இவர்கள் பயங்கரவாதிகள் இல்லையா?
k.m.jawahir jamali.
நாட்டில் அமைதியாக வாழவிரும்புகிற மக்களிடையில் பீதியையும், பயங்கரவாத போக்கையும் ஏற்படுத்தும் வகையில் மதவாத கட்சிகளும், அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. சமீபகாலத்தில் இந்த போக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. சாந்தியையும், சமாதானத்தையும் மக்களுக்கு போதித்து நாட்டு மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரத்துவ வாஞ்சையோடு வாழுமாறு போதிக்க கடமைப்பட்டுள்ளது. ஆளும் அரசியல் கட்சி, ஆனால், மதவாத அமைப்புகளின் தலைவர்களும் இணைந்து தீவிரவாதத்திற்குத் துணைபோகிறது.
சமீப காலமாக விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிரவீண் தொகடியா நாட்டின் பல மாநிலங்களுக்குச் சென்று திரிசூல் வழங்கும் விழா என்ற பெயரில் பொதுமக்களைக் கூட்டி வைத்து அவர்களில் ஒவ்வொருவருக்கும் பயங்கர ஆயுதமான திரிசூல்களை வழங்கி, சிறுபான்மை, சமுகத்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார். நாட்டின் சட்டங்களையும், நீதிமன்றங்களின் உத்தரவுகளையும் காலடியில் போட்டு மிதிக்கும் வகையில் அவரின் பேச்சுக்கள் அமைந்துள்ளன.
''சர்வதேச அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள, கண்டனத்திற்குரிய கொடிய செயலான பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலைகள் முதலிய அனைத்தையும் இந்நாட்டில் நாங்களே முதன்மை வகித்து அரங்கேற்றினோம்" என்று சங்பரிவார்கள் பகிரங்கமாகவும், துணிச்சலோடும் மேடைகளில் கூறிவருகின்றனர்.
பகிரங்கமாக பயங்கரவாதச் செயல்கள் புரியும் இவர்கள் அரசின் ஆதரவோடு நாட்டில் நடமாடுவதுதான் வேடிக்கையாக உள்ளது. இவர்களின் மீது பொடா சட்டம் பாயாதது ஏன் என்று தெரியவில்லை. இதை நடுநிலையாளர்களும் கேட்கமுடியாத நிலையே காணப்படுகிறது. எந்த நாட்டிலோ உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகப் பேசினார்கள் என்ற காரணத்தால் பொடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் சிலர் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது எந்த வகை நியாயமோ தெரியவில்லை. தீவிரவாதத்தை அரங்கேற்றியதே நாங்கள் தான் என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுப்பது மட்டுமல்லாது தங்களின் தொண்டர்களுக்கு பயங்கரமான ஆயுதங்களையும் வழங்கி, தூண்டிவிட்டு வன்முறைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் குண்டர்களின் தலைவர்களை நாட்டில் நடமாடவிட்டு மற்ற சமுதாய மக்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பது நாட்டின் அமைதிக்கே பேராபத்தை விளைவிக்கும் செயலாகும்.
மே 18, 23 அன்று தினமணிநாளிதழ் முதல் பக்கத்தில் மல்ட்டி கலரில் வெளியான செய்தி நம் நாட்டு அரசுகளின் ஒன் வேடிராஃபிக் தனத்தை நிரூபித்துள்ளது. மும்பையில் விசுவ இந்து பரிஷத் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 15 வயது முதல் 3 வயது வரை உள்ள பெண்களுக்கு பகிரங்கமாக ஆயுதப் பயிற்சியளிக்கப்படுவதை படம் போட்டுக் காண்பித்துள்ளார்கள். அதுவும் அந்தப் பயிற்சி 1 முகாம்களில் நடைபெறுகின்றனவாம். சிவசேனையின் தற்கொலைப் படைகள், துப்பாக்கி பயிற்சி பெற்றுவரும் பெண்கள் படைகள், கத்திக் குத்து கற்றுவரும் பெண்கள் படைகள் என்று தீவிரவாதக் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்தும் நம் நாட்டு அரசு கண்டு கொள்ளாதிருப்பது மனித உதிரம் ஓட்டத் துடிக்கும் செயலாகும்.
பயங்கரவாத ஆயுதங்களை கையிலே ஏந்தி, வெறித்தனமான கூச்சலிடும் இவர்கள் மனிதத் தன்மையை இழந்தவர்கள். இவர்கள் தங்களின் செயல்களுக்கு மதச் சாயம் பூசிக் கொள்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
இவர்களைப் போன்ற வெறியர்கள் இருக்கும் வரை நாட்டில் அமைதி ஏற்படப் போவதில்லை. மற்ற நாடுகளைப் பார்த்து அமைதி ஏற்பட வேண்டும் என்று அறிவுரைக் கூறிக் கொண்டிருப்பதை விட நம்நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறவர்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்வதுதான் மத்திய மாநில அரசுகளின் மனித மிக்க செயலாகும். தங்களின் மதம் மற்றும் கொள்கையைச் சார்ந்தவர்கள்.
தங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு துணைநிற்பவர்கள் போன்ற அர்ப்ப காரணங்களுக்காக முஸ்லிம் அல்லாத தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குமானால் நாட்டில் அமைதியற்ற சூழல் தொடர்ந்து நீடிக்கும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அக்கிரமத்தை யார் செய்தாலும் பாகுபாடுயின்றி நடவடிக்கை எடுக்கிற பக்குவம் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும்.
''நம்பிக்கையாளர்களே! நியாயத்தை நிலை நிறுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு உறுதியான சாட்சியாக இருங்கள். ஒரு கூட்டத்தாரின் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு அவர்களின் மீது நீதம தவறிச் செல்ல உங்களை தூண்டிவிட வேண்டாம். நீதியோடு நடந்து கொள்ளுங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகவும் நெருக்கமானதாகும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்." (திருக்குர்ஆன 5:8)
அருளும் அன்பாளன்
Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "இவர்கள் பயங்கரவாதிகள் இல்லையா?"
Post a Comment