இஸ்லாத்தின் அடிப்படை தவ்ஹீத்



k.m.jawahir jamali.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும.
ஒரு கட்டிடத்தின் உறுதி அதன் அடிப்படையைப் பொறுத்துத்தான் அமைகிறது.அடிப்படை உறுதியானதாக இருந்தால்தான் கட்டிடமும் உறுதியானதாக இருக்கும் அடிப்படை சரியில்லையென்றால் அக்கட்டிடம் தரைமட்டமாகி விடும்.இஸ்லாத்தின் அடிப்படை தவ்ஹீத்; கொள்கையாகும்.இந்தக் கொள்கையில் சரியாக இருந்தால்தான் இஸ்லாத்தின் மற்றக் காரியங்களும் வணக்கவழிபாடுகலும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமையும் அடிப்படைக் கொள்கை சரியில்லையென்றால் மற்ற அனைத்துக் காரியங்களும் வீணாகிவிடும்.

இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பெயரளவில்தான் முஸ்லிம்களாக இருக்கிறார்களேத் தவிர இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகிய லாயிலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்குரியவன் நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற கலிமாவின் பொருளை உணர்ந்தவர்களாக இல்லை. பெரும்பாலானவர்களுக்கு அல்லாஹ் எ;ன்றால் யார்?அவனது பண்புகள் என்ன?எதையெல்லாம் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டும்? ஏன்ற அடிப்படையைக் கூட அறியாதவர்களாகத்தான் உள்ளனர்.
தர்ஹா வழிபாடு தாயத்து தகடுகள் ஜோதிடம் மௌலிது சகுனம் பார்த்தல் போன்ற எண்ணற்ற இணைவைப்புக் காரியங்களில் இன்றைக்கு முஸ்லிம்கள் மூழ்கிக் கிடக்கின்றனர்.

எனவே உண்மையான இஸ்லாமிய தவ்ஹீத் கொளகையை தெனிவாக அறிந்து அதற்கு புறம்பான செயல்பாடுகளை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
தவ்ஹீது என்றால் என்ன?
தவ்ஹீத்; என்றால் (ஏகத்துவம்) இறைவனை ஒருமைப்படுத்துதல் என்பதாகும். அதாவது (லாஇலாஹ இல்லல்லாஹ்) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று நம்பிக்கை கொண்ட ஒருவர் படைத்துப் பரிபாலிப்பது நிர்வகிப்பது போன்ற அல்லாஹ்வின் செயல்களில் யாரையும் அவனுக்கு இணையாக்கிவிடாமல் அவனை ஏகத்துவப்படுத்துவதும்.

வணக்கத்தில் பிரார்த்தனை செய்வது பிராணிகளைப் பலியிடுவது நேர்ச்சை செய்வது போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நிறைவேற்றி ஏகத்துவப்படுத்துவதும் அல்லாஹ்வின் திருநாமங்களில் மற்றும் அவனது பண்புகளில் அர்ஷின் (இறை அரியனை) மீது அமர்தல்.இறங்கி வருதல்.கைகளிருப்பதாகச் சொல்லுதல் போன்ற திருக்குர்ஆனில் தன்னைப் பற்றி இறைவன் குறிப்பிடும் பண்புகளையும் நம்பத்தகுந்த ஆதாரங்களுடைய நபி மொழிகளில் நபிகளாரால் இறைவனுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் பண்புகளையும் மாற்றியோ கூட்டிக் குறைத்தோ பொருள் கொள்ளக் கூடாது.

உருவகப்படுத்தக் கூடாது மனிதக் கற்பனைகளுக்கேற்ப பொருள் கொள்ளக் கூடாது.அவை இல்லையென்று மறுத்துரைக்கக் கூடாது.அவனது நிறைவான தகுதிக்தேற்ப அவற்றில் கூறப்பட்டுள்ள படி ஏகத்துவப்படுத்துவதே தவ்ஹீத் ஆகும். இதனையே அல்லாஹ் சுருக்கமாக திருமறைக்குர்ஆனில் கூறுகிறான்.
அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக.அல்லாஹ் தேவைகளற்றவன்.யாரையும் அவன் பெறவில்லை.யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை. (112:1-4)

முஸ்லிம் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் முதலில் அறிந்து கொள்ள வேண்டியது இஸ்லாத்தின் உயிர்நாடியான லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவக் கொள்கையையாகும்.
இஸ்லாத்தின் கொள்கை இது தான் என்பதை முஸ்லிமல்லாதவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.ஆனாலும் இலங்கையில் வாழும் கனிசமான முஸ்லிம்கள் இக்கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர்.
வுணக்கத்தற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.
1.அல்லாஹ்வை வணங்க வேண்டும்.
2.அல்லாஹ்வைத் தவிர எவரையும் வணங்கக் கூடாது.
இதில் முதலாவது செய்தியை ஓரளவு ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் இரண்டாவது செநய்தியை அறியாதவர்களாகவுள்ளனர்.இதன் காரணமாகத்தான் ஒரு பக்கம் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இன்னொரு பக்கம் இறந்தவர்களையும் அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளையும் மகான்கள் என்று உலா வரும் போலிகளையும் வணங்கி வருகின்றனர்.

இவ்விரண்டு செய்திகளில் இரண்டாவது தான் முக்கியமானதாகும்.இதைச் சொல்வதற்காகத்தான் ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் வரை எல்லா சமூதாயங்களுக்கும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பப்பினான். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொல்லித் தருவதற்கோ அல்லாஹ்வின் பண்புகளை மட்டும் சொல்லித் தருவதற்கோ அனுப்பப்படவில்லை. அதை இறைவன் திருமறையில் கூறுகிறான்:
அல்லாஹ்வை வணங்குங்கள் தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்று (எடுத்துரைக்க) ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். 16:36.
உங்கள் வணக்கதிற்குரியவன் ஒரே ஒரு இறைவனே.அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.அவன் அளவற்ற அருளாளன்.நிகரற்ற அன்புடையோன். 2:163.
ஆகவே எல்லா வணக்கங்களையும் இறைவனுக்கு இணைவைக்காமல் நிறை வேற்ற வேண்டும்.ஏதாவது ஒரு வணக்கத்தில் கூட இணைவைத்தீர்களாயின் நிரந்தர நரகத்தையே அடைவோம்.அதனை அல்லாஹ் ஒரு போதும் மண்ணிக்கமாட்டான்.அது மட்டுமில்லாமல் நாம் காலம்முழுக்க செய்த நமது நல் அமல்களை அழித்துவிடுவான் அதனை பின் வருமர்று திருமறையில் குறிப்பிடுகிறான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்.அதற்கு கீழ் நிலையில் உள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான்.அல்லாஹ்வுக:கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.(4:48).
(முஹம்மதே) நீர் இணை கற்பித்தால் உமது நல்லரம் அழிந்து விடும்.நீர் இழப்பை அடைந்தவராவீர்(39:65).
ஆகவே நாம் வாழும் பொழுது ஏகத்துவக் கொள்கையுடையவராக வாழு வேண்டும் ஏன் என்றால் நாம் நரகத்திற்குரிய செயல்களை செய்திருந்தாலும் அந்த ஏகத்துவம் மட்டும் போதும் நாம் நரகிலிருந்து விடுதலை செய்யப்பட்டு சுவனம் வருவதற்கு அதை நபி ஸல் அவர்களே குறிப்பிடுகின்றார்கள்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
நரகத்தில் வேதனை செய்யப்பட்டவர்களில் தவ்ஹீத் வாதிகள் அங்கிருந்து வெளியெற்றப்பட்டு சுவர்க்கத்தில் நுலைவிக்கப்படுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) அவர்கள்.
நூல்: திர்மிதி(2522).

ஆகவே தவ்ஹீத் கொள்கையை புறக்கனிக்காமல் ஏகத்துவ வாதிகளாக மரனிப்போமாக. k.m.ஜவாஹீர் ஜமாலி.




Share your views...

0 Respones to "இஸ்லாத்தின் அடிப்படை தவ்ஹீத்"

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed