கசப்பான, துயரமான சம்பவங்கள்.
கசப்பான, துயரமான சம்பவங்கள்.
வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
k,m.jawahir (jamali)
மீண்டும் மீண்டும் சில கசப்பான, துயரமான சம்பவங்களை நினைவு கூறுவது ஒருபுறம் பழைய ஞாபகத்தை கிளரி பகை மையை வளர்க்கும் என்று குறை கூறப்படலாம்.
ஆனால் மறுபுறத்தில் அவ்வாறான நினைவு கூறல் கள், அதிலும் குறிப்பாக சமூகம் சார்ந்த வன்முறைகள் இழப்புக் கள் என்பன பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புக்கு உட்படுத்தியவர்கள் என சம்பந்தப்பட்ட தரப்பி னர்களை அவ்வாறான சம்பவங் கள் எதிர்காலத்தில் இடம் பெறாமல் இருக்க வழிவகைகளை காண்பதற்கும் மீள் இணக்கத்துக்கான சமூக பெறுமதி களையும் சமூக கட்டுமானங்களையும் பலப்படுத்துவதற்கு அவசியமான ஒரு சந்தர்ப்பமாக இந்நினைவு கூறல் கள் அமைய வேண்டும்.
1990ம் ஆண்டு முஸ்லிம்களின் மீதான திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக் கையினை முன்னெடுக்கும் வகையில் புலிகள் மகிழக்கின் சகல பிரதேசங் களிலும் தமது மனித விரோத மிலேச்சத் தனமான வெறியாட்டங்களை கட்ட விழ்த்து விட்ட ஆண்டாக அமைந்தாலும் 1990ம் ஆண்டு ஆகஸ்து மாதம் அவ்வாறான முஸ்லிம் இன அழிப்பு நடவடிக் கைகளின் உச்சமாக இருந்தது.
காத்தான்குடி மீரானியா, ஹுசைனியா பள்ளிவாசல் படு கொலைகள் (03/08/1990) மேலும் ஏறாவூர் மிச் நகர், சதாம் ஹுஸைன் கிராமம், மீரா கேணீ, ஐயங்கேணீ தழுவிய எல்லைப் புற படுகொலைகள் (11/08/1990) என்று நூற்றுக் கணக்கான முஸ் லிம் ஆண்கள் பெண்கள் குழந் தைகள் கொல்லப்பட்டனர்.
காத்தான்குடியில் பள்ளிவா சல்களில் பெற்றோர்களுடனும் சகோதரர்களுட னும் இரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஆறு வயதுக் குழந்தை ஒன்று உட்பட 12வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12 பேரும் 13 தொடக்கம் 16 வயதி குற்பட்ட சிறார்கள்10 பேரும் அடங்குவர், அவ்வாறே எறாவூர் படுகொலை களில் தூக்கத்திலிருந்த குழந்தைகள் மட்டு மல்ல வயிற்றிலிருந்த சிசுவும் சிதைக்கப்பட்டது. ஏறாவூரில் கொல்லப்பட்ட குழந்தைகள் /சிறுவர்கள் தொகை சுமார் 31 ஆகும் இக்குழந்தை கொலைகள் புலிகளுக்கு வாடிக்கையானவை யாகும் .
# காத்தான்குடி படுகொலையை அடுத்து கொழும்பில் முஸ்லிம் காங்கி ரஸ் தலைவர் அஷ்ரப் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
# கொழும்பில் உள்ள அஷ்ர பின் இல்லத்தில் முஸ்லிம் காங் கிரஸ்; தமிழ் காங்கிரஸ்; ஈ.பீ ஆர்.எல்.எப்; கூட்டணி; புளொட்; ஈ. பீ. டீ. பீ; ரெலோ; ஈ.என்.டீ. எல்.எப். ஆகிய கட்சிகளின் தலை வர்களும் முக்கியஸ்தர்களும் கூடினார்கள்.
# அக்கூட்டத்தில் அஷ்ரப் அறி க்கை ஒன்றை சமர்ப்பித்தார். விடு தலை புலிகள் தான் காத்தான்குடி படுகொலைக்கு காரணம் என்பதை சுட்டிக்காட்டிய அந்த அறிக்கையில் புலிகள் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
# இக்கூட்டத்தில் குமார் பொன் னம்பலம் . மேதிலால் நேரு ஆகி யோர் குறிப்பிட்ட அறிக்கையுடன் தாம் முரண்படுவதாக கூறினார்.
# வடக்கு-கிழக்கில் இடம் பெறும் தமிழர் படுகொலைகள் தொடர்பாக அறிக்கையில் எது வும் இடம்பெறவில்லை அதனை குறிப்பிடாமல் இருப்பது சரி யல்ல என்று மோதிலால் நேரு குறிப்பிட்டார்.
# குமார் பொன்னம்பலம் ஒரு கேள்வியை எழுப்பினார். “மேற்படி கொலைகள் நடைபெற்ற பகுதி அரச படையினரின் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியாகும். அப்படியிருக்கும்போது விடு தலைப்புலிகள்தான் இதனைச் செய்தனர் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர் கள்” என்று கேட்டார்.
# கரிகாலன் நியூட்டன் ஆகிய புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் தாக்குத லின் போது காணப்பட் டுள்ளனர். மக்கள் கண்டுள்ளனர் என்று அஸ்ரப் கூறி னார்.
# ”இருட்டான நேரத்தில் அத்தனை தெளிவாக இனம் கண்டது எப்படி? என்று குறுக்காக கேள்வி தொடுத்தார். குமார் பொன்னம்பலம்.
# இக்கட்டத்தில் விவாதம் சூடு பிடித்தது. அந்த சூட்டைத் தணிக்க சிற்றுண்டி வகைகளும், குளிர்பானம், தேனீர் ஆகியனவும் பரிமாறப்பட்டன.
# காத்தான்குடி படுகொலையை சுவையான சிற்றுண்டிகளை ஒரு கை பார்த்தபடி கட்சிகளின் பிரதி நிதிகள் தொடர்ந்து விவாதித்தனர். காத்தன்குடி படுகொலையை யார் செய்தார்கள் என்று குறிப்பிடாமல் பொதுவான கண்டன மாக தெரிவித்தால் அதில் கை யொப்பமிடலாம் என்று கூறினர் தமிழ் காங்கிரஸ் பிரதிநிகள்.
# முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரபுக்கும் குமார் பொன்னம் பலம்,மோதிலால் நேரு ஆகி யோருக்கும் நல்லுறவு நிலவிய நேரம் அது.
# அதனால் அவர்களையும் அனு சரித்துக்கொண்டு செல்லவே அஷ்ரப் விரும்பினார். புலிகளையும் குறிப்பிடாமல் கண்டிக்க உடன்பட்டார். ஏனைய கட்சிகளும் ஒரு விதமாக சம்மதித்தன. ஈ.பீ.டீ.பீ. மட்டும் உறுதியாக மறுத்து விட்டது. யார் காரணம் என்பதை கூறாமல் கண்டிப்பதை விட கண்டிக்காமல் இருக்கலாம் என்று கூறியது ஈ.பீ.டீ.பீ.
# இக் கூட்டத்தில் கூட்டணிப் பிரதிநிதிகள் நைசாக நழுவினர்.
# புலிகளை நேரடியாகக் குற்றம் சாட்டினால் கையொப்பம் போட அவர்களும் தயாராக இருக்க வில்லை. விவாதம் சூடாக நடந்த சமயத்தில் “அறிக்கையை அனுப்புங்கள் ஏற்புடையதாக இருந்தால் கையொப்பம் போடுகி றோம்” என்று கூறிவிட்டு நழுவிவிட்டனர்.
# இந்நிலையில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையிலேயே கூட்டம் கலைந்தது.
# அரசும், அதன் ஆதரவுடன் இயங்கும் தமிழ் குழுக்களும் காத்தான்குடி படுகொலையில் புலிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
# இலண்டன் பீ.பீ.சீ வானொலி காத்தான்குடி படுகொலைகளை மறை முகமாக நியாயப்படுத்தியது. ஸ்ரீ லங்கா தகவல் தொடர்பு சாதனங்கள் தமிழ் மக்களின் படுகொலைகளை மூடி மறைத்தும் முஸ்லிம் மக்களின் படு கொலைகளை பகிரங்கப்படுத்தி வருவ தாக பீ.பீ.சீ கூறியது.
உடனடி புனருத்தாரண மனி தாபிமான தேவைகளுக்கான துணைக்குழு (Sub Committee On Immediate Humanitarian and Rehabilitation) சார்பில் வன்னி சென்று சில சிரேஷ்ட முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தமிழ் செல்வ னுடன் பேச்சு வார்த்தைகள் நடத் தினர்.
அப்போது தமிழ் செல்வன் தன்னை சந்தித்த அந்த முஸ்லிம் பிரதிநிதிகளிடம் 1990ஆகஸ்டில் நடைபெற்ற, குறிப்பாக காத் தான்குடி படுகொலைகள் தங்க ளுக்கும் கிழக்கு மாகாணத்து உறுப்பினர்களுக்கும் இடையி லான தொடர்பு கள் துண்டிக்கப் பட்டிருந்த நிலயில் இடம்பெற்ற தாகவும் அதனால் அச்சம் பவங்கள் துரதிஷ்டவசமாக நடைபெற்றுவிட்டதாகவும் அதற்காக , வருத்தப் படுவதாகவும் அப்பிரத்தி யோக சந்திப்பில் குறிப்பிட்டார்.
நன்றி: மீள்பார்வை.
கவனிப்பாரற்ற நிலையில் யாழ். மத்ரஷா முகாம் முஸ்லிம்கள் !
கவனிப்பாரற்ற நிலையில் யாழ். மத்ரஷா முகாம் முஸ்லிம்கள் !
k,m.jawahir (jamali)
‘கஸ்டப்படனும்னு தலவிதி. எங்களுக்கு விடிவு எப்பவரும்னு நாள் எண்ணிக்கிட்டிருக்கம் ‘எல்லாம் செய்றம்.. எல்லாம் செய்றம் என்று சொல்றவங்க.. ஒன்னும் செய்றதாக் காணல எனும் வார்த்தைகள் யாழ் முஸ்லிம்கள் இவ்வளவு காலமும் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தின. புத்தளத்தில் இருந்து வந்து எட்டு மாதமாகியும் எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில் வாழ்கின்றனர் இம்மக்கள்.
அவர்களது குரலில் வாழ்வின் விரக்தியும் ஏமாற்றமும் சேர்ந்தே ஒலிக்கின்றது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்து அவர்களுக்கு அகதி நிலைதான். ஒருவித உதவியும் இல்லாமல் வெறும் நம்பிக்கையுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை சந்தித்தபோது அறிந்து கொண்டேன்.
‘நம்பிக்கை வீணாயிருமோன்னு பயமாருக்கு என கூறிய நடுத்தர வயதுப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணீரும் ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தன.
இத்தகைய வலிகளைச் சுமந்து கொண்டு வேதனையில் வாழும் மக்கள் வேறுயாருமில்லர். யாழ் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் மத்ரஷா பாடசாலையில் வாழ்ந்து வரும் மக்கள்தான்.
மத்ரஷா பாடசாலை. இவ் அகதிமுகாமானது யாழ் நகரை அண்டி அமைந்துள்ள மானிப்பாய் வீதியில் ஐந்து சந்திப் பகுதி வழியாகச் சென்றால் வருவோரை வரவேற்கும். இருபத்தியிரண்டு வருடங்களின் பின் மீளக்குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், பாவனையற்ற மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகள், நேரம் தவறாமல் பிரார்த்தனை நடைபெறும் பள்ளிவாசல்கள் போன்றவை சூழ, அமைதியின் இருப்பிடமாகவும் வலிகளின் சாட்சியாகவும் காணப்படுகின்றது இந்த பாடசாலை முகாம்.
இம்முகாமில் வசிப்பவர்களுக்கு நிரந்தர இடமில்லை. இவர்களிற் சிலர் இதுவரை காலமும் புத்தளத்திலும் சிலர் மன்னாரிலும் வசித்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் கடலில் மட்டி பிடித்தலையும் இரும்பு ஏற்றலையுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். பதினைந்து குடும்பங்கள் வாழும் இம்முகாமில் நாம் சென்றபோது எட்டு குடும்பங்களையே சந்திக்க முடிந்தது. இங்குள்ள பாடசாலை மாணவர்கள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் தமது படிப்பைத் தொடர்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இங்குள்ள பெண்கள் வெவ்வேறு காரணங்களால் கணவனை இழந்தும் பிரிந்தும் வாழ்கின்றனர் எனும் தகவல் சற்று வலிக்கத்தான் செய்தது.
மத்ரஷா பாடசாலையின் வகுப்புக்கள் தற்போது சமையலறையாகவும் படுக்கையறையாகவும் பொருட்கள் வைத்தெடுக்கும் அறைகளாகவும் மாற்றமடைந்துள்ளன. வகுப்புகளுக்கு கதவுகள் இல்லை. அருகிலுள்ள பள்ளிவாசலிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து திரட்டும் பணம் அன்றைய பொழுதுக்கே போதாமல் இருக்கும் நிலைமையில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமது எதிர்காலம், நடைமுறை வாழ்க்கை போன்றவற்றை சிந்தித்தே இம்மக்களுடைய வாழ்க்கை வீணாகிக்கொண்டிருக்கின்றது. ஏதோ ஒரு நம்பிக்கைதான் அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.
மத்ரஷா பாடசாலை முகாம் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக இங்கு சென்றபோது என் கண்ணிற்தென்பட்ட பாடசாலை மாணவனான றொஷானிடம் முகாம் பற்றிக் கேட்டேன் “நான் மன்னார்லயிருந்து வந்திருக்கன். தரம் ஏழு படிக்கிறன். முதல்ல மன்னார்ல படிச்சிட்டு இப்ப இங்க வந்து படிக்கிறது கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு.
நான் நல்லா ஸ்போட்ஸ் செய்வன். நல்லாப் படிப்பன். ப்ரண்ட்ஸை விட்டுட்டு வந்தது கவலையா இருக்கு. இங்க வசதியே இல்ல. வசதி கொஞ்சம் செஞ்சி தந்தரணும் எண்டு எதிர்பார்க்கிறன் என்றான் ஏக்கத் தொனியில்.
இவை பற்றிய மேலதிக தகவலைப் பெறும் நோக்கில் அங்கிருந்த குடும்பத் தலைவியான சலீம் மரினியாவிடம் முகாம் வாழ்க்கை பற்றிக் கேட்டேன். “போன மார்கழில இங்க வந்தம். உடன வெளிக்கிட்டு வாங்க என்று சொன்னத நம்பித்தான் வந்தனாங்க. வந்து மத்ரஷா ஸ்கூல்ல இருந்தம்.
ஒன்னுமே நடக்கல.1990ல் யாழ்ப்பாணத்தில இருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்துக்கு அகதியாப் போனம். இப்ப அங்கயிருந்து அதே அகதியா இங்க வந்திருக்கிறம். புத்தளத்துலயும் எங்களுக்குச் சொந்த நிலம் இல்ல. இங்க இருக்கிறவங்க கணவன் இல்லாமத்தான் இருக்கிறாங்க. அதால குடும்பத் தலைவிங்கதான் உழைக்க வேணும்.
என் குடும்பத்த காப்பாத்த என்னால உழைக்க முடியாத அளவிற்கு எனக்கு நெஞ்சில வருத்தம். இதுவரைக்கும் ஒரு நிவாரண உதவியும் எங்களுக்கு கிடைக்கல. பாக்கிஸ்தான்ல இருந்தெல்லாம் வந்தாங்க. இந்துக் குருக்கள் வந்தாரு. கிறிஸ்தவ மதகுரு வந்தாரு. பௌத்த பிக்கு வந்தாரு. யாரும் ஒன்னுமே பண்ணல. பு.யு அம்மா வந்தாங்க. நம்ம கஸ்டங்கள சொன்னம். அதுக்குப்பிறகு முத்திரை தந்தாங்க. சுபையா சேர்தான் கழிப்பிட வசதியும் குடிதண்ணி வசதியும் செஞ்சி தந்தாரு” என்ற அவரது கண்களில் கண்ணிர் வடிந்தது.
மேலும் தொடர்ந்தார் “இத்தனை காலமும் கொட்டிலா இருந்தாலும் மரியாதையா வாழ்ந்தம். இப்ப பாதுகாப்பில்லாத படுக்கையறையால நிம்மதியாத் தூங்கக்கூட முடியல.பிள்ளைக்கு ஒன்பது வயது. ஒஸ்மானியாக் கல்லூரில படிக்கிறான். உம்மாதான் கடல்ல மட்டி பிடித்து ஒழைக்கிறாங்க.
வயதான காலத்துல நான்தான் அவங்கள கவனிக்கனும். ஆனா இந்த வயதிலும் உம்மா ஒழைச்சு எங்கள கவனிக்க வேண்டியிருக்கு” என்று சேலைத்தலைப்பால் கண்ணிரைத் துடைத்தார். வலி, வேதனை, துன்பம், இழப்பு, கண்ணீர் போன்றவற்றுடனேயே அவர்கள் வாழ்க்கை கழிவதைப் பார்க்கும் போது மனம் வேதனையால் துடித்தது.
“நான் வந்து ஏழு மாதமாச்சு. புத்தளத்துல இருந்துதான் வந்தனான். இங்க மக கூட இருக்கிறன். கணவரை இழந்துட்டன். வருமானம் இல்ல. ஏதாவது கூலி வேலை செய்து வாழ்ந்திட்டிருக்கன்.எல்லாரும் வாறாங்க. போறாங்க. போட்டோ பிடிக்கத்தான் வருவானுங்க.
ஒன்னும் தரமாட்டாங்க. நாங்க பெரிசா ஒன்னும் கேட்கல. எங்கட குடும்பத்த பாதுகாக்க ஒரு வீடு வருமானத்துக்கு ஒரு தொழில். அவ்வளவும்தான் கேட்டம். இனியும் கிடைக்குமென்ற நம்பிக்கை இல்ல. எப்போதாவது எழுப்பிப் போடுவாற்களோன்னு பயமா இருக்கு என்று கூறினார்.
இத்தகைய அவல நிலைகளிற்கு முன்னேற்பாடுகளற்ற மீள்குடியேற்றம் வளப்பற்றாக்குறை குடியடர்த்தி கூடிய பிரதேச வாழ்வு அதிகரித்த குடிசனப்பெருக்கம் யுத்தத்திலான இழப்புக்கள் போன்றவற்றைக் காரணம் காட்டுகின்றார் இப்பகுதிக்கான கிராம சேவகர் க.செல்வகுமார்.
முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர் என்று கூறுவோருக்கு இந்த முகாம் மக்கள் கண்ணிற்குத் தெரியவில்லையா? இருப்பது ஒரு குடும்பமானாலும் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறிருக்கையில் இம்மக்களின் வாழ்விடத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமது அகதி வாழ்வுக்கு ஒர விமோசனம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்ரஷா முகாம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கவெண்டும். அரசில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இம்மக்களுடைய பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வழிவகைகளைச் செய்யவேண்டும்…!!!
நன்றி: இருக்கிறம்
அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம்.
அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம்
k,m.jawahir (jamali)
அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் இஸ்லாத்தின் தோற்றத்திற்குமுன்னர் அரபுத் தீபகற்பத்தில் வழக்கிலிருந்த சிறந்த வளர்ச்சியைக் கண்டு இலக்கிய வளம்மிக்கஒரு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர்.
குர்ஆனின் மொழியாகப் பரிணமித்துஇஸ்லாமிய பண்பாட்டின் வளர்ச்சியோடு இஸ்லாமியக் கலாஞானங்களின் மொழியாக மாறியது.
இந்தவகையில் இஸ்லாத்தின் பரவலோடுஅதன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களிலெல்லாம் பரவிய அரபு மொழியானது அப்பகுதிகளில் ஏற்கனவேவழக்கிலிருந்த மொழிகளில் அதன் செல்வாக்கைப் பதித்தது.
முஸ்லிம்களால் பாரசீகம் கைப்பற்றப்பட்டபோது அங்கு இஸ்லாத்தின் பரவலோடு அரபு மொழியும் பாரசீக மொழியில் அதன் செல்வாக்கை ஏற்படுத்தியது.பாரசீக மொழி அரபு லிபியில் எழுதப்படும் மரபு தோன்றியதோடு, எண்ணற்ற அரபுச் சொற்கள்பாரசீக மொழியோடு கலந்து, அதன் சொல்லகராதியில்பெரும் மாற்றத்தை விளைவித்தது.
இதுபோன்ற நிலையைத் துருக்கிமொழியைப் பொறுத்தளவிலும் நாம் அவதானிக்க முடிகிறது. 1920 களில் நிகழ்ந்த மொழிச்சீர்திருத்தத்திற்கு முன்னர் துருக்கி மொழியானது அரபு லிபியில் எழுதப்பட்டது. மேற்காபிரிக்காவின்ஹவ்ஸா புலானீ மொழிகளிலும் கிழக்காபிரிக்காவின் கிஸ்வாலு மொழியிலும் அரபு மொழியானதுகணிசமான செல்வாக்கை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களால் இந்தியாவின்சிந்துப் பிரதேசம் கைப்பற்றப்பட்ட போது தய்பல், மன்சூரா, முல்த… போன்ற பகுதிகளில் சிந்தி மொழியானது சில பிரதேசங்களில்மலாவி லிபியிலும் வேறு சில பிரதேசங்களில் அந்தகைரி லிபியிலும் எழுதப்பட்டது.
ஆனால், இப்பிரதேசங்கள் முஸ்லிம்களின்செல்வாக்கிற்கு உட்பட்டதும்,இந்த பழைய லிபிகளின்இடத்தை அரபு லிபி பெற்றது. இது அராபிய சிந்தி லிபி ஷாஹ் கரீமி (1537 - 16….) என்னும் சிந்திக்கவிஞரின் கவிதையில் காணப்படுகிறது. சிந்தி மொழியில் காணப்படும் ஐம்பது ஒலிவடிவங்களைப்புலப்படுத்தும் வகையில் முப்பது அரபு வரிவடிவங்கள் பயன்படுத்தப்பட்டன. முஸ்லிம் ஆட்சியின்போது வங்காள மொழியில் முக்கிய ஆக்கங்கள் அரபு லிபியிலே எழுதப்பட்டன.
இவ்வகையிலே அரபுமொழிக்கு இஸ்லாம் பரவிய பிரதேசங்களில் நிலவிய மொழிகளுக்குமிடையில் தொடர்பினடியாக தோன்றியமொழிமாற்றங்கள், அதன் கலாசார விளைவுகள்ஆகியவற்றின் பின்னணியில் அரபுத் தமிழின் தோற்றம் அதன் பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிவிளங்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வணிகத் தொடர்பும் குடியேற்றங்களும்
இஸ்லாத்தின் தோற்றத்திற்குமுன்னரே அரபுத் தீபகற்பம் இந்தியாவின் மேற்குக் கரைப் பிரதேசம் (மலையாளக் கரை) அரபிகள்’மஃபர்’ என அழைத்த கிழக்குக்கரைப் பிரதேசம், இலங்கைத் தீவு ஆகியஇடங்களுக்கிடையில் வணிகத் தொடர்புகள் காணப்பட்டன. இந்த வணிகத் தொடர்பு காரணமாக இப்பிரதேசங்களில்அரபுக் குடியேற்றங்கள் தோன்றின.
இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர்இந்த வணிகத் தொடர்பானது கலாசார, பண்பாட்டு உறவாக வளர்ச்சி அடைந்தது. இந்தியாவின் மஃபர் பகுதியில் காயல் பட்டணம், கீழக்கரைப் பகுதிகளிலும்அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டன.
அரபு முஸ்லிம்கள் இந்த வணிகபண்பாட்டுத் தொடர்பின் போது,இப்பிரதேசங்களில்வழங்கிலிருந்த தமிழ் மொழியை எதிர்கொண்டனர். நீண்டகால இலக்கிய வளர்ச்சியைக் கொண்ட இலக்கியப்பாரம்பரியம் மிக்க தமிழ் மொழிக்கும் அதே போன்ற இலக்கியவளம் மிக்க அரபு மொழிக்குமிடையில்நிகழ்ந்த கலாசாரக் கூட்டிணைப்பின் விளைவே அரபுத் தமிழின் தோற்றமாகும். அரபுத் தமிழ்என்ற பெயரே அது. அரபும் தமிழும் இணைந்த ஒரு கூட்டுமொழி என்ற கருத்தைத் தருகின்றது.
நீண்டகால இலக்கிய வளர்ச்சியைக்கொண்ட இலக்கியப் பாரம்பரியம் மிக்க தமிழ் மொழிக்கும் அதே போன்ற இலக்கியவளம் மிக்க அரபுமொழிக்குமிடையில் நிகழ்ந்த கலாசாரக் கூட்டிணைப்பின் விளைவே அரபுத் தமிழின் தோற்றமாகும்.
அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.
இஸ்லாம் தென்இந்தியாவில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பரவிய போது இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தொடர்ந்தும் தமிழ் மொழியையே பேசினர். ஆனால், இஸ்லாத்துக்கும் அரபுமொழிக்குமிடையில் நிலவிய இறுக்கமான தொடர்புகாரணமாக அவர்களது நாளாந்த மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரபுமொழியறிவு அவசியமாகியதால்நிச்சயம் அவர்கள் அரபுமொழியை வாசிப்பதற்குப் பயின்றிருத்தல் வேண்டும்.
காலப்போக்கில் மதக்கோட்பாடுகள், கிரியைகளோடு தொடர்புடையசில கருத்துப் பதங்களைப் பொறுத்தளவில் அவற்றில் அரபுப் பதங்களுக்கு இணையான தமிழ்ப்பதங்களைப்பெறுவதில் சில இடர்பாடுகள் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். தமிழ் மொழியானது இந்து கலாசாரப்பாரம்பரியத்தோடு இணைந்த ஒருமொழியாகக் காணப்பட்டதால் இஸ்லாமியக் கோட்பாடுகளோடு இணைந்தகருத்துப் பதங்களைத் தமிழில் புலப்படுத்த முனையும் போது அதற்குப் பொருத்தமான இஸ்லாமியசிந்தனை மரபோடு இணைந்த சொற்கள் தமிழில் காணப்படாததை அவர்கள் உணர்ந்தனர்.
சிலபோது அத்தகைய கருத்துக்களைப்புலப்படுத்த துணைபுரியும் தமிழ்பதங்கள் அரபியில் அவை உணர்த்தும் மூலக்கருத்தைச் சிதைக்கும்வகையில் அமைந்திருப்பதையும் அவர்கள் அவதானித்தனர்.
முஸ்லிம்கள் தமிழ்மொழியை அவர்களதுகருத்து வெளிப்பாட்டுக்கு ஒரு சாதனமாகப் பயன்படுத்தும் அதேநேரத்தில் அவர்களது கலாசாரப்பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கு அரபுத் தமிழ் துணைபுரிந்தது.
அரபுப் பதங்கள்.
உதாரணமாக.
அல்லாஹ் நபி, ரசூல், ஆகிரா, மலாஇகா, ஜின், ஸாத், ஸிபாத், வுஜுத் போன்ற அரபுப்பதங்களுக்கு இணையான சொற்கள் தமிழில் இல்லை. மேலும், இவைபோன்ற அரபு வார்த்தைகளில் பொதிந்துள்ள ஆழமானகருத்துக்களை இன்னொரு மொழியில் புலப்படுத்தலும் சாத்தியம் அன்று. இத்தகைய ஒரு வரலாற்றுச்சூழ்நிலையிலேயே முஸ்லிம்கள் தமிழ்மொழியை அதன் இலக்கண அமைப்பை முற்றிலும் பேணி அரபிலிபியில் எழுதும் முறையைத் தோற்றுவித்ததோடு இஸ்லாமிய கோட்பாடுகளுடனும் மதக் கிரியைகளுடனும்தொடர்புடைய அரபுப் பதங்களை தமிழ்மொழியோடு இணைத்து பிரயோகிக் ஆரம்பித்தனர்.
இவ்வாறு சில வரலாற்றுச் சூழ்நிலைகள்காரணமாக அரபு மொழிக்கும் தமிழ் மொழிக்குமிடையில் ஏற்பட்ட இணைப்பினடியாக அரபுத் தமிழ்என்ற மொழி தோன்றி வளர ஆரம்பித்தது. அரபுத் தமிழில் தமிழ் மொழியின் இலக்கண அமைப்பு பேணப்பட்டஅதேநேரத்தில் அது அரபியில் எழுதப்பட்டு அரபுச் சொற்கள் அதில் பெருமளவு பயன்படுத்தப்பட்டன.
தமிழில் காணப்படும் பதினொருஎழுத்துக்களின் ஒலி வடிவத்தைப் புலப்படுத்தும் அதற்கு இணையான உச்சரிப்புடைய எழுத்துக்கள்அரபியில் காணப்படவில்லை. இவ்வாறு அரபியில் காணப்படாத சில தமிழ் எழுத்துக்களைக் குறிக்கஅந்த ஒலி அமைப்பினையுடைய சில பாரசீக எழுத்துக்களைப் பயன்படுத்தினர்.
உதாரணமாக தமிழில் ’அச்சம்’ என்ற சொல்லில் காணப்படும்’ச்ச’ என்ற ஒலி வடிவம் அரபியில்இல்லை. ஆனால் பாரசீக மொழியில் ‘ச்ச’ என்னும் ஒலி வடிவம்உள்ளது. இந்த ஒலி வடிவத்தைக் குறிக்கும் எழுத்தினை ஒலியைப் புலப்படுத்தப் பயன்படுத்தினர்.’பணம்’ என்னும் தமிழ் சொல்லில்காணப்படும் ‘ப’ ஒலி வடிவம் அரபியில்இல்லை. இதனைக் குறிக்க பாரசீக மொழியில் உள்ள ஓர் எழுத்தைப் பயன்படுத்தினர்.
வேறு சில தமிழ் எழுத்துக்களின்ஒலியைப் புலப்படுத்த அரபு எழுத்துக்களில் சில குறியீடுகளை இணைத்துப் புதிய எழுத்துக்களைஉருவாக்கினர். தமிழில் உள்ள ’ங’ வைக் குறிக்க ஒருஎழுத்தையும் ‘ழ’ வைக் குறிக்க மற்றுமொருஎழுத்தையும் உருவாக்கியதை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
புதிய மொழி மரபுகள்.
இஸ்லாமிய உலகின் ஏனைய பகுதிகளிலும்முஸ்லிம்கள் இவ்வாறு சில புதிய மொழிய இலக்கிய மரபுகளை உருவாக்கினர். ஜே. ஈ. டிரனெட்லெக்சி ஒப் இஸ்லாம் என்னும் நூலில் பிரஞ்சு இலக்கிய உருவத்தைப் பெற்ற ஸ்பானிய வார்த்தைகள்கலந்த, ஆனால் அரபு எழுத்தில்எழுதப்பட்ட ஒரு கவிதையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
அரபுத் தமிழைப் போன்றே மலையாளப்பிரதேசத்தில் அரபும் மலையாளமும் இணைந்து அரபு மலையாளம் வளர்ச்சியடைந்தது.
அரபுத் தமிழானது காலஓட்டத்தில்மிகப் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு தமிழ் பேசும் முஸ்லிம்களின் கலாசார பண்பாட்டு மொழியாகவளர்ச்சியடைந்தது. முஸ்லிம்கள் தமிழ் மொழியை அவர்களது கருத்து வெளிப்பாட்டுக்கு ஒருசாதனமாகப் பயன்படுத்தும் அதேநேரத்தில் அவர்களது கலாசாரப் பண்பாட்டுத் தனித்துவத்தைப்பாதுகாப்பதற்கு அரபுத் தமிழ் துணை புரிந்தது.
அரபுத் தமிழ் நூல்களில் இம்மொழிமரபு அருவி மொழி (லிஸானுல் அருவி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரபுத் தமிழானது முஸ்லிம்களால்ஏன் ’அருவி மொழி’ என அழைக்கப்பட்டதுஎன்பது இன்னும் மயக்கமாகவே உள்ளது. தெலுங்கு மொழியானது வழக்கிலிருக்கும் ஆந்திராவில்தமிழ் பேசும் மக்களை அவர்கள் ‘அருவர்’ என்று அழைத்ததாக கோல்டுவெல்தன் ‘திராவிட மொழிகளின்ஒப்பிலக்கணம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
தெலுங்கு மொழி பேசுவோர் தமிழ்நாட்டை அருவர் நாடு என வழங்கினர். மேலும் கலிங்கத்துப்போரில் சோழர் படையைக் கண்ட அந்நாட்டுச் சேணை ‘அருவர்’, ‘அருவர்’ (தமிழர் தமிழர்) என அஞ்சி நடுங்கினர் எனக் கலிங்கத்துப் பரணிகுறிப்பதாக பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவரது ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
அரபுத் தமிழ் பற்றிய ஆய்விலீடுபட்டஓர் ஆய்வாளர் குறிப்பிடும் ஒரு கருத்து இவ்விடயம் தொடர்பாகக் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.தமிழ் மொழி பேசுவோரை’அருவர்’ என அழைத்த தெலுங்குநாட்டார் முஸ்லிம்களையும் ‘அருவர்’ என அழைத்திருக்கலாம்எனவும், எனவே அவர்கள் பேசும்அரபும், தமிழும் கலந்த மொழியானதுஅருவி என அழைக்கப்பட்டிக்கலாம் எனவும் இந்த ஆய்வாளர் கருதுகின்றார். எனினும் அரபுத்தமிழ் ஏன் ‘லிஸானுல் அருவி’ என அரபுத் தமிழ் நூல்களில்குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இன்னும் ஆழமான ஆய்வை வேண்டிநிற்கும் ஒரு விடயமாகும்.
அரபுத் தமிழ் காலப்போக்கில்மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்த முஸ்லிம்களின்தாய்மொழியாகவும் கலாசார, பண்பாட்டு வெளிப்பாட்டிற்கானஊடகமாகவும் மிகச் சிறப்பான வளரச்சியைக் கண்டது. அரபுத் தமிழ் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில்வழக்கிலிருந்ததைப் போர்த்துக்கேயர் தளபதி ஓடோராடோ பார்போசா இலங்கை முஸ்லிம்களிடையேவழக்கிலிருந்த மொழியின் பண்பை விளக்கும் தன்மையிலிருந்து அனுமானிக்க முடிகின்றது.
இம்மொழி மரபு காலக்கிரமத்தில்மிக வளர்ச்சியடைந்த ஒரு மொழிப் பிரிவாக வளர்ச்சியடைந்தது. உரைநடையிலும் கவிதையிலும்பல்வேறு கலைகளைத் தழுவிய எண்ணற்ற ஆக்கங்கள் அரபுத் தமிழில் உருவாகின. தமிழிலக்கிய உருவங்களோடு கஸீதா, தக்மீஸ், மர்ஸியா, மத்ஹ் போன்ற அரபிலக்கியஉருவங்களையும் முஸ்லிம்கள் அரபுத் தமிழ் கவிதைகளில் பயன்படுத்தினர். அரபு மொழியின்காம்பிரியமும் தமிழின் மென்மையும் இணைந்த சக்தியும் உயிரோட்டமும் மிக்க உரைநடையாக அரபுத்தமிழ் உரைநடை அமைந்தது. அரபிலக்கியப் பாரம்பரியமும் தமிழிலக்கியப் பாரம்பரியமும் இணைந்தஒரு புதிய இலக்கியப் பாரம்பரியத்தை அரபுத் தமிழ் தோற்றுவித்தது.
அரபுத் தமிழ் அகராதி.
அரபுத் தமிழில் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், அகாயித், தஸவ்வுப் போன்ற இஸ்லாமியக்கலைகள் சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்களும் வானவியல், தத்துவம், வரலாறு, மருத்துவம் போன்ற கலைகளுடன் தொடர்புடைய எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டன.அந்நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களின் விளக்கங்களைக் கொண்ட அரபுத் தமிழ் அகராதிகளும்தொகுக்கப்பட்டன. இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அரபுத் தமிழ் நூல்கள் பற்றிய விபரங்கள்காணப்படுவதாக இது தொடர்பான சில ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. நூல்களை அச்சிடுவதற்கானவசதியற்ற ஆரம்ப காலங்களில் அரபுத் தமிழ் நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாகவே எழுதப்பட்டன.
பிற்காலத்தில் அவற்றினை அச்சிட்டு வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறுதோன்றிய அரபுத் தமிழ் நூல்கள் பல அதன் பிரயோகம் வழக்கிழந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில்அழிந்து மறைந்துவிட்டன. ஆனால், கணிசமான நூல்கள் மஸ்ஜித்கள், தைக்காக்கள், மத்ரஸாக்கள், ஸாவியாக்களில் பரந்து காணப்படுகின்றன. தனிப்பட்டநபர்களும் இவற்றைச் சேகரித்து வைத்துள்ளனர்.
லண்டனிலுள்ள இந்திய அலுவலக நூல் நிலையத்தில்காணப்படும் பதினையாயிரம் நூல்களில் அறுபது அரபுத் தமிழ் நூல்கள் உள்ளன. இலங்கையிலும்தமிழ் நாட்டிலும் உள்ள சுவடிக் கூடத்தில் எண்ணற்ற அரபுத் தமிழ் நூல்கள் உள்ளன.
அரபு மொழியில் காணப்படும்பல்வேறு இஸ்லாமியக் கலைகளைத் தழுவிய நூல்கள் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இமாம்பய்ஹகீ (ரஹ்) எழுதிய ’கஃபுல் ஈமான்’ என்னும் நூல் ஜமாலுத்தீன்ஆலிம் அவர்களால் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
அரபியில் உள்ள புகழ்பெற்ற ஹதீஸ்தொகுப்பான மிஷ்காதுல் மஸாபிஹ் என்னும் நூல் ஹாபிஸ் அப்துர்ரஹ்மான் (ஹி. 1331) அவர்களால் ‘மின்ஹாதில் மஸாபிஹ்பீ தர்ஜமத்தி மிஷ்காதில் மஸாபிஹ் என்ற பெயரில் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இன்ஸானுல் காமில்’ உட்பட எண்ணற்ற மூலநூல்கள்அரபியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன.
மிக ஆழமான தத்துவார்த்தங்களையும் விளக்கங்களையும்பதப் பிரயோகங்களையும் கொண்ட இத்தகைய நூல்கள் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கக் கூடிய அளவிற்கு இம்மொழி மரபு சொல்லாட்சி மிக்கதாகவும் வளமுடையதாகவும்காணப்பட்டதையே இது குறிக்கிறது.
செய்யுள் நடை.
தமிழகத்தில் குறிப்பாகக் காயல்பட்டணம், கீழக்கரை போன்ற இடங்களிலும்இலங்கையிலும் வாழ்ந்த அறிஞர்கள் பல்வேறு இஸ்லாமியக் கலைகள் சார்ந்த நூல்களை அரபுத்தமிழில் இயற்றினார். இலக்கணம், இலக்கியம், தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், அகாயித், தஸவ்வுப் போன்ற கலைகளைப் பற்றிய நூல்களைக் கூட செய்யுள் நடையில்எழுதுவது அக்கால மரபாக இருந்தது. அறிவு வளர்ச்சி குன்றிய பாமர மக்களைப் பொறுத்தளவில்அவர்களது உள்ளத்தில் கருத்துக்களைப் பதிய வைப்பதற்கு இலகுவாக ஒரு முறையாக இது விளங்கியதேஇதற்கு அடிப்படைக் காரணமாகும்.
சமஸ்கிருதம், பாளி, தமிழ் போன்ற கீழைத்தேயமொழிகளில் இந்த மரபை நாம் காண முடிகின்றது. இம்மரபைத் தழுவி அரபுத் தமிழில் பல நூல்கள்இயற்றப்பட்டன. ஷhம் ஷpஹாபுதீன் அவர்கள் - 1119. ஹதீஸ்களை இரண்டடியாய்கொண்ட செய்யுள்களின் அமைப்பில் மொழிபெயர்த்து பெரிய ஹதீஸ் மாலை என்னும் நூலைத் தொகுத்தார். 118 - ஹதீஸ்கள் அவரால்’சின்ன ஹதீஸ் மாலை’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.அரபுத் தமிழில் கவிதை வடிவிலும் உரைநடை அமைப்பிலும் தப்ஸீர், ஹதீஸ், ஸீரா, அகாயித், தஸவ்வுப் ஆகிய இஸ்லாமியகலைகளைத் தழுவிய பல நூல்கள் எழுதப்பட்டன.
அரபுத் தமிழில் எழுந்த தப்ஸீர்களின்முன்னோடியாக இலங்கையைச் சேர்ந்த ஷெய்க்கு முஸ்தபா அவர்கள் கருதப்படுகின்றார்கள். பத்ஹுர்ரஹ்மான்பீ தர்ஜமதி தப்ஸீரில் குர்ஆன் என்ற பெயரில் அரபுத் தமிழில் அவர்கள் இயற்றிய தப்ஸீர்நான்கு பாகங்களில் ஹி 1291- (1874) ல் பிரசுரிக்கப்பட்டது.
காயல்பட்டணத்தைச் சேர்ந்தஹபீப் முஹம்மத் ஆலிம் அவர்கள் ’புதுஹாதுர் ரஹ்மானிய்யா பீ தப்ஸீர் கலாமிர் ரஹ்மானிய்யா’ என்ற பெயரில் அரபுத்தமிழில் எழுதிய குர்ஆன் விரிவுரை நூல் ஹி. 1297 கி.பி. 1879 இல் பம்பாயில் பிரசுரிக்கப்பட்டது. அஷஷெய்க் ஸதகதுல்லாஹ் இமாமுல்அரூஸ் என்று மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் அரபுத் தமிழில் பல்வேறு கலைகளைத் தழுவியபல நூல்களையும் கஸீதாக்களையும் இயற்றினார். அரபுத் தமிழில் ஆக்கப்பட்ட நூல்கள் பற்றியவிரிவான விளக்கத்தை அரபுத் தமிழின் தன்மைகள், சிறப்பியல்புகள் பற்றி விளக்க முற்படும் இக்கட்டுரையில் ஆராய்தல்சாத்தியமன்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டளவில்அரபுத் தமிழானது தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மிகப் பரவலாக பயன்படுத்தப்பட்டமைக்குஅரபுத் தமிழில் இக்காலப்பிரிவில் வெளியிடப்பட்ட பத்திரிகைகள் மிகச் சிறந்த சான்றாகவிளங்குகின்றன. 1870ம் ஆண்டு சென்னையிலிருந்து’அஜாயிபுள் அக்பார்’ (அற்புதச் செய்திகள்)என்ற பெயரில் அரபுத தமிழில் வாராந்தப் பத்திரிகையொன்று பிரசுரமாகியது.
‘கவ்புர் ரான் அன்கல்பில் ஜான்’ என்னும் பெயரில் ஓர்அரபுத் தமிழ் பத்திரிகை 1889,1890 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பிரசுரமாகியது. இலங்கையில் அரபு எழுத்தில் பிரசுரிக்கப்பட்டஒரே பத்திரிகையாக இது கருதப்படுகிறது. 1869ஆம் ஆண்டளவில் ‘அலாமத் லங்காபுரி’ (இலங்கைத் தீவின் செய்திகள்) என்ற பெயரில் அரபு மொழியில் எழுதப்பட்டஆனால் மலாய் மொழியிலான ஒரு பத்திரிகை வெளியாகியது. இதில் கையாளப்பட்டுள்ள மொழியை நாம்அரபுத் தமிழ் போன்ற ‘அரபு மலாய்’ என அழைக்கலாம்.
இமாமுல் அரூஸ் என அழைக்கப்படும்மாப்பிள்ளை ஆலிம் அவர்கள் (செய்யித் முஹம்மத் ஆலித்) மதீனதுந் நுஹாஸ் என்ற பெயரில்அரபுத் தமிழில் ஒரு நாவலை எழுதியுள்ளார்கள். பாக்கிர் யெஸீத் இப்னு மலிக் அர் - தாயீஎன்பார் பாரசீக மொழியில் எழுதிய நாவலைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளது. மாப்பிள்ளை ஆலிமின்இந்நூல் ஹி. 1318 கி.பி. 1900 ஆம் ஆண்டளவில் முஹம்மத்சுலைமான் என்பவரால் இலங்கையில் பிரசுரிக்கப்பட்டது.
அரபுத் தமிழில் எழுதப்பட்ட இந்நாவலைஎம்.கே.ஈ மௌலானா என்பார் 1979ம் ஆண்டு தமிழில்வெளியிட்டார்.
அரபுத் தமிழின் பிரயோகமும்செல்வாக்கும் தமிழகத்தையும் இலங்கையையும் தாண்டி தென்கிழக்காசிய தீவுகளிலும் பரவியிருந்ததைவரலாற்றுக் குறிப்புகள் உணர்த்துகின்றன. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் உள்ளஇந்தோனேசியக் கையெழுத்துப் பிரதிகளை உள்ளடக்கிய நூல் நிலையத்தில்1807ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டமுஸ்லிம் மருத்துவம் பற்றிய ஒரு நூல் மலாய், பாரசீகம், அரபு தமிழ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
அரபுத் தமிழின்பிரயோகம் மலாய், பாரசீகம் போன்ற ஏனையமொழிகளோடு இணைந்து பயன்படுத்தப்பட்டதை இது உணர்த்துகின்றது. காயல்பட்டணத்தைச் சேர்ந்த உமர் வொலி (ஹி. 1216 -1801) அவர்கள் சுமாத்திரா தீவில் பதினான்கு ஆண்டுகள் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியின் காரணமாகஅரபுத் தமிழின் தாக்கம் இப்பகுதிகளில் பரவியிருக்கலாம். இலங்கை முஸ்லிம்களுள் கொழும்புஆலிம் என அழைக்கப்பட்ட ஸெய்யித் முஹம்மத் ஆலிம், கஸாவத்தை ஆலிம், எம்.சி. சித்தி லெப்பை ஆகியோர் அரபுத் தமிழில் பலஆக்கங்களை உருவாக்கினர்.
கொழும்பு ஆலிம் அவர்கள் இளஞ்சிறார்களுக்கு சன்மார்க்கத்தின்அடிப்படைகளை விளக்கும் பல நூல்களை அரபுத் தமிழில் எழுதினார். இவற்றுள் ‘துஹ்பதுல் அத்பால்’, ‘மின்ஹாதுல் அத்பால்’ ஆகிய இரண்டு நூல்களும்குறிப்பிடத்தக்கன. அச்சியந்திரம் பிரபல்யமாகிய பின்னர் அரபுத் தமிழ் அரபு லிபியிலிருந்துதமிழில் எழுதப்படும் மரபு தோன்றியது.
1882 ஆம் ஆண்டளவில் சித்தி லெப்பையினால் வெளியிடப்பட்ட முஸ்லிம்நேசன் அரபுத் தமிழ் நடையில் ஆனால் தமிழ் எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்டது. அக்காலஅரபுத் தமிழ் உரைநடையின் பாங்கை நாம் முஸ்லிம் நேசனில் இனங்காண முடிகின்றது. அரபுத்தமிழில் தஸவ்வுப் என்னும் இஸ்லாமிய ஆன்மிகவியல் பற்றி எழுதப்பட்ட நூல்களுள் சித்திலெப்பையின்’அஸ்ராருல் ஆலம்’ மிக முக்கிய இடம்பெறுகின்றது.ஆழமான தத்துவக் கருத்துக்களை வெளியிடும் அளவிற்கு மிக வளர்ச்சியும் வளமும் ஆழமும் உள்ளமொழி நடையாக அரபுத் தமிழ் விளங்கியதை இது மிகச் சிறப்பாக உணர்த்துகின்றது.
இவ்வகையில், அரபுத் தமிழுக்கும்கிழக்காபிரிக்காவில் வழக்கிலிருக்கும் ஸ்வாஹிலி மொழிக்குமிடையில் காணப்படும் சில ஒருமைப்பாடுகள்கவனிக்கத்தக்கதாகும். தமிழ் பேசும் மக்கள் வாழும் தென்னிந்தியாவில் அரபும் தமிழும்இணைந்து அரபுத் தமிழ் உருவாகியது போன்று ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதியில்பண்டு மொழி குடும்பத்தைச் சார்ந்த ஒரு கிளை மொழியும் அரபும் இணைந்து ‘ஸ்வாஹிலி’ என ஒரு மொழி தோற்றமெடுப்பதைநாம் காணமுடிகின்றது.
அரபுத் தமிழுக்கும் ஸ்வாஹிலிக்குமிடையில் காணப்படும் ஒருமைப்பாட்டைமுதலில் அவதானித்து விளக்கியவர் அறிஞர் மர்ஹும் ஏ. எம். ஏ. அஸீஸ் ஆவார். இது தொடர்பானஆழமான ஆய்வு மேற்கொள்ளப்படுவதன் அவசியத்தைப்பல கட்டுரைகளில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரபுத் தமிழ் இலக்கியம் தமிழ் பேசும் முஸ்லிம்களின் மிகப்பெறுமதி வாய்ந்த ஒரு கலாசார முதுசமாகும். ஆனால், அரபித்தமிழ் வழக்கொழிந்தவுடன் பல்வேறு இடங்களிலும் சிதறிக்கிடக்கும் அரபுத் தமிழ் நூல்கள்கவனிப்பாரற்று தூர்ந்து அழிந்துபடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே நூற்றுக்கணக்கானஇந்நூல்கள் அழிந்துவிட்டன. எனவே, அந்நூல்களை ஒன்று திரட்டிப் பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படல்மிக அவசரமான அவசியமான ஒரு பணியாகும். இன்றைய காலகட்டத்தில் இத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளபடாவிடின்முஸ்லிம்கள் மிக விரைவில் அவர்களது மூதாதையர்களின் மிகக் காத்திரமான கலாசாரப் பண்பாட்டுப்பங்களிப்பினைப் பிரதிபலிக்கும் ஒரு பெரும் செல்வத்தினை இழந்துவிடுவர்.
நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ
நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ
k.m.jawahir (jamali).
சகோதர, சகோதரிகளே பயப்படவேண்டாம்! இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதை.
யை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எ
னவே பொறுமை
யாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)!
நீங்கள் பொய்யர் என்பதற்கு நற்சான்றிதழ் பெறவேண்டுமா?
நீங்கள் கேள்விப்படும் ஆதாரமற்ற ஊடகச்
செய்திகளையெல்லாம் அப்படியே பரப்பிவிடுங்கள் அது போதும்
நீங்கள் பொய்யர் என்பதற்கான நற்சான்றிதழ். ஆம் இதைத்தான் நம் நபி
கள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக தெளிவாக கூறிச் செ
ன்றுள்ளார்கள் ஆதாரம் இதோ.
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிற
ருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான
சான்றாகும் என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூ
றினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6 )
சகோதரர்களே இன்று இணையதள ஊடகங்க
ளில் கிராஃபிக்ஸ் துணையுடன் சிலர் பொய்களை பரப்புகிறார்கள் மற்றும் சிலரோ தாங்கள் காணும் பழங்கள், தாவரங்கள், செடி கொடிகள் ஏதா
வது தோற்றம் தென்பட்டால் அதைக் கொண்டு பொய்க
ளை பரப்புகிறார்கள் இதோ அந்த பொய்களை கா
ண்போமா?
பழங்களி்ன வாயிலாக பொய்யை பரப்புதல்
பொய்களை பரப்புவதற்காகவே தக்காளிப் பழம், ஆப்பிள் பழம், தர்புசணி ஆகிய பழங்களை மிக இலாவகமாக பயன்படுத்து கிறார்கள். அதாவது தக்
காளிப் பழத்தை இரண்டாக வெட்டினால் அதன் விதைகள் வளைந்து
நெழிந்து காணப்படும் அவைகளில் அரபு எழுத்து போன்ற வடிவம் தென்பட்டால் போதும் உடனே அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று தம்பட்டம் அடிப்பார்கள்!
ஆதாரம் இதோ.

சிந்தித்துப்பாருங்கள் சகோத
ரர்களே இந்த பழங்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால்
அதனால்
இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா?
மிருகங்களின்
வாயிலாக பொய்யை பரப்புதல்
ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகளின்
தோல்களில் ஏதாவது அரபு எழுத்து வடிவம் தென்பட்டால் உடனே அல்லாஹ்வின் பெயர் பிராணியின் முதுகில், மடியில், தலையில் வந்துவிட்டது ஆஹா! ஓ
ஹோ என்று புரளி
யை கிழ
ப்புகிறார்கள்! ஆதாரம்

இதோ
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த வளர்ப்பு பிராணிகளின்
தோல்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இ
வைகளில் ஏதாவது தனிச்சிறப்
பு வந்துவிடுகிறதா? இ
வைகள் பேசிவிடுமா? பறக்குமா? சிரிக்குமா?
இப்படிப்பட்ட செய்திகள் உங்கள்
மெயில் இன்பாக்ஸில் கண்
டு அதை நீங்கள் பார்த்தவுடன் அதிசயித்து போய்விடுகிறீர்கள் உடனே அதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறீர்கள் அவர்கள் த
ங்கள் உறவினர்களுக்கு அனுப்புகிறார்கள் இறுதியாக பொய்கள் வாலால் அல்ல மாறாக மெயிலால் பரப்பப்படுகின்றன. இந்த
பொய்களுக்கு நீங்களும் உடந்தையாகிறீர்
கள். இந்த செயல் யுத,
கிருத்த மாற்றுமத கலாச்சாரத்தை சேர்ந்ததாகும்! ஆதாரம் வேண்டுமா? இதோ


சிந்திக்க சில வழிகள்.
அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வி்ன் பெயர் தக்காளியில் வந்துவிட்டால் உடனே அதில் சிறப்பு என்கிறீர்களே அல்லாஹ்வின் பெயர் மட்டும்தான் தக்காளியில் தென்படுமா? இதோ இவைகளும் தென்படுகின்றன
கிராஃபிக்ஸ், எடிட்டிங் துணையுடன் பொய்களை பரப்புவது!
இன்றைய நவீன யுகத்தில் கிராஃபிக்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது.
இந்த நவீன யுத்திகள் ஒருசில தவறான மனிதர்களின் கைகளில் தவழ்கிறது
அதன் மூலம் மக்களை மூடர்களாக வழிதவற விடப்படுகிறார்கள்.
கிராஃபிக்ஸ் என்ற யுத்தியின் மூலமாக மக்கள் அதிகமாக வழிகெடுவது சினிமா துறையில்தான் இதற்கு ஆதாரம் காட்ட தேவையில்லை அந்த அளவுக்கு பெய
ரை சம்பாதித்துவிட்டது!

ஆனால் இந்த கிராபிக்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் உதவியுடன் மதங்கள், மார்க்க விஷயங்கள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக அமெரிக்கர்கள் பரப்பும் பறக்கும் தட்டுக்கள், மற்றும் நேபாள நாட்டு வீடியோ படமான மசூதியின் பறக்கும் மேற்கூறை ஆகியனவாகும்.
இவைகளை கண்டதும் பரப்பிவிடுகிறீர்கள் அப்படியானல் பொய்களை
பறப்புவதில் நீங்கள் வல்லவர்தானே! இதைவிட கொடூரமான பொய் நம் இஸ்லாமியர்களில் பலவீனர்கள் பரப்பும் பொய்கள்தான் ஆதாரம் வேண்டுமா? இதோ

கப்ருவேதனை தலைப்பில் பரப்பப்படும் அகோர காட்சகள்
கப்ருகளில் வேதனை செய்யப்படுவது உண்மைதான் இதை மெய்ப்படுத்தும் விதமாக ஏராளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உள்ளன. இதோ ஆதாரம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே!என்னை
எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.” அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (புகாரி 1314)
மனிதன் பலவீனமானவன் என்று அல்லாஹ் குர்ஆனில் அடிக்கடி கூறுகிறான் எனவே இப்படிப்பட்ட பலவீனமான மனிதனுக்கு முன்னால் கப்ரு வேதனைகளை அல்லாஹ் காட்டுவானா? இதை உணர வேண்டாமா?
இதோ முஸ்லிம்களில் பலவீனர்கள் பரப்பும் கப்ரு வே
தனை பற்றிய புகைப்படங்கள்

இந்த புகைப்படம் கப்ரு வேதனைக்கு காட்டப்படும் போது கூறும் புழுகு மூட்டைகள் இதுதான்.
· இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணிநேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.
· உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்துவிட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.
· சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது. உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.
மேற்கண்ட இந்த கருத்துக்கள் புழுகு மூட்டைகளாக தென்படுகின்றன இதுபற்றி இவ்வாறு சிந்தித்துப்பாருங்கள்!
தமிழகத்தில் தினமும் செய்திகளில் இடம்பெறும் மிக முக்கியமான தகவல்களில் ஒன்று கீழ்கண்ட செய்திதான்!
கள்ளக்காதல் தொடர்பால் கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். காவல்துறையினரின் புலன்விசாரனையில் உண்மை வெளிவந்தது பிணத்தை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது”
இப்படிப்பட்ட பிணங்களை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கும் போதுகூட அந்த பிணங்கள் மேலே கப்ரு வேதனைக்கு காட்டப்படும் அளவுக்கு சின்னாபின்னமாக இருக்காது அப்படியானல் கள்ளக்காதலால் கொலையுண்டவர்களுக்க அதாபு இல்லையா? என்ற கேள்வி எழவில்லையா?
பிர்அவ்னுடைய உடல் படிப்பினையில்லையா?
மூஸா நபியின் காலத்தில் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான் அவனுடைய உடல் இன்றளவும் அழியாமல் உள்ளது இதை அருள்மறை குர்ஆன் உறுதிபடுத்துகிறது! எனவே பிர்அவ்னுடைய உடல் இன்றளவும் அழுகாமல் உள்ளதால் அவனுக்கு கப்ரு வேதனை இருக்காது என்று கூறுவீர்களா?
கப்ரு வேதனைக்கான ஞானம் மனிதனுக்கு உள்ளதா?
கப்ருவேதனை எங்கு நடைபெறும் என்பதற்கான ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது நம்மிடம் இல்லை ஏனெனில் கடலில் தள்ளப்பட்ட பிணங்கள், நெருப்பில் எறிக்கப்படும் பிணங்கள் வேதனைகளை எப்படியாவது எங்கேயாவது அனுபவித்துக்கொண்டு இருக்கலாம் அதற்கான ஞானம் மனிதனுக்கு வந்துவிடுமா?
அல்லாஹ்வின் மீது பலவீனமான நம்பிக்கை வைக்காதீர்
தக்காளியில், ஆட்டு ரோமத்தில், தர்புசனியில், சுட்ட சப்பாத்தியில் அல்லாஹ்வின் பெயர் போன்ற அரபு எழுத்துக்களை கண்டவுடன் அல்லாஹ்வின் ஆற்றலை பார்த்தீரா என்று ஆஹா ஓஹோ என்று பேசுகிறீர்கள் இது பலவீனமான நம்பிக்கை மட்டுமல்லாமல் அல்லாஹ்வை கிண்டலடிக்கும் செயலுமாகும்!
சிந்தித்துப்பாருங்கள்
மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்திற்கும் கடலை இரண்டாக பிளந்து வாழவழிவகை செய்தவன் போயும் போயும் தக்காளியில் தன் பெயரை பதிப்பானா? உங்கள் பெயர் தக்காளியில் உள்ளது என்று நான் கூறினால் உங்களுக்கு கோபம் வராதா?
அல்லாஹ்வின் பெயரை ஆடு மாடுகளின் ரோமங்களில் கண்டவுடன் உடல் சிலிர்க்கிறதே அதே மிருகங்கள் கண்ட இடங்களில் படுக்குமே இதை உங்களால் உணர முடிய வில்லையா?
எது அதிசயம்
அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் உள்ளது அதிசயமா? இதுவல்ல அதிசயம் இதோ கீழே உள்ளதுதான் அதிசயம்!
இலவசமாக காற்று நமக்கு கிடைக்கிறதே இது அதிசயம்!
தாயைப் பார்த்து குழந்தை சிரிக்கிறதே இது அதிசயம்!
துபாயில் இருந்துக்கொண்டு மனைவியிடம் செல்போனில் பேசுகிறீர்களே இது அதிசயம்!
வானத்தில் பயணிக்கிறீர்களே இது அதிசயம்!
எழுதுகோல் உதவியின்றி டைப் செய்கிறீர்களே இது அதிசயம்!
அல்லாஹ் நிகழ்த்தும் அதிசயங்களை எழுத்தால் கூறஇயலாது அந்த அளவுக்கு எல்லாமே அதிசயம்தான்! எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள்! பொய்களையும் தவறான வதந்திகளையும் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
தக்காளி, மசூதியின் பறக்கும் மேற்கூரை ஆகியவற்றை பார்த்துத்தான் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும் எனில் இது இறைநம்பிக்கையல்ல! குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்! இதை நபிகளார் (ஸல்) அவர்களின் வாயிலாக அறிந்துக்கொள்ளுங்கள்!
ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” - நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்
என் இறைவன் அழகானவன்! தூய்மையானவன்! ஆற்றல்மிக்கவன்!
அல்ஹம்துலில்லாஹ்
ஷிர்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழமுடியுமா?
ஷிர்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழமுடியுமா?
k,m.jawahir (jamali)
ஷிர்க வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது?
பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிக்குச் செல்லக் கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.
وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ”நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ”அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல்குர்ஆன் (9 : 107)
மேற்கண்ட வசனத்தில் இறை மறுப்புக்காரியம், தீங்கு, பிரிவை ஏற்படுத்துவது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்பவர்களுக்கு புகலிடம் அளிப்பது ஆகிய நான்கு தன்மைகள் உள்ள பள்ளிக்குப் போகக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்த வசனத்தில் நான்கு தன்மைகள் சேர்த்துக் கூறப்பட்டிருந்தாலும் வேறு ஆதாரங்களைப் பார்க்கும் போது பெரும்பாவமான இணை வைப்பு என்ற ஒரு பாவம் மட்டும் ஒரு பள்ளியில் நடந்தால் அந்தப் பள்ளிக்கும் போகக் கூடாது என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியும்.
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا(18)72
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் (72 : 18)
அல்லாஹ்வை மட்டும் வணங்கும் இடமே பள்ளிவாசல்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு இடத்தில் அல்லாஹ்வும் வணங்கப்படுகிறான். மவ்லூத் என்ற பெயரால் நபி (ஸல்) அவர்களும் அப்துல் காதர் ஜைலானி ஹாகுல் ஹமீது பாதுஷா ஆகியோரும் வணங்கப்படுகிறார்கள் என்றால் நிச்சயம் அந்த இடம் பள்ளிவாசல் என்ற அந்தஸ்த்தை இழந்து விடுகின்றது. ஒரு பள்ளிவாசலுக்கு கிடைக்கும் சிறப்புகள் அந்த இடத்துக்குக் கிடைக்காது.
அல்லாஹ்வின் பெயர் மட்டும் துதிக்கப்படுவதையே பள்ளிகளுக்குரிய தன்மையாக அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விடபெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் (2 : 114)
الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ إِلَّا أَنْ يَقُولُوا رَبُّنَا اللَّهُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنصُرَنَّ اللَّهُ مَنْ يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ(40)22
”எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;
அல்குர்ஆன் (22 : 40)
فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ(36)24
(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்.
அல்குர்ஆன் (24 : 36)
எனவே ஓரிடத்தில் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டால் அந்த இடத்தில் நாம் அல்லாஹ்வை வணங்குவது தடுக்கப்பட்டிருக்கின்றது. அல்லாஹ் மட்டும் வணங்கப்படும் இடத்திலேயே அல்லாஹ்வை நாம் வணங்க வேண்டும்.
கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா?
கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா?
k,m.jawahir (jamali)
கப்ருக்கு மேல் பள்ளிவாசல் கட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
437 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ - رواه البخاري
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
”அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத் தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
புகாரி (437)
427 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ هِشَامٍ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّ أُمَّ حَبِيبَةَ وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ فَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ - رواه البخاري
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
உம்மு ஹபீபா அவர்களும், உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்'' என்று கூறினார்கள்.
புகாரி (427)
கப்ரு உள்ள இடத்தில் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
432 - حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ أَخْبَرَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களது தொழுகைகளில்ல் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை (தொழுகை நிறைவேற்றப்படாத) கப்ரு (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.
புகாரி (432)
கப்ருகளுக்கு மேல் பள்ளிமட்டுமல்ல பொதுவாக எந்த ஒரு கட்டிடத்தையும் கட்டுவது கூடாது.
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ - رواه مسلم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
முஸ்லிம் (1765)
கப்ரின் மீது பள்ளிவாசல் கட்டும் நிலை ஏற்பட்டால் அதற்கு முக்கியமான நினந்தனை உள்ளது. அந்த இடத்தை ஆழமாகத் தோண்டி அதில் எலும்புகள் ஏதும் இருந்தால் அவற்றை வேறு இடத்தில் புதைக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட மஸ்ஜிது நபவீ பள்ளிவாசல் முன்னர் அந்த இணை வைப்பாளர்களின் மண்ணறையாக இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மண்ணறைகளைத் தோண்டி அதை அப்புறப்படுத்திவிட்டு பிறகே அதன் மேல் பள்ளிவாசலைக் கட்டினார்கள்.
1868 حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَأَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي فَقَالُوا لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ فَأَمَرَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ ثُمَّ بِالْخِرَبِ فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ - رواه البخاري
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்; ”பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) என்னிடம் விலை கூறுங்கள்!'' என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் ”இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!'' என்றனர்.
(அவ்விடத்திலிருந்த) இணை வைப்பவர்களின் சவக்குழிகளைத் தோண்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர் செய்யப்பட்டன; பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன; (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை பள்ளிவாசலின் கிப்லா திசையில் வரிசையாக (நபித்தோழர்கள்) நட்டனர்.
புகாரி (1868)
எலும்புகளை அப்புறப்படுத்தாமல் கப்ரில் பள்ளிவாசல் கட்டுவது கூடாது.
கப்ர்கள் மீது பள்ளிவாசலைக் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதால் அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்கள் பள்ளிவாசலின் அந்தஸ்தைப் பெறாது. அங்கு சென்று தொழுவதும் கூடாது.
ஹிஜாப்: அடிமைத்தனத்தின் சின்னமா?
k,m,jawahir jamali.
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவாpடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ‘ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பா;தா, புh;கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
‘ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவா;களது உLமையைப் பறிப்பதாகவும், அவா;களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது’ என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனா;. எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனா;.
‘ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவா;களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப் பட்டதே தவிர அவா;களது உhpமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே அன்று.
ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோh; தங்கள் கூற்றில் உண்மையாளா;களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவா;கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவா;கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.
உழைக்கும் வா;க்கத்தைச் சோ;ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை கால்சட்டை மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பாh;க்கிறான். பலா; முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வா;க்கத்தைச் சோ;ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுhpயவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை.
தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதாpயைப் பிறா; முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
அது போல் நடுத்தர வா;க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினா; முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லாவிட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வா;க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறாh;களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவா;கள் முன்னிலையில் மட்டுமின்றி குடும்பத்து ஆடவா;கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன்? குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டாh;கள்.
“ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணா;ந்துள்ளனா;. ஆண்களும் உணா;ந்துள்ளனா;” என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமா;சனம் செய்பவா;களிடம் நாம் கேட்கிறோம்: ஆணுக்குப் பெண் சாp நிகா; சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவா;களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனா; என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவா;கள் ஒப்புக் கொள்கிறாh;கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவா;களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சாp நிகா; சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில், அவா;களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷய்ததில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.
பெண்களுக்குப் பாதுகாப்பு
இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவா;களைக் கௌரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவா;களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவா;களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும், இரு பாலாhpன் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புhpந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவா;ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனா;. திரும்பத் திரும்பப் பாh;க்க விரும்புகின்றனா;. விதி விலக்காக மிகச் சிலா; இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவா;ச்சியில் அவா;களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பாh;த்து ரசிப்பதில்லை. திரும்பப் பாh;க்க வேண்டும் என்று அவா;கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிh;வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிh;வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவா;களின் ஆடையைத் தீh;மானிப்பது தவறாகும். இவா;களைப்பாh;த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவா;களது ஆடைகள் தீh;மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பாh;த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில், அவளை முழுமையாக ரசிக்கும் உhpமை அவளது கணவனுக்கு மட்டுமே உhpயதாகும். மற்றவா;களுக்கு இதில் எந்த உhpமையும் கிடையாது.
பாh;ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவா;களில் பலா; ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலா; முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வா;. கற்பழிப்பு, கொலை வரை கூட இவா;கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவா;கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனா;. தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பாh;த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனா;.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரை குறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பாh;த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறாh;கள் என்று சிலா; கூறுகின்றனா;. இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.
ஏனெனில், ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவா;களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.
இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால், அரை குறையான கிளா;ச்சியு+ட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரை குறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உhpமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவா;கள் அவளைக் கொன்றும் விடுகின்றனா;. ஹிஜாபை குறை கூறுவோh; இதைச் சிந்திப்பதில்லை.
பெண்ணுhpமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனா;. “இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்” என்றெல்லாம் கூறுகின்றனா;
ஆனால், ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனா;. காரணத்தை மறந்து விட்டுக் காhpயத்தை மட்டும் கண்டிக்கின்றனா;.
பெண்ணுhpமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும், ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பு+சி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணா;த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவா;களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணா;த்த வில்லையா?
பெண்களைஅதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவா;களின் சுதந்திரத்திலும் உhpமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவா;கள் ஆபாசப் போஸ்டா;களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?
பெண்ணுhpமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம். அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப் படுகிறது. அதை அவளும் பாh;க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவா;கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உhpமையிலும் தலையிடுவதாகாதா?
பெண்ணுhpமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவா;கள் மறந்தது ஏனோ?
பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவா;களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவா;களது செயல்களே காட்டுகின்றன.
இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும். பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், முன் கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதை விட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.
ஆண்களாயினும், பெண்களாயினும் அவா;களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவா;கள் மிகக் குறைவே. பெரும்பாலோh; ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தொpந்த மனிதா;களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறாh;கள். உள்ள+hpல் ஒழுக்கமாக நடப்பவா;கள் வெளியு+h;களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.
முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டாh;கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தொpயாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைபிடிக்கத் தூண்ட வேண்டும்.
மேலும், முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.
எனவே, தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிட வில்லை.
நபித்தோழியா; எவரும் தாங்கள் யாh; என்று அடையாளம் தொpயாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று ஹதீஸ் கிரந்தங்களில் காண்கிறோம்.
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காhpயத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.
இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பாh;த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவா;களே பெண்களை அரை நிh;வாணத்துடனும் கால் நிh;வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனா;.
முகமும், கைகளும் மட்டும் தொpயும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக் கூடிய வாதமன்று. இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமா;கள், ஜனாதிபதிகள், மாநில அமைச்சா;கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனா;. ஆயினும் அவா;கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்க வில்லை.
பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தொpயும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.
ஆனால், ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? அடுத்தவா; பாh;த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயா; சு+ட்டுவதை ஒப்புக் கொள்ள முடியாது.
ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறாh;கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நோ; மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.
இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும். கருப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும்: சவுதிப் பெண்கள் அணிவது போன்று தான் இருக்க வேண்டும் என்ற விதி இஸ்லாத்தில் கிடையாது.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலைத்தேய நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.
நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி
k.m.jawahir jamali.
"நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி நபியாக வருவார்கள். அவ்வாறு அவர்கள் வரும் போது அனைவரும் அவர்களை ஏற்று உதவ வேண்டும்'' என்பது தான் இங்கே (திருக்குர்ஆன் 3:81) கூறப்படும் உடன்படிக்கை என்பது பெரும்பாலான அறிஞர்களின் விளக்கம்.
ஆனால் இவ்வசனத்தைக் கவனமாகப் பார்க்கும் போது இது யாரைப் பற்றியும் முன்னறிவிப்புச் செய்யவில்லை என்பதே உண்மையாகும்.
இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை, இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை வைத்துத் தான் புரிந்து கொள்ள வேண்டும். வாசக அமைப்புக்கு எதிரான கருத்தை இதற்கு விளக்கமாகக் கூறக் கூடாது. அவ்வாறு யார் கூறினாலும் அது முற்றிலும் தவறானதாகும்.
நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்ததாக இவ்வசனம் பொதுவாகக் கூறுகின்றது. அதில் நபிகள் நாயகம் உட்பட அனைத்து நபிமார்களும் அடங்குவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் உறுதி மொழி எடுத்திருக்கும் போது, இது நபிகள் நாயகத்தின் வருகை பற்றிய முன்னறிவிப்பாக இருக்க முடியாது.
நபிமார்களிடம் எடுத்த இந்த உடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடங்க மாட்டார்கள் என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தெளிவுபடுத்தியிருப்பார்கள்.
உம்மைத் தவிர மற்ற நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்தோம் என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே இது நபிகள் நாயகம் (ஸல்) உட்பட அனைத்து நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உறுதி மொழியையே குறிக்கின்றது என்பதில் ஐயமில்லை.
அடுத்ததாக, என்ன உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் இவ்வசனத்திலிருந்தே நாம் தெளிவாக அறிய முடிகின்றது.
"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கை.
"உங்களுக்குப் பின் ஒரு தூதர் வந்தால்' என்று இங்கே கூறப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் வரக் கூடிய ஒரு நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருத முடியும்.
அவ்வாறு கூறாமல், "உங்களிடம் ஒரு நபி வந்தால்..' என்று தான் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.
"உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன்; இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனி மேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நினைக்காதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன் வர வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு அந்தத் தகுதி வழங்கப்படுகிறது'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது.
இது நபிகள் நாயகத்தைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருதினால் நபிமார்கள் தமது உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்று ஆகி விடும். "அவரை நம்பி அவருக்கு உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கையின் நிபந்தனை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்த போது எந்த நபியும் உலகில் இருக்கவில்லை. நபிகள் நாயகத்துக்கு உதவவுமில்லை.
நபி என்ற தகுதி, மனிதனின் உழைப்புக்காகவோ, திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல; எனது கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கும் கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனை யின் அடிப்படையில் இதை வழங்கு கிறேன் என்பது தான் உடன்படிக்கை.
1. உங்களிடம் அவர் வந்தால்
2. அவரை நீங்கள் நம்ப வேண்டும்
3. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்
ஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன.
ஒரு நபியை அனுப்பிய பின் அவருக்குப் பக்க பலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதாக 36:14 வசனம் கூறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப் பப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு என்பதற்கு இதில் சான்று ஏதுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் தம்மை நபியென்று கூறிக் கொண்ட பொய்யர்கள் அனைவரும் இந்த வசனத்தைத் தங்களைப் பற்றிய முன்னறிவிப்பு என்று மக்களை ஏமாற்றாமல் இருந்ததில்லை.
"நபிகள் நாயகம் (ஸல்) உட்பட எல்லா நபிமார்களிடமும், இனி வரக் கூடிய நபியைப் பற்றி அல்லாஹ் முன்னறிவிப்புச் செய்துள்ளான். அந்த நபி நான் தான்' என்று தம்மை நபியெனப் பொய் வாதம் செய்தவர்கள் கூறியுள்ளனர்.
மேலே நாம் அளித்துள்ள விளக்கமே இவர்களுக்குப் போதிய மறுப்பாக அமைந்துள்ளது.
"உங்களுக்குப் பின் ஒரு நபி வந்தால்' என்று கூறாமல், "ஜாஅகும் - உங்களிடம் ஒரு நபி வந்தால்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதை இந்தப் பொய்யர்கள் இருட்டடிப்புச் செய்கின்றனர்.
ஒரு நபி வாழும் போது அவரது பகுதிக்கு இன்னொரு நபி அனுப்பப்பட்டால் அவரை ஏற்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் நேரடியான பொருள் எனும் போது, இது எப்படி முன்னறிவிப்பாக இருக்க முடியும்?
அந்நிய கலாச்சார ஊடுருவல் எங்கு ஊட்டப்படுகிறது?
வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்
ஜவாஹிர் (ஜமாலி)
இன்று அநேகமான முஸ்லிம் பெற்றோர் தம் பிள்ளைகளைத் தரமான பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கு தம்மாலான சகல முயற்சிகளையும் எடுக்கின்றனர். இது பாராட்டுக்குரிய விடயம் தான் ஆனால் இந்த எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் இவ்வுலகத்தை மாத்திரம் அடிப்படையாக வைத்து தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தன் பிள்ளை ஒழுக்கமுள்ள, அறிவுள்ள பிள்ளையாக வர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் பாடசாலைகளைத் தெரிவு செய்கிறார்கள். தன் பிள்ளை மார்க்கத்தோடும் வளர வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களைக் காண்பது அரிதிலும் அரிது.
முஸ்லிம்களுக்கு தனிச்சலுகை
“நாம் மார்க்கத்தோடு தானே இருக்கிறோம் பிள்ளை எந்த பாடசாலையில் கற்றால் என்ன?” என்று சிலர் நினைக்கலாம். இது முற்றிலும் தவறு. அல்லாஹ்வின் மிகப் பெருங்கிருபையால் இலங்கையில் முஸ்லிம்களுக்கென்றே தனியாக பாடசாலைகள் பல உள்ளன. அதுவும் மார்க்கத்துக்கு முரணில்லாத வகையில் சீருடை, ஜும்ஆவுக்கு சமூகமளிக்க சலுகை, நோன்பு காலத்தில் விடுமுறை என்று அரசாங்கம் நமக்கு இத்தனை வசதியளித்துள்ளது.
இவ்வளவு சலுகைகளை பெற்ற நாம் அந்நிய மத பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்து அங்கு நமது மார்க்க விடயங்களில் ஏதும் தடை விதிக்கப்படும் போது கொதித்து எழுகின்றோம். ஏன் இந்த வேண்டாத வேலை? ஆனாலும் அங்கு விதிக்கப்படும் தடைகளுக்கு தலைபணிந்து பொறுத்துப் போகின்றனர் பலர். சில அந்நிய மத பாடசாலைகளில் முஸ்லிம்களுக்குரிய ஆடை அணிய தடை விதித்தாலும் அதற்கேற்றாற் போல் அவர்களோடு சேர்ந்து ஒத்துப் போகின்றனர்.
எல்லாம் எதற்காக? இவ்வுலகக் கல்வியைத் தடையின்றி தொடர்வதற்காக! இங்கு ஏற்படுத்தப்படுகின்ற பழக்கவழக்கங்கள் தான் பிள்ளைகளுக்கு மார்க்கத்தையும் விட்டுக் கொடுக்க உதவி புரிகின்றது. காரணம் ஆரம்பத்திலேயே தலை சாய்க்க கற்றுக் கொடுத்து விட்டோம். அது மட்டுமல்லாது அந்நிய மதத்தவரின் சமய நிகழ்ச்சிகள், பண்டிகைகளிலும் சிறு வயது முதல் பங்கேற்கின்றனர். பெற்றோரும் சேர்ந்தே இதற்கு உடந்தையாகின்றனர்.
மொத்தத்தில் உடை, நடை, பாவனை யாவுமே அந்நிய கலாச்சார மோகத்தின் பால் அமைந்து ஈருலக வாழ்வும் எந்த வித பிரயோசனமும் அற்று போகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாறோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவூத் (3512)
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.(புகாரி-3456)
எமக்கென்று தனி வழியும் வசதிகளும் காணப்படுகின்ற போது ஏன் நமது தனித்தன்மையை இழக்க வேண்டும்? மேலைத்தேய நாடுகளில் நமது மார்க்கத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் போடப்பட்டால் அதற்கு அந்நாட்டு முஸ்லிம்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
ஆனால் நம் நாட்டு முஸ்லிம்களுக்கு எந்த வித போராட்டமும் இல்லாமல் கிடைத்த சலுகைகளை பயன்படுத்துவதற்கும், இஸ்லாம் மார்க்கத்தின் வழி நடப்பதற்கும் உரிய ஏற்பாடுகள் தாராளமாக இருக்கும் போது அதனை நழுவ விடலாமா? ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் சிந்திக்க வேண்டிய விடயம் இது.
முஸ்லிம் பெற்றோரின் ஏக்கமும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பொடுபோக்கும்
தரமான பாடசாலை இல்லாததனாலும், போதிய ஆசிரியர் பற்றாக்குறையாலும் தான் நாம் அந்நிய மத பாடசாலைகளை நாடுகிறோம் என்பது எம் பெற்றோரின் ஏக்கமாகும். ஆனால் சமூக அக்கறையுள்ள எவரும் இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. அதற்கும் மேலாக எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் தனது முன்னேற்றத்தை கவனத்தில் கொள்வதே தவிர சமூக முன்னேற்றத்தை பற்றி அணுவளவும் கவலை கொள்வதும் கிடையாது. இதற்காக எல்லோரும் அல்லாஹ்வின் திருப்தியையும் கூலியையும் நாடியவர்களாக எம் சமூகத்தை கட்டியெழுப்ப முன் வர வேண்டும்.






