அநாதையைப் பராமரித்தல்
k.m.jawahir jamali.
அல்லாஹ் கூறுகிறான் :
நீர் அநாதைகளுடன் கடுமையாக நடந்து கொள்ளாதீர். (93:9) அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிக்கிறார்கள். (76:8)
நானும் அநாதையைப் பராமரிப்பவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக் காட்டி கூறினார்கள். விரல்களுக்கிடையேயும் சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள். அறிவிப்பவர் : ஸஃது (ரலி) நூல் : புகாரி (6005)
நானும் அநாதையைப் பராமரிப்பவரும், அந்த அநாதை சொந்தத்தில் உள்ள அல்லது சொந்தத்தில் அல்லாத அநாதையாக இருந்தாலும் சரி - சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் காட்டிக் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹ{ரைரா (ரலி) நூல் : முஸ்லிம், திர்மிதி (1983)
பயன்கள் :
அநாதைகளைப் பராமரிப்பது சிறப்பானதாகும். அதற்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
இது சுவனத்தில் நுழைவதற்கும் அதில் அந்தஸ்துகள் உயர்வதற்கும் காரணமாக அமைகின்றது.
இங்கு அநாதை என்பது சொந்தத்தில் உள்ள அல்லது சொந்தம் அல்லாத எல்லா அநாதைகளையும் குறிக்கும்.
அநாதைகளின் பொருளை உண்பது குறித்த எச்சரிக்கை
அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும் விரைவில் அவர்கள் கொளுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். (4:10)
நாசத்தைத் தரக் கூடிய ஏழு காரியங்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அவை என்னென்ன? என்று தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, சூனியம் செய்வது, அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக்கிய உயிரை நியாயமின்றிக் கொல்வது, வட்டி உண்பது, அநாதையின் பொருளை உண்பது, போர்க்களத்தில் புறமுதுகு காட்டுவது, முஃமினான கற்புள்ள அப்பாவிப் பெண்களை அவதூறு சொல்வது ஆகியவையாகும். அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : புகாரி (2766) முஸ்லிம்.
இறைவா! அநாதை, பெண் ஆகிய இரு பலவீனர்களின் உரிமையை கண்ணியத்திற்குரியதாய் ஆக்குகிறேன்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : குவைலித் பின் உமர் (ரலி) நூல் : நஸயீ
பயன்கள் :
அநாதையின் பொருளை அநியாயமாகக உண்பது பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்வது நாசத்தைத் தரக் கூடிய பெரும் பாவங்களில் ஒன்றாகும்
Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "அநாதையைப் பராமரித்தல்"
Post a Comment