங்கள்.

பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது.

ஒருவர் தனது தாய் மொழியில் தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி குர்ஆன் ஹதீசுக்குமுரணில்லாத வகையில் துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்; மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் மறுப்பு இல்லை...

ஆனால் குறிப்பிட்ட ஒரு சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவதுஎன்றால் அது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டும் உள்ள அதிகாரமாகும்.

ஈத் முபாரக் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூடபயன்படுத்தியதில்லை. அவர்கள் பயன்படுத்தாத இச்சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை ஒரு சுன்னத் போல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தந்தவைகளை மட்டும் தான் அப்படியே அரபு மொழியில் சொல்லவேண்டும். மற்ற விஷயங்கள் அவரவர் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும்.

அப்போது தான் அது ஒரு சுன்னத் என்ற நிலையை அடையாது.
யாரோ ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கிய ஒரு சொல் அனைத்து முஸ்லிம்களாலும் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் இதை எப்படிச் சகிக்க முடியும்? நபியின் இடத்தில் யாரையும் நாம்வைக்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் அவரவர் மொழியில் தான் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

இதனையும் சற்றுப் படியுங்கள்.
உண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல்
உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும்
எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல்
இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமழானே!
நன்னாள்கள் உன்னாள்கள் நானிலத்தின் பெருநாள்கள்
நம்பிக்கை கூட்டுகின்ற நன்மார்க்கத் திருநாள்கள்
என்னாளும் உன்பயிற்சி எமைநடத்திச் செல்வதற்கே
இறையவனை வேண்டுகிறேன் இந்நாளில் மகிழ்வுற்றே!

பொய்யில்லை; புறமில்லை; பொல்லாங்குப் பேச்சில்லை
பண்பற்ற செயலில்லை; பாவமில்லை; பேதமில்லை
மெய்யொன்றின் தேட்டங்கள்; மேன்மைக்கே நாட்டங்கள்
மெய்ப்புலனில் மனநலனில் மாண்புடனே மாற்றங்கள்
உய்வுற்று வாழுதற்கே ஓரிறையின் ஓர்பரிசாய்
உலகுதித்தாய்; உணர்வளித்தாய் ஒப்பற்ற ரமளானே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற ஓர்வரத்தை
வானத்தின் மீதிருந்து வழங்கிவிட்டாய் நன்றிகளே!

இரவினிலும் இறைவணக்கம்; இதயத்துப் பூமணக்கும்
இன்முகமே கண்டிருக்கும் இப்பாரில் நல்லிணக்கம்
இறைவனுக்கே தலைதாழும் என்கின்ற உள்ளுறுதி
யாவருமே சமமென்ற ஏற்றத்தை ஒலித்திருக்கும்
மறையதனை ஓதிவர மனதுக்குள் தாழ்திறக்கும்
மண்ணுலகில் வாழ்வதற்கு மகத்தான வழிபிறக்கும்
பிறையுதிக்கும் நன்னாளில் பரிசளிக்கும் இறையோனின்
பேரருளில் நனைகின்ற பேராவல் பூத்திருக்கும்.

வாய்மையுடன் இறையச்சம் வளர்க்கின்ற பயிற்சியினை
வழங்கிடுதே ரமளானும் வல்லோனின் பெருங்கருணை
தாய்மையினும் மிகைக்கின்ற தூயோனாம் அல்லாஹ்வின்
தண்ணருளை வேண்டுவமே தகுதிகளைப் பெறுவதற்கே!
தூய்மையிலே நனைகின்றோம் துல்லியமாய் நோன்பாலே
துடைத்திட்ட பளிங்காகத் துலங்கிடுதே எம்மனங்கள்.
போய்வருக ரமளானே..புத்துணர்வை அளித்துவிட்டாய்
பல்லாண்டு உனைக்காணும் பாக்கியத்தைக் கேட்போமே!

பெருநாள் வாழ்த்து இஸ்லாத்தில் உண்டா?
இங்கே கிளிக் செய்யவும்.

http://www.youtube.com/watch?v=j4BTyrF4HC4

ஏற்கனவே கூடாது என்று விளக்கப்பட்டு விட்டது. ஆனாலும் நாம் கூறியதை சிலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அனைவரும் சரியாகப் புரிந்து கொள்ளும்படி நாம் எழுதவில்லை. எனவே இது குறித்து சற்று விளக்கமாக விடை அளிக்கிறோம்.

வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன?
நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது.

நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும்.
ஆசி வழங்குவது போல் அமைந்துள்ள வாழ்த்துகிறேன் என்ற சொல்லை ஒரு முஸ்லிம் கூற முடியாது.

வாழ்த்துகிறேன் என்று நீங்கள் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்புகிறீர்களா? அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது. ஒரு முஸ்லிமுக்காக துஆச் செய்யலாம் என்ற பொது அனுமதியின் பெருநாள் தினத்திலும் துஆச் செய்யலாம். ஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு செயல் எப்போது பித் அத் என்ற நிலையை அடையும் என்பதை விளங்கிக் கொண்டால தான் இதில் நாம் கவனமாக இருக்க முடியும்.

ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் தொழ விரும்பினால் அவர் தொழலாம். குறிப்பிட்ட நாளில் நோன்பு நோற்க விரும்பினால் நோற்கலாம். பொதுவாக நஃபில் தொழ அனுமதி இருக்கிறது. ஆனால் இது கூட பித்அத்தாக மாறிவிடும்.

நான் காலை 8.00 மணிக்கு நஃபில் தொழுகிறேன் அதனால் அனைவரும் எட்டு மணிக்கு நோன்பு நோற்க வேண்டும் என்று ஒருவர் கூறினால் அவர் கூறுவதை ஏற்று செயல்படுத்தினால் அது பித்அத் ஆகிவுடும்.

நான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று நோன்பு நோற்பதால் அனைவரும் நோற்க வேண்டும் என்று கூறி அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல் படுத்தினால் பித்அத் ஆகி விடும். ஒருவர் தன்னளவில் தானாக விரும்பிச் செய்ய அனுமதி கொடுத்தால் அவரோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் செய்வதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறினால் அல்லாஹ்வின் தூதருடைய அதிகாரத்தைக் கையில் எடுத்தவராவார். அவர் செய்கிறார் என்பதற்காக அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல் பட்டால் அல்லாஹ்வின் துதருடைய இடத்தை அந்த மனிதருக்கு அளித்து விட்டார் என்பது பொருள்.

அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஒருவர் தான் விரும்பும் நாளில் நோன்பு நோற்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் நாம் மிஃராஜ், பராஅத் இரவுகளில் நோன்பு கூடாது என்று கூறுகிறோம்.
இதற்குக் காரணம் என்ன? அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்து விட்டது தான் இதை பித்அத் என்று நாம் கூறுவதற்கான காரணம்.

ஒருவர் தற்செயலாக ரஜப் 27 அன்று நோன்பு நோற்றால் அது பித்அத் ஆகாது. இது அனைவரும் நோன்பு நோற்க வேண்டிய நாள் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும்.
அனைவரும் ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்றால் அது வஹீயின் மூலம் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும்.

ஈத் முபாரக் என்பது எப்படி உள்ளது?
அது பெருநாள் அன்று சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை. அது மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஒருவர் தானாக விரும்பி அந்த வார்த்தையின் அர்த்தத்துக்காக சொன்னால் அது பித்அத் ஆகாது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்ல வேண்டியதாக அது மாறினால் அது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டது என்று ஆகிவிடும்.

எவரோ ஒருவர் உருவாக்கிய சொல் அல்லாஹ்வின் தூதர் கூறிய சொல்லுக்கு நிகரான இடத்தைப் பெற்று விடுகிறது. அல்லாஹ்வின் தூதருடைய இடத்தை மற்றவர்களுக்கு வழங்கும் இந்தப் போக்கு தான் அனைத்து பித்அத்துகளுக்கும் அடிப்படையாக உள்ளது. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படுவதை அனுமதிப்பது மார்க்கத்துக்கு ஆபத்தாகும்.EID MUBARAK - HAPPY RAMZAN - HAPPY BAKREETH - HAPPY NEW RAMZAN.
ஈத் முபாரக் மட்டுமின்றி ஹேப்பி ரம்ஜான், ஹேப்பி பக்ரீத், பெருநாள் வாழ்த்து என்பது போன்ற எந்தச் சொல்லுக்கும் இது தான் நிலை.

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுகிறோம் என்றால் அது அனைவராலும் ஒரே மாதிரியாகச் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறியதால் இது ஸுன்னத் ஆகிறது. ஈத் முபாரக் என்று சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாத எவரோ வழக்கப்படுத்திய சொல்லை அனைவரும் குரிப்பிட்ட நாளில் சொல்ல வேண்டும் என்பது பித்அத் ஆகிவிடும்.

இது போன்ற விஷயங்களை பல வருடங்கள் நாம் சொல்லிப் பழகிவிட்டதால் எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயல்கின்றனர். பத்து வருடப் பழக்கத்தை விட மறுக்கும் இவர்கள் பல நூறு ஆண்டுப்பழக்கமான, பராஅத், மிஃராஜ், மீலாது. கூட்டு துஆ, கத்தம், பாத்திஹா. உள்ளிட்ட பித் அத்களை மக்கள் விட்டு விட வேண்டும். கூறும் தகுதியை இழந்து விடுகிறார்கள். மிஃராஜ் அன்று நோன்பு தானே வைக்கிறோம். அது தவறா என்று அவர்கள் கேட்பது போல் இது நல்ல அர்த்தம் உடைய சொல் தானே இது தவறா என்று கேட்கின்றனர்.

என்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம் தான். அது போல் யார் சொல்லிச் செய்கிறோம் என்பதும் முக்கியமானது. ஈத் முபாரக் என்பது பெருநாளுக்கான வாழ்த்து முறை என்று ஆக்கியது அல்லாஹ்வின் தூதர் அல்ல. நோன்பு வைப்பது நல்லது என்றாலும் மிஃராஜ் அன்று நோன்பு வைக்கச் சொன்னது அல்லாஹ்வின் தூதர் அல்ல. வேறு யாரோ என்பதால் தான் அது பித்அத் ஆகிறது.

حدثنا يعقوب حدثنا إبراهيم بن سعد عن أبيه عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد رواه عبد الله بن جعفر المخرمي وعبد الواحد بن أبي عون عن سعد بن إبراهيم

இம்மார்க்கத்தில் இல்லாத் ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்துச் செய்யப்படும் என்பது நபிமொழி - புகாரி - 2697.

குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்றில்லாமல். குறிப்பிட்ட நாளில் அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றில்லாமல்.
வாழ்த்தும் வகையில் இல்லாமல் மார்க்கம் அனுமதித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பெருநாளிலோ மற்ற நாட்களிலோ துஆச் செய்தால் அது தவறில்லை.

அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக,
இது போன்ற அன்னும் பல வேறு வார்த்தைகளை தாராலமாகச் சொல்லலாம் அதிந் எந்தத் தவரும் கிடையாது.

இன்னும் பெருநாள் தினத்தில் மற்றவர்களை சந்தித்தால். ஸலாம் சொல்லுங்கள், முஸாபஹா (கைகுளுக்குங்கள்) செய்யுங்கள். இது அல்லாத ஏனைய அனைத்து பித்அத்தான காரியங்களையும் தவிர்ந்து சுவனம் செல்லக்கூடிய கூட்டத்தில் எம் அனைவரையும் அல்லாஹ் சேர்த்து அருள் புரிவானாக.




Share your views...

3 Respones to " "

இப்னு ஹம்துன் said...

நன்றி சகோதரரே!
இக்கட்டுரைக்கும் இதில் என் கவிதையொன்றைப் பயன்படுத்திக் கொண்டமைக்கும்.

முன்கூட்டியே தெரிவித்திருந்தால், என் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் மகிழ்வாக இருந்திருக்கும். ஜஸாக்கல்லாஹ் கைர்.


July 16, 2015 at 12:17 PM
இப்னு ஹம்துன் said...

நன்றி சகோதரரே!
இக்கட்டுரைக்கும் இதில் என் கவிதையொன்றைப் பயன்படுத்திக் கொண்டமைக்கும்.

முன்கூட்டியே தெரிவித்திருந்தால், என் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் மகிழ்வாக இருந்திருக்கும். ஜஸாக்கல்லாஹ் கைர்.


July 16, 2015 at 12:18 PM
இப்னு ஹம்துன் said...

நன்றி சகோதரரே!
இக்கட்டுரைக்கும் இதில் என் கவிதையொன்றைப் பயன்படுத்திக் கொண்டமைக்கும்.

முன்கூட்டியே தெரிவித்திருந்தால், என் பெயரும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் மகிழ்வாக இருந்திருக்கும். ஜஸாக்கல்லாஹ் கைர்.


July 16, 2015 at 12:18 PM

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed