மஹ்ஷரை நோக்கி மக்கள் கூட்டம்





k.m,.ஜவாஹிர்; (ஜமாலி) வவுனியா.

பிஸ்மில்லாஹிh; றஹ்மானிh; றஹீம்
எம்மைப் படைத்து எமக்கு உன்ன உணவளித்து மானத்தைப் பாதுகாக்க ஆடையளித்து அழகான முரையில் தூங்குவதற்காக உறைவிடம் அளித்து அவனைப் புகழ்ந்து துதி செய்து அவனை வனங்க வேண்டும் என்றும் சொல்லிக் காட்டு கின்றான். ஆப்படிச் செய்பவர;களுக்காக இம்மை மறுமை வாழ்க்கை நற்பயனுல்லதாக அமையும். மேலும் அவனுடைய கட்டலைகளைப் புறக்கனித்து பொடுபோக்காக வாழ்கின்றார;களோ அவர;களை இம்மை மறுமையில் இரண்டிலும் இறைவன் சோதிப்பான் என்றும் திருமறை துதி பாடுகின்றது.
இன்று உலகில் வாழுகின்ற இஸ்லாமியச் சமுதாயத்திற்கு உலகிள் உல்ல பல மைதானங்களின் பெயரும் அம்மைதானம் அமைந்துள்ள நாடுகளையும். ஆதன் விசாலத்தையும் சர;வ சாதாரனமான மக்கள் கூட விழங்கி இருக்கின்றன். ஆனால் கியாமத்நாளில் முலு மனித சமுதாயத்தையும் ஒன்று சேர;த்து பல கோடிக்கணக்கான மக்களுக்ககு மத்தியில் எம்மை விசாரனைக்கு உற்படுத்த இருக்கின்றான். அப்படிப்பட்ட மைதானத்தையும் சந்தர;ப்பத்தையும் மனிதா;கள் மறந்து வாழுகின்றனா;. ஆனால் இறைவன் இவ்வாரு திருமறையில் கூறிக்காட்டுகின்றான்.

அந் நாளில் (விசாரனைக்காக) நிறுத்தப்படுவீர;கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவா; வாருங்கள் எனதுமு புத்தகத்தை வாசியுங்கள் நான் எனது விசாரனையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவார;. ஆவர; திருப்தியான வாழ்க்கையிலும் உயரமான சொர;க்கச் சோலையிலும் இருப்பார;. ஆதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முட்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள் பருகுங்கள் எனக் கூறப்படும். (அல்-ஹாக்கா.18-2)
இவ்வாரு நள்ள வா;கள் அனுபவித்துக் கொன்டு இருப்பது போல கெட்ட மனிதா;கள் கைசேதமும் அடைவாh;கள்.அதனை இறைவன் இவ்வாரு இளிவு படுத்திக்காட்டுகின்றான்.

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக்கூடாதா? எனது விசாரனை என்னவாகும் என்பது தெரியவில்லையே (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்ற வில்லையே எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே எனக் கூறுவான். ஆவனைப் பிடியுங்கள் அவனுக்கு விலங்கு மாட்டுங்கள் பின்னா; நரகில் கருகச் செய்யுங்கள். என்பதாக இறைவன் கூறுகின்றான்.

இது போன்று பல நிகழ்வுகள் நடைபெறும். அதில் நல்லோர;களின் நிலையும் கெட்டவர;களின் நிலையும் எவ்வாரு இருக்கும் என்பதை நபி (ஸல்) அவர;கள் பல ஹதீஸ்களில் தெளிவாகக் கூறியுல்லார;கள்.
மஹ்ஷர; மைதானம்.

நபி(ஸல்) அவர;கள் கூறினார;கள். கியாமத் நாளில் சு+ரியன் ஒரு மைல் தூரத்திற்கு கொன்டு வரப்படும். (முஸ்லிம்-7375). பல கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற சு+ரியனின் வெப்பத்தைக்கூட எம்மால் தாங்க முடியாமல் தத்தவிக்கின்றோம் அப்படிப்பட்ட கொடிய நாளில் நல்லவர;கள் கெட்டவர;கள் அனைவரும் இதனை அனுபவிப்பார;களே தவிர யாராளும் தப்ப முடியாது. இறைவடைய அருட்பார;வையில் சிக்குன்டவர;களுக்கு அவன் அர;ஷ் உடைய நிழலை வழங்குவான். மேலும் அந்நாளில் தத்தமது நண்மை தீமைக்கேட்ப ஒவ்வொருவரும் வியர;வைக்கடலில் மூழ்கிக்கிடப்பார;கள் சிலர; தமது கரன்டைக் கால் அளவிற்கும் இன்னும் சிலர; முட்டுக்கால் அளவிற்கும் இன்னும் சிலர; தொடை அளவிற்கும் இன்னும் சிலர; தொன்டைக் குளி அளவிற்கும் இன்னும் சிலர; முலு உடம்பும் பு+ர;த்தியாக வியர;வையில் மூழ்கிக்கிடப்பார;கள்.
மேலும் குடும்ப நிலை எப்படி இருக்கும் என்பதையும் இறைவன் தெளிவாக விபரிக்கின்றான்.

அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும் தாயையும் தந்தையையும் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டு விறன்டு ஓடுவான். அந்நாளில் அவர;களில் ஒவ்வொரு மனிதனுக்கும் முழுக் கவனத்தை ஈர;க்கும் காரியமுன்டு. (அபஸ-33-37)
நாம் எமது மனைவி பிள்ளைகள் மீது எல்லை கடந்த அன்பையும் பாஸத்தையும் வைத்திருக்கின்றோம். ஏந்த அளவுக்கு என்றால் இறவு பகல் மழை வெயிள் குளிர; சு+டு எதனையும் பொருப்படுத்தாது நம் உதிரத்தை வியர;வையாக சிந்தி உழகை;கின்றோம். அப்படிப்பட்ட குடும்மபத்தினறே எமக்கு கைகொடுக்க மாட்டார;கள்.
நல்ல மனிதர;கள்.
1) முகம் கை கால்கள் வென்மையானவர;கள்.
ஒரு தடைவ நபி (ஸல்) அவர;கள் சபையில் வைத்து நான் மறுமை நாளில் எனது சகோதரா;களை சந்திக்கப் போகின்றேன் என்று கூறினார;கள்;. உடனே சஹாபாக்கள் நாங்கள் தானே உமது சகோதரா;கள் என்றனா; அதற்கு நபி (ஸல்) அவர;கள் நீங்கள் அனைவரும் எனது நன்பர;கள் எனது சகோதரா;கள் யாரென்றால் என்னைப் பார;க்காமல் (ஹதீஸ்களை) நம்பியவா;கள் என்றார;கள். அவர;களை எப்படி அடையாலம் கன்டு கொள்ளுவீர;கள் என்று ஸஹாபாக்கள் வினவ? புல குதிரைகளில் ஒரு குதிரை (பஞ்சக் கள்யானி) முகம் இரு கைகள் இரு கால்கள் வென்மையாக இருக்கும் அது போன்று இலங்கிக் கொண்டு இருப்பார;கள்.

காரணம் யாதெனில். பு+ர;த்தியான முறையில் வுழூச் செய்ததன் காரனமாக வென்மையான தோற்றத்தில் வருவார;கள். (முஸ்லிம்-367)
இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர;கள் காட்டாத முறைப்படி மத்ஹபுகள் அடிப்படையில் வுழூச் செய்பவர;கள் இந்தக் கூட்டத்தில் அடங்க மாட்டார;கள். இதனை மனதில் கொண்டு நபி வழியில் நம் வுழூவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

2) தல்பிய்யாச் சொன்னவர;களாக வருபவர;கள்.
நபி (ஸல்) அவர;கள் கூறினார;கள். ஒரு மனிதர; உம்ராச் செய்வதற்காக வேண்டி இஹ்றாம் உடை அனிந்தவராக புரப்பட்டுச் செல்லுகின்றார;. இடைவளியில் குதிரையில் இருந்து கீலே விழுந்து மரனிக்கின்றார;. இவர; கியாமத் நாளில் தல்பிய்யாச் சொன்னவராக வருவார;.
(புஹாரி-1849.திர;மிதி-874)

இதே போன்றுதான் இன்று ஹஜ் மற்றும் உம்ராச் செய்வதற்காக வேண்டி இஹ்ராம் ஆடை அனிந்த பின்பு சிலர; செல்லுகின்ற வளியில் விமானம் விபத்துக்குள்ளாகியும் இன்னும் சிலர; கால நிலை ஒவ்வாமையால் மரனிக்கின்றனா;. இன்னும் சிலர; சன நெரிசல் காரனமாக நெருக்கடிப்பட்டு கீழே வ்Pழ்ந்து மிதி பட்டும் மரணிக்கின்றனா;.இன்னும் சிலர; ஷைத்தானிற்கு கள்ளெறிகின்ர போது நெருக்கடி மூலமும் தவாப் செய்கின்ற போதும் ஹஜர; அஸ்வத் கள்ளை முத்தமிடுகின்ற போதும் முட்டி மோதிக் கொன்டு மரணிக்கின்ரனா;. இவர;கள் அனைவரும் கியாம நாளில் தல்பிய்யாச் சொன்னலர;களாக வருவார;கள்.

3) கழுத்து நீன்டவர;களாக வருபவர;கள்.
நபி (ஸல்) அவர;கள் கூறினார;கள். தொழுகைக்காக வேண்டி அதான் கூறிய அழைப்பாழர;கள் மனிதர;களில் களுத்து நீளமானவர;களாக வருவார;கள். (பைஹகி-2119)
இன்றைக்கு பள்ளி வாயிள்களில் கடமையாற்றுகின்ற முஅத்தின் மார;கள் எந்த அளவுக்கு அவமதிக்கப்படுகின்றனா; என்று பார;த்தால் அவர;கள் மழசல கூடம் களுவுவதற்கும் வீடுகளுக்குச் சென்று சாப்பாட்டு தட்டைத் தூக்கி வருவதற்கும் பள்ளியைத் தூத்துவதற்கும் ஹவ்லைக் களுவுவதற்கும் பள்ளியில் உள்ள மின் குமிழைப் பத்த வைப்பதற்கும் அனைப்பதற்கும் என்று இன்னோரன்ன கடமைகளைச் சய்வதற்கு மாத்திறம் இவர;கள் பயன்படுத்தப்படுகின்றனர;.

ஆனால் நம்மில் சிலர; அவர;களுடன் பேசுகின்ற முறைகளைப் பார;த்தால் அன்னிய மதத்தவர;கள் எம்மைக்காட்டிலும் சிறந்த குனாதிசயங்களை அவர;களின் மதப் போதகர;களுடன் வெளிக்காட்டுவதைப் பார;க்கலாம்.எனN நாம் நமது முஅத்தின் மார;களை நல்ல முறையில் பன்பான அடிப்படையில் வழிநடத்த எமக்கு இறைவன் துனை புறிவானாக. இன்னும் மறுமையில் அவர;களுக்கு கிடைக்கின்ற சிறப்பையும் உணர;ந்து அச்சிறப்பு எமக்கும் கிடைக்க ஆசைப்பட்டு ஆவலோடு செயல்பட முயற்சிப்போமாக.


கெட்ட மனிதர;கள்.
மஹ்ஷர; மைதானத்தில் கோடான கோடியில் சிலர; கேவழப்பட்டு இடது கையில் தமது முடிவுப் பத்திரங்களை ஏந்தியவர;களாக வருவார;கள் அதில் பல விதமான முறையில் ஒவ்வொரு கூட்டத்தினரும் காட்சியளிப்பார;கள். ) முகத்தால் நடப்பவர;கள்.

இன்று நாம் பார;க்கலாம் ஒரு மனிதனுக்கு கால் முடம் என்றால் அல்லது நோய் காரணமாக கால் ஊனமுற்றிருந்தாள் அவன் தனது இரு கைகளாலும் தவன்டு வருவதைப் பார;க்கின்றோம் ஆனால் யாரும் தனது முகத்தால் நடந்து வருவதனை இம்மையிலும் கான முடியாமள் இருக்கின்றது ஆனால் மறுமையில் ஒரு கூட்டத்தினர; தம்முடைய முகத்தால் நடந்து வருவார;கள் என்று நபி (ஸல்) அவர;கள் கூற. ஸஹாபாக்கள் அது எப்படி சாத்தியமாகும் என்று வினா எழுப்புகின்றனர;. உடனே நபி (ஸல்) அவர;கள் உங்களை கால்கள் மூலம் நடக்க வைத்த அந்த இறைவன்தான் அவர;களை முகத்தின் மூலமும் நடக்க வைப்பாதன் என்று கூறினார;கள்.

காரனம் யாதெனில்: இறைவனை நிராகரித்த காபீர;கள் மற்றும் யஹுதி நஸ்றானிகள் மற்றும் இறை மறுப்பாளா;கள் அனைவரும் முகத்தாள் நடந்து வருவார;கள்.என நபி (ஸல்) அவர;கள் கூறினார;கள். (புஹாரி-4760)
தொடரும் இன்ஷா அல்லாஹ்…


Read More Add your Comment 0 comments


காபீா்களைப் பின்பற்றும் இஸ்லாமியா்கள்.




எல்லாப் புகளும்; இறைவன் ஒருவனுக்கே
k.m.jawahir jamali.

மனித குலத்தின் ஈருல வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திருமறைக் குர்ஆன் ஜாஹிலியாக்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை ஏற்படுத்திய மாற்றய்களையும், சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்று விடும். நாங்கள் வாழுகின்ற சமகால தேசிய, சர்வதேச சமூக அமைப்புக்கள் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான ஜாஹிலிய்யத்தின் அடிப்டை அடித்தளத்தில் அமைந்திருப்பதை அவதானிக்கிறோம்.

ஓவ்வொரு கணப்பொழுதும் நமது முஸ்லிம் சமூக அமைப்பில் அரங்கேற்றப்படும் அரக்கத்தனமான ஆபாஸ அலை மாபெறும் புயலாக ஆர்த்தெழுந்து நம்மை மூல்கடிக்க முனைகிறது. நாகரீகம் என்ற பெயரில் அநாகரீகம் முஸ்லீம் சமூகத்தின் மீது முடுக்கி விடப்படுகின்ற தனித்துவத்தை தகர்த்து எறியக்கூடியவாறு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக முஸ்லீம்கள் அதன் நண்மைகளை விட தீமைகளுக்கே அதிகம் ஆளாகின்ற ஒரு மோஸமான சூழல் உருவாகியுள்ளது.

நவீன நாகரீகம் என்ற பெயரில் இளைஞர் யுவதிகளிடத்தில் கட்டுப்பாடற்ற உறவைத் தோற்றுவிக்கும் அபாயமும், ஆடைக் குறைப்பும், ஒழுக்கச் சீர் கேடுகளும் இன்று பரந்து காணப்படுகின்றது. முஸ்லீம்களைப் பாதுகாக்க வேண்டுமெனின், இன்றைய முஸ்லீம் பாடசாலைகள் இஸ்லாமிய மயப்படுத்தப்பட வேண்டும்.

இன்று பல் வேறுபட்ட சமூக தீமைகளுக்கு வழிகோலுவது கட்டுப்பாடற்ற ஆண்-பெண் உறவாகும். இன்று கல்வி கற்க பாடசாலை செல்லும் அதிகமான மாணவர்களின் புத்தகப்பையில் (School Bag) சினிமா நட்சத்திர காவாலிகளின் வண்ணப் புகைப்படங்கள், கிரிகெட் ஹீரோக்களின் ஸ்டிக்கர்கள், அழகு இராணிகளின் ஆபாஸமான (Sex) அசிங்கமான போட்டோக்கள், விரஸமான ஆபாஷ நூல்கள், மஞ்சல் பத்திரிகைகள், பாட்டுப் புத்தகங்கள், நீலப் பட வீடியோ (CD) சீடிக்கள்.

காதல் கடிதங்கள், கையடக்க ரேடியோ, கையடக்க வீடியோ கெமரா போன், போன்ற பொருட்களைக் கானமுடிகின்றது. இவ்வாரு மாணவர்கள் அச்சம் பயம் எதுவுமின்றி இவைகளை பாடசாலைக்கு கொண்டு செல்லுகின்றனர். அது அதிபர் ஆசிரியர்களின் கட்டுப்பாடும் கண்டிப்பின்மையும், இஸ்லாமிய அறிவு வழங்கப் படாமையும், மாணவர்களுக்கு சரியான வழிகாட்டல்கள், பண்பாடு, ஒழுக்கம் போன்றவை, போதிக்கப்படாமையுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

மொத்தத்தில் முஸ்லிம் பாடசாலைகள் இஸ்லாமிய மயப்படுத்தப்படாமையே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. அதே போன்றுதான் அதிகமான வாழிபர்கள் அந்நிய மத அனாச்சாரத்தை இஸ்லாமிய மத கலாச்சாரத்தைப் போன்று பின்பற்றி வருகின்றனர்.

அவர்களின் உடையைப் போன்று தமது உடையை அணிவதற்கு முயற்சிக்கின்றனர் கரண்டைக்குக் கீழே ஆடையை அணிந்து வீதியைத் தூத்துக் கொண்டு காவாலிகள் போன்று திரிகின்றனர். இவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைப் பயந்து கொல்லட்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ.
யார் கரண்டைக்கு கீழால் (தரையில் இலுபட) ஆடை அணிகிரார்களோ அவர் நரகம் நுலைவார். (முஸ்லிம்-5787)


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ.
அல்லாஹ் குர்ஆனில்: நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறிஸ்த்தவர்களையும், உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! ஆவர்கள் மற்றவர்களுக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொருப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சார்ந்தவரே! அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல் மாயிதா-51)

இன்னும் அதிகமான வாழிபர்களைப் பார்த்தால் நரகத்திற்கு கூட்டம் சேர்க்கின்ற சினிமா வேடர்களை பின்பற்றும் முகமாக அவர்கள் முடி வெட்டுவது போல தனது அழகான தலை மயிரை பாதிப் பகுதியை சிரைத்தும் மீதிப்பகுதியை விட்டும் விடுகின்றனர். இது பார்ப்பதற்கு“'எலி கடித்த தேங்காய்ப் பாதியைப் போன்று” மிக அசிங்கியமாக இருக்கின்றது.

அதே போன்றுதான் தலை மயிருக்கு வித விதமான நிறங்களைப் போட்டு தங்களை அந்நியர் என்று காட்டாமல் காட்டிக்கொள்கின்றனர். “ஹீரோ” யாராவது தனது “ட்ரவுசரில்” ஒரு சிறிய ஓட்டை ஒன்றிட்கு பொத்தல் போட்டிருந்தால் தனது புதிதாக தைக்கக் கூடிய ஆடையிலும் அந்த பொத்தலைக் காணலாம். இது தான் நபி (ஸல்) காட்டிய வழியா??

இன்னும் தாடியுடைய விடயத்தைப் பொருத்த மட்டில் நமது வாழிபர்கள், வயோதிபர்கள் அனைவரும் காபீர்களையே பின்பற்றுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:தாடியை வழருங்கள் மீசையைக் கத்தரியுங்கள்இ இன்று பார்த்தோமேயானால் சில வயோதிபர்கள் தாடியை வழர்க்கின்றனர். பலர் வழிக்கின்றனர். வாழிபர்களைப் பார்த்தால் “ஏன்டா தாடி வழர்த்து கேடி மாதிறித் திரிகின்றாய்” நீ என்ன காதலில் தோற்று விட்டாயா? என்று நண்பர்கள் கேலி பன்னுவார்கள் என்று தாடியின்றி கேடிகளாய்த் திரிகின்றனர்.

என் இஸ்லாமிய வாழிபர் சமுதாயமே! நபி மொழியைப் பயந்து தாடியை வழருங்கள். காதலென்ற இம்ஸையை கலற்றி எறியுங்கள். இல்லரம் இனிக்க இஸ்லாத்தைப் பின்னற்றி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையுங்கள்.

மதுவில் மூழ்கிய இளைஞர்கள்.
அல்லாஹ் குர் ஆனில்"நீங்களே உங்கள் ஆத்மாக்களை அழிவின் பக்கம் போட்டுக்கொல்ல வேண்டாம். என்று சொல்லிக்காட்டுகிறான்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“யார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக்கொண்டேயிருப்பார்
(முஸ்லிம்-175)

நாகரீகம் என்ற போர்வையில் பல தீமைகளை நாமே தேடிக்கொள்கிறோம். இன்று எம் இளைஞர்களில் அதிகமானோர் புகை பிடித்தல் போதைப் பொருட்கள் தூல், கன்ஞா, அபின், போன்ற ஆற்கொள்ளி நோய்கலைப் பறப்பக்கூடிய தீய பொருட்களையெல்லாம் உபயோகிக்கின்றனர். மற்றும் இது போன்ற பல தீமைகளை நாகரீகம் என்று பறைசாற்றிக் கொண்டு தவரான பாதைக்கு தாமாகவே இழுத்துச் செல்லப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.இதே போன்று அதிகமான பெண்களும் புகைப்பிடிக்கின்றனர்.

இந்த நூற்றான்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர்பான நோயால் இறக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் (றாழ) தன்னுடைய ஆய்வில் கூறுகின்றது.

அலை மோதும் நிர்வாணிகள்.
அல்லாஹ் குர்ஆனில்” ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறையச்சம்) எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
(அல் குர்ஆன்-07:26).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்லுவார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒரு சாரார் மாட்டு வால்கழைப் போன்ற சாட்டைகலை கையில் வைத்திருப்பார்கள். (தம் கையில் ஆட்சியை வைத்துக்கொணடு).அவற்றால் மக்களை அடிப்பார்கள்இன்னொறு சாரார் பெண்கள் அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள், அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள், மற்றவர்களை தன் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை (மயிர்கள்) ஒட்டகத்தின் திமில்களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகற மாட்டார்கள்.
அபூ ஹறைரா (ரலி).(நூல் முஸ்லிம்.-4316)

இன்று நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அறை குரை ஆடை அணிந்து கொண்டு வீதியில் ஆண்களை உசுப்பேத்தி விடுகிண்றனர்.இன்னும் தங்களின் ஆடைகள் மிகவும் இருக்கமாகவும், கட்டையாகவும், குட்டையாகவும், மெல்லியதாகவும், அணிந்து கொன்டு வீதி, வீதியாக பவணி வருகின்றனர். இதனைப் பார்க்கின்ற வாழிபர்கள் இவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று (வெறி பிடித்த நாயைப்) போன்று திரிகின்றனர் இதனால் பாலியல் துஸ்ப்பிரயோகம், கற்பலிப்பு, கூட்டு பலாத்காரம், பெண்கள் கடத்தப் படுதல், போன்றவை நம் நாட்டில் அதிகறிக்கின்றதற்கு காரணமாக அமைகின்றது.

என் இஸ்லாமிய சகோதரிகளே, தாய்மார்களே, இந்த நபிமொழியைப் படித்த பிறகும் இப்படி (நிர்வாணிகளாக) நடக்க உங்களுக்கெளுக்கு மணம் வருகின்றதா.? இறைவனைப் பயந்து முன்னையவர்களான அவ்வன்னையர்களைப் பின்பற்றி சுவனம் நுலைக.

சீரியலிள் சீரளியும் சமுதாயம்
அன்றோர் காலம் இருந்தது எல்லா வீடுகளும் குர்ஆன் சத்தத்தில் மூழ்கிய காலம் இன்றைய காலம் இருக்கின்றது எல்லா வீடுகளும் (வுஎ) 'ஷெய்த்தான் பெட்டி” இல் மூழ்கி அனைத்து அனாச்சாரத்தையும் வெட்கம், கூச்சமின்றி தாய், தந்தை, அண்ணன், தம்பி, தங்கை அனைவறும் சேர்ந்து வயது வந்த ஆண்-பெண்களும், சேர்ந்து கட்;டிப்பிடித்து கொஞ்சுகின்ற காட்சியைப் பார்க்கின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் கூரினார்கள்.
4420 - قال أبو هريرة: قال رسول الله صلى الله عليه وسلم: "كتب الله على بن آدم حظه من الزنى أدرك ذلك لا محالة: فزنى العين النظر، وزنى اللسان النطق، والنفس تتمنى ذلك وتشتهي، ويصدق ذلك الفرج أو يكذبه"
(புஹாரி-4420)
பாங்கு சொல்லப்படுகின்ற வேழையில் சரியாக நாடகங்கள் ஆரம்பிக்கின்றது அதைப் பார்த்து தொழுகை நேரத்தையும் வீனடித்து பாவத்தையும் சுமக்கின்ற நம் சகோதர, சகோதரிகளைக் காணலாம்.

ஏப்ரல் பூல் ( முட்டாள்கள் தினம் ) இஸ்லாத்தில் ஏற்புடையதா?

அறிவும் ஆராய்ச்சியும் அமோகமாய் முன்னேறிய இன்றய கால கட்டத்தில் மனிதர்களில் ஒரு சாரார் மெளட்டீகத்திற்கும் பிற்போக்கு சிந்தனைகளுக்கும் கூஜா தூக்குகின்ற அவல நிலையை இன்று கண்கூடாகக் கானுகிறோம். கற்காலத்திலிருந்து பொற்காலத்திற்குத் தாவிய மனிதன் மீண்டும் கற்காலத்திற்கே செல்கிறானோ என அவதானிகள் சிந்திக்குமளவிற்கு மனித குலம் இன்று பாழ்பட்டுப் போயுள்ளது.

கொள்கையற்ற மனிதர்களை கவனிப்பாரற்று விட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட உயர்ந்த மார்க்கமாகிய இஸ்லாமியக் கொள்கையில் வாழுகின்றோம். எனக்கூறும் முஸ்லிம்களின் நிலையோ மேற்கத்தயக் கலாசாரத்தை விட ஒரு படி முன்னேறிக் காணப்படுகின்றமை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிற‌து.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த மட்டில் போலிகளையும் சடங்குகளையும் அடியோடு நிராகரிக்கும் ஓர் இறைகொள்கையது. மனிதனின் பகுத்தறிவுக்கு வேட்டு வைக்கும் அத்தனை மூடக் கொள்கைகளையும் தூக்கி வீசுமாறு அறிவுருத்தும் இம்மார்க்கத்தில் ஒரு முஸ்லிம் எப்படி ஏப்ரல் பூலை அனுஷ்டிக்க முடியும்?

‘’ஏய்..அதோ பார்றா வானத்திலே வெள்ள காக்கா பறக்குது”
‘’ ஹலோ மிஸ்டர்...உங்க ஷூவோட லேஸ் கழண்டிருக்கு”
‘’உன் ஒரு காது கம்மல காணோம்பா”
‘’காளுக்குல பாம்புடா, வீட்டுக்குல நரிடா”

இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லி எதிரிலிருப்பவரை ஏப்ரல் ஃபூலாக்க ஏப்ரல் 01 அன்று கஜினியாய் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள் பலர். பள்ளிகளில் கல்லூரிகளில் பணிபுரியும் இடங்களில் பொது இடங்களில் என அனைத்து இடங்களிலும் ஏப்ரல் 01 அன்று இந்த முயற்சி நடக்கும். அடுத்தவரை முட்டாளாக்கப் பார்க்கும் இந்த முட்டாள்களின் தினம் உலகம் முழுவதும் பிரபலம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ
مَا سَمِعَ.
“தான் கேள்விப் படுவதையெல்லாம் அறிவிக்கின்ற ஒருவன் அவன் பொய்கூறுகிறான் என்பதற்கு அதுவே போதிய சான்றாகும்”.
(முஸ்லிம்-5789)
இச்செய்தியில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் தான் கேள்விப்படுகின்ற அனைத்தையும் ஒரு முஸ்லிம் அறிவிப்பதை வன்மையாகத் தடைசெய்கிறார்கள். அவ்வாறு ஒருவன் அறிவிப்பதே அவன் மிகப் பெரும் பொய்யன் என்பதற்குச் சான்றாக் கொள்ள வேண்டு மென்றும் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் நாமாக ஒரு கற்பனையை உருவாக்கி அவற்றுக்கு வடிவம் கொடுத்து அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு எத்திவைத்து ஏப்ரல் பூலை அனுஷ்டிக்கின்றோம் எனக்கூறுவது நபிவழிக்கு முரணல்லவா?

நபிவழிக்கு மாற்றமாக நடப்பது நரகவழியல்லவா? அன்புக்குரியவர்களே! சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ் தனது அருல் மறையில்.

இறைவிசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை உண்மையாக அஞ்சிக்கொள்ளுங்கள். உண்மையாளர்களோடு நீங்களும் இருந்துகொள்ளுங்கள் (அல் குர்ஆன்-9:119).

பொய்யான அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்யும் இம்மார்கத்தில் எங்கனம் ஏப்ரல் பூலுக்கு அனுமதியிருக்கும்?
ஏப்ரல் பூலோ மீலாது விழாக்களோ பிறந்ததின விழாக்களோ இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டவையல்ல.

மாறாக மாற்றுமத இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் இஸ்லாமியப் போர்வையில் தருவிக்கப்பட்டவையே! இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்துவமும் அதன் உயர்வும் தெரியாத அறிவிலிகளால்தான் இச்சடங்குகள் எமது மார்க்கத்தினுல் புகுத்தப்பட்டன. இதனைத் தான் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்”

عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
எங்களது இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும். (புஹாரி- 2697)
நன்மையான விடயம்தானே… செய்வதனால் என்ன குறைந்துவிடப்போகின்றது…?
ஏப்ரல் பூலை பகிடிக்கு அனுஷ்டிப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது..?
போன்ற அற்பத்தனமான கேள்விகளை அடுக்கி அல்லாஹ்வின் தூதரின் முன்மாதிரியில்லாத இம்மடைமைத் தனங்கலுக்கு ரகசிய அங்கீகரத்தை எடுப்பதற்கு சில இளைஞர்கள் விரும்புகின்றனர்.

இஸ்லாமிய சட்டக்கோவையில் ஒருமனிதனை ஏமாற்றுவது உரிமை மோசடி எனக்கொள்ளப்படுகின்றது. ஏப்ரல் பூல் எனும் பெயரில் இன்று எத்தனையோ தொழிலதிபர்கள்இ கல்விமான்கள்இ இணையதள வாசகர்கள்இ சுத்தமாக ஏமாற்றப்படுகிறார்கள்.

செய்தி ஊடகங்களும் இந்நாளில் தன் பங்கிற்கு மக்களுக்கு தவறானஇ சாத்தியமற்ற செய்திகளை வழங்கி மக்களைப் பரிதவிக்க விடுகின்றனர்.”பில்கேட்ஸ்” புனித இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார் “புஷ் “ நாஸ்தீகக் கொள்கைக்குத் தாவி விட்டார்” எனப் பரவிய வதந்திகள் இதற்கு சிறந்ததொரு சான்றாகும்.

இருதியாக இஸ்லாமியர்களான நாங்கள் இஸ்லாத்தின் தனித்துவத்தை கட்டிக்காப்பதிலும் இஸ்லாம் ஓர் நாகரீகமான வாழும் கொள்கை என்பதை சர்வதேச உலகுக்கு எடுத்துச் சொல்லுவதிலும் முன்மாதிரியாக வாழ்வோமாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாகவும் அசத்தியத்தை அசத்தியமாகவும் காட்டி நேரான பாதையில் நாம் வாழ அருள் பாலிப்பானாக!


Read More Add your Comment 0 comments


இவர் யூசுப் அல் கர்ளாவியா ?. அல்லது கன்ராவியா?



யார் இந்த யூசுப் அல் கர்ளாவி...?
k.m.jawahir jamali.

உஸ்தாத்(?) ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் மேன்மைக்குரிய இமாமும்(?) ஜமாஅதே இஸ்லாமி (இஹ்வான்) சகோதரர்களின் தலை சிறந்த அறிஞரு(?)மான யூசுப் அல் கர்ளாவியின் கீழ்த்தரமான பத்வாக்கள்.
பத்வா 01.Mar 21,

முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம்!
யூசுஃப் அல் கர்ளாவியை ஓர் மார்க்க அறிஞராக காண்பிக்க மார்க்கத்தின் அடிப்படைகள் தெரியாத சில கனவுலக இயக்கங்கள் முயற்சிக்கின்றன. யூசுஃப் அல் கர்ளாவிக்கு எப்படி இஸ்லாத்தின் அடிப்படைகளும் ஒழுக்கப்பண்பாடுகளும் தெரியவில்லையோ அதேபோல அவரது விசிறிகளுக்கும் தெரியவில்லை. இவர் எழுதிய பல நூல்களில்இ கட்டுரைகளில் யூத,கிறஸ்தவர்களுக்கு கூஜா தூக்கும் நிலை தாராளமாக காணக்கூடியதாக உள்ளது. உலகத்தில் ஒழுக்கக்கேட்டையும் பண்பாட்டு சீரழிவையும் பரப்புபவர்களில் யூத, கிறிஸ்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

இவர்களுடைய பிரதான தொழிலான இசையும் சினிமாவும் யூசுஃப் அல் கர்ளாவிக்கு ஹலாலாக தெரிகிறது. இசையும் சினிமாவும் ஹலால் என்று தனது ஃபத்வா முஆஸிராவில் குறிப்பிடுகின்றார் இவர் இசை ஹலால் என்று ‘அல் (ஹலால் வல் ஹராம்) என்ற புத்தகத்தில் (பக்கம். 391)ல் குறிப்பிடுகின்றார்.
முஸ்லிம் பெண்கள் நாடகங்கள் மற்றும் சினிமாவில் பங்கேற்பது தடையில்லை என்று குறிப்பிடுகிறார். (ஜரீததுல் அக்பார் எண் -401)

ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் குழிதோண்டி புதைக்கும் வெறித்தனமான ஆடலுடன் கூடிய பாடல் காட்சிகளுடன் வெளிவரும் இன்றைய சினிமாவின் நிலையை கொஞ்சம் மனக்கண்முன் நிறுத்தி பாருங்கள்.
தொப்புளில் ஆம்லெட் போடுவதும்,பம்பரம் விடுவதும், டூ பீஸ் நீச்சல் உடையுடன் பெண்களை அலையவிட்டு காமவெறியாட்டம் புரிவதும் படுக்கை அறை காட்சிகளை அப்பட்டமாக காண்பிக்கும் சினிமா இவருக்கு ஹலாலாம்.

பணத்திற்காக முக்கால் நிர்வாணமாக நடிக்கும் இந்த சினிமாவில் முஸ்லிம் பெண்களும் பங்குபெறலாமாம். கிழவனைக்கூட பாலியல் துஷ்பிரயோகம் செய்யத்தூண்டும் இசையையும் சினிமாவையும் ஹலால் என்பவன் உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனாக இருக்கவே முடியாது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள்‘என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவரை அழைத்து ‘உன்னுடைய தாயுடனோ அல்லது சகோதரியுடனோ யாரும் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘நான் விரும்பமாட்டேன்‘ என்று கூறினார்.அப்போது நபியவர்கள் ‘நீர் யாருடன் விபச்சாரம் செய்ய விரும்புவீரோ அவளுடைய சகோதரனும் உறவினரும் இதை விரும்பமாட்டார்கள்‘ என்று கூறினார்கள்.

சினிமாவையும் பாடலையும் ஹலால் என்று கூறும் யூசுஃப் அல் கர்ளாவி தனது மகளை மனைவியை சினிமாவில் நடிக்க அனுமதிப்பாரா? தினம் ஒரு அந்நியனோடு படுக்கையறை காட்சிகளில் முக்கால் நிர்வாணமாய் நடிக்க சம்மதிப்பாரா? அல்லது இவரை பின்பற்றும் நவீன கிலாஃபத் கோஷதாரிகளே! இஸ்லாமிய ஆட்சியை உலகம் முழுவதும் கொண்டுவர துடிக்கும் இரகசிய காவலர்களே! உங்கள் குடும்பத்தினரை இதுபோல் சினமாவில் நடிக்க அனுமதிப்பீர்களா?
அவர்கள் உமக்குப் பதிலளிக்கா விட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர் வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான்.
(திருக்குர்ஆன் 28:50)

பாத்வா 02
போதை ஹலால்.
அண்மையில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரின் மூத்த அறிஞர்களில்!ஒருவரானகலாநிதி யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் “ஸஹீபதுல் அரப்”பத்திரிகையில் வழங்கியுள்ள ஒரு விநோதமான பத்வா உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் குறிப்பாக மத்திய கிழக்கில்வாழும் முஸ்லிம்கள் மத்தியிலும் பேர‌திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இஸ்லாமிய அறிஞர்கள் மட்டத்திலும் கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறைந்தளவிலான அல்கஹோல் (போதை மூலப்பொருள்) கொண்டுள்ள உற்சாக பானமான “ரெட்புல்”பற்றிய வாசகரின் கேள்விக்கு பதிலளிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்.

“குறைந்தளவிலான போதைப்பொருள் (அல்கஹோல்) இஸ்லாத்தில் ஹராமில்லை.குறிப்பாக இயற்கை முறையில் புளிக்கவைக்கப்பட்ட (போதையாக்கப்பட்ட) சிறியளவிலான 0.5மூ போதைப்பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டதே!”
மேற்படி கர்ளாவி அவர்களின் பத்வாவை விமர்சித்த “ஷர்க்” எனும் கட்டார்நாட்டின் பத்திரிகை ஆசிரியர் மேற்படி பத்வா முஸ்லிம்களுக்கு மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த‌ பத்வா கர்ளாவி அவர்களுக்கு தேவையில்லாத ஒரு பத்வா எனவும் தன‌து வெள்ளிக்கிழமை ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.‌
மேற்படி பத்வாவின் மூலத்தை அறிய இங்கே சொடுக்கவும்.
ஆங்கிலத்தில்
BBC News.

அர‌பியில்
இதுபோன்ற இஸ்லாத்தின் பொன்னான போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான முஸ்லிம்களின் ஒழுக்க விழுமியங்களை சீர்குலைக்கின்ற பத்வாவை இந்த யூஸுப் அல்கர்ளாவி வெளியிடுவது இது தான் முதற்தடவையல்ல. இதற்கு மாறாக ஏற்கனவே இவர் சிறு அளவிலான வட்டி கூடுமென பத்வா வழங்கி தாயோடு விபச்சாரம் செய்வதற்குச் சமமென நபிகளாரால் எச்சரிக்கப்பட்டவட்டியை ஹலாலாக்கியதும் இன்று வழிகெட்ட‌ ஷீஆக்களின் விபச்சார முறையான “முத்ஆ” (தவணை முறை திருமணம்) வை ஹலாலாக்கி முஸ்லிம்களின் ஒழுக்கச் சீர்கேட்டுக்கு வித்திட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி ஆதாரமற்ற அறிவுபூர்வமற்ற உளற‌ல்களை மறுதளிக்குமுகமாக நபி(ஸல்)அவர்களின்
“ஒரு பொருளை அதிகம் பாவிப்பதால் போதை ஏற்படும் என்றால் அப்பொருளைகுறைவாகப் பாவிப்பதும் ஹராமே”
எனும் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களால் அறிவிக்கப்படும் அபூதாவுதில் இடம்பெற்றிருக்கும் பொன்மொழி அமைந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
سنن أبي داو ج )10 ஃ ص 106)
3196 – حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ عَنْ دَاوُدَ بْنِ بَكْرِ بْنِ أَبِي الْفُرَاتِ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ
பத்துக்கோப்பை மது அருந்தினால் போதை ஏற்படுமென்றிருந்தால் ஒன்பது கோப்பை அருந்துவது ஹலாலாகும் கஞ்ஞாவை ஆலிம்கள் மட்டும் குடிக்கலாம் பாமர மக்களிடம் சொல்லக் கூடாது விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்டால் “இவள் எனது மனைவி” என்று கூறி தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாம் என்பது போன்ற மெளட்டீகங்களை உள்ளடக்கிய மத்ஹபுகளுக்கு வ‌க்கால‌த்து வாங்கி அவை முஸ்லிம் ச‌மூக‌த்தின் “சிந்த‌னைப் பார‌ம்ப‌ரிய‌ம்”!!என்று போற்றி வ‌ரும் இஹ்வானுல் முஸ்லிமீன் இய‌க்க‌வாதிக‌ளிட‌மிருந்து இவ்வாறான‌ உள‌ற‌ல்க‌ள் ப‌த்வாக்க‌ளாக‌ வெளிவ‌ருவ‌தையிட்டு முஸ்லிம்க‌ள் விழிப்புண‌ர்வுட‌ன் இருக்க‌ வேண்டும்

இதோ கர்ளாவியின் இணையத்திலிருந்து
حكم المشروبات التي تحتوي على نسبة من الكحول
موقع القرضاويஃ15-4-2005
تلقى فضيلة العلامة الدكتور يوسف القرضاوي – رئيس الإتحاد العالمي لعلماء المسلمين – استفساراً من محمد لشيب(جريدة العرب) يقول فيه: فضيلة الشيخ الدكتور يوسف القرضاوي حفظه الله، السلام عليكم ورحمة الله وبركاته، (وبعد) صرح الدكتور محمد سيف الكواري المدير العام للهيئة القطرية للمواصفات والمقاييس أول أمس في ندوة حول تأثير مشروبات الطاقة، بأن هناك مواصفة قياسية قطرية بخصوص المشروبات تسمح بوجود ما نسبته0இ05 மூ بالمائة من الكحول بالمشروبات الموجودة بالسوق.
ويؤكد الكواري على أن هذه النسبة طبيعية بفعل التخمر الطبيعي وغير مصنعة.
- فما رأي الشرع في تناول هذه المواد التي تتضمن هذه النسبة؟
- وهل التنصيص عليها قانونا جائز؟
- وماذا عن حديث الرسول صلى الله عليه وسلم: “ما أسكر كثيره فقليله حرام”؟
الجواب:
وقد أجاب فضيلته على السائل بقوله: الحمد لله، والصلاة والسلام على رسول الله، وعلى آله وصحبه، ومن اتبعه إلى يوم الدين.
(وبعد)
هذه النسبة: 0.5 خمسة من مائة في المائة – وبعبارة أخرى: خمسة في الألف – لا أثر لها في التحريم، لأنها نسبة ضئيلة جدا، وكما قال الدكتور: إنها تحدث بفعل التخمر الطبيعي، وليست مصنعة، ولذلك لا أرى حرجا من تناول هذا المشروب.
والشريعة الإسلامية شريعة واقعية، ومن واقعيتها هنا: أنها وضعت قاعدة مهمة جاء بها الحديث الشريف، وهي أن “ما أسكر كثيره، فقليله حرام”. وأعتقد أن أي إنسان شرب من هذا المشروب ما شرب فلن يسكره، ولذا لا يحرم القليل منه.
وأما التنصيص على هذه النسبة، فهو أمر جائز ولا حرج فيه، حتى يعرف الناس الحقيقة، ولا يصدقوا الشائعات التي يروجها بعض الناس أحيانا لأغراض شتى، وبيان الأمور على حقيقتها لا ضرر فيه بحال.
وأود أن أنبه على أن هذه النسبة من الكحول وما في حكمها، إذا أضيفت عمدا إلى المشروب لغير حاجة صحية أو طبية، أو نحو ذلك، فإن من أضافها يأثم على ذلك. وإن لم يكن مؤثرا في إباحتها لشاربها.
وبالله التوفيق.

பத்வா 03
சுய இன்பம் கூடும் ஆனால் கூடாது.
இக்வானிஸ சிந்தனையாளர் யூசுப் கர்ளாவிளியின் மார்க்கத்திற்கு முரணான பத்வாக்களை அவருடைய நூலிலிருந்தே தோலுறித்து காட்டி வருகின்றோம்.
அவர் எழுதிய ஹலால் வல் ஹராம் என்ற (நூல் பக்கம் 161)ல் அவர் அதில் சுய இன்பத்தைப்பற்றி எழுதிக் கொண்டு வருகிறார் இமாம் மாலிக் உட்பட பல அறிஞர்கள் சுய இன்பத்தை தடை செய்திருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் கருத்துக்காக தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிரஇ தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.(23 : 5-6) வசனத்தை ஆதாரமாக கொள்கிறார்கள்.
இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள் இந்திரியத்துளியை உடம்பில் உள்ள ஒரு பகுததியாக கருதினார்கள். மேலும் இரத்தம் குத்தி எடுப்பது எப்படி ஆனுமானதோ அது போன்று இந்திரியத்தையும் வெளியாக்குவதும் கூடும் என்று அஹ்மத் ரஹ் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதை இப்னு ஹஸ்ம் ரஹ் அவர்களும் ஆதரித்துள்ளார்கள்.

ஆனால் ஹன்ப­லி மத்ஹபின் உலமாக்கள் இந்திரியத்தை வெளியாக்குவதை இரண்டு காரியங்களுக்கு அனுமதியளித்துள்ளார்கள். ஒன்று விபச்சாரத்தை விழுவதை பயப்படும் போது மற்றொன்று திருமணம் முடிக்க சக்தி இல்லாத போதும்.
இமாம் அஹ்மத் ரஹ் அவர்களின் சொல்லை சில நேரங்களில் நாம் பின்பற்றலாம் உம் செக்ஸ் உணர்ச்சிகள் அதிகமாகும் போதும் ஹராமில் விழுந்து விடுவோம் என்பதை பயப்படும் போதும் (சுய இன்பம் செய்து கொள்ளலாம்). ஒரு வாலிபன் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு வெளியூரில் தங்கி படிக்கும் இளைஞனைப் போல அல்லது வேலை செய்கிற இளைஞனைப் போல.

அந்த இளைஞனுக்கு முன்னால் ஏமாற்றும் வேலைகள் நிறைவாகவே இருக்கின்றது. விபச்சாரத்தை பயப்படுகின்றான். எனவே அவன் செக்ஸ் உணர்ச்சிகளை அணைப்பதற்காக இது போன்ற வேலைகளை செய்து கொள்ளலாம். ஆனால் இதில் அந்த இளைஞன் வரம்பு கடந்து விடக்கூடாது.
இதை விட சிறந்த வழி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் திருமண முடிக்க முடியாத இளைஞர்களுக்கு நோன்பை நோற்கச் சொன்னார்களே அதுதான் சிறந்த வழி.
இதுதான் அவர் தன்னுடைய புத்தகத்தில் எழுதிய கருத்துக்களின் சுருக்கம்.

இமாம் மாலிக் அவர்கள் அழகான முறையில் ஒரு குர்ஆன் வசனத்தைக்காட்டி சுய இன்பம் ஹராம் என்று அறிவிக்கிறார்கள். இதைதான் ஒரு முஃமின் குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட்டு தன்னுடைய தீர்ப்பையும் அமைத்திருக்க வேண்டும்.
ஆனால் கர்ளாவியோ இந்த தீர்ப்பிலும் குர்ஆன் வசனத்தை தன்னுடைய முதுகுக்குப்பிறகு தூக்கி எரிந்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் அவரே சொன்ன மாதிரி நபிகள் நாயகம் திருமணம் முடிக்க முடியாத இளைஞர்களுக்கு அழகான வழிகாட்டியை காட்டிக் கொடுத்திருக்கும் போது அந்த அழகான வழிகாட்டியையும் தூக்கி எரிந்து விட்டார்.
அது மட்டுமா தன்னுடைய கருத்துக்களைக்கூட சரியான முறையில் பதிவு செய்ய தவறி முரண்பட்டு பேசுகிறார்.

இச்சை ஏற்படும் போதெல்லாம் சுய இன்பம் செய்யலாம் என்று சொல்லி விட்டு இதில் வரம்பு மீறி சென்று விடக்கூடாது என்று முரண்படுகிறார்.
இச்சை ஏற்படும் போது ஒருவர் இந்தக்காரியத்தை செய்வார். இதில் வரம்பு மீறுதல் என்றால் என்ன?
மனைவி அல்லது அடிமை இவர்களிடத்தில் தவிர எந்த வழியையும் தேடக்கூடாது என்றும் அப்படி தேடுவது வரம்பு மீறிய காரியம் என்று அல்லாஹ் சொல்லியிருக்கும் போது சுய இன்பம் எந்த வகையில் ஹலாலாகும்?
விபச்சாரத்தை பயந்தால் இந்த வழியை கையாள்வது சிறந்தது தானே என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொண்டால் விபச்சாரத்தை பயந்தால் ஹோமோ செக்ஸ் செய்யலாம்தானே.

மார்க்கத்தில் எப்படி சுய இன்பம் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அதே போல்தான் ஹோமோ செக்ஸ்சும் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்டது எப்படி அனுமதியாகும்?
நிர்பந்தத்தில் அனுமதி என்ற வாதத்தை வைத்தால் நிர்பந்தத்தில் ஹோமோவும் கூடும் என்று வரும். ஆகையால் இந்த தீர்ப்பு மார்க்கத்திற்கு எதிரான தீர்ப்பு என்பதை இக்வானிகள் அறிய வேண்டும்.

பத்வா 04
கிரிஸ்தவர்களும் முஃமின்களே...
இஸ்லாமிய சமுதாயம் நாம் வாழும் காலத்தில் பலவேறு சோதனைகளை தாங்கி வருகிறது சிலர் ஆலிம் என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு புதுப்பித்தல் என்ற பெயரில் ஷரிஅத்தை அழிக்கும் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். (இஸ்லாமிய மறுமலர்ச்சி என்னும் புத்தகம் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு)

மார்க்கத்தை எளிதாக்குங்கள் என்ற போர்வையில் பஸாதை சொல்கிறார்கள். இஜ்திஹாத் என்ற பெயரில் மோசமான காரியங்களை திறந்துவிடுகிறார்கள். பிக்ஹீல் அவ்லவிய்யாத் (முன்னுரிமை கொடுக்க வேண்டிய பிரச்சனைகள்) என்ற பார்வையில் சுன்னத்தைகளை இழிவுபடுத்துகிறார்கள்.

இஸ்லாத்தின் தோற்றத்தை அழகாக்கி காட்டுகிறோம் என்ற சிந்தனையில் குப்பார்களை காபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கி கொள்கிறார்கள்.
இந்த சிந்தனையில் உள்ளவர்தான் சமீபகால பஸாதி யூசுப் கர்ளாவி ஆவார்.
இவர் மார்க்கத்திற்கு விரோதமான கொடுத்த பத்வாக்களை தோழுறித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

قال عن النصارى فكل القضايا بيننا مشتركة فنحن أبناء وطن واحد، مصيرنا واحد، أمتنا واحدة، أنا أقول عنهم إخواننا المسيحيين، البعض ينكر علي هذا كيف أقول إخواننا المسيحيين؟ (إنما المؤمنون أخوة) نعم نحن مؤمنون وهم مؤمنون بوجه آخر.
கிரிஸ்தவர்களைப்பார்த்து ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் சொல்கிறார்.
நமக்கு மத்தியில் உள்ள பிரச்சனைகள் கூட்டானதாகும். நாம் அனைவரும் ஒரே நாட்டின் பிள்ளைகள். நாம் செல்லும் இடங்களும் ஒன்றே. நம்முடைய சமுதாயமும் ஒன்றே. நான் அவர்களைப்பற்றி கிரிஸ்தவர்கள் நம்முடைய சகோதரர்கள் என்றே சொல்கிறேன். சிலர் முஸலீம்கள் தானே ஒருவொருக் கொருவர் சகோதரர்கள்.

கிரிஸ்தவர்களை எப்படி நம்முடைய சகோதரர்கள் என்று சொல்வது? என்று ஆட்சேபனை செய்கிறார்கள். ஆம் நாம் ஒரு வகையில் முஃமின்கள். அவர்கள் ஒருவகையில் முஃமின்கள்.

இந்த யூத கிரிஸ்தவ கூட்டாளி நண்பன் யூசுப் கர்ளாவி இப்படி சொல்லியிருக்க அல்லாஹ் பின் வரும் இரண்டு வசனங்களிலும் யூதர்களையும் கிரிஸ்தவர்களையும் பார்த்து என்ன சொல்கிறான் என்று பாருங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும் கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள் (89) அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப் பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். (5: 51)

நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும் இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! ”நாங்கள் கிறித்தவர்கள்” எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில் பாதிரிகளும் துறவிகளும் இருப்பதும் அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம். (5 : 82)


குறிப்பு: இன்னும் கன்றாவித்தனமாக நிறைய பாத்வாக்களை இவர் வழங்கியிருக்கிறார். தேவைப்படும் போது அவற்றை வெளியிடுவோம்.


Read More Add your Comment 0 comments


இஸ்லாமியச் சிந்தனை




வன்னியின் மகிந்தன் தவ்ஹீத் அழைப்பாளன்.k.m.jawahir jamali.
இபாதத்துக்களும் அதனூடாக சமூக இலட்சியங்களும்
1) கூட்டுத் தொழுகை
2) ஸகாத்
3) நோன்பு
4) ஹஜ்
5) பள்ளிவாசல் - சமூகத்தின் நாடித் துடிப்பு
6) மஸ்ஜித்களின் பணி

மனித சமூகத்திற்காக இஸ்லாம் வலியுறுத்தியுள்ள இபாதத்களும் கட்டாயப்படுத்தியுள்ள கடமைகளும் சமூக ஒழுங்குகளையும் வளர்ச்சியையும் மையமாகக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அவற்றின் விளைவுகளும் முடிவுகளும் சமூகம் சென்றடைய வேண்டிய நோக்கங்களைப் பூர்;த்தி செய்கின்றன. எச்சமூகம் இக்கடமைகளை முறையாகக் கடைபிடித்து நிறைவேற்றி வருகின்றதோ, அச்சமூகம் சிறந்த விளைவுகளையும் முடிவுகளையும் பெறும் என்பது இஸ்லாம் கூறவரும் கருத்தாகும்.
உண்மையில், இவ்வாறான இபாதத்துக்களின் விளைவுகளைப் பற்றிய ஆய்வு முயற்சிகள் எதுவுமின்றி, படைத்தவன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்ட வழிபடுவதே உண்மை விசுவாசியின் உயர் பண்பாகும்.

எனினும் இஸ்லாமிய அறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறும் கருத்து என்னவெனில், அல்லாஹ் சகல ஞானங்களும் பொதிந்தவன். அனைத்தையும் அறிந்தவன். பல அடிப்படைகள், திட்டங்களை இலட்சியமாக் கொண்டே இபாதத்துக்களையம் ஷரீஅத் சட்டதிட்டங்களையும் அவன் இட்டுள்ளான். மனிதன் சமூகத்துடனான தொடர்பின்றி வாழ முடியாதவன். அத்துடன், ஆன்மீக, லௌகீக வளர்ச்சி அவனுக்கு மிக அவசியமான தேவையான இருந்து வருவதன் காரணமாகவும், அவனது வாழ்க்கை, குடும்பம் ஒழுக்கம், பொருளாதாரம், அரசியல் போன்ற பல்வேறு துறை சார்ந்து அமைய வேண்டியிருப்பதன் காரணமாகவும் அல்லாஹ் இவ்வாறான பல்வேறு அடிப்படைத் திட்டங்களையும் வழிமுறைகளையும் மனித சமூகத்துக்கு வழங்கியிருக்கலாம் என அவர்கள் அபிப்பராயப்படுகின்றனர்.

இந்த நிலையில் தனி மனித பண்பாடுகளுடன் சமூக இலட்சியங்களும் ஒழுங்குகளும் இபாதத்தின் இலட்சியங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகளுடன் மனித வாழ்க்கைக்கான இஸ்லாத்தின் அனைத்துச் சட்ட திட்டங்களும் நடைமுறைகளும் சமூக அடிப்படைகளையும் போதனைகளையுமே கற்றுத் தர முனைவதாக இவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இஸ்லாம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமையாகிய தொழுகை, அன்பு, கருணை, பரஸ்பர உதவி, அறிமுகம், சகோதரத்துவம், சமத்துவம் போன்ற பல்வேறு சமூகவியல் பண்புகளை மனித உள்ளங்களில் தூவி விடுவதில் முக்கிய பங்காற்றுகின்றது. வேற்றுமைகள், பிரிவினைகளை வேரறுத்து அனைவரும் ஒரே ஆன்மாவிலிருந்து உருவான சந்ததிகள், ஒரே தந்தை, தாயிலிருந்து பிறந்த சகோதரர்கள் என்ற பாடங்களை தொழுகை போதிக்கின்றது.
கூட்டுத் தொழுகை
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஜமாஅத்தாக அமுல்படுத்துமாறு கட்டளையிட்டு, அதன் சிறப்புக்களைப் பல்வேறு ஹதீஸ்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளமைக்கு இதுவே முக்கிய காரணமாகும்.
ஜமாஅத்தாக நிறைவேற்றப்படும் தொழுகை, தனித்துத் தொழும் தொழுகையை விட இருபத்தேழு மடங்கு சிறப்புடையது.
(ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா)
மூவர் ஒரு கிராமத்திலோ, நாட்டுப் புறத்திலோ இருக்கும் வேளை அவர்களுக்கு மத்தியில் தொழுகை (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்படாவிடின், அவர்களை ஷைத்தான் ஆக்கிரமித்துக் கொள்கின்றான். எனவே, ஜமாஅத்தைக் கடைபிடித்துக் கொள். நிச்சயமாக தனித்து ஒதுங்கும் ஆட்டைத் தான் ஓநாய் வேட்டையாடுகிறது. (ஆதாரம் : அபூ தாவூத், நஸாயீ, அஹ்மத், ஹாகிம்)

முஸ்லிம்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து இவ்வாறான மார்க்க அடிப்படையை நாளொன்றுக்குப் பல தடவைகள் நிறைவேற்றும் போது அது அவர்களுக்கிடையிலுள்ள கூட்டுறவையும், பலத்தையும் பிரதிபலிப்பதாகவே அமையும். ஜமாத் தொழுகை மூலம் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளும் இவ்வாறான சிறப்பம்சங்களை வேற்று மதத்தவர்களும் கூட அண்மைக்காலமாக அறிந்து வருகின்றனர். அதனால் அவர்கள் கவரப்படுவதிலும் ஆச்சரியமில்லை. பிரான்ஸ் நாட்டுத் தத்துவ ஞானி ரெனான் அவர்களின் கூற்று இதனைப் பிரதிபலிக்கின்றது.

நான் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜித் ஒன்றில் நுழைந்த போது உள்ளச்சத்தால் திடுக்குற்றேன். அவ்வேளை, நான் ஒரு முஸ்லிமாக இல்லாததையிட்டுச் கைசேதமடைந்தேன் எனக் குறிப்பிடுகின்றார்.
நாளாந்தம் நிறைவேற்றப்படும் ஜமாஅத் கூட்டுத் தொழுகைகளுக்கு இருக்கும் பாரிய இப்பங்கு அல்லது தாக்கத்தின் காரணமாகவே, இதனை விட விசாலமான அமைப்பில், முஸ்லிமக்ள அனைவரும் கிழமையில் ஒரு தடவை கட்டயாத்தின் பேரில் மஸ்ஜிதில் அணி திரளும் ஜும்ஆ தொழுகையை இஸ்லாம் கட்டளையாக விதித்திருக்கிறது.

ஜமாஅத் எனும் கூட்டு முயற்சி இன்றி ஜும்ஆ எனும் ஒன்று கூடல் இல்லை என்ற நிர்பந்தமும் கட்டயாமும் தோன்றுமளவுக்கு அதன் கடமை இருந்து வருகிறது.
முஃமின்களே! ஜும்ஆ தினத்தில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்படடால், வியாபாரங்களை விட்டு விட்டு அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதற்காக விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், அது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். (அல் ஜும்ஆ : 08)

உண்மையில், தினந்தோறும் தொழுகையில் சந்தித்துக் கொள்ளும் தனது சகோதரனை, சில வேளை, சில காரணங்களால் சந்திக்கும் சந்தர்ப்பத்தை இழந்து விடலாம். அந்த வகையில் வாரத்தில் ஒரு முறையாவது இழந்த சகோதரத்துவத்தை, சகவாசத்தை மீட்டிக் கொள்வதற்கும் புதுப்பித்துக் கொள்வதற்கும் வாராந்தக் கூட்டுத் தொழுகை வழியமைத்துக் கொடுப்பதுடன் மார்க்க உலக விவகாரங்கள் பற்றிய அறிவைப் பெறுவதற்கு ஜும்ஆப் பிரசங்கம் வழிவகுக்கிறது. தமது பிரதேசங்களிலுள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. தம்மைப் பீடித்திருக்கும் துன்பங்கள், கஷ்டங்கள், எதிரிகளின் சதித்திட்டங்கள், அந்நியர்களின் ஊடுறுவல்கள் அனைத்தையும் இனங்கண்டு அதற்கான திட்டங்களையும் தீர்வுகளையும் கூட்டாகவே நிறைவேற்றிக் கொள்ளவும் இக் கூட்டுத் தொழுகை களம் அமைக்கிறது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் சமூகவியல் வட்டத்தை இன்னும் விசாலமாக்கி, பெரிது படுத்தும் நோக்கிலேயே இருபெருநாள் தொழுகைகளையும் கூட்டாக நிறைவேற்றுமாறு பணித்திருக்கிறார்கள். சில இமாம்கள் இத் தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றப்படுவதை வாஜிபாகக் கருதுமளவுக்கு அதிலே சமூக ஒழுங்குகளும் தாத்பரியங்களும் பொதிந்துள்ளன.

இஸ்லாமிய தத்துவ ஞானி கவிஞர் அல்லாமா இக்பால் அவர்கள் ஜமாஅத் தொழுகையின் உண்மை வடிவத்தைப் பின்வருமாறு விளக்குகிறார். தொழுகையின் உண்மை இலட்சியம் அது கூட்டாக மேற்கொள்ளப்படும் போதே நிறைவேறுகிறது. ஜமாஅத் அல்லது கூட்டுமுயற்சியில் வழிபடும் மனிதர்களை ஒரே இலட்சியமே ஒன்றிணைக்கிறது. அவர்களனைவரின் நோக்கமும் ஒன்றே. ஒரே உணர்வே அவர்களது உள்ளங்களில் பிரதிபலிக்கிறது. சாதாரண மனிதனிடத்தில் கூட புரிந்துணர்வுப் பலத்தை வளர்த்து, அவனின் உணர்வுகளை ஆழப்படுத்தி, தனிமையை, ஒருமையை அவனின் சிந்தனையிலிருந்து அகற்றி சமூக மயம் எனும் மனப்பக்குவத்தை அவனிலே ஊட்டி விடுகிறது எனக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

இந்த வகையில் மனிதர்களிடத்தில் வேற்றுமைகளை இல்லாதொழித்து, அவர்களின் வாழ்வுக்கு அவசியமான ஒற்றுமையை நிலைநாட்டுவதில் செயல் ரீதியானதும், சிந்தனை ரீதியானதுமான பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வதில் கூட்டுத் தொழுகைக்கு மிகப் பெரிய பங்குண்டு.
ஸகாத்
பொதுவாகச் சமூகத்தின் பின்னடைவுக்கும் அதன் வீழ்ச்சிக்கும் சமூக விரோதச் செயல்கள் காரணமாக அமைகின்றன. இச்சமூக விரோதச் செயல்களுக்குப் பின்னணியாக, பொருளாதாரப் பிரச்னைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. எச்சமூகத்தில் வறுமை, அநீதியான பங்கீடு, பதுக்கல், மிதமிஞ்சிய சேமிப்பு போன்ற பொருளதாரச் சிக்கல்கள் அதிகரிக்கின்றனவோ, அச்சமூகத்தில் அநீதி, வர்க்கப் போராட்டம், களவு, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களும் குற்றங்களும் மலிந்து காணப்படும்.

இஸ்லாம் கடமையாக்கியிருக்கும் ஸகாத், மேற்குறித்த அனைத்து பொருளாதாரச் சிக்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, அவர்களுக்கிடையில் சிறந்த கட்டுக் கோப்பை வளர்த்து விடுகிறது.
ஸகாத் எனும் பதம் 'தூய்மைப்படுத்துதல்' எனும் கருத்தைப் பொதிந்துள்ளது. அதனை வழங்குபவன் எவ்வாறு பாங்களில் இருந்தும் தவறுகளிலிருந்தும் தூய்மையடைகின்றானோ அவ்வாறே, அவனின் செல்வமும், வழங்கப்படும் சமூகமும் பல்வேறு பிரச்னைகளிலிருந்தும் தூய்மையடைகிறது. ஏழை மனதிலுள்ள கவலைகள் நீங்குகின்றன. பகைமை குடியிருந்த இடத்தில் நட்பு மலர்கின்றது. வெறுப்பு நீக்கப்பட்டு அன்பு பரப்பப்படுகின்றது.

ஒரே குடும்பமாகப் பரஸ்பர ஒத்துழைப்புகளிலும் உதவிகளிலும் எக்காரணம் கொண்டும் அவர்கள் பின் நிற்க மாட்டார்கள்.
ஸகாத் ஒன்று சேர்க்கப்படும் முறையிலும் பங்கிடப்படும் ஒழுங்குகளிலும் ஏழைகள் இழிவுபடுத்தப்படவோ, ஸகாத்தை வழங்கிய செல்வந்தன் உயர்த்தப்படவோ வழிகள் இல்லை. செல்வந்தன் தனது ஸகாத் ஊடாக எழை மீதான ஆதிக்கத்தை மேற்கொள்ள முடியாது. தனது சகோதரனின் மீது கொண்ட அன்பு, கருணை காரணமாக அல்லாஹ், தன் மீது விதித்திருக்கும் கடமையை நிறைவேற்றுவதாகவே அவன் கருத வேண்டும்.

தனது எண்ணத்தை தூய்மைப்படுத்துவதன் ஊடாக ஓர் ஆன்மீகப் பக்குவத்தை அவன் பெற வேண்டும். அவன் வழங்கும் ஸகாத், பெருமை, அகங்காரம், கர்வம், அட்டகாசம் போன்ற இழிபண்புகளிலிருந்து அவனைத் தூய்மைப்படுத்த வேண்டும். இவ்வாறான பரிபக்கு நிலையைப் பெறுவதனூடாகவே அவனால் நிறைவேற்றப்பட்ட ஸகாத் கடமையும் பூரண நிலையை அடைகின்றது. இன்றேல் அவனது செயல் அர்த்தமற்றதாகி விடும்.
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்; தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன். (2:263).

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது. அதன் மீது பெருமளவு பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. அவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (2:264)
நோன்பு
சமூக அங்கத்தவர்களுக்கிடையில் தொடர்புகளை, உறவுகளை பலப்படுத்துவதில் நோன்பு முக்கிய சாதனமாகக் கடைமையாற்றுகின்றது. உடல், உளரீதியான சம உணர்வுகள, ஏக காலத்தில் அடியார்களுக்கு மத்தியில் வித்தியாசமின்றி தோற்றுவிப்பதில் நோன்புக்கிருக்கும் ஆற்றலும் சக்தியும் வேறு எச்சாதனத்துக்கும் இல்லை.
பிரதேசம், காலம், இனம், வகுப்பு, தரம், பால் பேதங்களின்றி அனைவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக சமூகத்தின் சர்வதேச சமத்தும், சகோதரத்துவம், ஈகை, கருணை, அன்பு, உதவி அதை;ததையும் பேணிக் கொள்ள விரும்பும் ஒருவன் நோன்புக் காலத்தில் அவற்றை இலகுவாகக் கண்டு கொள்வான். பதினொரு மாத காலமாக, பல்வேறு வேலைகளால் மற்நதிருந்த சகோதர வாஞ்சையை உதவும் மனப்பக்குவத்தை, எதனையும் எதிர்கொள்ளும் தியாக சிந்தையை, ஒற்றுமை உணர்வை மீட்டிக் கொள்வதற்கான பரிகாரத்தை இக்காலத்தில் மேற்கொள்கிறான்.

சமூத்திலுள்ள அனைவரும் இவ்வாறான ஒரே உணர்வுகளையும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பெறும் போது அங்கே சமூக மலர்ச்சியுடன் மனித நேயங்கள், பண்பாடுகள் புத்துயிர் பெறுகின்றன.
யார் வீணான வார்த்தை பேசுவதையும் அதனடிப்படையில் செயற்படுவதையும் விட்டு விடவில்லையோ, அவர் உண்ணுவதையும், குடிப்பதையும் விட்டு விட்டதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையும் இல்லை. (ஆதாரம் : புகாரீ, அபூதாவூத், திர்மிதீ)

நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றுவிட்டால், அந்நாளில் அவர் தகாத முறையில் நடந்து கொள்ளவோ, வீணான முறையில் சத்தமிட்டுத் திரியவோ வேண்டாம். அவனை யாராவது ஏசினால் அல்லது அவனோடு சண்டையிட்டுக் கொண்டால், 'நான் ஒரு நோன்பாளி' என்று கூறட்டும். (ஆதாரம் : முஸ்லிம்)

முஸ்லிம்களை ஆன்மீக ரீதியாக ஒன்றிணைத்து அவர்களிலே பலத்தையும் சக்தியையும் உந்துதலையும் ஏற்படுத்தும் ஆற்றலம் நோன்புக்கு இருப்பதன் காரணமாகவே, முஸ்லிம்களால் அன்றைய பத்ர் போராட்டத்தில் சத்திய வெற்றியை நிலைநாட்ட முடிந்தது. இழந்த மக்காவை மீண்டும் மீட்டிக் கொள்ள முடிந்தது. இன்னும் பல சாதனைகளை வரலாற்றிலே சாதிக்க முடிந்தது. நோன்பின் இவ்வாறான சமூகவியல் தாக்கங்கள் உரிய முறையில் பேணப்படின் இவை போன்ற அரிய பல சாதனைகளைப் பிற்காலங்களாலும் நிகழ்த்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.
ஹஜ்
தொழுகையினூடாகப் பிரதேசவாரியான ஒற்றுமையையம் ஐக்கியத்தையும் பெற்றுக் கொண்ட முஸ்லிம்கள் ஹஜ் கடடையினூடாக அதன் வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்கிறார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்ற, பல இலட்சக் கணக்கான புதுமுகங்களைத் தரிசித்து, உலகளாவிய சகோதரத்துவத்தையும் பரஸ்பர சமத்துவத்தையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை அவர்களிலே இக்கடமை ஏற்படுத்தி விடுகிறது. பல நாடுகள் ஒன்றிணைந்து பல பில்லியன் ரூபாய்கள் செலவிட்டும் ஒன்று கூட்ட முடியாத சர்வதேச ஐக்கிய மாநாடொன்று ஹஜ் காலத்தில் சுயமாக ஒன்று சேர்கிறது.

ஹஜ் செய்ய வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் மிகத் தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வருவார்கள். (அல் ஹஜ் : 127)
அல்லாஹ்வின் வீட்டில் ஒன்றிணைகிறோம் என்ற தமது ஒரே எண்ணத்தை ஏகோபித்த குரலில் இவர்கள் காட்டி விடுகிறார்கள். பல்வேறு நாடுகள், கலாசாரங்கள், நடைமுறைகள், முன்னேற்றங்கள் அனைத்தையும் மறந்து தமது எண்ணத்திலும், செயற்பாட்டிலும் சமத்துவத்தைப் பிரதிபலிக்கிறார்கள். இந்த மிகப் பெரிய உண்மையை இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்லும் மேற்கத்தியவாதி ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் உடைந்து போகாத பலமான பெரும் பாறாங்கல்லைப் போன்றது. இறைவேதமான அல்குர்ஆன், அல் அஸ்ஹர் சர்வகலாசாலை, வாராந்திர ஜும்ஆ ஒன்று கூடல், வருடாந்தர ஹஜ் மாநாடு போன்ற நான்கு விசேட அம்சங்களும் இருக்கும் வரை கிறிஸ்தவப் பிரச்சாரம் எனும் கப்பல்கள் அதிலே முட்டி மோதி, நொறுங்கி விடுவதைத் தவிர்க்க முடியாது.

முஸ்லிம்கள் நாகரீக, கலாச்சாரச் சின்னமாகவும் அவர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும், மஸ்ஜிதுகள் திகழந்து வருகின்றன. அவர்களின் கட்டுக்கோப்பு, கூட்டுறவைப் பலப்படுத்தி அவற்றைப் பேணிப் பாதுகாப்பதில் மஸ்ஜிதுகளுக்கு மிகப் பெரிய பங்குண்டு. தொழுகை, ஜமாஅத், ஜும்ஆ என்பதோடு மாத்திரம் அதன் பணிகளைக் சுருக்கிக் கொள்ளாது, சமூக ஒற்றுமைக்கு அடித்தளமிடக் கூடிய பல காரணிகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன் அவற்றைச் சமூக இலட்சியங்களாக முதன்மைப்படுத்தியிருப்பது சமூகப் புனரைப்பு, நிர்மாணத்தில் மஸ்ஜித் வகிக்கும் பங்கை விளக்கப் போதுமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா காலப்பிரிவில் இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்குவதற்காகப் பல கஷ்டங்களையும் கொடுமைகளையும் அனுபவித்தார்கள். புதிய சமுதாயத்தின் தோற்றத்துக்குப் பல்வேறு வகையான இடையூறுகள், தடைகள் இருப்பதோடு அதற்குரிய பொருத்தமான சூழலைக் கண்டு கொள்ளாத நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அதற்குரிய சாதக சூழ்நிகைள் நிலவுவதை கவனித்தார்கள்.

இந்த வகையில் மிகப் பொருத்தமான இடமாகக் கருதப்பட்ட மதீனா நோக்கி தமது ஹிஜ்ரத் முயற்சியை மேற்கொண்டார்கள். மதீனா சென்றடைந்த நபி (ஸல்) அவர்கள் சமூக உருவாக்கத்துக்காக, அவர்களுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்கள், அடிப்படைகளை முன்வைத்தார்கள். மதீனாவில் ஒரு மஸ்ஜிதை நிர்மாணிப்பதிலும் ஈடுபட்டார்கள். உண்மையில் நபித்தோழர்களான முஹாஜிர்கள், அன்சாரீன்கள் மத்தியில் வரலாறு காணாத சகோதரத்துவமும் ஐக்கியமும் நிலவியமைக்கு நபி (ஸல்) அவர்களின் நிகரற்ற ஆளுமை காரணமானதுடன் அவர்கள் மஸ்ஜித் நிர்மாணத்துக்கும் தனியான பங்குண்டு என்பதை வரலாறு நிரூபிக்கின்றது.

மஸ்ஜிதின் சேவைகளாக தொழுகைகளை மாத்திரம் அவர்கள் கருதவில்லை. சமூகப் பிரச்சினைகளை அலசி ஆராயும் சமூக நிலையமாக, மனிதப் பிணக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லும் நீதிமன்றமாக, ஆன்மீக, லௌஹீகப் பயிற்சிகளை வழங்குவதில் பாசறையாக, அறிவைப் பெருக்கும் பாடசாலையாக, நிர்வாகத் திட்டமிடலகள், ஒழுங்குகள் பற்றிக் கலந்துரையாடும் பாராளுமன்றமாக, பிரதிநிதிகள், தூதுக்குழுக்களைச் சந்தித்துக் கொள்ளும் வரவேற்பகமாக, போராட்டங்களுக்கு தயார்படுத்தும் இராணுவப் பாசறையாக.. ஆக.. சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் அம்சங்களையும் பிரதிபலிக்கும் சின்னம் என்றே மஸ்ஜிதை அவர்கள் கருதினார்கள்.

முஸ்லிம் சமுதாயத்தினால் உருவாக்கப்பட்ட மஸ்ஜிதுகளின் வரலாறுகள் இப்பாடங்களையே இன்று வரை எமக்குப் புகட்டுகின்றன. முஸ்லிம்களின் வரலாற்றில் மஸ்ஜிதுகளுக்குத் தனியான இடம் உண்டு. இந்த வகையில் பல்வேறு வகையான பாதிப்புகளை வரலாற்றில் ஏற்படுத்தி உலக முஸ்லிம்களின் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை மஸ்ஜிதுக்கு உண்டு.

தேசம் எனும் எல்லைக்கப்பால் சென்று, ''சர்வதேசம்"" எனும் உயர் அந்தஸ்தில் செயற்படும் இறையில்லம் மஸ்ஜித் ஆகும்;. ஒரு முஸ்லிம் புவியின் எப்பாகத்துக்குச் சென்றாலும் அவனை எவ்வித வேறுபாடுமின்றி அரவணைக்கக் காத்திருக்கும் புனித மாளிகையாக மஸ்ஜித் செயற்படுகிறது. இதனால் தான் பூகோளத்தின் எப்பாகத்தில் ஒரு முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்தாலும் அவர்களின் மத்திய நிலையமான மஸ்ஜிதை உருவாக்கிக் கொள்வது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகவும், கடமையாகவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உண்மையில் மஸ்ஜித் குறிப்பிட்ட ஒரு பிரதேச முஸ்லிம்களின் உருவாக்கமாக இருப்பினும், உலகிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அதில் நுழைவதற்கு அதனைப் பயன்படுத்துவதற்கும் உரிமை பெற்றவனாகிறான் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பு உலகாயத, சடத்துவப் பெறுமானமின்றி அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்புக்குரிய இடம், புனிதமிகு இறையில்லம் எனும் ஆன்மீகப் பெறுமானத்தை மஸ்ஜித் பெற்றிருப்பதன் காரணமாக அதன் புகழும் மகிமையும் மேலோங்கி இருக்கிறது.

''தனிமனித சீராக்கமே சமூகச் சீர்திருத்தத்தின் ஆரம்ப்படி"" எனும் நடைமுறை உண்மையை மஸ்ஜித் நிரூபித்து, அதற்கான செயல் வடிவத்தைக் கொடுக்கின்றது. மஸ்ஜிதில் நுழையும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மீக உணர்வை வழங்கி அவனைப் புனிதனாக்குவதனூடாகச் சமூக உருவாக்கத்தை அது ஏற்படுத்துகிறது.

தூய்மை, உள அமைதி, இறையுணர்வு போன்ற அடிப்படைப் பண்புகளையும் உளப் பயிற்சிகளையும் முஸ்லிமின் உள்ளத்தில் ஊட்டி விடுகிறது. கடமைகளைக் கூட்டாக நிறைவேற்றும் போது சமூக உணர்வு, சமத்துவம், சமூக நலன் போன்றவற்றைக் கொண்ட சூழலின் அவசியம் இயல்பாகவே உணரப்படுகின்றது. சமூகப் பிரதிநிதியான ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு ஒரே சிந்தனையை, மனப்பக்குவத்தைப் பெறுவதன் மூலம் சமூகச் சீர்திருத்தம் உருவாக வழியேற்படுகின்றது.

உண்மையில் மஸ்ஜித் உலக முஸ்லிம்கள் அனைவரையும் நாளாந்தம், ஐவேளை ஒன்று கூட்டுகின்றது. உலக இன்பங்கள், இலாபங்களை அடைந்து கொள்தவற்கான ஒன்று கூடலாக அன்றி, அன்பு, கருணை, உதவி இறைவழிபாடு, சந்திப்பு போன்ற பல்வேறு நோக்கங்களும் இலட்சியங்களும் அவர்களை ஒன்றிணைக்கின்றன. குரோதம், வஞ்சனை, பகைமைகள் முறியடிக்கப்பட்டு, அங்கே சகோதரத்துவ, சமத்துவ உணர்வை இவ்வொன்று கூடல் மலரச் செய்கின்றது. இதன் காரணமாகத் தான்; நபி (ஸல்) அவர்கள் வீட்டிலோ, சந்தையிலோ தனித்துத் தொழுவதை வரவேற்காது, தனித்துத் தொழுவதை வரவேற்காது, பள்ளியில் கூட்டாகத் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.

ஜமாஅத்தாக நிறைவேற்றப்படும் தொழுகை, தனியாக மேற்கொள்ளப்படும் தொழுகையை விட இருபத்தைந்து அல்லது இருபத்தேழு மடங்கு சிறப்புடையது. உங்களில் ஒருவர் வுழுவை சிறப்பான முறையில் செய்து தொழுகையை அன்றி வேறெதனையும் நோக்கமாகக் கொள்ளாது பள்ளியை நோக்கி வருகிறார். அவர் மஸ்ஜிதில் நுழையும் வரை அவரின் ஒவ்வொரு காலடிக்கும் ஒவ்வொர் அந்தஸ்து உயர்த்தப்படுகின்றது. அவர் பள்ளியில் நுழைந்து விட்டால் தொழுகை அன்றி வேறெதுவும் அவைரத் தடுக்கவில்லை. அவர் தொழுகைக்காகத் தனது இருப்பில் வுழுவோடு இருக்கும் காலமெல்லாம் மலக்குகள் அவர் மீது ஸலவாத்து கூறுகின்றனர்.

எமது இரட்சகனே! இவரின் பாவங்களை மன்னித்து விடு. இவருக்குக் கருணை காட்டுவாயாக! எனப் பிரார்த்தனையும் புரிகின்றனர். (ஆதாரம் : புகாரீ)
இறையச்சத்துடன் கூடிய பூரண கட்டுப்பாட்டை மஸ்ஜித் அடியார்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றது. நிர்ப்பந்தமாகவன்றி சுயவிருப்பின் பேரிலான கட்டுப்பாடாக இது அமைகின்றது. இமாமின் கட்டளைகளுக்கு, தலைவனின் ஏவல்களுக்கு சிரம் சாய்த்துக் கட்டுப்பட வேண்டும் எனும் ஒழுங்கு இங்கு போதிக்கப்படுகின்றது. அத்துடன் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பது, அதற்குப் பழக்கப்படுவது என்பவற்றின் பால் சமூகம் கொண்டுள்ள தேவையையும் கூட்டுத் தொழுகை உணர்;த்தி நிற்கின்றது.

தொழுகையின் போது அணி சீர்செய்யப்பட வேண்டும். காலுடன் காலும், தோளுடன் தோளும் சேருமளவு அணி நேர்த்தியாக்கப்பட வேண்டும் என இஸ்லாம் வற்புறுத்துகின்றது. உங்கள் அணியைச் சீராக்கிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அணிச் சீராக்கம் தொழுகையின் பூரணத்துவத்தைச் சார்ந்தது. நீங்கள் பிரிந்து விட வேண்டாம். அதனால் உங்கள் உள்ளங்கள் பிரிந்து விடும். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் முதலாவது அணியினர் மீது ஸலவாத் கூறுகிறார்கள். என்ற நபி (ஸல்) அவர்ளகின் கூற்றும் தொழுகைகளின் போது அணியைச் சீர் செய்வதில் அன்னார் காட்டிய அதிக அக்கறையையும் இதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

இவ்வாறான உயரிய நோக்கங்கள், பணிகளை மஸ்ஜித் பெற்றிருப்பதன் காரணமாகத்தான் கண்பார்வையை இழந்த உம்மி மக்தூம்; (ரலி) அவர்களையும் மஸ்ஜித்துக்கு வந்து தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். தனது கண் பார்வை இன்மையைக் காரணங் காட்டி மஸ்ஜித் வராதிருக்க சலுகையொன்றை நபி (ஸல்) அவர்களிடம் வேண்டிக் கொண்டதற்கு, உமக்கு 'அதான்" ஒலியைக் கேட்க முடியுகின்றதா? என வினவ, ஆம் எனப் பதில் கூறவே, அவ்வாறாயின், உமக்கென எவ்விதச் சலுகையையும் நான் பெறவில்லை எனக் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள். ஒன்று கூடலின் அவசியத் தேவையை நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் உணர்த்தியுள்ளார்கள்.

உலக முஸ்லிம்களின் தொழுகை நேரங்கள் பிரதேசத்துக்குப் பிரதேசம், நாட்டுக்கு நாடு வித்தியாசப்படினும் ஒரேவேளையில் சகல முஸ்லிம்களும் தொழுகை மூலம் ஏதாவதொரு வகையில் ஒன்றிணைகிறார்கள் என்பது புவியியல் கூறும் உண்மையாகும். ஒரு முஸ்லிம் தொழுகையில் அல்லது இறைவணக்கத்தில் ஈடுபடும் போது தன்னுடன் உலகிலுள்ள பல கோடி முஸ்லிம்களும் ஏக இறைவனை வழிபடுவதில் ஒன்றுபடுகிறார்கள் என்ற சிந்தனை உணர்வு அவனின் உள்ளத்தில் பிறக்கின்றது. உண்மையில் ஒரு முஸ்லிமிடம் இவ்வாறான உணர்வு தோன்றுவதற்கு மஸ்ஜித் ஊடகமாக அமைகின்றது.
மஸ்ஜித்களின் பணி
மஸ்ஜிதின் தொழுகை தொழுகை தொடர்பான பணி எனும் வட்டத்திலிருந்து சற்று வெளிச் செல்லும் போது, நபி (ஸல்) அவாகளின் காலம் முதல் இன்று வரை முஸ்லிம் சமூகம் இதனால் பெற்று வரும் சேவைகளும் அனுபவித்து வரும் நன்மைகளும் அளப்பரியனவாக இருப்பதனைக் காணலாம். இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்கள் இதன் தத்ரூபத்தைப் பல்வேறு வடிவங்களில் வெளிக்காட்டுகின்றன.

இஸ்லாம் மனித சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்து கால சூழலுக்கேற்ப இயைந்து செல்லும் மார்க்கம். மனித சமுதாயத்துக்குப் பிரயோசனமளிக்கும் அனைத்து அறிவியல் வளர்ச்சிகளையும் தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் அது விரும்புகிறது. அறிவின் ஊற்றான, கல்வியின் பிறப்பிடமாக இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித் திகழ்ந்துள்ளமை இதனை நிரூபிக்கப் போதுமான சான்றாகும்.

நபித் தோழர்களான ஸஹாபாக்கள் அறிவொளி தேடுவதிலும் அதனைப் பரவலாக ஏனையோர்களுக்கு எடுத்துரைப்பதிலும் ஈடுபட்டார்கள். புதிதாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களுகு;கு இஸ்லாமிய ஞானங்களைப் புகட்டுவதிலும் கல்விப் போதனைகளை நடாத்துவதிலும் கூடிய கரிசனை காட்டினார்கள். இந்த வகையில் மஸ்ஜிதை அவர்கள் அறிவகங்களாக, பாடசாiலைகளாகக் கருதினார்கள். இவ்வாறு சர்வதேசக் கலையகமாக மஸ்ஜித் விளங்கியதன் காரணமாகத் தான், உலகின் எப்பாகத்திலிருந்தாவ கல்வி வேட்கையோடு வரும் மாணவனை அது வரவேற்காது விட்டு விடுவதில்லை.

இஸ்லாமியக் கலைகளான தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், வரலாறு என்பவற்றுடன் உலகக் கலைகளான தத்துவம், மருத்துவம், கணிதம், புவியியல், இரசாயனவியல், வானவியல் போன்ற ஏனைய பல கலைகளும் மஸ்ஜிதில் போதிக்கப்பட்டுள்ளன. மஸ்ஜித்களோடு இணைந்த பல்கலைக்கழகங்கள், கல்விக் கூடங்கள், நூல் நிலையங்கள், ஆய்வு நிலையங்கள் முதலிய அமைப்புக்கள் மஸ்ஜிதின் கல்விச் சேவைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இஸ்லாமிய நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் இவ்வாறான கலையகங்கள் பாக்தாத், டமாஸ்கஸ், ஸ்பெய்ன், எகிப்து, ஷாம், கோர்டோவா போன்ற பிரதேசங்களில் காண முடிந்ததெனினும் நவீன காலங்களிலும் கூட அதன் தாக்கங்களும் பிரதிபலிப்புக்களும் இஸ்லாமிய உலகின் நாலா பாகங்களிலும் தொடர்கின்றமை தெளிவு.

இஸ்லாமியச் சட்டத்துறை இமாம்களான இமாம் ஷாபிஈ, இமாம் அபூ ஹனீஃபா, இமாம் மாலிக், இமாம் அஹ்மத் போன்றோருடன் தார்த்தாரியப் படையெடுப்பை முறியடிப்பதில் முக்கிய பங்கேற்ற இமாம் இப்னு தைமியா, இரசாயனவியலின் முன்னோடி ஜாபிர் இப்னு ஹய்யான், இரத்தச் சுழற்சி பற்றி கண்டுபிடிப்பாளர் இப்னுன் நபீஸ், மற்றும் புவியியல் வல்லுனர்களான யாகூத், அல்பிரூனி, இப்னு பதூதா, இப்னு ஜுபைர் போன்றோரும் நன்னம்பிக்கை முனையைச் சென்றடைய வாஸ்கோடாகாமாவுக்கு வழியமைத்துக் கொடுத்த வழிகாட்டி அஹ்மத் இப்னு மஸ்ஜித், சமூகவியலின் தந்தை அப்துர் ரஹ்மான் இப்னு கல்தூன் போன்ற பல்துறை அறிஞர்களின் மேதைகளினதும் உதயத்துக்குப் பாசறையாக அமைந்திருந்தவை மஸ்ஜித்களே என்பது வரலாற்று உண்மையாகும்.

அல்லாஹ்வின் கலிமாவை மேலோங்கச் செய்வதும், அதற்காகப் போராடுவதுமே அல்லாஹ்விடத்தில் மிக மேலான செயலாகும். சமூகத்தைக் 'குப்ர்" எனும் இருளிலிருந்து காப்பாற்றி 'இஸ்லாம்" எனும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதும் அநீதியிலிருந்து அவர்களை விடுவித்து நீதியின் பால் இட்டுச் செல்வதும் உண்மையில், ஏனைய அனைத்துக் காரியங்கள், செயல்களை விடவும் மேலானதே. நபிமார்கள், ரசூல்மார்களின் பணிகளில் இம்முயற்சியே பிரதான இடம் வகித்தது.

அவன்தான் உங்களை (ப் பாவத்தின்) இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன். (அல் ஹதீத் : 9)
ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக் மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான். (அத்தலாக் : 11)
உண்மையில் இஸ்லாத்தின் உயிரிய இக்கடமையை செயற்கொணர்ந்த அன்றைய போராட்ட வீரர்களான நபித்தோழர்களைப் பயிற்றுவித்து, பண்படுத்தி, பக்குவப்படுத்துவதில் மஸ்ஜித் மிகப் பெரிய பங்காற்றியிருந்தது. இஸ்லாம் கூறும் போராட்ட ஒழுங்குகள், நடைமுறைகள், நோக்கங்களை அவர்கள் கற்றுணர்ந்ததோடு, உளப்பயிற்சி, உடல் பயிற்சி என அனைத்தவிதப் பயிற்சிகளையும் மஸ்ஜித் மூலம் பெற்றுக் கொண்டார்கள்.

அத்துடன் அவர்களின் இராணுவத் தலைவராக களத் தளபதியாகத் திகழ்ந்த நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களும் கால, சூழல்களுக்கேற்ப கிடைக்கப் பெற்றமை அப்போராளிகளின் ஆன்மீகம் பக்குவத்தை இரட்டிப்பாக்கியதுடன், அவர்கள் அடைந்து கொள்ள வேண்டிய இலட்சியங்களையும் வெற்றிகளையும் உறுதிப்படுத்திற்று. இறுதிவரை புறமுதுகு காட்டாது நேருக்கு நேர் நின்றி சமர் செய்த அம்மகான்களின் தியாக வரலாறுகள் அவர்கள் அஞ்சா நெஞ்சங்களையும் பயிற்றுவித்தலின் சீரிய தன்மை, உறுதிப் பாட்டினையும் புலப்படுத்துகின்றன.

போராளி வீரம், தியாகம், துணிவு போன்ற கட்டாயப் பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். வெற்றிக்கு உறுதுணையாக அமையக் கூடிய சகோதரத்துவம், ஒற்றுமை, உடன்பாடு, புரிந்துணர்வு போராட்ட வீரர்களுக்கிடையில் இருக்க வேண்டியது மிக அவசியம். வகுப்புவாதம், பிரிவினை, சச்சரவு, குரோதம் என்பவற்றிலிருந்து அவர்கள் தூரமாக வேண்டும். ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் உரிமை, கடமைகளில் சமமானவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கிடையில் மேலோங்கியிருப்பதுடன் அல்லாஹ்வின் அச்சம் அவர்களை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். சொல்லிலும், செயலிலும் தூய்மை, நேர்மை கமழ வேண்டும். அற்ப ஆசைகள் அவர்களைப் பீடிக்காது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் திருப்பொருத்தமே ஒவ்வொரு கணமும் அவர்களின் முழு இலட்சியமாக அமைய வேண்டும். இது போன்ற அனைத்துப் பண்புகளும் விசயங்களும் அவர்களின் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.

உண்மையில் மேற்குறித்த போராட்ட விதிகளும், ஒழுங்குகளும் அல்குர்ஆனை இலக்காகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட, மஸ்ஜிதை மையமாக வைத்து வளர்த்தெடுக்கப்பட்ட சமுதாயத்தில் மாத்திரமே தோன்ற முடியும்.
யுத்தக் கலைகளைப் பயிற்றுவிக்கும் தளமாகவும் நபி (ஸல்) அவர்களின் காலப்பகுதியில் மஸ்ஜித் திகழ்ந்தது. ஹபஷா வாசிகளில் பெருநாள் தினமன்று அன்றைய போராட்டங்ளில் உபயோகிக்கப்படும் ஒருவகைக் கூர்முனை ஆயுதங்களையும் கேடயங்களையும் பயன்படுத்தி மஸ்ஜிதில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், ஆயிஷா (ரலி) அவர்கள் அதனைக் கண்ணுற்ற போது நபி (ஸல்) அவர்கள் தனது தோட்புயங்களால் ஆயிஷா (ரலி) அவர்களை மறைத்ததாகவும் அறிவிப்புக்கள் வந்துள்ளன.

மஸ்ஜிதுந் நபவியில் சில நபித்தோழர்கள் அம்புகள், ஈட்டிகளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்ததாகவும் றபீதா அல்லது றுபைதா (ரலி) போன்ற நபித்தோழியர்கள் விஷேசமாக நிறுவப்பட்ட மஸ்ஜிதோடு இணைந்த கூடாரங்களில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்தாகவும், ஹந்தக் போராட்டத்தில் காயமுற்ற அவ்ஸ் கோத்திரத் தலைவரான ஸஃது இப்னு முஆத் (ரலி) அவர்களுக்காக மஸ்ஜிதுக்கருகாமையில் கூடாரமொன்று அமைக்கப்பட்டதாகவும் இன்னும் சில அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்த நேர்வழி நடந்த கலீபாக்களின் காலங்களிலும் அதனைத் தொடர்ந்த காலப் பகுதிகளிலும் வாழ்வின் இலட்சியங்களை முழுமையாக அறிந்த, மரணத்தைத் துச்சமென மதிக்கக் கூடிய, உடலையும் பொருளையும் எவ்வேளையிலும் வழங்கத் தயாராகவுள்ள புனிதர்களையெல்லாம் மஸ்ஜித் தன்னகத்தில் பயிற்றுவித்து வெளியேற்றியிருந்தது.

உரோம, பாரசீக, தார்த்தாரியப் படையெடுப்புக்கள், சிலுவைப் போர்கள் போன்று இஸ்லாத்திற்கெதிரான பெரும் துன்பங்கள், கஷ்டங்கள் பீடித்த போதெல்லாம் அவற்றைப் பலமிழக்கச் செய்து அல்லாஹ்வின் தீனை நிலை நாட்டி, முஸ்லிம்கள் வெற்றி வாகை சூடக் காரணமாக அமைந்தவைகளில் மஸ்ஜிதின் பணி மகத்தானது என்பதை வரலாற்றுப் பக்கங்கள் நிரூபித்த வண்ணம் உள்ளன.

நவீன உலகில் அமுல்படுத்தப்படும் கொள்கைகளில், பல நாடுகள் சிறந்த ஆட்சியமைப்புக்கு உகந்ததாக கையாளும் சாதனங்களில், ''ஜனநாயகம்"" ஒன்றாகும். மனிதம் சுதந்திரமிழந்து உரிமைகளைப் பறிகொடுத்து அலையும் நிலை ஒரு புறமிருக்க, சுதந்திரம், உரிமைகள், கடமைகள் அனைத்தும் ஜனநாயகம் என்பதற்குள் புதைந்திருப்பதாகப் பொய்வாதம் புரியப்படுகின்றது. இதனால் தான், ''மக்களை, மக்களால் மக்களுக்காகச் செய்யப்படும் ஆட்சி"" எனும் முலாமிடப்பட்ட வரைவிலக்கணம் அதற்குக் கொடுக்கப்படுகின்றது. மக்களின் நலன்கனே அனைத்திலும் முன்னுரிமை எனும் கோட்பாட்டளவிலான கருத்தும் அதன் மூலம் முன் வைக்கப்படுகின்றது.

உண்மையில் ஜனநாயகம் எனும் பெயரைத் தாங்காத, அதனிலும் வித்தியாசமான, நடைமுறைச் சாத்தியமாக சிந்தனையாகப் 'பிரதிநிதித்துவம்" எனும் கிலாபத் கோட்பாட்டை இஸ்லாம் முன் வைத்துள்ளது. அனைத்து அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கே உரியது. பிரபஞ்சம் அனைத்துக்கும் சொந்தக் காரன் அவனே. சகல விதத்திலும் உயர்ந்து நிற்கக் கூடிய ஆற்றலைக் கொண்ட ஏகவல்லவன் அவன் மாத்திரமே. இவ்வேளை மனிதன் அவனின் பிரதிநிதியாக, அவனின் கட்டளைகளை நிபந்தனைகளுக்கேற்ப பூமியில் அமுல்படுத்துபவனாக அவனுக்குத் திருப்தியளிக்கக் கூடிய ஆட்சியை, கட்டுப்பாடுகளை மீறாத அரசைத் தோற்றுவிப்பவனாக இருப்பான் என்பதே இஸ்லாம் கூறும் கிலாபத் ஆகும்.

'உம் இறைவன் மலக்குகளை நோக்கி, நான் ஒரு பிரதிநிதியை பூமியில் ஏற்படுத்தப் போகின்றேன்" என்று கூறிய அந்த நேரத்தை நினைவு கூறும்"". (2:30)
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; ''அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;""... (அந்நூர் : 55)

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தெய்வீக, ஆனால் மனித செயற்பாடு கலந்த இக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி செயலுருவில் கொண்டு வந்தார்கள். அவரைத் தொடர்ந்த நேர்வழி சென்ற கலீபாக்களும் இதனை அமுல்படுத்தியதன் மூலம் இஸ்லாம் அனைத்தையும் பொதிந்த, நடைமுறைக்கு உகந்த மார்க்கம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். இந்த வகையில் மனித சுதந்திரம், நீதி, உரிமைகள் போன்ற சமுதாயத்துக்குரிய அனைத்து அடிப்படைகளையும் முதன் முதலில் முன் வைத்தது இஸ்லாமே.

இவ்வாறு நோக்குமிடத்து, இஸ்லாம் கூறும் ''கிலாபத்"" கொள்கைக்கும் மஸ்ஜிதின் இலட்சியங்களுக்குமிடையில் முரண்பாடுகள் இல்லை. பிரதிநிதித்துவத்தை ஆரம்பித்து, அதனைத் தூண்டி வளர்த்து விட்ட பெருமை மஸ்ஜிதையே முதலில் சாரும். கிலாபத்தின் ஆரம்பமும், முடிவும் மஸ்ஜிதாகத் தான் இருக்க முடியும்.

ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் அதன் மின்பரில், ''மனிதர்களே! நான் உங்களுக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளேன். இதனூடாக நான் உங்களை விட உயர்ந்தவனல்லன். நான் செய்வது சரியானது எனில் எனக்கு உதவியாளர்களாக இருங்கள். தவறுவிடின் என்னைத் திருத்துபவர்களாக மாறுங்கள்"" எனக் கூறுமளவுக்கு மஸ்ஜித், அவர்களுக்கு ஆன்மீகப் பக்குவத்தை வழங்கியது.

''அல்லாஹ் மீது சத்தியமாக உங்களில் தவறைக் காணின் எங்கள் வாள்கள் உங்களைச் சீர் செய்யும்"" என மின்பரில் பிரசன்னமாயிருந்த கலீபாவின் முன் பொதுமகன் எழுந்து கூறும் உரிமைகளையும் பெற்றுள்ளான் என்ற இஸ்லாத்தின் கூற்றை நடைமுறைப்படுத்தியதும் மஸ்ஜிதே. இது போன்ற முன்மாதிரியான குடியுரிமையை மஸ்ஜித்களின் வரலாறு எடுத்தியம்புகின்றது.


Read More Add your Comment 0 comments


நோன்பை முறித்ததற்காக மீண்டும் நோன்பு நோற்றலும், அதற்கான பரிகாரமும்



k.m.jawahir jamali.
நோன்பை முறிக்கக் கூடிய காரணிகளாக, திருமறைக் குர்ஆனில் மூன்று காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன : உண்ணுதல், பருகுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் ஆகியவைகளாகும். ஆல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரக~pயமாகத் தம்மைத் தாமே வஞ்~pத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்.

இன்னும் நீங்கள் பள்ளிவா~லில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய ~hன்றுகளைத் தெளிவாக்குகின்றான். (2:187).

உணவையோ அல்லது பானங்களையோ உட்கொள்ளுதல், அது ஆகுமாக்கப்பட்டதாகவோ அல்லது ஆகுமாக்கப்படாததாகவோ இருப்பினும் சரியே மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது தீங்கு விளைவிக்காததாகவோ இருப்பினும்சரியே மற்றும் உண்ணக் கூடிய பொருள் மிகக் குறைந்த அளவு அல்லது அதிகமான அளவுள்ளதாக இருப்பினும் சரியே, இவை யாவும், நோன்பை முறிக்கக் கூடியவைகளாகி விடும். இதனடிப்படையில், புகை பிடித்தலும் - இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது மற்றும் இஸ்லாமியச் சட்டங்கள் அனுமதிக்காததும், இதுவும் நோன்பை முறிக்கக் கூடியதுதான்.

நோன்பாளி மிகச் சிறிய அளவிலான ரொட்டித் துண்டை விழுங்கினாலும் சரி, அந்த ரொட்டித் துண்டானது இவனது உடலுக்கு எந்தவித பிரயோஜனத்தையும் தர இயலாத அளவில் இருப்பினும், அதுவும் ஒரு நோன்பாளியின் நோன்பை முறிக்கக் கூடியது தான் என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

உடலுறவு கொள்ளுதல் :
நோன்பு காலங்களில் உடலுறவு கொள்வது என்பது மிகக் கடுமையானதொரு பாவகரமான செயலாகும். ஏனென்றால், ஒருவர் நோன்பு காலங்களில் உடலுறவில் ஈடுபட்டு விட்டாரென்றால், அவர் ஒரு அடிமையை விடுதலை செய்தாக வேண்டும், அல்லது அதற்கு வழியேதும் இல்லை என்றால், இரண்டு மாதங்கள் இடைவிடாது தொடர்ந்து நோன்பு நோற்றாக வேண்டியது கட்டாயமாகும். இதற்கும் ஒருவர் தகுதி படைத்தவராக இல்லை எனில் அவர், இதற்குப் பகரமாக 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

உணர்ச்சியின் மேலீட்டால் விந்தை வெளியேறுதல் - நோன்பை முறித்து விடக் கூடியது. இதற்கு எந்தப் பரிகாரமும் இல்லை. புரிகாரம் என்பது பெண்ணுடன் உடலுறவு ஏற்பட்டால் மட்டுமே செலுத்தக் கூடியதாகும்.
நுரம்புகளின் மூலம் ஊசியேற்றிக் கொள்ளுதல் - செலுத்தக் கூடிய ஊசி மருந்தின் தன்மை மருந்து என்ற அடிப்படையில் அல்லாத, உணவுக்கான மாற்றுப் பொருளாக இருக்குமென்றால், நோன்பை முறித்து விடக்கூடியது.
சுயமாக வாந்தி எடுத்தல் - ஆனால் தானாக வாந்தி எடுத்து விட்டால் அது எந்தவிதத்திலும் நோன்பை முறித்து விடாது.

முhதவிடாய் அல்லது குழந்தைப் பேற்றுக்குப் பின் உள்ள இரத்தப் போக்கு – சூரிய உதயத்திற்கு முன்பாக இரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டதென்றால், அது நோன்பு வைப்பது ஆகமானதல்ல, அது நோன்பை முறித்து விடும். ஆனால், நோன்பு வைத்த பின்பு சூரிய உதயத்திற்குப் பின்பாக இரத்த ஒழுக்கு ஏற்படுமென்றால், அது நோன்பை முறித்து விடாது.

இரத்தத்தை வெளியேற்றுதல். முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரத்தம் குத்தி எடுப்பவனுடைய மற்றும், இரத்தம் குத்தி இரத்தத்தை வெளியேற்றுபவனுடைய நோன்பும் முறிந்து விடும். இது இன்றுள்ள முறையில் பாட்டில்களில் இரத்தத்தை வெளியேற்றி சேமிப்பதையும் குறிக்கும்.

இதைத் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் காற்றில்லாத பாத்திரத்தின் மூலம் உடலிலிருந்து இரத்தம் குத்தி உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. இரத்தத்தை இன்றுள்ள முறையின் பிரகாரம் ஊசியின் மூலம் குத்தி அல்லது சிரிஞ் மூலம்வெளியேற்றுவதும், நோன்பை முறிக்கக் கூடிய செயல்களாகும்.
மேலே குறிப்பிடப்பட்டவர்களில் - அதில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களை நோன்புக் காலங்களில் அவர்கள் செய்துவிடுவார்களென்றால், அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு குற்றங்களை இழைத்தவர்களாவார்கள் :

1. அவர்கள் பாவமான காரியத்தைச் செய்து விட்டார்கள்
2. நோன்பை முறித்து விட்டார்கள்
3. அவர்கள் நோற்றிருக்கின்ற நோன்பை அதன் இறுதி வரைக்கும் அந்த
நாளின் முடிவு வரைக்கும் தொடர வேண்டும்.
வுpட்ட நோன்புகளை ரமளானுக்குப் பின் உள்ள மாதங்களில் நோற்றாக வேண்டம்.

மேற்கண்ட 3 காரணங்களால் நோன்பானது முறிந்து விடும் என்பதை நான் எப்பொழுதும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும் :
1. அறிவு
2. கவனமின்மை
3. விருப்பமின்மை
அறிவு :
ஒரு நோன்பு நோற்றிருக்கும் நோன்பாளியானவர் மேலே நாம் கூறியுள்ள நோன்பை முறிக்கக் கூடிய காரியங்களை, தன்னுடைய சுயநினைவின்றி மறதியின் காரணமாக அல்லது அறியாமையின் காரணமாக பாழ்படுத்தி விட்டாரென்றால், அந்த நோன்பு முறிந்து விடாது, அதை அவர் தொடர வேண்டும், இதில் அவர் நோன்பின் கால வரையறைகளையோ அல்லது சட்டங்களையோ மீறியிருந்தாலும் சரியே! உதாரணமாக, நோன்பு நோற்கக் கூடிய ஒருவர், இரவின் இறுதி நேரத்தில், அதாவது ஸஹர் நேரத்தில் எழுந்திருந்து ஸஹருக்கான உணவை உட்கொண்டிருக்கின்றார், அப்பொழுது அவர் இன்னும் விடியவில்லை சுபுஹினுடைய நேரம் வரவில்லை என நினைத்துக் கொண்டு, தன்னுடைய உணவு உட்கொள்வதைத் தொடர்கின்றார், ஆனால் பின்பு தான் தெரிய வருகின்றது விடிந்து விட்டது அல்லது ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பதை அறிய வருகின்றார் எனில், அவரது நோன்பு செல்லுபடியானது முறிந்து விடாது, அவர் தன்னுடைய நோன்பைத் தொடரலாம், ஏனெனில் அவர் அறியாமையின் காரணமாக நேரத்தை அவர் தவறு விட்டு விட்டார் என்பதேயாகும்.

நோன்பை முறிக்கக் கூடிய சட்டத்தை அறிந்திருக்கவில்லை, இதற்கு உதாரணம், ஒருவர் தன்னுடைய இரத்தத்தைத் தானே குத்தி எடுத்துக் கொண்டிருக்கின்றார், இவ்வாறு இரத்தம் எடுப்பது நோன்பை முறிக்கக் கூடிய செயல் அல்லது நோன்பை முறிக்கக் கூடியவைகள் எவை எவை என்றறியக் கூடிய சட்டங்களில் உள்ள ஒரு சட்டம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. ஏனவே, இவருடைய நோன்பை முறிந்து விடாது, இவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படத்தக்கது தான்.
இறைவன் ஒரு நல்லடியாரின் பிரார்த்தனைகள் இவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றான் : என்னுடைய இறைவனே! நாங்கள் மறதியாகவோ அல்லது தவறுதலாகவோ செய்த தவற்றுக்காக எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!

ஆபுபக்கர் (ரலி) அவர்களின் மகளார் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு நாள் (ரமளான் மாதத்தில்) முஹம்மது (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், அந்த நாளானது மிகவும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது, எனவே நாங்கள் அன்றைய தினம் முடிந்து சூரியன் மறைந்து விட்டது என நினைத்து, எங்களது நோன்பைத் திறந்து விட்டோம். நாங்கள் நோன்பைத் திறந்த பின்பு சூரியன் மீண்டும் உதித்தது, இருப்பினும் முஹம்மது (ஸல்) அவர்கள், மீண்டும் அந்த நாளைய நோன்பை (பரிகாரமாக ரமளானுக்குப் பின்பு) நோற்கச் சொல்லவில்லை. அவ்வாறு (பரிகாரமாக) நோற்க வேண்டும் என்பது கட்டாயம் என்றிருந்தால், அந்த விட்டுப் போன அந்த நோன்பை நோற்கச் சொல்லியிருப்பார்கள்.

கவனமின்மை :
அதாவது ஒவ்வொரு நோன்பாளியும் தான் நோன்பிருக்கின்றோம், நோன்பிருந்து கொண்டிருக்கின்றோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் ஒருவர் நோன்பு நோற்றிருக்க அந்த நிலையில், தான் நோன்பு நோற்றிருக்கின்றோம் என்பதை மறந்த நிலையில் உணவையோ அல்லது குடி பானங்களையோ அருந்தி விடுகின்றார் எனில் அவருடைய நோன்பு முறிந்து விடாது.
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யாரொருவர் தான் நோன்பிருந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்த நிலையில் உணவையோ அல்லது குடிப்பையோ உட்கொண்டு விடுகின்றாரோ அவர் தன்னுடைய நோன்பைத் தொடரட்டும். ஆல்லாஹ் தான் அவருக்கு உணவையும் மற்றும் குடிப்பையும் வழங்கினான். (அஹ்மது)

விருப்பமின்மை :
ஒரு மனிதன், நோன்பிருந்து கொண்டிருக்கின்ற தன்னுடைய மனைவியை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு அழைத்து, அதனைத் தடுக்க இயலாத நிலையில் இவள் இருந்து அவனுடன் உடலுறவில் ஈடுபட்டு விடுவாளெனில், அதற்குப் பகரமாக இவள் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவள் மீண்டும் அந்த நோன்பை நோற்கவோ அல்லது அதற்குப் பரிகாரமாக இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்க வேண்டியது இவள் மீது கடமை இல்லை. வன்னியின் அழைப்பாளன்.


Read More Add your Comment 0 comments


நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்



k.m.jawahir jamali.
மேலும் மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (ஆலு இம்ரான் : 104)

இங்கே நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் - நல்லதைக் கொண்டு ஏவுபவர்கள், அழைப்பாளர்கள் பற்றியும், தீயவற்றிலிருந்து தடுப்பவர்கள் பற்றியும் ஒரு முஃமினுடைய மூன்று குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எந்த நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றோமோ, அந்த நன்மையைப் பின்பற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் உள்ள நபிமார்களுக்கு சீடர்கள் இருந்தார்கள். அந்த சீடர்கள் தங்களது நபிமார்கள் மறைந்தவுடன் அந்த நபிமார்கள் எதை எதைக் காட்டித் தரவில்லையோ, அவற்றை எல்லாம் செய்து கொண்டும், அதன் மூலம் எழுந்த தீமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் வரலாறு நெடுகிலும் அழிக்கப்பட்டு வந்திருப்பதை திருமறை வாயிலாக, ஆது, ஸமூது, மத்யன், ஹ{து என பல்வேறு கூட்டத்தார்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

இதற்கு முன் வந்த அனைத்து நபிமார்களும் கண்ட அனைத்துத் தீமைகளும் இன்றைக்கும் நம் முன்னே பவனி வந்து கொண்டிருக்கும் பொழுதும், இஸ்லாத்தை வேரடி மண்ணாக அழித்து விடுவதற்கு கிறிஸ்தவ, யூத, காஃபிர்கள் என அனைவரும் ஒன்று திரண்டிருக்கும் பொழுது, இஸ்லாத்திற்கு எதிராக ஜாஹிலிய்ய சக்திகளை ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கும் பொழுது, நன்மையைக் கொண்டு ஏவி தீயவற்றைத் தடுப்பவர்கள், அந்தப் பணியைச் செய்யாமல் உதாசினத்துடன் நடந்தோமென்றால், எந்தப் பணியை இந்த முஸ்லிம் சமுதாயத்திடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டு விட்டுச் சென்றுள்ளார்களோ அந்தப் பணியை யார் நிறைவேற்றுவது என்ற கேள்வி எழும்.

இந்தக் கேள்விக்குப் பதில் வைத்திருப்பவர்கள் யார்? என்பதையும்,
அவற்றை அறிய வேண்டிய பொறுப்பு யார் மீது உள்ளது? என்பதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.
இங்கே நம்மைச் சுற்றி தீமைகள் நிறைந்திருக்கின்ற இந்த வேளையில் நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இங்கே தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
இன்றைக்கு இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.
தொழுகையில் எப்படி நிற்பது, கைகளை எங்கே கட்டுவது, எவ்வாறு குனிவது, எவ்வாறு சுஜுது செய்வது உள்ளிட்ட அனைத்தையும் நாம் கற்று வைத்திருக்கின்றோம். ஆனால் இந்த இஸ்லாம் மார்க்கம், இத்துடன் நின்று விட்டதா? மேற்கண்ட முறைப்படி குனிந்து நிமிர்ந்து விட்டால், ஒரு முஸ்லிமினுடைய கடமை முடிந்து விட்டதா? என்று கேட்டால் இல்லை என்ற பதிலையே நீங்கள் தருவீர்கள். ஏனெனில், இறைவன் தன்னுடைய திருமறையிலே மேலே கூறியுள்ளதை இங்கே மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள்.
நன்மையை ஏவ வேண்டும்! தீமையைத் தடுக்க வேண்டும்! இதற்கென ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு தீமையைக் கண்டால் கையால் தடுக்கவும், அடுத்து நாவால் தடுக்கவும், இவை இரண்டும் இயலா விட்டால் மனதளவில் வெறுத்து விடும்படியும், இது ஈமானின் பலஹீனமான நிலை என்றும் கூறியுள்ளார்கள்.
இன்றைக்கு மனதால் வெறுக்கக் கூடிய அளவுக்கு தீமைகள் குறைந்து காணப்படவில்லை. மாறாக, கை கொண்டு தடுத்தால் கூட இயலாத அளவில் தீமைகள் இந்த உலகில் மலிந்து கிடப்பதை நாம் காண்கின்றோம்.

இந்த நிலையில் முஸ்லிம்களின் அழிவையும் சற்று இங்கு சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இதற்கு முன் வாழ்ந்த நபிமார்களின் சீடர்கள், தீமை புரிந்ததோடல்லாமல், தீமை புரிந்தவர்களைத் தடுக்காததன் காரணத்தினால், அவர்களும் அந்தத் தீயவர்களுடன் அழிக்கப்பட்டதை இறைமறை நெடுகிலும் நாம் கண்டு வரும் பொழுது, இந்த தீனை மிகைத்து நிற்கும் தீமைகளைக் களைவது யார் பொறுப்பு என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றவர் முதலில் தான் ஜாஹிலிய்ய சக்திகளிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும்.

அடுத்ததாக, தனக்கு எந்தளவு நன்மையான விசயங்கள் தெரிந்திருக்கின்றதோ, அதனைக் கொண்டு மக்களை நன்மையின் பால் அழைக்க வேண்டும். ஏனெனில் நாம் மௌலவிகள் அல்லவே, அதற்கென படித்தவர்கள் தானே அதனைச் செய்ய வேண்டும் என்றில்லாமல், தனக்குத் தெரிந்தவரை மக்களை நன்மையின் பால் அழைக்க வேண்டும். ஏனெனில், இன்றைக்கு உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் அழைப்புப் பணிக் களத்தில் இறங்கினால் கூட, இன்றைக்கு இருக்கின்ற ஜாஹிலிய்ய சக்திகளை எதிர்க்க முடியாத அளவுக்குச் சென்றுள்ள காரணத்தினால், முடிந்தவரை நாம் அழைப்புப் பணியில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் வளர்ந்து வரும் ஜாஹிலிய்ய சக்திகளுக்கு எதிரான நம்முடைய தாக்குதல் காரணமாக, தீமைகள் மட்டுப்படலாம்.

அடுத்ததாக, நாம் செய்யும் இந்த அமல்கள் யாவும் நம்முடைய மறுமைக்குத் தான் என்ற எண்ணம் மேலோங்க வேண்டுமே ஒழிய, இதனால் இறைவனுக்கு ஏதோ நன்மை செய்து விட்டதாகக் கருதக் கூடாது.
இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கின்றாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கின்றார். (அல் அன்கபூத் : 06)

மேலும், எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறாரோ அவர்கள் தங்களுக்கு நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கின்றார்கள்.(அர் ரூம் : 44)
மேலும், நாம் இறைவுணர்வுடனும், தூய உள்ளத்துடனும், நன்மையை எதிர்பார்த்தும் செய்கின்ற நல்ல பல அமல்களைக் கொண்டு பயனடைவது நாம் என்பதை விளங்க வேண்டும்.

இன்று உலகில் கிடைக்கும் சில சில்லறை இலாபங்களுக்காக நமது உலகாதாய நடவடிக்கைகளை நாம் மிகவும் கண்ணும் கருத்துமாக செய்து வருகின்றோம். ஆனால்,
நாளை மறுமையில் நமக்கு பெரும் உதவியாக அமையப் போதுமான நல்லறங்களைச் செய்யும் விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்?
நமது நிலையை உணர்ந்து நமது நன்மைக்காகவே செய்கின்ற நல்லறங்களை கவனமாகச் செய்ய முற்படுவோமாக!
வல்ல நாயம் அதற்குப் பேரருள் புரிவானாக! ஆமீன்!!
இவன் வன்னியின் மஹிந்தன்.


Read More Add your Comment 0 comments


இவர்கள் பயங்கரவாதிகள் இல்லையா?



k.m.jawahir jamali.
நாட்டில் அமைதியாக வாழவிரும்புகிற மக்களிடையில் பீதியையும், பயங்கரவாத போக்கையும் ஏற்படுத்தும் வகையில் மதவாத கட்சிகளும், அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. சமீபகாலத்தில் இந்த போக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. சாந்தியையும், சமாதானத்தையும் மக்களுக்கு போதித்து நாட்டு மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரத்துவ வாஞ்சையோடு வாழுமாறு போதிக்க கடமைப்பட்டுள்ளது. ஆளும் அரசியல் கட்சி, ஆனால், மதவாத அமைப்புகளின் தலைவர்களும் இணைந்து தீவிரவாதத்திற்குத் துணைபோகிறது.

சமீப காலமாக விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிரவீண் தொகடியா நாட்டின் பல மாநிலங்களுக்குச் சென்று திரிசூல் வழங்கும் விழா என்ற பெயரில் பொதுமக்களைக் கூட்டி வைத்து அவர்களில் ஒவ்வொருவருக்கும் பயங்கர ஆயுதமான திரிசூல்களை வழங்கி, சிறுபான்மை, சமுகத்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார். நாட்டின் சட்டங்களையும், நீதிமன்றங்களின் உத்தரவுகளையும் காலடியில் போட்டு மிதிக்கும் வகையில் அவரின் பேச்சுக்கள் அமைந்துள்ளன.

''சர்வதேச அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள, கண்டனத்திற்குரிய கொடிய செயலான பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலைகள் முதலிய அனைத்தையும் இந்நாட்டில் நாங்களே முதன்மை வகித்து அரங்கேற்றினோம்" என்று சங்பரிவார்கள் பகிரங்கமாகவும், துணிச்சலோடும் மேடைகளில் கூறிவருகின்றனர்.

பகிரங்கமாக பயங்கரவாதச் செயல்கள் புரியும் இவர்கள் அரசின் ஆதரவோடு நாட்டில் நடமாடுவதுதான் வேடிக்கையாக உள்ளது. இவர்களின் மீது பொடா சட்டம் பாயாதது ஏன் என்று தெரியவில்லை. இதை நடுநிலையாளர்களும் கேட்கமுடியாத நிலையே காணப்படுகிறது. எந்த நாட்டிலோ உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகப் பேசினார்கள் என்ற காரணத்தால் பொடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் சிலர் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது எந்த வகை நியாயமோ தெரியவில்லை. தீவிரவாதத்தை அரங்கேற்றியதே நாங்கள் தான் என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுப்பது மட்டுமல்லாது தங்களின் தொண்டர்களுக்கு பயங்கரமான ஆயுதங்களையும் வழங்கி, தூண்டிவிட்டு வன்முறைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் குண்டர்களின் தலைவர்களை நாட்டில் நடமாடவிட்டு மற்ற சமுதாய மக்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பது நாட்டின் அமைதிக்கே பேராபத்தை விளைவிக்கும் செயலாகும்.

மே 18, 23 அன்று தினமணிநாளிதழ் முதல் பக்கத்தில் மல்ட்டி கலரில் வெளியான செய்தி நம் நாட்டு அரசுகளின் ஒன் வேடிராஃபிக் தனத்தை நிரூபித்துள்ளது. மும்பையில் விசுவ இந்து பரிஷத் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 15 வயது முதல் 3 வயது வரை உள்ள பெண்களுக்கு பகிரங்கமாக ஆயுதப் பயிற்சியளிக்கப்படுவதை படம் போட்டுக் காண்பித்துள்ளார்கள். அதுவும் அந்தப் பயிற்சி 1 முகாம்களில் நடைபெறுகின்றனவாம். சிவசேனையின் தற்கொலைப் படைகள், துப்பாக்கி பயிற்சி பெற்றுவரும் பெண்கள் படைகள், கத்திக் குத்து கற்றுவரும் பெண்கள் படைகள் என்று தீவிரவாதக் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்தும் நம் நாட்டு அரசு கண்டு கொள்ளாதிருப்பது மனித உதிரம் ஓட்டத் துடிக்கும் செயலாகும்.

பயங்கரவாத ஆயுதங்களை கையிலே ஏந்தி, வெறித்தனமான கூச்சலிடும் இவர்கள் மனிதத் தன்மையை இழந்தவர்கள். இவர்கள் தங்களின் செயல்களுக்கு மதச் சாயம் பூசிக் கொள்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
இவர்களைப் போன்ற வெறியர்கள் இருக்கும் வரை நாட்டில் அமைதி ஏற்படப் போவதில்லை. மற்ற நாடுகளைப் பார்த்து அமைதி ஏற்பட வேண்டும் என்று அறிவுரைக் கூறிக் கொண்டிருப்பதை விட நம்நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறவர்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்வதுதான் மத்திய மாநில அரசுகளின் மனித மிக்க செயலாகும். தங்களின் மதம் மற்றும் கொள்கையைச் சார்ந்தவர்கள்.

தங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு துணைநிற்பவர்கள் போன்ற அர்ப்ப காரணங்களுக்காக முஸ்லிம் அல்லாத தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குமானால் நாட்டில் அமைதியற்ற சூழல் தொடர்ந்து நீடிக்கும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அக்கிரமத்தை யார் செய்தாலும் பாகுபாடுயின்றி நடவடிக்கை எடுக்கிற பக்குவம் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும்.

''நம்பிக்கையாளர்களே! நியாயத்தை நிலை நிறுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு உறுதியான சாட்சியாக இருங்கள். ஒரு கூட்டத்தாரின் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு அவர்களின் மீது நீதம தவறிச் செல்ல உங்களை தூண்டிவிட வேண்டாம். நீதியோடு நடந்து கொள்ளுங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகவும் நெருக்கமானதாகும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்." (திருக்குர்ஆன 5:8)
அருளும் அன்பாளன்


Read More Add your Comment 0 comments


அநாதையைப் பராமரித்தல்



k.m.jawahir jamali.
அல்லாஹ் கூறுகிறான் :
நீர் அநாதைகளுடன் கடுமையாக நடந்து கொள்ளாதீர். (93:9) அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிக்கிறார்கள். (76:8)

நானும் அநாதையைப் பராமரிப்பவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக் காட்டி கூறினார்கள். விரல்களுக்கிடையேயும் சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள். அறிவிப்பவர் : ஸஃது (ரலி) நூல் : புகாரி (6005)

நானும் அநாதையைப் பராமரிப்பவரும், அந்த அநாதை சொந்தத்தில் உள்ள அல்லது சொந்தத்தில் அல்லாத அநாதையாக இருந்தாலும் சரி - சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் காட்டிக் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹ{ரைரா (ரலி) நூல் : முஸ்லிம், திர்மிதி (1983)
பயன்கள் :
அநாதைகளைப் பராமரிப்பது சிறப்பானதாகும். அதற்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
இது சுவனத்தில் நுழைவதற்கும் அதில் அந்தஸ்துகள் உயர்வதற்கும் காரணமாக அமைகின்றது.
இங்கு அநாதை என்பது சொந்தத்தில் உள்ள அல்லது சொந்தம் அல்லாத எல்லா அநாதைகளையும் குறிக்கும்.
அநாதைகளின் பொருளை உண்பது குறித்த எச்சரிக்கை
அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும் விரைவில் அவர்கள் கொளுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். (4:10)

நாசத்தைத் தரக் கூடிய ஏழு காரியங்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அவை என்னென்ன? என்று தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, சூனியம் செய்வது, அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக்கிய உயிரை நியாயமின்றிக் கொல்வது, வட்டி உண்பது, அநாதையின் பொருளை உண்பது, போர்க்களத்தில் புறமுதுகு காட்டுவது, முஃமினான கற்புள்ள அப்பாவிப் பெண்களை அவதூறு சொல்வது ஆகியவையாகும். அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : புகாரி (2766) முஸ்லிம்.

இறைவா! அநாதை, பெண் ஆகிய இரு பலவீனர்களின் உரிமையை கண்ணியத்திற்குரியதாய் ஆக்குகிறேன்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : குவைலித் பின் உமர் (ரலி) நூல் : நஸயீ
பயன்கள் :
அநாதையின் பொருளை அநியாயமாகக உண்பது பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்வது நாசத்தைத் தரக் கூடிய பெரும் பாவங்களில் ஒன்றாகும்


Read More Add your Comment 0 comments


பன்றித்தோல் தொடர்பான வியாபாரம் கூடுமா?




k.m.jawahir jamali
எந்தப் பிராணியின் தோலானாலும் அது பதனிடப்பட்டுவிட்டால் அது தூய்மையடைந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதாகி விடுகின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
பன்றியைப் போல் தானாகச் செத்த பிராணிகளும் ஹராம் என்பதை நாம் அறிவோம். இதைத் தடை செய்யும் வசனத்தில் பன்றியை மூன்றாவதாகக் கூறும் இறைவன் தானாகச் செத்த பிராணிகளை முதலாவதாகக் கூறுகிறான். தானாகச் செத்த பிராணியின் மாமிசத்தை தடை செய்த இஸ்லாம் அதன் தோல்லுக்கு மட்டும் விதி விலக்கு அளித்துள்ளது.
حدثنا زهير بن حرب حدثنا يعقوب بن إبراهيم حدثنا أبي عن صالح قال حدثني ابن شهاب أن عبيد الله بن عبد الله أخبره أن عبد الله بن عباس رضي الله عنهما أخبره
: أن رسول الله صلى الله عليه و سلم مر بشاة ميتة فقال ( هلا استمتعتم بإهابها ) . قالوا إنها ميتة . قال ( إنما حرم أكلها )
2221- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோது, இதன் தோலை நீங்கள் பயன்படுத்தக்கூடாதா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், இது செத்த ஆடாயிற்றே! என்றனர். அதற்கு அதை உண்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி- 2221, 1492, 5531, 5532

செத்த ஆடு ஹராமாக இருந்தும் அதன் தோலைப் பயன்படுத்த நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் அனுமதித்துள்ளனர்.

547- حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ وَعْلَةَ أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَ- رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை அடைந்துவிடும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (596)

1797- حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنِ ابْنِ وَعْلَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ- رواه أحمد
எந்தத் தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அஹ்மது (1797)

السنن الكبرى للبيهقي - كتاب الطهارة
حديث : ‏64‏ - 9926
أخبرنا أبو القاسم عبد الرحمن بن عبيد الله بن عبد الله بن الحربي من أهل الحربية ببغداد ، نا أبو بكر محمد بن عبد الله الشافعي ، أنا إبراهيم بن الهيثم ، ثنا علي بن عياش ، ثنا محمد بن مطرف ، عن زيد بن أسلم ، عن عطاء بن يسار ، عن عائشة ، عن النبي صلى الله عليه وسلم قال : " طهور كل إهاب دباغه " . رواته كلهم ثقات
பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (64) பாடம் (தூய்மை)

548 حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَقَالَ ابْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ قَالَ رَأَيْتُ عَلَى ابْنِ وَعْلَةَ السَّبَإِيِّ فَرْوًا فَمَسِسْتُهُ فَقَالَ مَا لَكَ تَمَسُّهُ قَدْ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قُلْتُ إِنَّا نَكُونُ بِالْمَغْرِبِ وَمَعَنَا الْبَرْبَرُ وَالْمَجُوسُ نُؤْتَى بِالْكَبْشِ قَدْ ذَبَحُوهُ وَنَحْنُ لَا نَأْكُلُ ذَبَائِحَهُمْ وَيَأْتُونَا بِالسِّقَاءِ يَجْعَلُونَ فِيهِ الْوَدَكَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ قَدْ سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ دِبَاغُهُ طَهُورُهُ رواه مسلم

அபுல்கைர் மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ கூறுகிறார் :
நான் அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ அவர்கள் தோலாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டேன். நான் அதைத் தடவிப் பார்த்தேன். அப்போது அவர்கள், "ஏன் இதைத் தடவிப் பார்க்கிறீர்கள்? நான் இதை (அணிவது) பற்றி அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "நாங்கள் மேற்கே வசித்து வருகிறோம். எங்களுடன் (ஆப்பிரிக்கர்களான) பர்பர் இன மக்களும் அக்னி ஆராதகர்(களான மஜூசி)களும் வசித்து வருகின்றனர். அவர்கள் அறுத்த ஆடுகள் எங்களிடம் கொண்டு வரப்படுவதுண்டு. ஆனால், அவர்கள் அறுத்ததை நாங்கள் சாப்பிடுவதில்லை. மேலும், அவர்கள் தோல் பைகளில் கொழுப்புகளை வைத்து எங்களிடம் கொண்டு வருகின்றனரே (அந்தத் தோலை நாங்கள் பயன்படுத்தலாமா?)' என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள், "நாங்கள் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அதற்கு அவர்கள், "அதைப் பதனிடுவதே அதைத் தூய்மையாக்கி விடும்' என்று பதிலளித்தார்கள்'' என்றார்கள்.
முஸ்லிம் (597)

ஆடு மாடு போன்ற உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பொறுத்த வரை அது பதனிடப்பட்டாலும் பதினடப்படாவிட்டாலும் அவற்றை பயன்படுத்துவது ஆகுமானதாகும். எனவே மேற்கண்ட ஹதீஸ்கள் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றி பேசவில்லை. மாறாக உண்பதற்கு தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றியே பேசுகின்றன.

பதனிடுவதற்கு முன்பு தடை செய்யபட்டதாக உள்ள பிராணிகளின் தோல் குறித்தே அது பதனிடப்பட்டு விட்டால் பயன்படுத்தலாம் எனக் கூற முடியும். எனவே மேற்கண்ட ஹதீஸ் உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோல் பதனிடப்பட்டு விட்டால் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கின்றன.
இதனடிப்படையில் பன்றி உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணியாக இருந்தாலும் அதன் தோல் பதனிடப்பட்டு விட்டால் அதை பயன்படுத்திக்கொள்ள இந்த ஹதீஸ்கள் அனுமதிக்கின்றன.

சிலர் பன்றிக்கு மட்டும் இதிலிருந்து விதிவிதிலக்கு அளித்து அதன் தோல் பதனிடப்பட்டாலும் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் இச்சட்டத்திலிருந்து பன்றிக்கும் மட்டும் விதிவிலக்கு அளிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு இவர்கள் வைக்கும் வாதங்களும் ஏற்புடையதாக இல்லை.

பன்றியின் மீதுள்ள எல்லையில்லாத வெறுப்பால் பன்றி விஷயத்தில் இச்சட்டத்தைக் கூற பலருடைய மனம் இடம் கொடுப்பதில்லை. ஆனால் ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இது போன்று நமது மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானது.

எனவே பன்றித் தோலால் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தலாம். மார்க்கம் அனுமதித்துள்ளது.


Read More Add your Comment 0 comments


 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed